TNPSC MODEL QUESTION
50 + 50 - 10th வரலாறு, பொருளாதாரம், குடிமையியல், CA வினாவிடை!
பாடப்பகுதி :
🌳10-ஆம் வகுப்பு - வரலாறு - பாடம்(10) தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்
🌳10-ஆம் வகுப்பு - பொருளாதாரம் - பாடம் -03, 04, 05.
🌳10-ஆம் வகுப்பு - குடிமையியல் -பாடம் 04, 05.
🌳11-ஆம் வகுப்பு - வரலாறு பாடம் -18- ஆங்கிலேய ஆட்சிக்கு தொடக்க கால எதிர்ப்புகள்.
🌳ஜூலை 2020 மாத நடப்பு நிகழ்வுகள்.
🥳மொத்த வினாக்கள் :100 [இதில் 15 நடப்பு வினாக்கள் ]
🥳மதிப்பெண்கள் : 100.
1) 1816-இல் புனித ஜார்ஜ் கோட்டையில் கல்லூரியினை நிறுவியவர்?
[A]வெல்லெஸ்லி பிரபு.
[B]மேயோ பிரபு.
[C]எல்லிஸ்.
[D]கால்டுவெல்.
2)1928-இல் அகில இந்திய ஒடுக்கப்பட்டோர் சங்கத்தை உருவாக்கியவர்?
[A]இரட்டைமலை சீனிவாசன்.
[B]எம்.சி.ராஜா.
[C]அயோத்திதாசர்.
[D]அம்பேத்கர்.
3)கூற்றுகளை ஆராய்க.
அ)மறைமலை அடிகள் பட்டினபாலை, குறிஞ்சிப் பாட்டுக்கு விளக்கவுரை எழுதியுள்ளார்.
ஆ)தரங்கம்பாடியில் 1578-இல் சீகன்பால்கு என்பவரால் முழுமையான அச்சகம் நிறுவப்பட்டது.
இ)பரிதிமாற்கலைஞர் தூய தமிழ் இயக்கத்தை உருவாக்கினார்.
[A]அனைத்தும் தவறு.
[B]அ,ஆ தவறு.
[C]அ,இ தவறு.
[D]ஆ,இ தவறு.
விளக்கம்:
அ)மறைமலை அடிகள் பட்டினபாலை, முல்லைப் பாட்டுக்கு விளக்கவுரை எழுதியுள்ளார்.
ஆ)தரங்கம்பாடியில் 1709-இல் சீகன்பால்கு என்பவரால் முழுமையான அச்சகம் நிறுவப்பட்டது.
இ)மறைமலை அடிகள் தூய தமிழ் இயக்கத்தை உருவாக்கினார்.
4)தமிழ்ச் சொற்களுள் புகுந்துவிட்ட சமஸ்கிருதச் சொற்களுக்கு இணையான பொருள் தரக்கூடிய தமிழ்ச் சொற்களடங்கிய அகராதி ஒன்றை தொகுத்தவர்?
[A]நீலாம்பிகை அம்மையார்.
[B]மறைமலை அடிகள்.
[C]பரிதிமாற் கலைஞர்.
[D]உ.வே.சாமிநாத அய்யர்.
5)பொருத்துக.
(உ.வே.சா செவ்வியல் தமிழ் இலக்கிய நூல்களை வெளியிடும் முயற்சியை மேற்கொண்ட ஆண்டுகள்)
அ)சீவக சிந்தாமணி –(1)1898.
ஆ)மணிமேகலை – (2)1892.
இ)ஐங்குறுநூறு –(3)1903.
ஈ)சிலப்பதிகாரம் –(4)1887.
[A]1234.
[B]2134.
[C]4312.
[D]4132.
6)பொருந்தாத ஒன்று.
[A] 1911 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்புன்படி சென்னை மாகாண மக்கள் தொகையில் பிராமணர் – 3%-க்கும் சற்று அதிகம்.
[B]1901-1911இல் சென்னை பல்கழைக்கழகத்தில் பட்டப் படிப்பு முடித்த பிராமணர் எண்ணிக்கை 4074 ஆகவும், பிராமணரல்லாதோர் எண்ணிக்கை 1035-ஆகவும் இருந்தது.
[C]அதேபோல் 306 இந்திய கிறித்தவரையும், 69 முகமதியர்களையும் கொண்டிருந்தது.
[D]522 ஐரோப்பிய மற்றும் யுரேசியர்களையும் கொண்டிருந்தது.
விளக்கம்:
[D]225 ஐரோப்பிய மற்றும் யுரேசியர்களையும் கொண்டிருந்தது.
7)கூற்று: தமிழ்நாட்டில் திராவிட உணர்வு தோன்றி வளர்வதற்கு பங்களிப்புச் செய்தது- தமிழ் மறுமலர்ச்சி.
காரணம்: இச்சிந்தனை பி.சுந்தரனாரால் (1855-1897) எழுதப்பட்ட மனோன்மணியம் என்னும் நாடக நூலில் இடம் பெற்றுள்ள தமிழ் மொழி வாழ்த்துப் பாடலில் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.
[A]கூற்று, காரணம் சரி.
[B]கூற்று, காரணம் தவறு.
[C]கூற்று சரி, காரணம் தவறு.
[D]கூற்று தவறு, காரணம் சரி.
8)இந்து சமய அறநிலையத் துறை சட்டம் ஆண்டு?
[A]1924.
[B]1926.
[C]1925.
[D]1923.
9)இந்தியப் பெண்கள் சங்கம் நிறுவியவர்களில் பொருந்தாதவர்?
[A]அன்னிபெசண்ட்.
[B]டோரதி ஜினதராசா.
[C]ருக்மணி அருண்டேல்.
[D]மார்கரெட் கசின்ஸ்.
10)பண்டைய தமிழ்ச் சமூகம் திணைகளை அடிப்படையாகக் கொண்ட வேறுவகைப்பட்ட அடுக்கமைவைக் கொண்டதாக கூறியவர்?
[A]மறைமலை அடிகள்.
[B]பரிதிமாற்கலைஞர்.
[C]பெரியார்.
[D]சிங்கார வேலர்.
11)மறைமலை அடிகள் இளம்வயதில் பணியாற்றிய பத்திரிக்கை?
[A]சின்மய தீபிகை.
[B]ஞானசாகரம்.
[C]சித்தாந்த தீபிகை.
[D]திராவிடன்.
12)சென்னை பல்கலைக்கழகம் தமிழை ஒரு வட்டார மொழியென அழைக்கக் கூடாதென முதன்முதலாக வாதாடியவர்?
[A]மறைமலை அடிகள்.
[B]பரிதிமாற்கலைஞர்.
[C]ஈ.வெ.ராமசாமி.
[D]திரு.வி.க.
13) தென்னிந்திய மொழிகள் தனிப்பட்ட மொழிக்குடும்பத்தைச் சார்ந்தவை. அவை இந்தோ-ஆரியக் குடும்ப மொழிகளோடு தொடர்பில்லாதவை எனும் கோட்பாட்டை உருவாக்கியவர்?
[A]மறைமலை அடிகள்.
[B]கால்டுவெல்.
[C]பரிதிமாற்கலைஞர்.
[D]எல்லிஸ்.
14)ஒடுக்கப்பட்ட மக்களின் கோவில் நுழைவு உரிமை குறித்த தீர்மானம் ஒன்றை பெரியார் முன்மொழிந்தார். அப்போது பெரியார்?
[A]நீதிக்கட்சி தலைவர்.
[B]திராவிடர் கழக தலைவர்.
[C]தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்.
[D]செயலார்வமிக்க காங்கிரஸ் உறுப்பினர்.
15)(1)பெண்களின் விடுதலை என்பது ”சுயமரியாதை இயக்கத்தின்” முக்கிய நோக்கங்களில் ஒன்று.
(2)தங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு இடத்தை ”பெண்களுக்கு” இவ்வியக்கம் ஏற்படுத்திக் கொடுத்தது.
[A]1,2 சரி.
[B]1,2 தவறு.
[C]1 சரி.
[D]1 தவறு.
16) சீன-இந்தியப் போர் நடைபெற்ற ஆண்டு?
[A]1962.
[B]1971.
[C]1974.
[D]1998.
17)சார்க் நாடுகளில் பொருந்தாதது?
[A]இலங்கை.
[B]மியான்மர்.
[C]நேபாளம்.
[D]பூடான்.
18) “பரந்த அளவில் அணிசேராமை என்பது இராணுவக் கூட்டமைப்பில் இணைத்துக் கொள்ளாதது அல்ல” இக்கூற்றுக்கு சொந்தக்காரர்?
[A]வல்லபாய் படேல்.
[B]கிருஷ்ண மேனன்.
[C]ஜவஹர்லால் நேரு.
[D]மகாத்மா காந்தி.
19)பின்வருவனவற்றைக் கால வரிசைப்படுத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்.
1)பஞ்சசீலம்.
2)பொக்ரானில் அணு வெடிப்பு சோதனை.
3)20 ஆண்டுகள் ஒப்பந்தம்.
4)முதல் அணு வெடிப்பு சோதனை,
[A]1423.
[B]3142.
[C]1432.
[D]1342.
20)இந்திய வெளியுறவுக் கொள்கையை ஏற்றுக் கொண்டு வழிநடத்தும் இந்திய அரசியலமைப்பின் சட்டப்பிரிவு?
[A]51.
[B]52.
[C]53.
[D]54.
21)இந்தியாவிற்கும் ஏசியான் நாடுகளுக்கும் பாலமாக உள்ள நாடு?
[A]வங்கதேசம்.
[B]மியான்மர்.
[C]சீனா.
[D]பூட்டான்.
22)இந்திய வெளிநாட்டு சேவை பயிற்சி மையம் (IFS) துவங்கப்பட்ட இடம்?
அ)மும்பை.(1986)
ஆ)டெல்லி(1986).
இ)மும்பை(1886).
ஈ)டெல்லி(1886).
23)கூற்று 1: சார்க் அமைப்பில் கடைசியாக இணைந்த நாடு(2007) ஆஃப்கானிஸ்தான். (டெல்லி மாநாட்டில்).
கூற்று 2: சார்க் அமைப்பு தொடங்கப்பட்ட ஆண்டு 1985.
[A]1,2 சரி.
[B]1 சரி.
[C]1 தவறு.
[D]1,2 தவறு.
24) இடைக்காலத்தில் இந்தியர்களின் மருத்துவம், கணிதம் மற்றும் வானியல் திறமைகளை அரேபிய மற்றும் ஈரானிய அறிஞர்கள் பெரிதும் மதித்தனர் என்றவர்?
அ)கிருஷ்ண குமார்.
ஆ)லோதர்.
இ)அக்வானி.
ஈ)ஜான்சன்.
25)நாம் ஒருவரை முற்றிலும் சார்ந்தோ அல்லது தனித்தோ இருக்க முடியாது. ஆனால் இவ்வுலகில் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்கிறோம் என்றவர்?
அ)புத்தர்.
ஆ)நேரு.
இ)காந்தி.
ஈ)வள்ளுவர்.
26)மகேந்திர ராஜ் மார்க் இந்தியாவை எதனுடன் இணைக்கும் இணைப்பு?
[A]டாக்கா.
[B]கொழும்பு.
[C]திம்பு.
[D]காத்மண்டு.
27)நேபாள நாட்டின் எல்லையை பகிரும் இந்திய மாநிலங்களில் பொருந்தாதது?
[A]பீகார்.
[B]மேற்குவங்கம்.
[C]அஸ்ஸாம்.
[D]சிக்கிம்.
28)(1) முதலாம் ராஜராஜன் இலங்கையின் வடபகுதியைக் கைப்பற்றினார்.
(2)முதலாம் ராஜேந்திரன் இலங்கையின் வடபகுதியைக் கைப்பற்றினார்.
[A]1,2 சரி.
[B]1 சரி.
[C]2 சரி.
[D]இரண்டும் தவறு.
29)பொருத்துக.
அ)பாகிஸ்தான் – (1)மக்மகான்.
ஆ)சீனா – (2)ராட்கிளிஃப்.
இ)நேபாளம் – (3) சாரதா ஆறு.
ஈ)பர்மா – (4) இரண்டாவது மிக நீண்ட எல்லை.
[A]2143.
[B]2134.
[C]1234.
[D]2413.
30)1980-இல் தொடங்கப்பட்ட திட்டம்?
[A]தமிழ்நாடு ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து திட்டம்.
[B]பள்ளி சுகாதார திட்டம்.
[C]ஆரம்பக் கல்விக்கு தேசிய ஊட்டச்சத்து திட்டம்.
[D]முதலமைச்சரின் விரிவான சுகாதார காப்பீட்டு திட்டம்.
31)பொருத்துக.
[புரட்சி தலைவர் ஊட்டச்சத்து உணவுத்திட்டம்]
அ)கிராமப் புறங்களில் – (1)1982.
ஆ)நகர்ப் புறங்களில் –(2)1984.
இ)கர்ப்பிணி பெண்கள் – (3)1983.
ஈ) ஓய்வூதியதாரர்கள் –(4)1995.
[A]2143.
[B]2134.
[C]1234.
[D]1243.
32)சரியான விடையை தேர்க.
அ) தமிழ்நாட்டில் தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு 1 நவம்பர் 2016.
ஆ) தமிழ்நாட்டில் பெண்குழந்தைகளை மேம்படுத்துவதற்கும் மாற்றத்தின் தூண்டுதலான வினையூக்கிகளாக மாற்றுவதற்கும் பதுமையர் குழு ஏற்படுத்தப்பட்டது.
[A]அ சரி.
[B]ஆ சரி.
[C]அ, ஆ சரி.
[D]அ, ஆ தவறு.
33)பிரதம மந்திரி கிராமோதயா யோஜனா திட்ட்த்தின் குழந்தைகளின் வயது தகுதி?
[A]6 மாதம் - 30 மாதம்.
[B]6 மாதம் – 5 வயது வரை.
[C]6 மாதம் – 36 மாதம் வரை.
[D]6 மாதம் – 15 மாதம் வரை.
34)தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?
[A]2010.
[B]2011.
[C]2012.
[D]2013.
35)கூற்றுகளில் சரியானது?
[A]இந்தியாவில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் ஆயிரத்திற்கு 2.7 சதவீதமாக உள்ளது.
[B]தமிழ் நாட்டில் உள்ள 434 குழந்தைகள் மேம்பாட்டு தொகுதிகளில் ICDS திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
[C]வாங்கும் சக்தியில் இந்தியாவின் தரம் – இரண்டு.
[D]தமிழ்நாட்டில் 33,322 நியாய விலைக் கடைகள் இயங்குகின்றன.
விளக்கம்:
[A]இந்தியாவில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் ஆயிரத்திற்கு 1.7 சதவீதமாக உள்ளது.
[B]தமிழ் நாட்டில் உள்ள 434 குழந்தைகள் மேம்பாட்டு தொகுதிகளில் ICDS திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
[C]வாங்கும் சக்தியில் இந்தியாவின் தரம் – 03.
[D]தமிழ்நாட்டில் 33,222 நியாய விலைக் கடைகள் இயங்குகின்றன.
36)கூற்று: தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடவடிக்கைகளின் இயக்குநரின் தனித்துவமான அடையாள எண்ணை (UIN) வெளியிடுவதற்கு 10 விரல் கைரேகை, இரு கருவிழிகள், முகப்பதிவு செய்தல் ஆகியவற்றீன் மூலம் பதிவேட்டில் பதியப்படுகிறது. இந்த தரவு பயோமெட்ரிக் ஸ்மார்ட் குடும்ப அட்டை வழங்க முன்மொழியப்பட்டது.
காரணம்: தனிப்பட்ட அடையாளத்தை இது அடிப்படையாகக் கொண்டிருப்பதால், உறுப்பினர்களின் தரவு நகல் மற்றும் போலி அட்டைகளை அகற்றலாம்.
[A]கூற்று, காரணம் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
[B]கூற்று, காரணம் சரி. காரணம் கூற்றை விளக்கவில்லை.
[C]கூற்று சரி, காரணம் தவறு.
[D]கூற்று தவறு, காரணம் சரி.
37)தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் எவ்வளவு சதவீத நகர்ப்புறகுடும்பங்களை உள்ளடக்கியது?
[A]25.
[B]50.
[C]75.
[D]65.
38)(1)2015-16 ஆம் ஆண்டில் 27% நகர்ப்புற பெண்களும், 16% கிராமப்புற பெண்களும் (15-49 வயது) ஊட்டசத்து குறைபாடு/ நீண்ட கால ஆயுள் குறைபாட்டால் பாதிப்பு.
(2)கிராமப்புறங்களில் சுமார் 31% குழந்தைகள், நகர்ப்புறங்களில் சுமார் 41% குழந்தைகள் (06-59 மாதம்) குன்றியிருக்கின்றனர். அதாவது வயதுக்கேற்ற உயரம் இல்லை.
[A]1,2 சரி.
[B]1 சரி.
[C]2 சரி.
[D]இரண்டும் தவறு.
விளக்கம்:
(1)2015-16 ஆம் ஆண்டில் 16% நகர்ப்புற பெண்களும், 27% கிராமப்புற பெண்களும் (15-49 வயது) ஊட்டசத்து குறைபாடு/ நீண்ட கால ஆயுள் குறைபாட்டால் பாதிப்பு.
(2)கிராமப்புறங்களில் சுமார் 41% குழந்தைகள், நகர்ப்புறங்களில் சுமார் 31% குழந்தைகள் (06-59 மாதம்) குன்றியிருக்கின்றனர். அதாவது வயதுக்கேற்ற உயரம் இல்லை.
39)இந்தியாவில் 2015-16 காலகட்டத்தில் வறுமையில் இருந்த மக்கள்?
[A]271 மில்லியன்.
[B]364 மில்லியன்.
[C]292 மில்லியன்.
[D]196 மில்லியன்.
40)தமிழகத்தின் முதல் நான்கு அதிக MPI மாவட்டம் தவறானது?
[A]கோவை.
[B]கடலூர்.
[C]அரியலூர்.
[D]நாகப்பட்டினம்.
41)(1)சுதந்திர காலத்துக்கும் தற்போதைக்கும் இடையில் உணவு தானியங்களின் விளைச்சல் நான்கு மடங்கு அதிகரிப்பு.
(2)சுதந்திர காலத்துக்கும் 2000களின் நடுப்பகுதியில் நாட்டில் பால் உற்பத்தி 13 மடங்கு, மீன் உற்பத்தி 08 மடங்கு, முட்டை உற்பத்தி 40 மடங்கு அதிகரிப்பு.
[A]1,2 சரி.
[B]1 சரி.
[C]1 தவறு.
[D]1,2 தவறு.
விளக்கம்:
சுதந்திர காலத்துக்கும் 2000களின் நடுப்பகுதியில் நாட்டில் பால் உற்பத்தி 08 மடங்கு, மீன் உற்பத்தி 13 மடங்கு, முட்டை உற்பத்தி 40 மடங்கு அதிகரிப்பு.
42) வாங்கும் சக்தியைக் கண்காணிக்கும் ஒரு முறை?
அ)நுகர்வோர் விலை குறியீட்டெண்.
ஆ)சில்லறை விலை குறீயிட்டெண்.
இ)பொது விலை குறியீட்டெண்.
ஈ)நிகர உற்பத்தி குறியீட்டெண்.
43)(1)GST அமல்படுத்திய முதல் நாடு சுவீடன் ஆகும்.
(2)1970-1980 களில் பல ஐரோப்பிய நாடுகள் பண்டங்கள் மற்றும் பணிகள் வரியை அறிமுகப்படுத்தியது.
[A]1,2 சரி.
[B]1 சரி.
[C]1 தவறு.
[D]1,2 தவறு.
44)பொருத்துக.
அ) வளர் வீத வரி – (1) வரி குறையும்.
ஆ) தேய்வு வீத வரி – (2) எப்போதும் ஒரே வரி.
இ) விகிதாசார வரி – (3) வரியும் அதிகரிக்கும்.
[A]123.
[B]213.
[C]321.
[D]312.
45)பண்டங்கள் மற்றும் பணிகள் வரி இந்திய பாராளுமன்றத்தால் எப்போது நிறைவேற்றப்பட்டது?
[A]01 ஜூலை 2017.
[B]23 மார்ச் 2016.
[C]29 மார்ச் 2016.
[D]29 மார்ச் 2017.
46) இடைநிலைக் கல்வி மற்றும் மேல்நிலைக் கல்வி வரி எந்த அமைப்பில் வருகிறது?
[A]SGST.
[B]CGST.
[C]IGST.
[D]A,B.
47)நேர்முக வரி என்பது ”யார் மீது வரி விதிக்கப்படுகிறதோ அவரே அவ்வரியை செலுத்துவதாகும்” யார் கூற்று?
[A]ஜே.எஸ்.மில்.
[B]ஜேக்கப் வைனர்.
[C]செலீக்மேன்.
[D]ஆடம்ஸ்மித்.
48)கூற்று :இந்தியாவில் வரி விதிப்பின் வேர்கள் மனு ஷ்மிரிதி மற்றும் அர்த்தசாஸ்த்ர காலத்திலிருந்தே பின்பற்றப்பட்டது.
காரணம் :தற்கால இந்தியா வரி முறையானது பண்டைய கால வரி முறையை அடிப்படையாக கொண்டிருக்கவில்லை.
[A]கூற்று, காரணம் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
[B]கூற்று, காரணம் சரி. காரணம் கூற்றை விளக்கவில்லை.
[C]கூற்று சரி, காரணம் தவறு.
[D]கூற்று தவறு, காரணம் சரி.
49)இந்தியாவில் வருமான வரி சட்டத்தை அறிமுகப்படுத்தியவர்?
[A]ஆடம்ஸ் ஹாக்.
[B]ஜேம்ஸ் வில்சன்.
[C]தாம்ஸ் மன்ரோ.
[D]உட்ரோ வில்சன்.
50)சுத்தமான பணச் செயல்பாடு எப்போது தொடங்கியது?
[A]ஜனவரி 31, 2016.
[B]ஜனவரி 31, 2017.
[C]ஜனவரி 31, 2018.
[D]ஜனவரி 31, 2019.
51) பினாமி பரிவர்த்தனைகள் (தடை) திருத்தச் சட்டம் _____ ஆண்டு தொடங்கப்பட்டது?
[A]2016.
[B]2015.
[C]2017.
[D]2014.
52)கூற்று: பொது நிறுவனங்களின் பொருட்கள் மற்றும் பணிகளின் உற்பத்தி மற்றும் பங்கீடு செய்தல் போன்றவற்றிலிருந்து பெறப்பட்ட வருமானம், நிர்வாக நடவடிக்கைகளிலிருந்து பெறப்பட்ட வருவாய் ஆகியவை வரிகளில் அடங்கும்.
காரணம்: வரி வருமானம் தவிர்த்து, வரி அல்லாத மூலங்களிலிருந்து பெறக்கூடியவை கட்டணங்கள்.
[A]கூற்று, காரணம் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
[B]கூற்று, காரணம் சரி. காரணம் கூற்றை விளக்கவில்லை.
[C]கூற்று சரி, காரணம் தவறு.
[D]கூற்று தவறு, காரணம் சரி.
53)(1)இந்திய அரசாங்கத்தினால் மூன்று அடுக்குகள் வரி வசூலிக்கப்படுகிறது.
(2)GST என்பது பலமுனை வரி ஆகும்.
[A]1,2 சரி.
[B]1 சரி.
[C]1 தவறு.
[D]1,2 தவறு.
விளக்கம் :
GST ஒருமுனை வரி.
54)ஆடம்பரப் பொருள்களின் மீது விதிக்கப்படும் வரி?
[A]வளர்வீத வரி.
[B]விகிதாச்சார வரி.
[C]தேய்வுவீத வரி.
[D]மேற்கண்ட எதுவுமில்லை.
55)பொருந்தா ஒன்று?
[A]வளர்வீத வரி – வருமான வரி.
[B]தேய்வுவீத வரி – விற்பனை வரி.
[C]விகிதாச்சார வரி – நிறுவன வரி.
[D]எதுவுமில்லை.
56)மக்களின் வருமானம் அதிகரித்தால் தானாகவே அதிக வரி வருவாயை செலுத்தும் வகையில் வரி இருக்க வேண்டும் எனக் கூறும் வரி?
[A]வசதி வரி.
[B]உறுதி வரி.
[C]மறைமுக வரி.
[D]நெகிழ்ச்சி வரி.
57)வீட்டு அலங்காரப் பொருள்கள் ஏற்றுமதியில் முக்கிய மையமாக இருக்கும் மாவட்டம்?
[A]கோவை.
[B]கரூர்.
[C]திருப்பூர்.
[D]ஈரோடு.
58)மாநிலத்தில் பின்தங்கிய வட்டாரங்களில் தொழிற்துறைகளை மேம்படுத்துவதற்கு தொழிற்தோட்ட கொளகையை பயன்படுத்தி வெற்றி பெறச் செய்வதற்கான உதாரணம் ______இல் உள்ள தொழிற்தோட்டம்?
[A]ஒசூர்.
[B]ஆவடி.
[C]கோவை.
[D]திருப்பூர்.
59)1920-களில் தொழில்தொகுப்பு அல்லது மாவட்டங்களின் நன்மைகளை முதன்முதலில் கண்டறிந்தவர்?
[A]ஆடம் ஸ்மித்.
[B]ஜான் ரஸ்கின்.
[C]இராபின்சன்.
[D]ஆல்ஃபிரட் மார்ஷல்.
60)பொருத்துக. (ELCOSEZs)
[அ]மதுரை – (1)ஜாகீர் அம்மாபாளையம்.
[ஆ]கோவை –(2)நாவல்பட்டு.
[இ]சேலம் –(3)விஸ்வநாதபுரம்.
[ஈ]ஓசூர் –(4)வட பாலஞ்சி.
[உ]திருச்சி – (5)விளாங்குறிச்சி.
[A]54132.
[B]45123.
[C]45132.
[D]54123.
61)(1)சிறப்பு பொருளாதார கொள்கைகளை அறிமுகப்படுத்துவதற்கான ஒரு கொள்கை ஏப்ரல் 2000-இல் அறிமுகப்படுத்தப்பட்டது.
(2)MEPZ தலைமையகம் சென்னை ஆவடியில் உள்ளது.
(3)பெரம்பலூரில் பல்நோக்கு உற்பத்தி SEZ-களை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
[A]அனைத்தும் சரி.
[B]2,3 சரி.
[C]1,3 சரி.
[D]3 சரி.
விளக்கம்:
(2)MEPZ தலைமையகம் தாம்பரம் GST சாலையில் உள்ளது.
62)(1)MEPZ வட்டார பகுதிகளில் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்க 1985-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
(2)நாங்குநேரியில் பல்நோக்கு உற்பத்தி SEZ அமைந்துள்ளது.
(3)1930களில் தமிழகத்தின் தெற்குப் பகுதியில் வளர்ச்சி பெற்ற தொழில் நீர்மின்சக்தியில் இருந்து மின்சாரம் உற்பத்தி.
தவறானது?
[A]1,3.
[B]1,2,3.
[C]2,3.
[D]3 மட்டும்.
விளக்கம்:
(1)MEPZ வட்டார பகுதிகளில் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்க 1984-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
(3)1930களில் தமிழகத்தின் மேற்குப் பகுதியில் வளர்ச்சி பெற்ற தொழில் நீர்மின்சக்தியில் இருந்து மின்சாரம் உற்பத்தி.
63)STAND UP INDIA திட்டம் எப்போது துவங்கப்பட்டது?
[A]05 ஏப்ரல் 2016.
[B]06 ஏப்ரல் 2016.
[C]15 ஜனவரி 2016.
[D]16 ஜனவரி 2016.
64)தமிழகத்தில் சுமைதூக்கும் வாகன முழுபாக கட்டமைப்பிற்கான தொழிற்சாலைகளுக்குப் பெயர் பெற்ற மாவட்டம்?
[A]திருச்செங்கோடு.
[B]நாமக்கல்.
[C]A,C.
[D]எதுவுமில்லை.
விளக்கம்:
வினாவில் மாவட்டம் கேட்கப்பட்டுள்ளது. வாசிப்பு திறனுக்காக மட்டுமே இந்த வினா.
65)தோல் பதனிடுதல் மற்றும் உறபத்தித் தொழிற்சாலைகளின் தொகுப்பு எங்கு காணப்படுகிறது?
அ)திருப்பூர்.
ஆ)கோவை
இ)ஈரோடு.
ஈ)திண்டுக்கல்.
இவற்றில்:
[A]1,2,4.
[B]2,3,4.
[C]3,4.
[D]1,4.
66)விசைத்தறி தொழில்துறை தொகுப்புகள் காணப்படும் மாவட்டம்?
(1)ஈரோடு.
(2)சேலம்.
(3)கரூர்.
(4)திண்டுக்கல்.
இவற்றில்:
[A]123.
[B]1234.
[C]12.
[D]2,3.
67)உலகச் சந்தையில் உலகின் தெற்கு அரைக்கோளத்தில் ஒரு சக்தி வாய்ந்த தொகுப்பாக காணப்படும் இடம்?
[A]ஈரோடு.
[B]கரூர்.
[C]திருப்பூர்.
[D]சென்னை.
68)கூற்று 1: ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம் தொழில் தொடங்குவதற்கான தொடக்க முயற்சிகளை ஏற்படுத்துதல்.
கூற்று 2: ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் என்பது பச்சைப் புல்வெளி நிறுவனம் அமைப்பதற்கான கடன் வழங்கும் திட்டம்.
[A]கூற்று 1,2 சரி.
[B]கூற்று 1,2 தவறு.
[C]கூற்று 2 சரி.
[D]கூற்று 2 தவறு.
விளக்கம்:
கூற்று 1: ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் தொழில் தொடங்குவதற்கான தொடக்க முயற்சிகளை ஏற்படுத்துதல்.
கூற்று 2: ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம் என்பது பச்சைப் புல்வெளி நிறுவனம் அமைப்பதற்கான கடன் வழங்கும் திட்டம்.
69)பொருத்துக.
அ) TANSIDCO –(1)1965
ஆ) TIDCO –(2)1970.
இ) SIPCOT –(3)1949.
ஈ) TIIC – (4)1971.
[A]2413.
[B]2143.
[C]1423.
[D]2134.
70)தவறான ஒன்றைத் தேர்வு செய்க.
[A]இந்தியா 90% பட்டாசு உற்பத்தி, 80% பாதுகாப்பான தீப்பெட்டி உற்பத்தி மற்றும் 60% அச்சுப்பணி தேர்வுகளுக்கு முக்கிய பங்காக சிவகாசியை சார்ந்துள்ளது.
[B]சிறி நிறுவனங்களுக்காக நிறுவப்பட்ட முதல் தொழில்துறை நிறுவனம் TANSI ஆகும்.
[C]வருமானம் மற்றும் செல்வத்தின் செறிவைக் குறைப்பதன் மூலம் தொழில்முனைவோர் சமூகத்தின் வளர்ச்சிக்கு பங்களிக்கின்றனர்.
[D]ஈரோடு மற்றும் குமாரபாளையம் உள்நாட்டு மற்றும் உள்களாவிய சந்தைகளுக்கு தரை விரிப்புகளை உற்பத்தி செய்யும் மையங்களாகத் திகழ்கின்றன.
விளக்கம்:.
பவானி மற்றும் குமாரபாளையம் உள்நாட்டு மற்றும் உள்களாவிய சந்தைகளுக்கு தரை விரிப்புகளை உற்பத்தி செய்யும் மையங்களாகத் திகழ்கின்றன.
71)(1) 1801ஆம் ஆண்டு செவத்த தம்பியின் தலைமையில் திருநெல்வேலி, இராமநாதபுரம் இரு பகுதிகளை சேர்ந்த படைகள் இணைந்து கடற்கரை வழியாகத் தஞ்சாவூர் நோக்கி அணிவகுத்துச் சென்றன.
(2) வில்லியம் பிளக்பர்ன் செவத்த தம்பியை மாஞ்சேரியில் வென்றார்.
[A]கூற்று 1,2 சரி.
[B]கூற்று 1,2 தவறு.
[C]கூற்று 2 சரி.
[D]கூற்று 2 தவறு.
விளக்கம்:
(1) 1801ஆம் ஆண்டு செவத்த தம்பியின் தலைமையில் சிவகங்கை, இராமநாதபுரம் இரு பகுதிகளை சேர்ந்த படைகள் இணைந்து கடற்கரை வழியாகத் தஞ்சாவூர் நோக்கி அணிவகுத்துச் சென்றன.
(2) வில்லியம் பிளக்பர்ன் செவத்த தம்பியை மாங்குடியில் வென்றார்.
72)கர்னல் ஹார்ட்லி திப்புவின் தளபதி ஹுசைன் அலியைக் எங்கு
தோற்கடித்தார்?
[A]கள்ளிக்கோட்டை.
[B]பரங்கிப்பேட்டை.
[C]ஸ்ரீரங்கப்பட்டினம்.
[D]மங்களூர்.
73)(1)பாளையத்துக்கு உட்பட்ட பகுதியில் குடிமையியல் பிரச்னைகளிலும் குற்றவியல் பிரச்னைகளிலும் விசாரணை நடத்தி நீதி வழங்கும் அதிகாரமும் பாளையக்காரருக்கு உண்டு.
(2)ஹைதரின் மகன் திப்பு சுல்தான் கும்பகோணம் அருகே ஜெனரல் மேத்யூஸை தோற்கடித்துச் சிறைப்பிடித்தார்.
[A]கூற்று 1,2 சரி.
[B]கூற்று 1,2 தவறு.
[C]கூற்று 2 சரி.
[D]கூற்று 2 தவறு.
விளக்கம்:
(2)ஹைதரின் மகன் திப்பு சுல்தான் கும்பகோணம் அருகே கர்னல் ப்ரெத்வெயிட்டை தோற்கடித்துச் சிறைப்பிடித்தார்.
74)1759இல் மசூலிப்பட்டினத்தைக் கைப்பற்றியவர்?
[A]கர்னல் ஃபோர்டே.
[B]கர்னல் லேங்.
[C]கர்னெல் பெய்லி.
[D]ஜெனரல் மேத்யூஸ்.
75)வங்காள படையின் உருவாக்கம் சிற்றேடு (the making of the Bengal army)?
அ)கர்னல் மல்லீசன்.
ஆ)வரலாற்றாசிரியர் கீன்.
இ)எட்வர்ட் ஜான் தாம்சன்.
ஈ)சாவர்கர்.
76)எந்த ஆண்டு அமைக்கப்பட்ட இனாம் கமிஷனின் அறிக்கைப்படி 21,000க்கும் மேற்பட்ட தோட்டங்கள் பறிமுதல் செய்யப்பட்டன?
[A]1850.
[B]1852.
[C]1853.
[D]1854.
77)திண்டுக்கல், பாரமகால் பகுதியை எந்த உடன்படிக்கையின்படி ஆங்கிலேயர் பெற்றனர்?
[A]மதராஸ் உடன்படிக்கை.
[B]மங்களூர் உடன்படிக்கை.
[C]ஸ்ரீரங்கப்பட்டின உடன்படிக்கை.
[D]அலகாபாத் உடன்படிக்கை.(1765).
78)பொருத்துக. (மறைந்த ஆண்டுகள்).
அ)நஞ்சராஜா – (1) 1796.
ஆ)ஒன்பதாம் சாமராஜ் – (2) 1782.
இ)ஹைதர் அலி – (3)1770.
ஈ)வேலு நாச்சியார் –(4)1796.
[A]4321.
[B]1423.
[C]1324.
[D]3421.
79)ஒரு குறிப்பிட்ட பகுதியில் அதிகாரத்துக்கு உட்பட்ட இடங்களைத் தக்கவைத்துக் கொள்ள இடைப்பட்ட நாடுகளை சுற்றுவேலிக் கொள்கை மூலம் தொடர்ந்து அனுமதித்தவர்?
[A]வில்லியம் பெண்டிங்.
[B]காரன்வாலிஸ்.
[C]டல்ஹெளசி.
[D]வாரன் ஹேஸ்டிங்ஸ்.
80)யூசப்கான் தொடர்பான கூற்றுகளில் சரியானவை?
அ)சிவகங்கையைச் சேர்ந்தவர்.
ஆ)1752-54 இல் திருநெல்வேலி முற்றுகையில் பங்கேற்றார்.
இ)திப்புசுல்தானைத் தோற்கடித்து சோழவந்தானைக் கைப்பற்றினார்.
ஈ)மதுரையில் நெசவுத் தொழிலை ஊக்குவித்தார்.
[A]அ,ஆ,இ,ஈ.
[B]ஆ,இ,ஈ.
[C]இ,ஈ.
[D]ஈ.
விளக்கம்:
அ)இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
ஆ)1752-54 இல் திருச்சிராப்பள்ளி முற்றுகையில் பங்கேற்றார்.
இ)ஹைதர் அலியைத் தோற்கடித்து சோழவந்தானைக் கைப்பற்றினார்.
81)கர்னல் கில்லஸ்பி குதிரைப்படையில் மீதமுள்ள வீர்ர்களுடன் யாரை தன்னை பின் தொடர்ந்து வருமாறு அறிவுறுத்தினார்?
[A]கர்னல் மர்ரியாட்.
[B]லெப்டின்ண்ட் உட் ஹவுஸ்.
[C]கேப்டன் யங்.
[D]கர்னல் கென்னடி.
82)வேலூர் கிளர்ச்சி தொடர்பான கூற்றுகளில் தவறானது?
[A]கில்லஸ்பியின் வன்கொடுமைகளை நேரில் பார்த்தவர் ஜே.பிளாக்கிஸ்டன்.
[B]இராணுவ நீதிமன்றம் விதித்த தண்டனைகள் வேலூர் பொறுப்பதிகாரியால் 1806 செப்டம்பர் 23 இல் நிறைவேற்றப்பட்டது.
[C]லெப்டினெண்ட் பிளாகிஸ்டன் தலைமையில் 19ஆம் குதிரைபடையின் பீரங்கியால் கோட்டையின் வெளிவாசல் கதவு திறக்கப்பட்டது.
[D]தப்பியோடிய சிப்பாய்களை வழிமறித்துப் பிடிக்கும் எண்ணத்தை கொண்டிருக்கவில்லை.
விளக்கம்:
[D]தப்பியோடிய சிப்பாய்களை வழிமறித்துப் பிடிக்க சில உள்ளூர் குதிரைக்காரர்களுடன் ஒரு குதிரைப்படைப் பிரிவு கிளம்பியது.
83)லக்னோ ஆளுநர் மாளிகையை பாதுகாத்தவர்?
[A]கர்னல் ஹக்ரோஸ்.
[B]ஹென்றி ஹேவ்லக்.
[C]ஹென்றி லாரன்ஸ்.
[D]ஜான் லாரன்ஸ்.
84)பெருங்கிளர்ச்சியில் விளைவு தொடர்பாக பொருந்தாத ஒன்று?
[A]இந்தியா அரசுச் செயலர் மூலம் ஆளப்படும். 15உறுப்பினர்களைக் கொண்ட இந்தியா கவுன்சில் எனும் அமைப்பு அரசு செயலருக்கு உதவி செய்யும்.
[B]1853 சட்டமன்றம் ஐரோப்பியர்களை மட்டுமே உறுப்பினர்களாக கொண்டிருந்தது.
[C]1862-இல் அமைக்கப்படும்சட்டமன்றத்தில் இந்தியர்கள் நியமிக்கப்படுவர்.
[D]கடந்த காலம் மீண்டும் வரும் என்ற நம்பிக்கை மங்கியது.
விளக்கம்:
[C]1861-இல் அமைக்கப்படும்சட்டமன்றத்தில் இந்தியர்கள் நியமிக்கப்படுவர்.
85)வேலூர் புரட்சிக்கு உடனடிக் காரணம்?
[A]என்ஃபீல்டு ரக துப்பாக்கி தோட்டாக்கள்.
[B]நவீன சீருடை மாற்றம்.
[C]புதிய தலைப்பாகை.
[D]கொழுப்பு தடவப்பட்ட தோட்டாக்கள்.
86)BOOKER PRIZE 2020 வென்ற BURNT SUGAR என்னும் நாவலாசிரியர் ?
[A]AVNI DOSHI.
[B]STEPHEN KING.
[C]RUPA SRIKUMAR.
[D]TENZIN GEYCHE TETHONG.
87)4வது கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிகள்?
[A]ஒடிஷா.
[B]லடாக்.
[C]ஹரியானா.
[D]அஸ்ஸாம்.
88)சமீபத்தில் தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அம்மா கோவிட் ஹோம் கேர் திட்டம் பற்றி தவறான தகவல்?
அ)கரோனா சிகிச்சை மற்றும் மருத்துவக் கண்காணிப்புக்கான சிறப்புப் பெட்டகம் ரூ.2,500க்கு வழங்கப்படுகிறது.
ஆ)பெட்டகத்தில் விட்டமின் சி, விட்டமின் டி, ஜின்க் மாத்திரைகள் உள்ளிட்ட பொருள்கள் இருக்கும்.
இ)பெட்டகத்தில் உடலில் இதயத் துடிப்பு மற்றும் ஆக்ஸிஜன் அளவு கண்டறிவதற்கான பல்ஸ் ஆக்ஸிமீட்டர் இருக்கும்.
ஈ)கொடுக்கப்பட்ட தகவல்கள் சரியானது.
89)சமீபத்தில் தமிழக அரசிடம் பிற்படுத்தப்பட்டோர் வகுப்புச் சான்று பெற்ற வகுப்பினர்?
[A]கரலர்.
[B]கோட்டா.
[C]தீயா.
[D]இருளர்.
90)மகப்பேறு கால தாய்மார் இறப்பு விகிதத்தை 2030க்குள் 70ஆகக் குறைக்க இலக்கு நிர்ணயித்துள்ள அமைப்பு?
அ)யூனிசெஃப்.
ஆ)ஐ.நா.
இ)WHO.
ஈ)சர்வதேச மருத்துவக் குழு.
91)மத்திய அரசால் பிரதான் மந்திரி உஜ்வாலா திட்டம் அமல்படுத்தப்பட்ட நாள்?
அ)1 ஜனவரி 2016.
ஆ)1 ஏப்ரல் 2016.
இ)1 மே 2016.
ஈ)17 செப்டம்பர் 2016.
92)இந்தியா-ஜப்பான் இடையே மலாக்கா ஜலசந்தி பகுதியில் நடைபெற்ற 15வது கூட்டு ராணுவ ஒத்திகை?
[A]SLINEX.
[B]PASSEX.
[C]AUS-INDEX.
[D]MALABAR.
93)தட்டம்மை நோயை முற்றிலுமாக ஒழித்துள்ள தென்கிழக்கு நாடில் பொருந்தாது?
அ)மாலத்தீவுகள்.
ஆ)வங்கதேசம்.
இ)இலங்கை.
ஈ)அனைத்தும் சரியே.
94) உலக வங்கியின் நாடுகள் மற்றும் கடன் குழுக்களில் இந்தியாவின் வகைப்பாடு?
[A]உயர் நடுத்தர வருவாய்
[B]கீழ் நடுத்தர வருவாய்.
[C]குறைந்த வருவாய் பொருளாதாரம்.
[D]மிதமான வருவாய்.
95)காமன்வெல்த் சிறுகதைப் போட்டியில் வென்றவர்?
[A]அஞ்சனா குமார்.
[B]ஜனனி அய்யர்.
[C]கிருத்திகா பாண்டே.
[D]கலா நாராயணசுவாமி.
96)ஹாக்கி இந்தியா அமைப்பின் தலைவர்?
(கூடுதல் தகவல்: மணிபூர்-முதல் வடகிழக்கு இந்தியர்)
[A]ஞானேந்திர நிங்கோம்பாம்.
[B]ஹேமங் அமின்.
[C]மனிஷ் சாவ்னே.
[D]ராஜேஷ் ஜெய்ஸ்வால்.
97)உடலில் உள்ள புற்றுநோய் அணுக்களை ஆரோக்கிய அணுக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் மஞ்சள் (குர்குமின் வேதிப்பொருள்) மூலம் அழிக்க முடியும் என கண்டறிந்தது யார் குழு?
[A]சிஜோ கருவில்லா ராஜ்.
[B]அவினாஷ் முமார் அகர்வால்.
[C]அமிதவ தாஸ் குப்தா.
[D]ரமா சங்கர் வர்மா.
98)தேசிய மருத்துவர்கள் தினம்?
[A]ஜுலை 01.
[B]ஜூலை 17.
[C]ஜூலை 06.
[D]ஜூலை 27.
99) வேலை தேடுவோர் மற்றும் முதலாளிகளை இணைக்க ‘திறன் இணைப்பு மன்றம்’ (skill connect forum) என்ற போர்ட்டல் எந்த மாநிலத்தில் தொடக்கம்?
[A]தமிழ்நாடு.
[B]கேரளா.
[C]கர்நாடகா.
[D]ஆந்திரா.
100)முகக் கவசம் அணியாதவர்களுக்கான பிரச்சாரமான ‘ரோகோ-டோகோ’ (ROKO-TOKO) பிரசாரம் தொடங்கிய மாநிலம்?
[A]மத்திய பிரதேஷ்.
[B]ஒடிஷா.
[C]உத்திர பிரதேசம்.
[D]உத்ரகாண்ட்.
விடைகள்
Previous article
Next article
Leave Comments
Post a Comment