Ads Right Header

விடைகள் - 50 + 50 - பதினோறாம் வகுப்பு தமிழ் முழுவதும்!


பதினோறாம் வகுப்பு தமிழ் முழுவதும்

(100 வினாவிடை)

1) தமிழர் பாரம்பரிய நாள்?

அ) ஜனவரி 15 
ஆ) ஏப்ரல் 14 
இ) ஜனவரி 14 👍
ஈ) ஏப்ரல் 15 

2) வடக்கு வீதி என்ற சிறுகதைத் தொகுப்பு இலங்கை அரசின் சாகித்திய அகாதமி விருது பெற்ற ஆண்டு?

அ) 1995
ஆ) 1996
இ) 1998
ஈ) 1999 👍

3) மொழி முதல் எழுத்துக்களின் எண்ணிக்கை?

அ) 12 
ஆ) 22 👍
இ) 15
ஈ) 19 

3) பாயிரம் இல்லது___ அன்றே?

அ) காவியம் 
ஆ) பனுவல்👍
இ) பாடல் 
ஈ) கவிதை 

5) மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார் எந்த மாவட்டத்தில் பிறந்தார்?

அ) மதுரை 
ஆ) தஞ்சை
இ) திருச்சி 👍
ஈ) திருநெல்வேலி

6)  புல்லின் இதழ்கள் என்ற நூலை எழுதியவர் யார்?

அ) வால்ட் விட்மன்👍
ஆ) ஸ்டோஃபான் மல்லார்மே 
இ) பாப்லோ நெரூடா
ஈ) எர்னஸ்ட் காசிரர்

7)  வெளிச்சம், நுண்கலை முதலிய இதழ்களை நடத்தியவர்?

அ) சு. வில்வரத்தினம்
ஆ) கா. சிவதம்பி 
இ) அரவிந்தன்
ஈ)  இந்திரன்👍

8) சந்திரபிரபா_____-வது  தீர்த்தங்கரர்?

அ) 6 
ஆ) 7 
இ) 8 👍
ஈ) 9

9)  புனைந்துரை என்பது?

அ) நூலுக்கு முகம் போன்றது
ஆ) நூலின் பெருமை முதலியவை விளங்க அலங்கரித்துச் சொல்வது👍
இ) நூலில் சொல்லிய பொருள் அல்லாதவற்றை நூலின் புறத்திலே சொல்வது 
ஈ) நூலுக்கு முன் சொல்லப்படுவது

10) கூற்று 1: நன்னூல், தொல்காப்பியத்தை முதல் நூலாகக் கொண்ட வழிநூல்.

 கூற்று 2 :இது கி.பி. 13ம் நூற்றாண்டில் பவணந்தி முனிவரால் எழுதப்பட்ட இலக்கண நூல்

அ) கூற்று 1 சரி,2 தவறு
ஆ) கூற்று 1 தவறு, 2 சரி
இ) கூற்று 1,2 சரி 👍
ஈ) கூற்று 1,2 தவறு

11) மசானபு ஃபுகோகா எந்த ஆண்டு ஒற்றை வைக்கோல் புரட்சி என்ற நூலை எழுதினார்?

அ) 1978👍
ஆ) 1976
இ) 1982
ஈ) 1984

12)  "மண்ணின் மார்பு
 சுரந்த காலமது 
வெட்டுண்டன மரங்கள்
 வான் பொய்த்தது
 மருகியது மண்"- என்ற வரிகள் இடம் பெற்றுள்ள நூலை எழுதியவர் யார்?

அ) பெரியவன் கவிராயர்
ஆ)  அழகிய பெரியவன்👍
இ) அரவிந்தன் 👍
ஈ) இந்திரன் 

13) திருமலை முருகன் பள்ளு கூறும் நெல் வகைகள்?

அ) 10
ஆ) 8
இ) 19👍
ஈ) 14 

14) பேயனார் எழுதிய பாடல்களில் கிடைக்கப் பெற்றவை?

அ) 101 
ஆ) 100
இ) 103
ஈ)  105 👍

15) 'காட்டின் மூலவர்' என்றழைக்கப்படுவது?

அ) சிங்கம் 
ஆ) யானை 👍
இ) புலி 
ஈ) கரடி 

16) டாக்டர். கிருஷ்ணமூர்த்தி, வேணு மேனன் ஏலிஸ் விருதினை பெற்ற ஆண்டு?

அ) 1997
ஆ) 1999
இ) 1998
ஈ) 2000 👍

17) தமிழிசை இயக்கத்தின் தந்தை?

அ) ஆபிரகாம் பண்டிதர் 👍
ஆ) ஆர்.கே. சண்முகம்
இ) கல்கி 
ஈ) விபுலாநந்தர் 

18) "காழ்வரை நில்லாக் கடுங்களிற்று ஒருத்தல் யாழ்வரைத் தங்கி யாங்கு" - என்ற வரி இடம்பெற்றுள்ள நூல்?

அ) புறநானூறு 
ஆ) நற்றிணை
இ) கலித்தொகை👍
ஈ) அகநானூறு

19) ஐங்குறுநூறு____ பாக்களால் ஆனது?

அ) வெண்பா 
ஆ) ஆசிரியப்பா 👍
இ) கலிப்பா 
ஈ) வஞ்சிப்பா

20) அகிற்புகை- இலக்கண குறிப்பு தருக?

அ) நான்காம் வேற்றுமைத்தொகை
ஆ) மூன்றாம் வேற்றுமைத்தொகை
இ) ஐந்தாம் வேற்றுமை தொகை
ஈ) ஆறாம் வேற்றுமை தொகை 👍

21) "விண்பொரு நெடுவரை குறிஞ்சிக்கிழவ" என்று கூறும் நூல்?

அ) தொல்காப்பியம்
ஆ) புறநானூறு
இ) திருமுருகாற்றுப்படை👍
ஈ) சிறுபாணாற்றுப்படை

22) தமிழ்நாட்டில் மட்டும் 'மலை' என்ற சொல்____ இடப்பெயர்களில் முன்னொட்டாக வருகிறது?

அ) 19 
ஆ) 17 👍
இ) 21 
ஈ) 23 

23) உம்பர் என்பதன் பொருள்?

அ) வள்ளல்
ஆ) மன்னன் 
இ) எமன் 
ஈ) தேவர் 👍

24) புறநானூறு நூலினை உ.வே.சா அவர்கள் பதிப்பித்து வெளியிட்ட ஆண்டு?

அ) 1894👍
ஆ) 1915
இ) 1920
ஈ) 1934

25) 'சுதந்திர தாகம்' என்ற புதினம் சாகித்திய அகாதமி விருது பெற்ற ஆண்டு?

அ) 1997
ஆ) 1999
இ) 2001👍
ஈ) 2003

 26) காவடிச் சிந்தின் தந்தை?

அ) பாரதியார்
ஆ) அண்ணாமலையார்👍
இ) முருகன்
ஈ) அருணகிரிநாதர்

27) பொருத்துக.

அ) வெள்ளிவீதியார்- குறுந்தொகை
ஆ) அண்ணாமலையார்- காவடிசிந்து 
இ) வாடிவாசல்- சி. சு. செல்லப்பா
ஈ) இளம்பெருவழுதி- புறநானூறு

28) தமிழ்ப் பதிப்புலகின் தலைமகன்____

அ) உ.வே.சா
ஆ) மீனாட்சிசுந்தரனார்
இ) சி.வை. தாமோதரனார்👍
ஈ) கல்கி

29) "மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
 பெருந்தகை யான்கண் படின்" என்ற குறட்பாவில் பயின்று வந்துள்ள அணியை காண்க?

அ) வேற்றுமை அணி
ஆ) எடுத்துக்காட்டு உவமையணி 
இ) பொருள் பின்வருநிலையணி
ஈ) உவமை அணி 👍

30) ஒப்புரவு என்பதன் பொருள்?

அ) அடக்கமுடையது
ஆ) பண்புடையது 
இ) ஊருக்கு உதவுவது👍
ஈ) செல்வமுடையது 

31) மனித மூளை சுமார்____வாட் சக்தியை உற்பத்தி செய்கிறது?

அ) 10 👍
ஆ) 15
இ) 20 
ஈ) 25 

32) மூளைக்கு ஒரு நிமிடத்திற்கு______ மில்லி குருதி தேவைப்படுகிறது?

அ) 600 
ஆ) 700
இ)  800 
ஈ) 900

33) "உங்கள் உடலின் முக்கிய பணி, உங்கள் மூளையைத் தாங்கிச் செல்வது!"- என்று கூறியவர்?

அ) ஐன்ஸ்டைன்
ஆ) எடிசன்
இ)  நியூட்டன்👍
ஈ) ஹாக்கிங்

34) "அடுத்த நூற்றாண்டு" என்ற நூலை எழுதியவர்?

அ) மீரா 
ஆ) சுந்தரம்
இ) அரவிந்தன்
 ஈ)சுஜாதா 👍

35) குண்டலகேசி எந்த நூலுக்கு மறுப்பு நூல் எழுதப்பட்டது?

அ) வளையாபதி
ஆ) நீலகேசி👍
இ) சீவகசிந்தாமணி
ஈ) மணிமேகலை 

36) வெப்பம் குளிர்- இலக்கண குறிப்பு தருக?

அ) எண்ணும்மை
ஆ) உவமைத்தொகை
இ) உம்மைத்தொகை👍
ஈ) உருவகம் 

37) பெருங்கலம் என்னும் சொல்லுக்குரிய புணர்ச்சி விதிகளை தேர்வு செய்க?

அ) ஈறு போதல், தன்னொற்றிரட்டல் 
ஆ) ஈறு போதல், இனமிகல்👍
இ)  ஈறுபோதல், ஆதிநீடல்
ஈ)  ஈறுபோதல், இனையவும்

38) பரிப்பு என்பதன் பொருள்?

அ) வழி
ஆ) வலிமை 
இ) பாய்மரம் 
ஈ) இயக்கம்👍

39) உலக நீரிழிவு நோய் நாள்?

அ) நவம்பர் 14 👍
ஆ) நவம்பர் 11 
இ) டிசம்பர் 14
ஈ)  டிசம்பர் 11 

40) முதல் மரபணு பொறியியல் தொழில்நுட்பச் செயற்கை மனித இன்சுலின் பாக்டீரியாவை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஆண்டு?

அ) 1976
ஆ) 1979
இ) 1978👍
ஈ) 1980

41) "துணையாய் வருவது தூயநற் கல்வி" என்ற வரி இடம்பெற்றுள்ள நூல்?

அ) திருமந்திரம் 👍
ஆ) நாலடியார்
இ) கொன்றைவேந்தன்
ஈ) திருக்குறள்

42) தமிழ்நாடு இடைநிலை கல்வி வாரியம் தொடங்கப்பட்ட ஆண்டு?

அ) 1910
ஆ) 1911 👍
இ) 1835 
ஈ) 1857 

43) சார்லஸ் வுட் அறிக்கை?

அ)  1835 
ஆ) 1842 
இ) 1850 
ஈ) 1854 👍

44) பிரசம் என்பதன் பொருள்?

அ) வறுமை 
ஆ) கணவன் வீடு 
இ) தேன் 👍
ஈ) சுவை

45)  நற்றிணையின் பேரெல்லை?

அ) 12 அடி 👍
ஆ) 11 அடி 
இ) 10 அடி
ஈ)  9 அடி

46) தொல்காப்பியத்தின் முதற்பதிப்பு?

அ) 1920
ஆ) 1915
இ) 1894
ஈ) 1847👍

47)  பாரதியார் தமிழில்____ என்ற பெயரில் கருத்துப் படங்களை மட்டுமே கொண்ட இதழ் ஒன்றை நடத்த விரும்பினார்?

அ) சித்திரபுத்தன் 
ஆ)சித்ராவெளி
இ) சித்திரவளி 👍
ஈ) சித்திரம் 

48) பாரதியார் பெண்களுக்காக____ இதழில் குறள்வெண்பா எழுதியுள்ளார்?

அ) இந்தியா
ஆ) சக்கரவர்த்தினி 👍
இ) விஜயா 
ஈ) சுதேசமித்திரன்

49) நிழல் போலத் தொடர்ந்தான் -இது எவ்வகை உவமை?

அ)  வினை 👍
ஆ) பயன் 
இ) வடிவம் 
ஈ) மெய்

50)  ஏடு, சுவடி, பொத்தகம், பனுவல் முதலிய சொற்கள் தரும் பொருள்?

அ)  நூல் 👍
ஆ) ஓலை
இ)  எழுத்தாணி 
ஈ) தாள்

51) டைரியம் என்பது எம்மொழிச்சொல்?

அ) ஜெர்மன் 
ஆ) இலத்தீன் 👍
இ) ஆங்கிலம்
ஈ)  பிரெஞ்சு 

52) ஆனந்தரங்கன் கோவை என்ற நூலை எழுதியவர்?

அ) பிரபஞ்சன் 
ஆ) புலவரேறு அரிமதி தென்னகன் 
இ) ஈஸ்வரன்
ஈ) தியாகராஜ தேசிகர்👍

53) ஹிஜித் என்றுஅரபு சொல்லின் பொருள்?

அ)  வாழ்தல் 
ஆ)பிறப்பிடம்
இ) இடம்பெயர்தல்👍
ஈ)  தங்குதல்

54) கம்பலை என்பதன் பொருள் ?

அ) அரசவை
ஆ) மலை 
இ) பேரொலி👍
ஈ)  அச்சம்

55) சீறாப்புராணத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை?

அ) 4027
ஆ) 5027👍
இ) 4092
ஈ) 5092

56) உறுபகை- இலக்கணக்குறிப்பு தருக?

அ) உருவகம்
ஆ) உரிச்சொற்றொடர்👍
இ) உவமைத்தொகை
ஈ)  உம்மைத்தொகை

57) அகநானுறு____ புலவர்களால் பாடப்பட்டது?

அ) 154 
ஆ) 164 
இ) 132 
ஈ) 145 👍

58) கொண்மூ என்பதன் பொருள்?

அ) மேகம்👍
ஆ) பகை 
இ) அச்சம் 
ஈ) போர் 

59) சாதரிப்பண் எந்த நிலத்துக்கு உரியது?

அ) குறிஞ்சி 
ஆ) முல்லை 👍
இ) மருதம் 
ஈ) நெய்தல்

60)  முண்டகப்பூ எந்த நிலத்திற்கு உரியது?

அ) முல்லை 
ஆ) மருதம் 
இ) குறிஞ்சி 
ஈ) நெய்தல் 👍

61) இராசராசன் சேர நாட்டை வென்ற ஆண்டு?

அ) 980
ஆ) 988 👍
இ) 998 
ஈ) 992 

62) சோழன் செங்கணான் கட்டிய கோயில்களின் எண்ணிக்கை?

அ) 70 
ஆ) 74 
இ) 78 👍
ஈ) 76 

63) திரிகூடராசப்பக் கவிராயரின் கவிதை கிரீடம்?

அ) குற்றாலக்குறவஞ்சி👍
ஆ)  தலபுராணம்
இ) பிள்ளைத்தமிழ் 
ஈ) யமக அந்தாதி 

64) அயன் என்பது?

அ)  விஷ்ணு 
ஆ) பிரம்மன் 👍
இ) சிவன் 
ஈ) முருகன் 

65) சுடுகாடு- இலக்கணக்குறிப்பு தருக?

அ) பண்புத்தொகை
ஆ) தொழிற்பெயர்
இ) பெயரெச்சம்
ஈ) வினைத்தொகை👍

66)  பிங்கல நிகண்டு என்னும் நூலில் காணப்படும் பண்களின் எண்ணிக்கை?

அ) 100 
ஆ) 110
இ) 103 👍
ஈ) 107 

67) பொருத்துக.

அ) விரியன் -சிலம்பு
ஆ) திருமுருகு -தண்டை
இ) நாங்கூழ்ப்புழு -பாடகம்
ஈ) குண்டலப்பூச்சி -காலாழி

68) தத்துவ மீனலோசனி வித்துவ பால சபை துவங்கப்பட்ட ஆண்டு?

அ) 1910
ஆ) 1918👍
இ) 1920
ஈ) 1928

69) தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர்?

அ) பம்மல் சம்பந்தர்
ஆ) கல்கி 
இ) முத்துச்சாமி
ஈ)  சங்கரதாசு சுவாமிகள்👍

70)  'ழ' என்பது___?

அ) சிற்றிதழ் 👍
ஆ) வார இதழ் 
இ) பருவ இதழ்
ஈ) தின இதழ்

71) பசுவய்யா  என்றப் புனைப்பெயரில் கவிதைகள் எழுதியவர்?

அ) சங்கரதாசு சுவாமிகள்
ஆ) சி.சு. செல்லப்பா
இ) சுந்தர ராமசாமி👍
ஈ) பாவண்ணன் 

72) நவை என்பதன் பொருள்?

அ) விருப்பம் 
ஆ) சுவை 
இ) நகைச்சுவை 
ஈ)குற்றம்👍

73) தமிழ்க்கவிஞர்- இலக்கண குறிப்பு தருக?

அ) இருபெயரொட்டு பண்புத்தொகை👍
ஆ) பண்புத்தொகை
இ) பெயரெச்சம்
ஈ) வினைத்தொகை

74) 'குயில்' என்னும் இலக்கிய இதழை நடத்தியவர்?

அ) பாரதியார்
ஆ) துரைமாணிக்கம்
இ) அப்துல் ரகுமாரன்
ஈ) பாரதிதாசன்👍

75) பதிற்றுப்பத்தில் குமட்டூர்க் கண்ணனார் பாடியது?

அ) முதல் பத்து
ஆ) இரண்டாம் பத்து👍
இ) மூன்றாம் பத்து
ஈ) நான்காம் பத்து

 76) நிரையம் என்பதன் பொருள்?

அ) வெள்ளம்
ஆ)  நாடு
இ)  நரகம்👍
ஈ) அச்சம் 

77) "வீட்டுக்கு உயிர் வேலி!
 வீதிக்கு விளக்குத்தூண்!
 நாட்டுக்குக் கோட்டை மதில்!
 நடமாடும் கொடிமரம் நீ"- இது யாருடைய பாடல்?

அ) தாராபாரதி👍
ஆ) பாரதிதாசன்
இ)  பாரதியார்
ஈ) வாணிதாசன்

78) "பட்டிமண்டபத்துப் பாங்கறிந்து ஏறுமின்"- என்று கூறும் நூல்?

அ) சிலப்பதிகாரம்
ஆ)  மணிமேகலை👍
இ) கம்பராமாயணம்
ஈ) சீவகசிந்தாமணி

79) "நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்" என்று பாடியவர்?

அ) பாரதியார்
ஆ) அண்ணா
இ) பாரதிதாசன்👍
ஈ) தாராபாரதி

80) ஆக்கப்பெயர் விகுதி பெறாத சொல்லைத் தேர்க?

அ)  காவலாளி 
ஆ) மேலாளர் 
இ) உதவியாள்
ஈ) ஆசிரியர் 👍

81) "எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தார் அப்பா
 யானும் வந்தேன் ஒரு சித்தன் இந்த நாட்டில்"- என்று பாடியவர்?

அ) பாரதிதாசன் 
ஆ) திருமூலர் 
இ) பாரதியார்👍
ஈ) சிவவாக்கியர்

82) சித்தர்களில் ஆதி சித்தராக கருதப்படுபவர்?

அ) திருமூலர் 
ஆ) சிவவாக்கியர்
இ) பத்திரகிரியார்
ஈ) கடுவெளிச்சித்தர்

83) "பட்டுப்போன மரக்கிளை,
 அமர்ந்து ஓய்வெடுக்கும் காகம்;
 இலையுதிர் கால மாலை"- என்ற கவிதையை எழுதியவர்?

அ) மோரிடாகோ👍
ஆ) பாஷோ 
இ) இஸ்ஸா
ஈ) தேனரசன்

84) சிவராமலிங்கம் புனைப்பெயர்களில் பொருந்தாதது?

அ) பானுசந்திரன் 
ஆ) அரூப் சிவராம் 
இ) தருமு சிவராம்
ஈ) பாவண்ணன்👍

85) "வெறும் காகிதம் தின்பது கல்வியல்ல" என்று கூறியவர்?

அ) பாரதியார்
ஆ) மீனாட்சி
இ) அப்துல்ரகுமான் 👍
ஈ) மீரா

86) வில்லிபாரதம்____ பருவங்களைக் கொண்டது?

அ) 5 
ஆ) 10👍
இ) 15
ஈ) 20 

87) மரணத்திற்குப் பிறகு மனிதர் நிலை என்ற நூலை இயற்றியவர்?

அ) பரிதிமாற்கலைஞர்
ஆ) பாரதியார் 
இ) திரு.வி.க
ஈ) மறைமலையடிகள்👍

88) வில்லிபாரதத்தில்  "சூரியனின் தோன்றல்" என்று குறிப்பிடப்படுபவர் யார்?

அ) கண்ணன் 
ஆ)கன்னன்👍
இ) அர்ச்சுனன் 
ஈ) பிரமன் 

89) கண்மலர்- இலக்கண குறிப்பு தருக?

அ) உவமை
ஆ) உருவகம்👍
இ) எண்ணும்மை
ஈ) உம்மைத்தொகை

90) தூரகதம் என்பதன் பொருள்?

அ) யானை 
ஆ) சூரியன்
இ) குதிரை👍
ஈ)  மான்

91) விஸ்வபாரதி பல்கலைக்கழகம் நிறுவப்பட்ட ஆண்டு?

அ) 1920
ஆ) 1891
இ) 1929
ஈ) 1921👍

92) அயம் என்பதன் பொருள்?

அ) பிரமன் 
ஆ) பசு
இ) மான் 
ஈ) குதிரை 👍

93) ஏழிலி என்பதன் பொருள் ?

அ) அச்சம் 
ஆ) ஆனந்தம்
இ)  மேகம் 👍
ஈ) கடல் 

94) தமிழின் முதல் பா வடிவ நாடக நூல்?

அ) இரகசிய வழி
ஆ) மனோன்மணியம்👍
இ) மாங்குடி
ஈ) பிசிராந்தையார்

95) சிலப்பதிகாரம் குறிப்பிடும் ஆடற்கலைகள்?

அ) 8 
ஆ) 9 
இ) 10
ஈ) 11 👍

96) கூவும் குயிலும் கரையும் காகமும் -தொடரில் இடம் பெற்ற மரபு?

அ) பெயர் மரபு 
ஆ) வினை மரபு 
இ) ஒலி மரபு👍
ஈ) இவை மூன்றும்

97) இரவீந்திரநாத் தாகூர் நோபல் பரிசு பெற்ற ஆண்டு?

அ) 1910
ஆ) 1913👍
இ) 1917
ஈ) 1920 

98) மனோன்மணீயம் பல்கலைக்கழகம் எங்கு அமைந்துள்ளது?

அ) திருச்சி 
ஆ) திருநெல்வேலி 👍
இ) மதுரை 
ஈ) வேலூர்

99) கொள் - என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடு?

அ) கொள்க
ஆ)கொள்ளுதல்
இ) கொள்ளும் 
ஈ) கொள்வேன்👍 

100) சாதிப் பிரிவினிலே தீயை மூட்டுவோம் -என்பது யார் கூற்று?

அ) பாம்பாட்டிச் சித்தர்👍
ஆ) சிவவாக்கியர் 
இ) திருமூலர் 
ஈ) பட்டினத்தார்

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY