Ads Right Header

Group 2 Mains 2023 - ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன்.




📌 ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் 📌

தொடக்கம் : செப்டம்பர் 2021

மக்களையும், மருத்துவச் சேவைகளை அளிக்கும் அமைப்புகளையும் ஒரே தளத்தில் இணைக்கும் திட்டம். இத்திட்டம் மூலம் அனைவரும் மருத்துவச் சேவையை எளிதாக பெற முடியும்.

பிரதான் மந்திரி ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் மூலம் ஒவ்வொரு குடிமக்களுக்கும் ஒரு ஹெல்த் ஐடி உருவாக்கப்படும். இந்த ஹெல்த் ஐடி ஒரு ஹெல்த் அக்கவுன்ட் ஆக இயங்கும், இந்தக் கணக்கில் ஒருவரின் உடல்நலம் குறித்த தரவுகள் (ஹெல்த் ரெக்கார்டு) சேமிக்கப்படும். மேலும் சேமிக்கப்படும் தரவுகளை மொபைல் செயலி வாயிலாகச் சரிபார்த்துக் கொள்ள முடியும்.

இந்தத் தரவுகளை மருத்து சேவை அளிக்கும் நிறுவனங்கள் Healthcare Professionals Registry (HPR) மற்றும் Healthcare Facilities Registries (HFR) களஞ்சியம் வாயிலாகப் பயன்படுத்த முடியும்.

இந்தக் கட்டமைப்பு மூலம் அனைத்து மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள், மருத்துவச் சேவை அளிக்கும் அமைப்புகளும் இணைந்து எளிதாக வர்த்தகம் செய்வது மட்டும் அல்லாமல் கண்காணிப்பில் வைக்க முடியும்.

இத்திட்டத்தின் கீழ் PM-DHM Sandbox உருவாக்கப்பட உள்ளது, இது தான் இத்திட்டத்தின் தொழில்நுட்பம் மற்றும் பிராடெக்ட் டெஸ்டிங்-கிற்குப் பிரேம்வொர்க் ஆக விளங்கும். இதன் மூலம் National Digital Health Ecosystem அமைப்பில் தனியார் அமைப்புகளும் பங்குகொள்ள முடியும்.
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY