Ads Right Header

லோக் அதாலத்தின் (மக்கள் நீதிமன்றம்) அமைப்பு மற்றும் சிறப்புகள்!!!


லோக் அதாலத்:

லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம்' சமாதானநிலை
மற்றும் சமரசம் மூலம் மக்களின் பிரச்சனைகளை தீர்க்க இந்திய
அரசால் உருவாக்கப்பட்ட நீதிமன்றமாகும்.
இது மாற்று முறையில் சச்சரவுகளுக்கு தீர்வு காணும் வழிமுறையாகும்.
வழக்குகளை விரைவாகவும், அதிக செலவில்லாமல் மக்களின்
பணம், நேரம்,சக்தியை பாதுகாத்து ஏழைகளுக்கு நீதி கிடைப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது.

லோக் அதாலத்தின் அமைப்பு:
மக்கள் நீதிமன்ற அமர்வில் 
இடம்பெறும் 3 நபர்கள்
1. ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி
2. ஒரு சமூகப் பணியாளர்
3.ஒரு வழக்கறிஞர்

லோக் அதாலத்தின் சிறப்புகள் :

லோக் அதாலத் அமைப்பில் சட்ட அதிகாரம் மாநில மற்றும் மாவட்ட
அமைப்புகளால் தீர்மானிக்கப்படும்.

லோக் அதாலத் உரிமையியல் நீதிமன்றத்திற்கு இணையான
அதிகாரத்தைப் பெற்றுள்ளது.

லோக் அதாலத் நீண்ட காலமாக தேங்கியிருக்கும் குற்ற
வழக்குகளை தவிர மற்ற அனைத்து வழக்குகளையும் விசாரிக்கும்.

மக்கள் நீதிமன்றம் மூலமாக நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள
வழக்குகள் மட்டுமல்லாமல் நீதிமன்றத்திற்கு இருக்கும்
தாவாக்களுக்கும் தீர்வு காணலாம்.

இந்த நீதிமன்றத்தின் மூலம் தீர்வு காணப்பட்ட வழக்குகளுக்கு
மேல் முறையீட்டினை செய்ய அனுமதி இல்லை.

நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் வழக்குகளில் 50 சதவீத
வழக்குகள் அரசு மற்றும் அரசு நிறுவனங்கள் தொடர்பான
வழக்குகள் ஆகும்.

15ஆண்டுகளாகத் தீர்க்கப்படாமல் இருக்கும் வழக்குகளுக்கு
3 ஆண்டுகளுக்குள் தீர்வு காண வேண்டும் என தேசிய
வழக்காடும் கொள்கை வெளியிட்டுள்ளது.

இந்த லோக் அதாலத் செயல்பட
மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு ஏற்பாடு செய்யும். ஆனாலும்
அனைத்து மாவட்டங்களிலும் நிரந்தரமாக செயல்படும் லோக்அதாலத் இதுவரை ஏற்படுத்தப்படவில்லை.

மக்கள் முன்னிலையில் மக்கள் பேசும் மொழியிலேயே பிரச்சனைகளை விசாரித்து அதற்கு தீர்வு காண்பது இதன்
சிறப்பாகும்.

லோக் அதாலத்தில் தீர்க்கப்படும் வழக்குகள்:

காசோலை தொடர்பான வழக்குகள்

வாகன விபத்து வழக்குகள்

குடும்பப் பிரச்சனைகள் 
தொடர்பான வழக்குகள்.

தொழில் தகராறுகள்
தொழிலாளர் பிரச்சனைகள் 
தொடர்பான வழக்குகள்.

குற்றவியல் வழக்குகளில் சமாதானம் ஏற்படுத்திக் கொள்ளும்
தன்மையுள்ள வழக்குகள்
நிலத்தகராறு மற்றும் இழப்பீடு தொடர்பான வழக்குகள்
வருமான வரி தொடர்பான பிரச்சனைகள்
விற்பனை வரி தொடர்பான பிரச்சனைகள்
மறைமுகவரி தொடர்பான பிரச்சனைகள்
வாடகை தொடர்பான தகராறுகள் வங்கிக்கடன் பிரச்சனைகள்

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY