TNPSC MODEL QUESTION
TNPSC 2022 - 50 + 50 - 10th & 12th Important Questions & Answers!
⛳️பாடப்பகுதி :
1)10வது குடிமையியல்
(மத்திய அரசு, மாநில அரசு )
2)12வது அரசியல் அறிவியல்
(இந்திய அரசமைப்பு, சட்டமன்றம், ஆட்சித்துறை, இந்திய நீதித்துறை )
1)நாட்டின் ஒற்றுமையையும் மக்களின் பல்வேறுபட்ட கலாச்சார ஒற்றுமையையும் பறைசாற்றுவது?
[A]பாராளுமன்றக் கட்டிடம்.
[B]குடியரசுத் தலைவரின் இருப்பிடத்துடன் கூடிய அலுவலகம்.
[C]மக்களவை.
[D]பிரதமர்.
2)கேபினட் கூட்டம் நடைபெறாத போது பிரதமர் தனது கடமையை (விதி 78) ஆற்ற யாரை கலந்து ஆலோசிக்கலாம்?
[A]பிரதமர் அலுவலக செயலரை.
[B]குடியரசுத் தலைவரை.
[C]மூத்த சகாக்கள்.
[D]துணை பிரதமர்.
3)துணைக் குடியரசுத் தலைவரை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானம் எங்கு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும்?
[A]மக்களவை.
[B]மாநிலங்களவை.
[C]பாராளுமன்றம்.
[D]உச்சநீதிமன்றம்.
4)சர்க்காரியா கமிஷன்(1983) அமைக்கப்பட்டபோது இந்திய பிரதமர்?
[A]லால் பகதூர் சாஸ்திரி.
[B]சந்திரசேகர்.
[C]ராஜீவ் காந்தி.
[D]இந்திரா காந்தி.
5)பின்வரும் கூற்றுகளில் சரியானது?
I)குடியரசுத் தலைவருக்கு உதவிடவும், அறிவுரை வழங்கிடவும் பிரதம அமைச்சரை தலைவராகக் கொண்ட ஒரு மத்திய அமைச்சரவைக் குழு இருக்கும் எனக் குறிப்பிடும் சரத்து – 74(1).
II)மத்திய அரசின் ஒவ்வொரு நிர்வாக நடவடிக்கையும் குடியரசு தலைவர் பெயராலேயே மேற்கொள்ள வேண்டும் – பிரிவு 77.
III)குடியரசுத் தலைவர் பெயரை தேர்ந்தெடுக்கும் வாக்காளர் குழுவிலுள்ள 50 பேர் முன்மொழியவும் 50பேர் வழிமொழியவும் வேண்டும்.
IV)1950இல் ஒரு தலைமை நீதிபதி தவிர்த்து 07 நீதிபதிகளை உச்சநீதிமன்றம் கொண்டிருந்தது.
[A]அனைத்தும்.
[B]I,II,IV.
[C]I,II,III.
[D]I,III,IV.
6)பல்வேறு நாடுகளுக்கான தூதர்களை நியமிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது?
[A]அமைச்சரவை.
[B]குடியரசுத் தலைவர்.
[C]பிரதமர்.
[D]துணைக் குடியரசுத் தலைவர்.
7)பின்வரும் கூற்றுகளில் தவறானது?
[I] மாநிலத்தின் எல்லைகளை மாற்றி அமைத்திட அதிகாரம் படைத்தது – பாராளுமன்றம்.
[II]விதி 66(1) குடியரசுத் தலைவர் தேர்தல் பற்றி குறிப்பிடுகிறது.
[III]நாட்டின் ஒருங்கிணைந்த நீதித்துறையாக உயர்நீதிமன்றம் விளங்குகிறது.
[IV]பிரிவு53- மத்திய அரசின் நிர்வாக அதிகாரங்களை குடியரசுத்தலைவர் அரசியலமைப்பின்படி செயல்படுத்துகிறார்.
[A]I,II,III.
[B]II,III,IV.
[C]II,III.
[D]III --ONLY.
8)தமிழகத்திலிருந்து மக்களவை, மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள்?
[A]19,38.
[B]19,39.
[C]39,18.
[D]18,39.
9)உச்சநீதிமன்றம் துவக்கப்பட்ட நாள்?
[A]24 ஜனவரி1950.
[B]26 ஜனவரி1950.
[C]28 ஜனவரி1950.
[D]30 ஜனவரி1950.
10)கூற்றுகளில் பொருந்தா ஒன்று?
[A]ஒரு மசோதா சாதாரண மசோதாவா, நிதி மசோதாவா என்று தீர்மானிக்கும் அதிகாரம் பெற்றவர் – சபாநாயகர்.
[B]நம்பிக்கையில்லாத் தீர்மானம் மாநிலங்களவையில் மட்டுமே அறிமுகப்படுத்த முடியும்.
[C] இந்திய அரசின் தலைமை வழக்குரைஞருக்கு நாடாளுமன்ற இரு அவை கூட்டத்தில் வாக்களிக்கும் உரிமை உண்டு.
[D]மாநிலங்களவை உறுப்பினர் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை 1/3பகுதியினர் ஓய்வு பெறுகின்றனர்.
11) குடியரசு தலைவர் "நடுவண் அரசின் பாதுகாப்பு படையின் தலைமைத் தளபதி" அதிகாரத்தை வழங்கும் சட்டப்பிரிவு?
[A]53.
[B]53(2).
[C]53(1).
[D]54.
12)மத்திய அரசு நிர்வாகம் பற்றிக் குறிப்பிடும் சட்டபிரிவு?
[A]52-151.
[B]52-78.
[C]79-122.
[D]ஏதுமில்லை.
13)இந்திய அரசின் தலைமை வழக்குறைஞரின் பதவிக்காலம்?
[A]05 ஆண்டுகள்.
[B]06 ஆண்டுகள்.
[C]வரையறுக்கப்படவில்லை.
[D]04 ஆண்டுகள்.
14)துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலில்
பொருந்தாதவர்?
[A]மக்களவை உறுப்பினர்.
[B]மாநில சட்டமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்.
[C]மாநிலங்களவை உறுப்பினர்.
[D]ஏதுமில்லை.
15)கூற்று1: நாடாளுமன்ற இரு அவை அல்லது ஏதேனும் ஒரு அவையின் கூட்டத்தை குடியரசுத் தலைவர் முடிவுக்குக் கொண்டு வரலாம்.
கூற்று2:குடியரசுத் தலைவருக்கு எதிரான குற்றசாட்டு நாடாளுமன்ற இரு அவைகளிலும் தீர்மானமாக கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும்.
கூற்று3:இந்திய அரசின் தலைமை வழக்குறைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்குக் கிடைக்க வேண்டிய அனைத்து சலுகைகளையும், சட்ட விலக்களிப்புகளையும் பெறுகிறார்.
குறியீடுகள்:
[A]அனைத்தும் சரி.
[B]1,3 மட்டும் சரி.
[C]2,3 மட்டும் சரி.
[D]1,2 மட்டும் சரி.
16)நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தைக் கூட்டுபவர்?
[A]சபாநாயகர்.
[B]மக்களவை செயலர்.
[C]மாநிலங்களவை தலைவர்.
[D]குடியரசுத் தலைவர்.
17)மாநில அரசு பற்றிக் குறிப்பிடும் பகுதி மற்றும் சட்ட பிரிவு?
[A]IV, 52-78.
[B]V,52-151.
[C]VI, 152-237.
[D]VI, 152-178.
18) பதிவேடுகளின் நீதி மன்றமாக செயல்படுவது?
[A]உயர்நீதிமன்றம்.
[B]உச்சநீதிமன்றம்.
[C]இரண்டும்.
[D]இரண்டுமில்லை.
19)கூற்றுகளில் பொருந்தாதது?
[A]ஆளுநரின் நிர்வாக அதிகாரம் பற்றி கூறும் சட்டப்பிரிவு- 153.
[B]முதலமைச்சர் நியமனம் பற்றிக் குறிப்பிடும் விதி – 163(1).
[C]ஒருவர் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு ஆளுநராக நியமிக்கப்படலாம் – விதி 158(3A).
[D]ராஜ மன்னார் குழு ஆளுநர் நியமனம் குறித்த பல ஆலோசனைகளை வழங்கியுள்ளது.
20)பஞ்சாயத்து மற்றும் நகராட்சி நிதி நிலையை ஆய்வு செய்ய ஒவ்வொரு ஐந்தாண்டுக்கு ஒருமுறை நிதி ஆணையம் ஒன்றை அமைப்பவர்?
[A]ஆளுநர்.
[B]குடியசுத் தலைவர்.
[C]பிரதமர்.
[D]முதலமைச்சர்.
21)கூற்று 1: 1956ஆம் ஆண்டுக்குப் பின் தோற்றுவிக்கப்பட்ட உயர்நீதிமன்றங்கள் அண்டை மாநிலங்களுக்கும் உயர் நீதிமன்றமாக விளங்கியது.
கூற்று 2: 1976 ஆம் ஆண்டு 42வது சட்டதிருத்தத்தின் மூலம் உயர்நீதிமன்றத்துக்கு நீதிப்புனராய்வு அதிகாரத்தை வழங்கியது.
[A]கூற்று1,2 சரி.
[B]கூற்று1 மட்டும் சரி.
[C]கூற்று2 மட்டும் சரி.
[D]இரண்டும் தவறு.
22)அரசியலமைப்பில் பயன்படுத்தப்படாத சொல்?
[A]பஞ்சாயத்து ராஜ்.
[B]உயர்நீதிமன்றம்.
[C]நீதி புனராய்வு.
[D]நீதி பேராணை.
23)பொருந்தாத மாநிலம் [மேலவை]?
[A]கேரளா.
[B]கர்நாடகா.
[C]தமிழ்நாடு.
[D]பீகார்.
24)மற்ற மாநிலங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சி மேற்கொள்வது?
[A]முதல்வர்.
[B]அமைச்சரவை.
[C]ஆளுநர்.
[D]மாநிலங்களுக்கான சிறப்புக் குழு.
25)உலகின் இரண்டாவது பெரிய நீதித்துறை வளாகம் எங்குள்ளது?
[A]லண்டன்.
[B]சென்னை.
[C]கல்கத்தா.
[D]அலகாபாத்.
26)ஜம்மு காஷ்மீர் அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த நாள்?
[A]1957 நவம்பர்17.
[B]1956 நவம்பர்17.
[C]1957 நவம்பர்26.
[D]1957 ஜனவரி26.
27)பின்வரும் கூற்றுகளில் சரியானது எது அல்லது எவை?
1)விதான் பரிஷத் என்பது சட்டப் பேரவையை குறிக்கிறது.
2)விதி 123 மற்றும் 213 படி முறையே ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் அவசரச் சட்டங்களை பிறப்பிக்கின்றனர்.
3)ஆந்திரப் பிரதேசத்தின் புதிய உயர்நீதிமன்றம் அமராவதியில் 2018 ஜனவரி 01-இல்ஆரம்பிக்கப்பட்டது.
4)சட்டப்பிரிவு 361(1) ஆளுநருக்கான சிறப்புரிமைகள் பற்றிக் கூறுகிறது.
இவற்றில்:
[A]1,3,4 மட்டும்.
[B]1,2,4 மட்டும்.
[C]1,4 மட்டும்.
[D]4 மட்டும்.
28)மாநில அரசு சுமூகமாக இயங்க மத்திய அரசுடன் இணக்கமான உறவு வைத்துக் கொள்பவர் யார்?
[A]ஆளுநர்.
[B]தலைமைச் செயலாளர்.
[C]முதல்வர்.
[D]குடிமைப்பணி அதிகாரிகள்.
29)இவர்களில் மாநில ஆளுநரால் நியமனம் செய்யப்படாதவர்?
[A]அமைச்சரவை உறுப்பினர்கள்.
[B]மாநில அரசு வழக்கறிஞர்.
[C]உயர்நீதிமன்ற நீதிபதி.
[D]மாநில தலைமை தேர்தல் ஆணையர்.
30)ஆண்டு நிதிநிலை அறிக்கையை சட்டமன்றத்தில் அறிமுகம் செய்யக் காரணமானவர்?
[A]முதல்வர்.
[B]அமைச்சரவை.
[C]நிதியமைச்சர்.
[D]ஆளுநர்.
31)பொருத்துக. (விதிகள்).
[A]மாநில ஆளுநரின் நிர்வாக அதிகாரம் -171(1).
[B]ஆளுநர் பதவிக்குத் தேவையான தகுதிகள் -216.
[C]சட்ட மேலவை உறுப்பினர் எண்ணிக்கை- 157,158
[D]உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் – 154(1).
குறியீடுகள்:
[A]4312.
[B]3412.
[C]4321.
[D]3421.
32) 2015-16 காலகட்டத்தில் தமிழக முதல்வர்?
[A]திரு.கருணாநிதி.
[B]திரு.பன்னீர்செல்வம்.
[C]திரு.பழனிசாமி.
[D]செல்வி.ஜெயலலிதா.
33)பின்வரும் எந்த நியமனத்தில் முதல்வர் ஆளுநருக்கு ஆலோசனை வழங்குவது இல்லை?
[A]மாநில திட்டக் குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள்.
[B]மாநில நிதிக்குழுத் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள்.
[C]அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள்.
[D]ஏதுமில்லை.
34)உறுப்பு 370இன் வரைவை எழுத மறுத்தவர்?
[A]கோபால சுவாமி.
[B]அம்பேத்கர்.
[C]சச்சிதானந்த சின்ஹா.
[D]எவருமில்லை.
35)பின்வரும் கூற்றுகளை கவனத்தில் கொள்க.
[I]கிராம பஞ்சாயத்து அமைப்புகள் உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை மநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும். –உறுப்பு 40.
[II]ஒரு சட்ட முன்வரைவில் வரிசை எண்ணிடப்பட்ட பத்தி உட்பிரிவு ஆகும்.
[III]தனிநபர் சட்ட முன்வரைவு மீதான விவாதம் அடுத்தடுத்த வெள்ளி பிற்பகல் 2-6வரை அன்று நடைபெறும்.
[IV]தமிழ்நாடு சட்டமன்றத்தில் உள்ள தனித்தொகுதி எண்ணிக்கை 54.
சரியானது ?
[A]I,II,IV.
[B]I,II,III.
[C]I,III,IV.
[D]அனைத்தும்.
36)மாநிலங்கள் குழு அவை______இன் படி உருவாக்கப்பட்டது?
[A]அமைச்சரவைத் தீர்மானம்.
[B]சைமன் குழு அறிக்கைபடி.
[C]1919 இந்திய அரசுச் சட்டம்.
[D]1935 இந்திய அரசுச் சட்டம்.
37)பொது கணக்கு குழு தலைவரை நியமிப்பவர்?
[A]பிரதமர்.
[B]எதிர்கட்சி தலைவர்.
[C]குடியரசுத்தலைவர்.
[D]மக்களவை சபாநாயகர்.
38)மாநில ஆளுநரால் ஆங்கிலோ இந்தியன் நியமிக்கப்படுவதைக் குறிப்பிடும் விதி?
[A]321.
[B]332.
[C]333.
[D]132.
39)சங்கரலிங்கனார் யார் மீது ஏற்பட்ட ஈர்ப்பால் விடுதலை போராட்டத்தில் பங்கெடுத்தார்?
[A]ராஜாஜி.
[B]காந்திஜி.
[C]காமராஜர்.
[D]பெரியார்.
40)எந்தவொரு குறிப்பிட்ட சட்ட முன்வரைவையும்,தேர்வுக்குழுவுக்கு அனுப்பும்படி எந்த ஒரு உறுப்பினரும் தீர்மானம் கொண்டு வரலாம். தொடர்புடையது?
[A]உறுப்பு213.
[B]உறுப்பு223.
[C]உறுப்பு215.
[D]உறுப்பு125.
41)சங்கரலிங்கனாரின் தாயார்?
[A]திலகவதி.
[B]வள்ளியம்மை.
[C]நீலாம்பிகை.
[D]பொன்னாத்தாள்.
42)அரசின் வழிகாட்டும் நெறிகள் எந்த நாட்டில் இருந்து எடுக்கப்பட்டது?
[A]இங்கிலாந்து.
[B]அமெரிக்கா.
[C]அயர்லாந்து.
[D]தென்னாப்பிரிக்கா.
43)பொது வாக்கெடுப்பு நடைமுறையின் பொருத்தப்பாட்டினை அறிய எந்த நாட்டு பொது வாக்கெடுப்பு முறையை ஆய்வது பயனுள்ளதாக அமையும்?
[A]சுவிட்சர்லாந்து.
[B]தென்னாப்பிரிக்கா.
[C]ஜெர்மனி.
[D]இங்கிலாந்து.
44)மாநிலங்கள் குழு அவை எந்த ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது?
[A]1919.
[B]1921.
[C]1952 மே13.
[D]1954 ஆகஸ்ட்23.
45)டெல்லி உடன்படிக்கை ஆண்டு?
[A]1950.
[B]1951.
[C]1952.
[D]1953.
46)பின்வரும் எதன் கீழ் வரும் அனைத்து விதிகளும் அரசமைப்புச் சட்ட முன்வரைவில் அடங்கும்?
[A]உறுப்பு368(2).
[B]உறுப்பு368(1).
[C]உறுப்பு369.
[D]உறுப்பு365.
47)நவம்பர் 26 1949 ல் இந்திய அரசமைப்பை ஏற்று எத்தனைபேர் கையெழுத்திட்டனர்?
[A]389.
[B]248.
[C]293.
[D]284.
48)மண்டல் ஆணைய வழக்கில் உச்சநீதிமன்றம் எப்போது தீர்ப்பு வழங்கியது?
[A]1991 மார்ச்.
[B]1992 மார்ச்.
[C]1992 நவம்பர்.
[D]1993 டிசம்பர்.
49)பொருத்துக.
[a]உச்சநீதிமன்ற அறிவுரை அதிகார வரம்பு –(1)தென்னாப்பிரிக்கா.
[b]மாநிலங்களவை உறுப்பினர் தேர்வு – (2)கனடா.
[c]ஒற்றை குடியுரிமை–(3)சோவியத் யூனியன்.
[d]அடிப்படைக் கடமைகள்–(4)பிரிட்டன்.
குறியீடுகள்:
[A]2143.
[B]2134.
[C]1243.
[D]4132.
50)சட்ட முன்வரைவுக்கு இறுதி வடிவம் கொடுப்பது?
[A]அரசிதழில் வெளியிடுதல்.
[B]குழுநிலை.
[C]அறிக்கை நிலை.
[D]மூன்றாவது வாசிப்பு.
51)பின்வரும் கூற்றுகளை ஆராய்ந்து பொருத்தமான குறியீட்டை தேர்க.
1) நாட்டின் சுதந்திரம் மற்றும் விடுதலையின் சின்னமாக உள்ளது சபாநாயகர் பதவி என்று கூறியவர் – அம்பேத்கர்.
2)அரசாங்கத்தின் தலைவர் பிரதமர் ஆவார்.
3)நாடாளுமன்றத்தின் அலுவல் மொழியாக இந்தியும், ஆங்கிலமும் இருக்கும் எனக் கூறும் சட்டப் பிரிவு – 343.
4)ஆறு சட்டமன்ற தொகுதி இணைந்து ஒரு நாடாளுமன்ற தொகுதி உருவாகிறது.
[A]அனைத்தும் சரி.
[B]1,3,4 சரி.
[C]1,2,4 சரி.
[D]2,4 சரி.
52) நாடாளுமன்ற தலைமை செயலகத்தின் நிர்வாக தலைவர்?
[A]குடியரசுத் தலைவர்.
[B]பிரதமர்.
[C]துணைக் குடியரசுத் தலைவர்.
[D]சபாநாயகர்.
53)மாநிலங்களவை உருவாக்கப்பட்ட ஆண்டு?
[A]03 ஏப்ரல்1952
[B]23 ஆகஸ்ட்1954.
[C]13 மே1952.
[D]1921 மார்ச்.
54)அரசமைப்பின் கூட்டாட்சி கட்டமைப்பில் இரண்டாம் அடுக்கில் இருப்பது?
[A]மக்களவை.
[B]மாநிலங்களவை.
[C]மாநிலம்.
[D]சட்டப்பேரவை.
55)பின்வரும் கூற்றுகளில் பொருந்தாத ஒன்று?
[A]சட்ட முன்வரைவு பாராளுமன்ற இரு அவைகளிலும் கொண்டுவரப்படலாம்.
[B]சட்ட மேலவை உறுப்பினர் ஒருவர் முதல்வராக பதவி வகிக்க இயலும்.
[C]108வது திருத்தச் சட்டம் மக்களவையில் மட்டும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
[D]வர்த்தகம் மற்றும் வணிகம் மாநிலப் பட்டியலின் கீழ் வருகிறது.
56)நிதி முன்வரைவை மாநிலங்களவையில் எத்தனை நாட்கள் நிறுத்தி வைக்க முடியும்?
[A]14 நாட்கள்.
[B] நிறுத்தி வைக்க இயலாது.
[C]06 மாதம்.
[D]06 மாதம்06 வாரம்.
57)மக்களவையில் நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் நடைபெறும் மாதம்?
[A]பிப்ரவரி-மார்ச்.
[B]பிப்ரவரி-மே.
[C]ஜனவரி-ஏப்ரல்.
[D]ஜனவரி-மார்ச்.
58)நாடாளுமன்றத்தில் இதுவரை எத்தனை கூட்டு கூட்டத்தொடர் நடந்துள்ளது?
[A]02.
[B]03.
[C]04.
[D]05.
59)கூற்று 1: தனிநபர் சட்ட முன்வரைவை அறிமுகப்படுத்த சபாநாயகருக்கு அல்லது மாநிலங்களவை தலைவருக்கு 14 நாட்களுக்கு முன்பாக தெரியப்படுத்த வேண்டும்.
கூற்று 2:ஒரு நிதி முன்வரைவு சட்ட உறுப்பு 110இல் கூறப்பட்டுள்ள விவரங்கள் தொடர்பாக இல்லாதிருப்பின் அது பாராளுமன்ற எந்த அவையிலும் அறிமுகப்படுத்தலாம்.
[A]கூற்று1,2 சரி.
[B]கூற்று1 சரி.
[C]கூற்று2 சரி.
[D]கூற்று1,2 தவறு.
60)கூற்று 1:தனிநபர் சட்ட முன்வரைவை எந்த ஒரு சட்டமன்ற உறுப்பினரும் கொண்டு வரலாம்.
கூற்று2:இரு அவைகளின் கூட்டுக் கூட்டம் பிரிட்டன் அரசமைப்பில் இருந்து பெறப்பட்டது.
[A]கூற்று1,2 சரி.
[B]கூற்று1 சரி.
[C]கூற்று2 சரி.
[D]கூற்று1,2 தவறு.
61)பாராளுமன்ற கூட்டுக் கூட்டத்திற்கு குடியரசுத் துணைத் தலைவர் தலைமை தாங்க வாய்ப்பு உள்ளதா?
[A]மக்களவை சபாநாயகர், துணை சபாநாயகர் இல்லா நிலையில்.
[B]மேற்கூறிய இருவர் மற்றும் குடியரசுதலைவர் இல்லா நிலையில்.
[C]மேற்கூறிய(A) இருவர் மற்றும் மக்களவை செயலர் இல்லா நிலையில்.
[D]தலைமை தாங்க இயலாது.
62)நடுவணரசின் எஞ்சிய அதிகாரங்கள் எங்கிருந்து பெறப்பட்டது?
[A]ஆஸ்திரேலியா.
[B]அமெரிக்கா.
[C]கனடா.
[D]ஜெர்மனி.
63)ஒரு திருத்தச் சட்டத்தை முன்மொழிய யாருடைய முன் அனுமதி தேவை?
[A]சபாநாயகர்.
[B]குடியரசுத் தலைவர்.
[C]உச்சநீதிமன்றம்.
[D]மாநிலங்களவை.
64)நாடாளுமன்ற தனிப் பெரும்பான்மை சட்டத் திருத்தத்தில் பொருந்துவது?
[A]அரசமைப்பு மற்றும் அதன் நடைமுறைகளைத் திருத்தியமைக்கும் நாடாளுமன்ற அதிகாரம்.
[B]குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுத்தல் மற்றும் அதன் அதிகாரங்கள்.
[C]நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்கள்.
[D]மத்திய மற்றும் மாநிலங்களின் நிர்வாக அதிகாரத்தின் விரிவாக்கம்.
65)கூற்று1: சாதாரண சட்ட முன்வரைவு மக்களவையில் தோல்வி அடைந்தால் அரசாங்கம் பதவி விலக நேரிடும்.
கூற்று2: மக்களவையில் மட்டுமே நிறைவேற்றினாலும் கூட நிதி சட்ட முன்வரைவு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.
[A]கூற்று1,2 சரி.
[B]கூற்று1 சரி.
[C]கூற்று2 சரி.
[D]கூற்று1,2 தவறு.
66)பொருத்துக.
(I)ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு ஆளுநர் இருப்பார்- விதி 75.
(II)ஆளுநர் நியமனம் – விதி 76.
(III)பிரதமர் நியமனம் - விதி 153
(IV)இந்தியாவின் தலைமை வழக்கறிஞர் - விதி 155
[A]4312.
[B]4321.
[C]3421
[D]3412
67)குடியரசுத் தலைவர் தனது பதவி விலகல் கடிதத்தை யாரிடம் அளிப்பார்?
[A]உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி.
[B]துணைக் குடியரசுத் தலைவர்.
[C]பிரதமர்.
[D]பதவி விலகல் கடிதம் அளிக்க தேவையில்லை.
68)பிரதமர் என்பவர் சமமான (அமைச்சர்களில்) முதன்மையானவர் என்றவர்?
[A]லிட்டன் பிரபு.
[B]டப்ரின் பிரபு.
[C]மார்லே பிரபு.
[D]கானிங் பிரபு.
69)பொருத்துக.
(I)குடியரசுத் தலைவருக்கான தகுதி – விதி 58.
(II)குடியரசுத் தலைவரின் பதவிக்காலம் - விதி 56.
(III)குடியரசுத் தலைவர் பழிசாட்டுதல் – விதி 55.
(IV)குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கும் முறை - விதி 61.
[A]1243.
[B]2143.
[C]1342.
[D]2341.
70)கூற்று:இந்திய அரசின் உச்சகட்ட முடிவுகளை வடிவமைக்கும் நிலையிலுள்ள அதிகார மையம் அமைச்சரவை.
காரணம்:அவ்வதிகார மையம் அரசமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
[A]கூற்று, காரணம் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
[B]கூற்று, காரணம் சரி. காரணம் கூற்றை விளக்கவில்லை.
[C]கூற்று சரி காரணம் தவறு.
[D]கூற்று, காரணம் இரண்டும் தவறு.
71)பிரதமரின் செயலகத்தின் பெயர் யாருடைய ஆட்சியில் பெயர் மாற்றம் செய்யப்பட்டது?
[A]மொரார்ஜி தேசாய்.
[B]இந்திராகாந்தி.
[C]லால் பகதூர் சாஸ்திரி.
[D]சரண்சிங்.
72) தவறானவை கூறுக
[A]தேசிய ஒற்றுமை ஒருமைப்பாடு மற்றும் நிலைத்தன்மை இன் சின்னமாக பிரதமர் திகழ்கிறார்
[B]குடியரசு தலைவர் மக்கள் சேவைக்காக மற்றும் நல்வாழ்விற்காக தன்னை அர்ப்பணிக்கிறார்
[C]குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் டெல்லி மட்டும் பாண்டிச்சேரி சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்கு செலுத்தலாம்.
[D]அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தில் மாநிலங்களவையைப் போல மக்களவையும் சமமான அதிகாரம் கொண்டது.
73)நிதிநிலை அறிக்கையின்போது குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்தில் முதலில் உரையாற்றுவதற்கான உரிமையைக் குடியரசுத் தலைவர் பெற்றுள்ளார். இது எவ்வகை அதிகாரம்?
[A]விருப்ப அதிகாரம்.
[B]நிதித்துறை அதிகாரம்.
[C]சட்டத்துறை அதிகாரம்.
[D]நீதித்துறை அதிகாரம்.
74)பட்டியலிடப்பட்ட மற்றும் பழங்குடியின பகுதிகளை நிர்வாகம் செய்வதற்கான சிறப்பு சட்டங்களையும், விதிகளையும் உருவாக்குதல் குடியரசுத் தலைவரின் எவ்வகை அதிகாரம்?
[A]சட்டத்துறை.
[B]ஆட்சித்துறை.
[C]இதர அதிகாரம்.
[D]நீதித் துறை.
75)குடியரசுத் துணைத் தலைவர் பற்றி
குறிப்பிடும் சரத்து?
[A]62-70.
[B]63-70.
[C]64-71.
[D]64-70.
76)அரசின் வெளிநாட்டு விவகாரங்களை வெளியிடும் முக்கிய நபராக உள்ளவர்?
[A]பிரதமர்.
[B]குடியரசுத் தலைவர்.
[C]துணைக் குடியரசுத் தலைவர்.
[D]முதன்மைச் செயலர்.
77)பிரதமரின் முதன்மையான முக்கியப் பணி?
[A]அமைச்சரவைப் பட்டியல் தயாரித்தல்.
[B]மக்கள் நலக் கொள்கைகளை வெளியிடுதல்.
[C]நாட்டின் அமைதியைப் பேணுதல்.
[D]கட்சி உறுப்பினர்களிடையே ஒற்றுமை உணர்வை வளர்த்தல்.
78)பாராளுமன்றத்தில் நியமன உறுப்பினராக இடம் பெற இயலாதவர்?
[A]விளையாட்டு துறை.
[B]இலக்கியத் துறை.
[C]சமூக சேவை.
[D]எதுவுமில்லை.
79)குடியரசுத் தலைவரின் நெருக்கடி கால அதிகாரம் பற்றிக் குறிப்பிடும் பகுதி?
[A]XXI.
[B]XVIII.
[C]XV.
[D]XVII.
80)நிழல் அமைச்சரவை உள்ள நாடு?
[A]அமெரிக்கா.
[B]பிரிட்டன்.
[C]சுவிட்சர்லாந்து.
[D]சுவீடன்.
81)கீழ்க்கண்டவற்றில் தவறானவை எது அல்லது எவை?
(I)பண்டைய இந்திய முடியாட்சிகளில் நீதித்துறை அதிகாரத்தில் சுல்தான் உயர்நிலையில் இருந்தார்.
(II)கன்சிராம் நினைவு அரங்கம் அருகில் கட்டுமானப் பணிகளை குறிப்பிட்ட காலத்திற்கு தடை செய்த வழக்கு பொது நலனுக்கான சமூக அமைப்புடன் தொடர்புடையது.
(III)தனி நபருக்கு எதிராக பொது நல வழக்கு தாக்கல் செய்ய முடியாது.
(IV)உச்சநீதிமன்றம் ஐந்து அதிகார வரம்புகளைக் கொண்டுள்ளது.
[A]ALL OF THE ABOVE.
[B]I,II,IV.
[C]I,II.
[D]I,II,III.
82)பின்வரும் எந்த நாட்டில் மாநில தலைமை நீதிமன்றம் உச்சநீதிமன்றம் என அழைக்கப்படுகிறது?
[A]பிரிட்டன்.
[B]கனடா.
[C]ஆஸ்திரேலியா.
[D]சுவிட்சர்லாந்து.
83)மதராஸ் நீதிமுறை அமைப்பு மறுசீரமைப்பு செய்வதற்கு காரணமாக இருந்த ஆளுநர்?
[A]ஸ்டிரெய்ன்ஷாம் மாஸ்டர்.
[B]பாக்ஸ் கிராப்ட்.
[C]பான் கிராப்ட்.
[D]மிண்டோ பிரபு.
84)Common Cause Society Vs Union of India என்னும் பொதுநல வழக்கு நடைபெற்ற ஆண்டு?
[A]2001.
[B]2005.
[C]2010.
[D]2011.
85)இந்திய உச்சநீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதி?
[A]சர். எலிஜா இம்பே.
[B]T. முத்துசாமி.
[C]ஹரிலால் ஜே.கனியா.
[D]சர் ஹரி சிங் கோர்.
86)பின்வரும் கூற்றுகளில் பொருந்தாத ஒன்று?
[A]இந்திய தண்டனை சட்டம்1862இல் தயாரிக்கப்பட்டது.
[B]புதிய குற்றவியல் சட்டம் அமைப்பது தொடர்பாக 2000ஆம் ஆண்டு வெங்கடராவ் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
[C]1762ஆம் ஆண்டு பிரகடனம் ஆங்கில சட்டத்தை பம்பாயில் அறிமுகப்படுத்தியது.
[D]கலகத்தாவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் குடிமையியல், குற்றவியல், வருவாய் வழக்குகளை விசாரிக்கும் அலுவலகமாக இருந்தது.
87)சுல்தான் காலத்தில் நீதித்துறையின் உண்மையான தலைமை அலுவலர்?
[A]சத்ரே-ஜகான்.
[B]குவாசி-உல்-குசாட்.
[C]மொக்டாசிப்.
[D]தாத் பாக்.
88)ஒரு வழக்கு கூட நிலுவையில் இல்லாத மாநிலம்?
[A]அந்தமான் நிகோபார்.
[B]சிக்கிம்.
[C]உத்திரபிரதேசம்.
[D]எதுவுமில்லை.
89) உயர்நீதிமன்றங்கள் அதிகார வரம்பில் பெருமளவு மாற்றத்தைக் கொண்டு வந்த சட்டத்திருத்தம் ஆண்டு?
[A]1972.
[B]1974.
[C]1976.
[D]1978.
90)நிர்வாகச் சட்டங்கள் நிர்வாகத்துடன் தொடர்புடையவை- யார் கூற்று?
[A]ஆர்தர் சன் சிங்கர் ஜூனியர்.
[B]ஐவர் ஜென்னிங்ஸ்.
[C]ஹெரால்டு லாஸ்கி.
[D]ஹரி சிங் கோர்.
91)தவறான ஒன்று?
[A]நாடு முழுவதும் ஒரே மாதிரியான விதிகளை அமல்படுத்துவது சரியல்ல- விதி 13(2).
[B] இந்திய அரசியலமைப்பின் உறுப்பு-21 அடிக்கடி உச்சநீதிமன்றத்தில் எடுத்தாளப்படுகிறது
[C] குற்றவியல் நடைமுறைச் சட்டம் 113இன் படி பொதுநல வழக்கு தாக்கல் செய்யமுடியும்.
[D]உச்சநீதிமன்றம் தற்போதுள்ள வளாகத்திற்கு மாற்றப்பட்ட ஆண்டு-1958.
92) பின்வருவனவற்றில் இந்தியாவில் ஒரு மாற்று தகராறு முகமை எது ?
அ. உச்சநீதிமன்றம்.
ஆ. உயர்நீதிமன்றம்.
இ. மாவட்ட அமர்வு நீதிமன்றம்.
ஈ. லோக் அதாலத்.
93)1780இல் மாகாண நீதிமன்றங்களை சீரமைத்தவர்?
[A]வாரன் ஹேஸ்டிங்ஸ்.
[B]காரன் வாலிஸ்.
[C]வில்லியம் பெண்டிங்.
[D]ஹேஸ்டிங்ஸ் பிரபு.
94)எந்த ஆண்டிற்கு பின் 9-வது பட்டியலில் சேர்க்கப்பட்ட சட்டங்களில் திருத்தம் செய்ய முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது ?
[A]1972.
[B]1973.
[C]1974.
[D]1976.
95)இந்திய கூட்டாட்சி இரட்டை ஆட்சி முறை அமைப்பைக் கொண்டிருந்தாலும் இரட்டை நீதித்துறை அமைப்பைக் கொண்டிருக்கவில்லை - யார் கூற்று?
[A]அம்பேத்கர்.
[B]நேரு.
[C]ஹரிலால் கனியா.
[D]ஹரிசிங் கோர்.
96)பொருத்துக.
அ)தலைமை தளபதி –- (1)திவான் -இ-ரியாசத்.
ஆ)மேல்முறையீட்டு உச்சநீதிமன்றம் -– (2)திவான் – இ- ரிசாலட்.
இ)மாநிலத் தலைமை நீதிபதி நீதிமன்றம்-- (3)திவான் – அல்- மசாலிம்.
ஈ)குடிமையியல் வழக்கு நீதிமன்றம் –- (4)சத்ரே ஜகான்.
[A]1342.
[B]2341.
[C]1432.
[D]2431.
97)இடைக்கால தேச துரோக வழக்குகள் மற்றும் மேல்முறையீட்டு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் பொருந்தாதது?
[A]திவான்– இ – ரியாசத்.
[B]திவான்– இ – ரிசாலட்.
[C]திவான்– அல் – மசாலிம்.
[D]எதுவுமில்லை.
98)நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் தலைமை தாங்க மக்களவையின் சபாநாயகரும், துணை சபாநாயகரும் இல்லாதபோது கூட்டத்திற்கு தலைமை தாங்குபவர்?
[A]துணைக் குடியரசுத் தலைவர்.
[B]மக்களவைச் செயலாளர்.
[C]மாநிலங்களவை துணைத் தலைவர்.
[D]ஏதேனும் ஒரு அவையில் உள்ள மூத்த உறுப்பினர் ஒருவர்.
99)இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் அடிப்படைக் கூறுகள் எனும் கோட்பாடு எந்த வழக்கின் தீர்ப்பில் உருவாக்கப்பட்டது?
[A]கிருஷ்ண சுவாமி vs இந்திய யூனியன், 1992.
[B]கேசவானந்த பாரதி vs இந்திய யூனியன், 1973.
[C]எஸ்.ஆர்.பொம்மை vs இந்திய ஒன்றியம், 1994.
[D]குல்தீப் நாயர் vs இந்திய ஒன்றியம், 2006.
100)இந்திய அரசமைப்புச் சட்டமானது பிற அரசமைப்புச் சட்டங்களில் இருந்து சூறையாடி செய்யப்பட்டது என கூறியவர்?
[A]அம்பேத்கர்.
[B]ஜவஹர்லால் நேரு.
[C]காந்திஜி.
[D]ராஜேந்திர பிரசாத்.
விடையை சரிபார்க்க
Previous article
Next article
Leave Comments
Post a Comment