Ads Right Header

50 + 50 - 10th, 11th வரலாறு, குடிமையியல், புவியியல் முக்கிய வினாவிடை!

 


பாடப்பகுதி :
🃏1)10ஆம் வகுப்பு (குடிமையியல் முதல் பாடம், புவியியல் முழுவதும், வரலாறு பாடம்-05)
 🃏2)11 ஆம் வகுப்பு (வரலாறு  பாடம் -19)
🥳 மொத்த வினாக்கள் :100
🥳 மதிப்பெண் :100 

நன்றி: Effort Team

1)புலிகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் புலிகளின் எண்ணிக்கை 60 சதவீதம் உயர்ந்து 1979-இல் பதிவான எண்ணிக்கை?
[A]3105.
[B]2025.
[C]2105.
[D]3015.

2)இந்தியாவில் நிலவும் காலநிலை?
[A]கண்ட காலநிலை.
[B]அயனமண்டல பருவக்காற்று காலநிலை.
[C]ஃப்ரெஞ்ச் காலநிலை.
[D]அனைத்தும் தவறு.

3)குளிர் பாலைவனம் காணப்படும் மாநிலம்?
[A]ராஜஸ்தான்.
[B]பஞ்சாப்.
[C]ஹரியானா.
[D]இமாச்சலப் பிரதேசம்.

4)பின்வரும் கூற்றை ஆராய்க.
கூற்று 1:இந்தியாவின் பருவக்காற்று காலநிலையின் முக்கியக் கூறுகளான வெப்பநிலை, வளிமண்டல அழுத்தம், காற்றின் திசை மற்றும் மழையளவை பெருமளவில் பாதிக்கிறது.
கூற்று 2:இந்தியாவில் காலநிலையைப் பாதிக்கும் மிக முக்கியக் காரணி நிலத்தோற்றம் ஆகும்.
[A]கூற்றுகள் இரண்டும் தவறு.
[B]கூற்று 1 சரி. ஆனால் 2 தவறு.
[C]கூற்றுகள் இரண்டும் சரி.
[D]கூற்று 2 சரி. ஆனால் 1 தவறு.

5)கடல் மட்டத்திலிருந்து 6.7மீ உயரத்தில் அமைந்துள்ள சென்னையின் வெப்பநிலை 35C எனில் 2240மீ உயரமுள்ள உதகையின் வெப்பநிலை?
[A]20.44C
[B]20.48C
[C]22.34C
[D]22.44C

6)உலகில் அதிக அளவு மழைபெறும் பகுதி?
[A]மேகாலயா.
[B]சிரபுஞ்சி
[C]மெளசின்ரோம்.
[D]டார்ஜிலிங்.

7)பலா, மஞ்சக் கடம்பு மரவகைகள் வளரும் பகுதி?
[A]மலைக்காடுகள்.
[B]அயனமண்டல பசுமை மாறாக் காடுகள்.
[C]அயனமண்டல இலையுதிர்க் காடுகள்.
[D]அயனமண்டல வறண்ட காடுகள்.

8)ரங்கநாத் திட்டின் சிறப்பு?
[A]பறவைகள் சரணாலயம்.
[B]விலங்குகள் சரணாலயம்.
[C]தேசியப் பூங்கா.
[D]உயிர்க்கோள காப்பகம்.

9)கூற்றுகளை ஆராய்க.
கூற்று 1:இயங்கு கோட்பாட்டின்படி உப அயன மேலை காற்றோட்டம் வடபெரும் சமவெளிகளிலிருந்து திபெத்திய பீடபூமியை நோக்கி நகர்வதால் தென்மேற்கு பருவகாற்று உருவாகின்றது.
கூற்று 2: தென்மேற்கு மற்றும் பின்னடையும் பருவக்காற்று காலங்களில் வெப்ப மண்டல தாழ்வழுத்தங்களை உருவாக்குவது ஜெட் காற்று ஆகும்.
கூற்று 3:கடல்களின் ஆதிக்கமின்மை காரணமாக குளிர் காலத்திலும் வட இந்தியா வெப்பமண்டலக் காலநிலையைக் கொண்டுள்ளது.
[A]அனைத்தும் சரி.
[B]கூற்று 1,3 தவறு.
[C]கூற்று 1,2 சரி.
[D]கூற்று 3 மட்டும் தவறு.

10)நாடுகள் தத்தமது உயிரியல் வளங்களைப் பயன்படுத்தும் இறையாண்மை எந்த கருத்தரங்கில் அங்கீகரிக்கப்பட்டது?
[A]உயிரி வளக் கொள்கை.
[B]உயிரி சுற்றுசூழல் பாதுகாப்பு.
[C]உயிரியல் பன்மை மரபு.
[D]உயிரி வள ஐக்கிய விதிகள்.

11)நெற்பயிரின் பூர்வீகம்?
[A]சீனா.
[B]இந்தியா.
[C]தாய்லாந்து.
[D]கம்போடியா.

12)உள்நாட்டு மீன்பிடித்தலில் தமிழ்நாட்டில் முதன்மை மாவட்டம்?
[A]காஞ்சிபுரம்.
[B]கடலூர்.
[C]வேலூர்.
[D]தூத்துக்குடி.

13)பிரதான் மந்திரி க்ரிஷி சின்ஷாயி யோஜனா (PMKSY) திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு?
[A]2014
[B]2013.
[C]2015.
[D]2016.

14)கூற்று:கிரானைட் மற்றும் நைஸ் பாறைகள் சிதைவடைவதால் காடு மற்றும் மலை மண் உருவாகிறது.
காரணம்: பனிமழை, வெப்பநிலை வேறுபாடுகளால் பெளதீக சிதைவின் காரணமாக காடு மற்றும் மலை மண் உருவாகின்றது.
[A]கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
[B]கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றை விளக்கவில்லை.
[C]காரணம் சரி, கூற்று தவறு.
[D]கூற்று சரி, காரணம் தவறு.

15)தமிழகத்தில் கால்நடை கணக்கெடுப்பு மேற்கொள்ளும் அமைப்பு?
[A]கால்நடை வளர்ப்புத் துறை.
[B]கால்நடை பராமரிப்புத் துறை.
[C]தமிழக வனவிலங்கு வாரியம்.
[D]கால்நடைத் துறை அமைச்சகம்.

16)மத்தியப்பிரதேசத்தில் இடப்பெயர்வு வேளாண்மையின் வேறு பெயர்?
[A]பென்டா, பீரா.
[B]பொன்னம்.
[C]பீவார், மாசன்.
[D] A,C இரண்டும்.

17)பின்வருவனவற்றுள் எந்த ஒன்று ராபி பருவப் பயிர் அல்ல?
[A]சோளம்.
[B]மக்காசோளம்.
[C]ஆலிவிதைகள்.
[D]கம்பு.

18)பொருத்துக.
[A]சிவப்புப் புரட்சி – (1)கோக்கோ.
[B]பழுப்புப் புரட்சி – (2)இறால் உற்பத்தி.
[C]இளஞ்சிவப்புப் புரட்சி – (3)இறைச்சி உற்பத்தி.
[D]சாம்பல் புரட்சி – (4)உரங்கள்.
குறியீடுகள்:
[A]2314
[B]3214.
[C]2134.
[D]3124.

19)சர்க்கரை உற்பத்தியில் முதன்மை நாடு?
[A]கியூபா.
[B]பிரேசில்.
[C]சீனா.
[D]இந்தியா.

20)கீழ்க்காணும் வாக்கியங்களில் சரியானதை தேர்க.
(1)ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படும் அலோகம் மைக்கா ஆகும்.
(2)இந்தியாவில் அணுமின் திட்டம் முதலில் 1969இல் தொடங்கப்பட்டது.
(3)தமிழகத்தில் அதிக அணுமின்சக்தி உற்பத்தி செய்வது கல்பாக்கம் அணுமின்நிலையம் ஆகும்.
இவற்றில்:
[A]அனைத்தும் சரி.
[B]1 மட்டும் சரி.
[C]1,2 சரி.
[D]1,3 சரி.

21)இந்தியா வாகன உற்பத்தியில் எத்தனையாவது பெரிய நாடாக விளங்குகிறது?
[A]இரண்டு.
[B]மூன்று.
[C]ஐந்து.
[D]ஏழு.

22)பின்வரும் கூற்றுகளைக் கருத்தில் கொள்க:
(1)இந்தியா 8000-9000MW கடலலை சக்தி திறனைக் கொண்டுள்ளது.
(2)தற்போது இந்திய எரிசக்தி பயன்பாட்டில் 32% இயற்கை எரிவாயுவிலிருந்து பெறப்படுகிறது.
(3)பாக்சைட் என்பது லீபாக்ஸ் என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து பெறப்பட்டது.
குறியீடுகள்:
[A]அனைத்தும் தவறு.
[B]2,3 தவறு.
[C]1,3 தவறு.
[D]3 மட்டும் தவறு.

23)மூன்றாம் நிலை நிலக்கரி அதிகம் காணப்படும் மாநிலம்?
[A]அசாம், ஜம்மு-காஷ்மீர்.
[B]அசாம், ஜார்கண்ட்.
[C]ஜார்கண்ட், ஒடிஷா.
[D]ஜார்கண்ட், மேற்கு வங்கம்.

24)சுத்தமான, மாசற்ற, புவிமண்டலத்தை வெப்பமயமாக்கும் வாயுக்களை வெளிப்படுத்தாத ஒரு வளம்?
[A]நீர்மின் சக்தி.
[B]கடல் ஓத சக்தி.
[C]சூரிய மின்சக்தி.
[D]காற்று சக்தி.

25)கடற்கரை அடிப்படையில் பொருந்தாதது?
[A]அகமதாபாத்.
[B]அங்கலேஷ்வர்.
[C]அலியாபெத்.
[D]பலேஷ்வர்.

26)மாங்கனீசு படிவுகள் உள்ள முதன்மை மாநிலம்?
[A]ஒடிஷா.
[B]மத்திய பிரதேசம்.
[C]மகாராஷ்ட்ரா.
[D]ராஜஸ்தான்.

27)இந்திய மாங்கனீசு தாது நிறுவன தலைமையிடம்?
[A]மும்பை.
[B]டெல்லி.
[C]நாக்பூர்.
[D]கல்கத்தா.

28)பொருத்துக. (தொழிலகம்- உற்பத்தி பொருள்)
அ)ரூர்கேலா HSL –(1)மின்சாதன தகடு.
ஆ)பொகாரோ HSL- (2)இரும்பு உலோகம்.
இ)பிலாய் HSL –(3)கப்பல் கட்டும் உபகரணம்.
ஈ)துர்காபூர் HSL –(4)ரயில்வே உபகரணம்.
குறியீடுகள்:
[A]1243.
[B]2134.
[C]1234.
[D]4321.

29)பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் மேலைநாட்டு அறிவியலும் அறிமுகம் செய்யப்படுவதை முழுமையாக ஆதரித்தவர்?
[A]சர் சையது அகமது கான்.
[B]ராஜா ராம்மோகன் ராய்.
[C]ஜோதிபாபூலே.
[D]வைகுண்ட சுவாமிகள்.

30)வைகுண்ட சுவாமிகளின் இயற்பெயர்?
[A]முத்துக்குட்டி.
[B]முடிசூடும் பெருமாள்.
[C]காத்தவராயன்.
[D]எதுவுனில்லை.

31)ஆதி பிரம்ம சமாஜ் நிறுவியவர்?
[A]கேசவ் சந்திர சென்.
[B]தேவேந்திரநாத் தாகூர்.
[C]குழந்தைத் திருமணத்தை எதிர்த்தோர்.
[D]ஈஸ்வர சந்திர வித்யாசாகர்.

32)பின்வரும் கூற்றோடு தொடர்புடையவர்?
அவர் குழந்தையாக இருக்கும்போதே அவர் சந்தித்த சாதியப் பாகுபாடு அவரை சாதி எதிர்ப்பு இயக்கத்தின் தலைவராக மாற்றியது.
[A]வைகுண்ட சுவாமிகள்.
[B]நாராயணகுரு.
[C]அய்யன்காளி.
[D]ராமலிங்க சுவாமிகள்.

33)(அ)தன்னுடைய சமகால தேசியவாதிகளைப் போல் அல்லாமல் ஆங்கில ஆட்சியையும் சமயப் பரப்பாளர்களின் செயல்பாடுகளையும் ராஜாராம் மோகன் ராய் ஆதரித்தார்.
(ஆ)நிரங்கரி இயக்கம் பாபா தயா தாஸ் அவர்களால் தோற்றுவிக்கப்பட்டது.
(இ)நாம்தாரி இயக்கம் வரதட்சணை முறையையும் பலதார திருமணத்தையும் தடை செய்தது.
மேலே சொல்லப்பட்ட கூற்றுகளில் எது/எவை சரியானது?
[A]1,2 மட்டும்.
[B]2,3 மட்டும்.
[C]2 மட்டும்.
[D]1,3 மட்டும்.

34)பின்வரும் கூற்றுகளில் சரியானது எது?
[A]ஈஸ்வர சந்திர வித்யாசாகர் நவீன வங்காள இலக்கியத்தின் தந்தை ஆவார்.
[B]அவரால் இயற்றப்பட்ட மறுமண சட்டம் பெண் விதவைகளின் நிலையை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டிருந்தது.
[C]மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த முக்கிய சீர்திருத்தவாதி.
[D]பெண்களுக்கான பள்ளிகள் நிறுவப்பட உதவிகள் செய்தார்.

35)கிறித்தவ எதிர்ப்பு மனப்பாங்கினை வளர்த்த அமைப்பு?
[A]ஆரிய சமாஜம்.
[B]பிரம்ம சமாஜம்.
[C]சாதாரண சமாஜ்.
[D]பிரம்ம ஞான சபை.

36)ஜீவன் என்பதே சிவன் என்றவர்?
[A]ராமகிருஷ்ண பரமஹம்சர்.
[B]விவேகானந்தர்.
[C]ராமலிங்க சுவாமிகள்.
[D]வைகுண்ட சுவாமிகள்.

37)பொருத்துக. (பழைய வினாத்தாளில் எடுக்கப்பட்டது).
(அ)பிரார்த்தன சமாஜம் – (1)சத்யானந்த அக்னிகோத்ரி.
(ஆ)ஆரிய சமாஜம் – (2)ஆத்மராம் பாண்டுரங்.
(இ)தேவ சமாஜம் – (3)தயான்ந்த சரஸ்வதி.
(ஈ)பிரம்ம சமாஜம் – (4)ராஜாராம் மோகன் ராய்.
குறியீடுகள்:
[A]1324
[B]2134
[C]1234
[D]2314.

38)காளி மற்றும் திஸ்தா ஆறுகளுக்கிடையே அமைந்துள்ளது?
[A]அசாம் கிழக்கு இமைய மலைகள்.
[B]காஷ்மீ, பஞ்சாப், இமாச்சல் இமையமலைகள்.
[C]மத்திய நேபாள இமையமலைகள்.
[D]குமாயுன் இமையமலைகள்.

39)சரியாக பொருந்திய இணை எது?
[A]கங்கை – சந்தூர்.
[B]காவிரி - கொய்னா.
[C]கோதாவரி – அருணாவதி.
[D]பிரம்மபுத்ரா – பராக்.

40)10 டிகிரி கால்வாய் எதனை பிரிக்கிறது?
[A]மாலத்தீவு- மினிக்காய்.
[B]அந்தமான் – நிக்கோபர்.
[C]லட்சத்தீவு- மினிக்காய்.
[D]லட்சத்தீவு-மினிக்காய்.

41)இந்தியாவின் பரப்பளவில் சுமார் பாதி அளவு உள்ளது?
[A]இமயமலைகள்.
[B]வடபெரும் சமவெளிகள்.
[C]தீபகற்ப பீடபூமி.
[D]தீவுகள்.

42) வெண் கற்பாறைகள் சுண்ணாம்பு பாறைகள் மற்றும் மணற்பாறைகள் இமயமலையின் எப்பகுதியில் காணப்படுகிறது?
[A]ட்ரான்ஸ் இமாலயா.
[B]இமாத்ரி.
[C]இமாச்சல்.
[D]சிவாலிக்.

43)இந்தியாவின் மிகப்பழமையான மடிப்பு மலைத்தொடர்?
[A]இமையமலைத் தொடர்.
[B]மேற்கு தொடர்ச்சி மலைகள்
[C]கிழக்கு தொடர்ச்சி மலைகள்.
[D]ஆரவல்லி மலைத்தொடர்.

44)நீர்பிரி மேடாக உள்ள சமவெளி?
[A]ராஜஸ்தான்.
[B]பஞ்சாப்-ஹரியானா.
[C]கங்கை.
[D]பிரம்மபுத்திரா.

45)உப அயன பாலைவனங்களில் தார் பாலைவனத்தின் இடம்?
[A]ஒன்பது.
[B]ஏழாவது.
[C]பதினேழு.
[D]பத்தொன்பது.

46)கிழக்கு தொடர்ச்சி மலையின் வேறு பெயர்?
[A]மிருதஸ்தலி.
[B]திபெத்தியன் இமயமலை.
[C]பூர்வாஞ்சல்.
[D]பூர்வாதிரி.

47) விவிலியத்தைக் கற்று கிறித்தவ இறையியலிலும் சிறந்து விளங்கியவர்?
[A]ஜோதிராவ் பூலே.
[B]அயோத்திதாசர்.
[C]அய்யன்காளி.
[D]வைகுண்ட சுவாமிகள்.

48)கோலார் தங்க வயல் தொழிலாளர்கள் யாரைப் பின்பற்றினர்?
[A]ஜோதிராவ் பூலே.
[B]அயோத்திதாசர்.
[C]அய்யன்காளி.
[D]வைகுண்ட சுவாமிகள்.

49)தத்கிப்-ஒல்-அக்லுக் பத்திரிக்கையின் ஆசிரியர்?
[A]மிர்சா-குலம்-அஹமது.
[B]சையது அகமது கான்.
[C]ராஜா ராம் மோகன் ராய்.
[D]கேசப் சந்திர சென்.

50)கிறித்தவ சமயப் பரப்பு நிறுவனங்களும், ஆரிய சமாஜமும் முன்வைத்த வாதங்களுக்கு எதிர் வாதங்கள் வைப்பதில் முக்கியப் பங்கு வகித்தவர்?
(1)மிர்சா ஹமீது. 
(2)ரஷீத் அகமது காங்கோரி.
(3)முகமது காசிம் நானாதேவி.
(4)சிப்லி நுமானி.
குறியீடுகள்:
[A]1 மட்டும் சரி.
[B]3 மட்டும் சரி.
[C]1,3 சரி.
[D]2,3 சரி.

51) பண்டித், சரஸ்வதி பட்டம் பெற்றவர் யார்?
[A]தயானந்த சரஸ்வதி.
[B]நானாதேவி.
[C]ரமாபாய்.
[D]வித்யாசாகர்.

52) தயானந்த ஆங்கிலோ வேத பள்ளிகள் எங்கு தொடங்கப்பட்டது?
[A]லாகூர்.
[B]கல்கத்தா.
[C]பூனே.
[D]சரண்பூர்.

53)ராஜா ராம்மோகன் ராயின் நீண்ட காலத் திட்டங்களில் பொருந்தாத ஒன்று?
[A]உருவ வழிபாட்டை எதிர்த்தல்.
[B]இந்து மதத்தைத் தூய்மைப்படுத்தல்.
[C]ஒரு கடவுள் வழிபாட்டைப் போதித்தல்.
[D]எதுவுமில்லை.

54)திருவருட்பா வெளியிடப்பட்ட ஆண்டு?
[A]1856.
[B]1866.
[C]1857.
[D]1867.

55) பவன்ஹான்ஸ் நிறுவனம் _____ பிரிவின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனமாகும்?
[A]மகாரத்னா.
[B]மினிரத்னா-01.
[C]மினிரத்னா-02.
[D]நவரத்னா.

56)தென்கிழக்கு மத்திய ரயில்வேயின் தலைமையிடம்?
[A]கொரக்பூர்.
[B]பிலாஸ்பூர்.
[C]கொல்கத்தா.
[D]செகந்திராபாத்.

57)2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் குறைவான பாலின விகிதம் கொண்ட யூனியன் பிரதேசம்?
[A]டையூ-டாமன்.
[B]அந்தமான் -நிகோபார்.
[C]இலட்சத்தீவுகள் .
[D]கோவா.

58) இந்தியாவின் முதல் புறநகர் ரயில்வே போக்குவரத்து எப்பொழுது எங்கு தொடங்கப்பட்டது?
[A]கல்கத்தா.
[B]மும்பை.
[C]ஹைதராபாத்.
[D]பெங்களூரு.

59)இந்தியாவில் இரண்டாவது மிக நீண்ட ரயில் பாதை கொண்டது?
[A]வட இந்திய ரயில்வே.
[B]தென் இந்திய ரயில்வே.
[C]மேற்கத்திய ரயில்வே.
[D]கிழக்கு ரயில்வே.

60)கூற்றுகளை கூர்ந்து கவனிக்க.
[1]2025ஆம் ஆண்டிற்குள் 50 சதவீதத்திற்கும் மேலான மக்கள் நகர்ப்புறங்களில் வசிப்பர் என கணக்கிடப்பட்டுள்ளது.
[2]குவாசிகண்ட் முதல் பானிஹால் வரையிலான இருப்புப்பாதை ஹிந்துகுஷ் மலைத்தொடர் வழியே செல்கிறது.
[3]1921 ஆம் ஆண்டு பெரும் மக்களியல் பிளவு ஆண்டு எனப்படுகிறது.
[4]1928ஆம் ஆண்டு இந்திய மக்கள்தொகை328 மில்லியனாக இருந்தது.
குறியீடுகள்:
[A]அனைத்தும் தவறு.
[B]1,2,4 தவறு.
[C]1,3,4 தவறு.
[D]1,4 தவறு.

61)இந்தியாவில் அஞ்சல் குறியீட்டு எண் அறிமுகமான ஆண்டு?
[A]1975.
[B]1857.
[C]1952(கராச்சியில்).
[D]1972.

62)தகவல் தொடர்புக்காக சமீபத்தில் ஏவப்பட்ட ஒரு செயற்கைக்கோள்?
[A]KALPANA 1.
[B]INSAT 1B.
[C]GSAT-7A.
[D]EDUSAT.

63)நேரடியாக நுகர்வோரையும், உற்பத்தியாளரையும் இணைக்கும் போக்குவரத்து?
[A]சாலை.
[B]ரயில்வே.
[C]வான்வெளி.
[D]நீர்வழி.

64)சிகூர் மலையிடைப் பீடபூமி எங்கு அமைந்துள்ளது?
[A]கோவை.
[B]மைசூர்.
[C]நீலகிரி.
[D]தருமபுரி.

65)இந்து சமய மக்களின் புனித நதியாகக் கருதப்படுவது?
[A]தென்பெண்ணையாறு.
[B]தாமிரவருணி.
[C]வைகை.
[D]பெண்ணையாறு.

66)பொருத்துக.
(அ)தாமிரபரணி – (1)மலட்டாறு
(ஆ)தென்பெண்ணையாறு- (2)கரையாறு
(இ)காவிரி- (3)பாம்பன் ஆறு
(ஈ)பாலாறு- (4)நொய்யல்
குறியீடுகள்:
[A]2341.
[B]3241.
[C]1342.
[D]2143.

67)குரங்கனி மலை அமைந்துள்ள பகுதி?
[A]ஏலக்காய் மலை.
[B]மகேந்திரகிரி மலைக்குன்றுகள்.
[C]வருசநாடு மற்றும் ஆண்டிபட்டி மலைக்குன்றுகள்.
[D]பொதிகை மலை.

68)தவறான ஒன்று?
[A]மகேந்திரகிரி மலை.
[B]ஏலகிரி மலை.
[C]அகத்தியர் மலை.
[D]பழனி மலை.

69)ஏழைகளின் ஊட்டி அமைந்துள்ள மலை?
[A]சேர்வராயன்.
[B]ஏலக்காய்.
[C]ஜவ்வாது.
[D]கல்வராயன்.

70)இரண்டு அங்குல வளமான மண் உருவாகும் காலம்?
[A]200-400வருடம்.
[B]2000. வருடம்.
[C]300-1000 வருடம்.
[D]3000 வருடம்.

71)கிளியாறு எதன் துணையாறு?
[A]தென்பெண்ணையாறு.
[B]பாலாறு.
[C]வைகை.
[D]தாமிரவருணி.

72)பின்வரும் கூற்றுகளை ஆராய்க.
அ)தமிழகத்தின் பரப்பளவில் காடுகளின் பங்களிப்பு2.99% ஆகும்.
ஆ)கிழக்குத்தொடர்ச்சி மலையானது உலகின் 25 உயிரினப் பன்மை செறிந்த பகுதிகளில் ஒன்றாகத் திகழ்கிறது.
இ)இந்திய வானிலை ஆரய்ச்சி நிறுவனம் தயாரித்த பாலைவனமாதல் நில வரைபடத்தின்படி மொத்த நிலப்பரப்பில்12% பாலைவனமாதல் மற்றும் நில சீரழிவுடையதாதல் என்ற இருநிலை கண்டறியப்பட்டது.
இவற்றில்:
[A]ஆ,இ தவறு.
[B]அ,இ தவறு.
[C]அ,ஆ தவறு.
[D]அனைத்தும் தவறு.

73) பசுமைமாறா & சோலை காடுகள் எந்த மலைப்பகுதியில் அதிகம் காணப்படுகிறது?
[A]பச்சை மலை.
[B]ஜவ்வாது மலை.
[C]பொதிகை மலை.
[D]கொல்லிமலை.

74)உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம் எங்குள்ளது?
[A]இராமநாதபுரம்.
[B]திருவாரூர்.
[C]காஞ்சிபுரம்.
[D]அரியலூர்.

75)கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானது எது அல்லது எவை?
I)தமிழகம் மூன்று முக்கியத் துறைமுகம் மற்றும் 363 மீன்பிடி  தளங்களைக் கொண்டது.
II)2011இல் தமிழகக் கல்வியறிவில் ஆண்களின் விழுக்காடு 84.77% ஆகவும், பெண்களின் கல்வியறிவு 75.44%.
III)இந்தியாவின் ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்கு 12.2%.
IV)ஆடிப்பட்ட அறுவடைக் காலம் பிப்ரவரி-மார்ச்.
[A]II,III,IV.
[B]I,II,IV.
[C]I,III.
[D]I,III,IV.

76)பொருத்துக. (தமிழக மதம் – மக்கள்)
அ)சமணர் – (1)5.86%
ஆ)பௌத்தர் –(2)87.58%
இ)இஸ்லாமியர் –(3)0.12%
ஈ)இந்து –(4)0.26%
உ)குறிப்பிடவியலா மதம் –(5)0.02%.
[A]35124.
[B]34125.
[C]54123.
[D]43125.

77)தமிழகத்தின் மத்திய அஞ்சல் தலைமையகம்?
[A]சென்னை.
[B]மதுரை.
[C]கோவை.
[D]திருச்சி.

78)நெசவாளர்களின் வீடு?
[A]கோவை.
[B]கரூர்.
[C]திருப்பூர்.
[D]ஈரோடு.

79)சதுப்பு நில (சீங்கன்னி) முதலைகள் காணப்படும் அணைப்பகுதி?
[A]வைகை.
[B]அமராவதி.
[C]கிருஷ்ணகிரி.
[D]மணிமுத்தாறு.

80)சரியாகப் பொருந்தியுள்ளது எது?
[A]தமிழக உள்நாட்டு மீன் உற்பத்தியில் கடலூர் – 19%.
[B]தமிழகத்தில் ஜிப்சம் கிடைக்கும் பகுதி – மதுரை.
[C]உற்பத்தி செய்யப்பட்ட தோல் பொருள் ஏற்றுமதியில் வேலூர் – 38%.
[D]இந்திய ஜவுளி ஏற்றுமதியில் தமிழகப் பங்களிப்பு – 30%.

81)தமிழகத்தின் மிக குறைவான நீளம் கொண்ட தேசிய நெடுஞ்சாலை?
[A]NH-47A.
[B]NH-07.
[C]NH-785
[D]NH-44.

82)தமிழ்நாட்டில் இரண்டாவது மிகப்பெரிய மக்கள் அடர்த்தி கொண்ட மாவட்டம் எது?
[A]சென்னை.
[B]கோவை.
[C]கன்னியாகுமரி.
[D]திருச்சி.

83)வெண்கலச் சிலைக்கு புவிசார் குறியீடு பெற்றுள்ள பகுதி?
[A]சுவாமிமலை.
[B]நாகர்கோவில்.
[C]நாச்சியார் கோவில்.
[D]தஞ்சாவூர்.

84)மக்கள்தொகை அடிப்படையில் பொருந்தாத மாவட்டம்?
[A]திருச்சி.
[B]மதுரை.
[C]தருமபுரி.
[D]விழுப்புரம்.

85)பொருந்தாதது?
[A]சோலாஸ் – சாம்பா.
[B]அயனமண்டல பசுமை மாறாக் காடுகள்- மூங்கில்.
[C]கிழக்கு இமயமலைக்காடு- சில்வர்.
[D]அல்பைன் காடு – சில்வர்.

86)பொருத்துக.
I)சில வழக்குகளில் கைது செய்து தடுப்புக் காவலில் வைப்பதற்கெதிரான உரிமை --- (1)பிரிவு 24.
II)குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களுக்கான உரிமை மற்றும் தண்டனைகளிலிருந்து பாதுகாப்பு பெறும் உரிமை ----(2) பிரிவு 23.
III)தொழிற்சாலைகள் மற்றும் ஆபத்தான இடங்களில் குழந்தைத் தொழிலாளர் முறையைத் தடுத்தல். ---- (3) பிரிவு 22.
IV)கட்டாய வேலை, கொத்தடிமை முறை மற்றும் மனிதத் தன்மையற்ற வியாபாரத்தைத் தடுத்தல். ----- (4) பிரிவு20.
[A]4312.
[B]3412.
[C]4321.
[D]3421.

87)இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் சிறப்புக்கூறு தொடர்பாக:
கூற்று 1:கூட்டாட்சி முறை அரசாங்கத்தை ஏற்படுத்துகிறது.
கூற்று 2:மத்தியில் மட்டுமில்லாமல் மாநிலங்களிலும் பாராளுமன்ற முறையைத் தோற்றுவிக்கிறது.
[A]இரண்டும் தவறு.
[B]இரண்டும் சரி.
[C]1 மட்டும் சரி.
[D]1 மட்டும் தவறு.

88)பின்வரும் வாக்கியங்களில் பொருந்தாத ஒன்று?
[A]அடிப்படை உரிமைகள் அமெரிக்காவிலிருந்து எடுக்கப்பட்டது.
[B]அடிப்படை கடமைகள் ரசியா நாட்டில் இருந்து எடுக்கப்பட்டது.
[C]அரசியலமைப்புக் கொள்கை முதன்முதலில் தோன்றிய நாடு இங்கிலாந்து.
[D]பெரும் முதலாளிகளிடமிருந்து வந்த எதிர்ப்பின் காரணமாக இங்கிலாந்து மகாசாசனம் உருவாக்கப்பட்டது.

89)1789 பிரெஞ்சு புரட்சியின் முக்கிய முழக்கத்தில் பொருந்தாத ஒன்று?
[A]சுதந்திரம்.
[B]ஒருமைப்பாடு.
[C]சமத்துவம்.
[D]சகோதரத்துவம்.

90)தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட ஆண்டு?
[A]2014.
[B]2004.
[C]2009.
[D]2010.

91)இந்திய அரசியலமைப்பை உருவாக்கியது?
[A]பிரிட்டிஷ் அரசு.
[B]அமைச்சரவைத் தூதுக் குழு(1946).
[C]அரசியல் நிர்ணய சபை.
[D]இந்திய அரசு.

92)இந்திய அரசியலமைப்புச் சட்டம் யாருடைய தலைமையின் கீழ் உருவாக்கப்பட்டது?
[A]சச்சிதான்ந்த சின்ஹா.
[B]கிருஷ்ணமாச்சாரி.
[C]ராஜேந்திர பிரசாத்.
[D]அம்பேத்கர்.

93)அரசமைப்பில் இடம் பெற்றுள்ள நீதிபேராணை, அடிப்படை உரிமைகள் எண்ணிக்கை?
[A]5,5.
[B]6,6.
[C]6,5.
[D]5,6.

94)முதன்முறையாக குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டு வரப்பட்ட மாநிலம்?
[A]குஜராத்.
[B]பஞ்சாப்.
[C]ராஜஸ்தான்.
[D]கேரளா.

95)42வது திருத்தத்துடன் தொடர்புடையது அல்ல?
[A]எடைகள் மற்றும் அளவுகள்.
[B]உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நிர்வாகம்.
[C]பறவைகள் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு.
[D]காடுகள்.

96)மனித உரிமைகளைப் பாதுகாக்க வழிவகை செய்வது?
[A]அரசு நெறிமுறையுறுத்தும் கோட்பாடுகள்.
[B]அடிப்படை உரிமைகள்.
[C]அடிப்படைக் கடமைகள்.
[D]அரசமைப்புக்கு உட்பட்டு தீர்வு காணும் உரிமை.

97)இந்திய மக்கள் அனைவரிடையேயும் நல்லிணக்கத்தையும், பொது உடன்பிறப்புணர்வையும் பேணிவளர்த்தல்; மகளிர்தம் மாண்புக்கு இழுக்காகும் பழக்கத்தை விட்டொளித்தல் ; தொடர்பான சரத்து?
[A]51A(b).
[B]51A(d).
[C]51A(e).
[D]51A(f).

98)ஏர் இந்தியா மற்றும் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனங்களை இணைத்து புதிதாக ஒருங்கிணைக்கப்பட்ட நிறுவனம்?
[A]தேசிய விமானப் போக்குவரத்து நிறுவனம்.
[B]இந்திய தேசிய விமானப் போக்குவரத்துக் கழகம்.
[C]தேசிய வான்வழிப் போக்குவரத்து நிறுவனம்.
[D]இந்திய வான்வழிக் கழகம்.

99)சம்பல் பள்ளத்தாக்குத் திட்டத்தால் பயனடையும் மாநிலம்?
[A]மத்திய பிரதேசம், மகாராஷ்ட்ரா, ராஜஸ்தான்.
[B]மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான்.
[C]பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான்.
[D]ராஜஸ்தான், மத்தியபிரதேசம்.

100)ஜோதிபாபூலே ஒடுக்கப்பட்டோருக்கான முதல் பள்ளியைத் துவங்கிய ஆண்டு?
[A]1848.
[B]1948.
[C]1851.
[D]1852.

விடைகளை சரிபார்க்க
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY