News
TNPSC 2022 அடுத்த தேர்வு அறிவிப்பு!
அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பாக(TNPSC) இந்து சமய அறநிலையத்துறையில் செயல் அலுவலர் (EO) - நிலை - III பதவிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கான கல்வித்தகுதி மற்றும் படிக்க வேண்டிய பாடங்கள் ஆகியவற்றைக் காண்போம்.
மொத்த காலியிடங்கள் - 42
கல்வித்தகுதி - ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு .
பிற தகுதிகள் : இந்து மதத்தை சார்ந்தவராக இருத்தல் வேண்டும்.
குறைந்தபட்ச வயது - 25
அதிகபட்ச வயது - பொதுப்பிரிவினருக்கு முப்பத்தி ஏழு.
பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலினத்தவர், ஆதரவற்ற விதவைகள் போன்றவர்களுக்கு அதிகபட்ச வயது இல்லை. அதாவது ஓய்வு பெறும் வயது 60 வரை எழுதலாம்.
முக்கிய நாட்கள்
தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பம் துவங்கும் நாள் - 19.05.2022
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள்17.06.2022.
சம்பளம் : Rs.20,600 75900 (Level-10)
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மட்டும்.
பாடத்திட்டம்:
தாள் 1 - தமிழ் தகுதித்தேர்வு மற்றும்
பொதுஅறிவு ( பட்டப்படிப்பு தரம்)
தாள் 2 - (1) இந்து மதம்
(2) சைவமும் வைணவமும்.
தேர்வுக்கு படிக்க வேண்டிய புத்தகங்கள்
:
1.பொதுத்தமிழ் : ஆறாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான தமிழ் புத்தகங்கள். 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பில் முக்கிய சில பாடங்களைப் படித்தால் போதுமானது.
2.பொது அறிவு : இந்தத் தேர்வுக்கான பொது அறிவானது பட்டப்படிப்பு தரத்தில் அமையும். ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பாடத்திட்டத்தில் உள்ள படி பாடங்களைப் படித்தல் வேண்டும்.
குரூப்-1 குரூப்-2 போன்ற தேர்வுகளுக்கு படிக்கும் பாடங்களை இந்த பாடத்திற்கும் படிக்கலாம்.
தாள் 2 க்கு படிக்க வேண்டிய புத்தகங்கள் :
1. இந்து சமய இணைப்பு விளக்கம் - ஆறுமுக நாவலர்
2. சைவமும் வைணவமும் - ஆறுமுக நாவலர்.
பொதுவாக நாம் குரூப் 2 குரூப் 4 க்கு. படிக்கும் நேரத்துடன் தினம் ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் தாள்-2க்கான பாடங்களைப் படிக்க செலவிட்டால் போதுமானது.
தேர்வுக்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ளன. பொறுமையாகவும் தெளிவாகவும் படித்து வெற்றி பெறலாம்.
ஒரு சில மாணவர்கள் குரூப்-2 தேர்வுக்கு சரியாக படிக்கவில்லை என வருந்துவார்கள், கவலைக் கொள்ளாமல் 90 நாள் படித்தால் வெற்றி உறுதி.
Previous article
Next article
Leave Comments
Post a Comment