Ads Right Header

TNPSC GROUP 2MAINS - எவ்வாறு இருக்கும் - ஒரு பார்வை!


 TNPSC GROUP 1 MAINS - ஒரு பார்வை.

TNPSC GROUP 2MAINS - எவ்வாறு இருக்கும் - ஒரு பார்வை.

சமீபத்தில் நடைபெற்ற குரூப்-1 மெயின் தேர்வில் கேள்வியின் தரம் கடந்த கால TNPSC ஐ விட முற்றிலும் மாறுபட்டதாகவும் ஆழ்ந்து சிந்தித்து பதில் அளிக்க்கூடியதாகவும் இருந்தது

தாள் 1 - நேரடி கேள்விகள் அல்லாமல் Analysis Based Questions அதிகமாக இருந்தது

1)உதாரணமாக - வேலூர் கழகம் 1857 பெருங்கிளர்சிக்கு முன்னோடி என்பதை ஆய்வு செய்க 

2) வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் தமிழ்நாட்டின் தொழிலாளர்கள் பங்கு குறித்து விவரி

3) வேகமாக நகரமயமாக்கல் மற்றும் அதன் விளைவுகள்

4) அரசியலமைப்பில் பெண்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள அதிகாரம் மற்றும் அவர்களின் செயல்பாடு

5) கணித கேள்விகள் போன வருடம் போல் இல்லாமல் சற்று கடினமாக இருந்தது 

     இவ்வாறு முதல் தாளில் ஆராய்ந்து கேள்வியை உள்வாங்கி கேள்விக்குரிய பதிலை மட்டுமே அளிக்க வேண்டும்

தாள் 2- இந்திய அரசியலமைப்பில் கவர்னரின் சிறப்பு அதிகாரங்கள் 

  ககன்யான் திட்டத்தால் இந்தியாவிற்கு கிடைக்கப்போகும் நன்மைகள் மற்றும் அதன் முக்கியத்துவம்

பல்லவர் கால குடவரை சிற்பங்கள் ( கோயில்கள் அல்ல) 

சங்க கால மகளிர் நிலை

தமிழர்களிடம் இருந்து இந்தியர்கள் கற்றுக்கொள்ள வேண்டியதை இலக்கியங்கள் மற்றும் கல்வெட்டுகள் மூலம் விவரி

 தாள் 3 - நகரமைப்பு ஒன்றினைப்பு மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் பங்கு

TAMIL NADU BILLION DOLLAR ECONOMY 2030- சாத்தியமா அல்லது சாத்தியமற்றதா

பாரிஸ் உடன்படுக்கையும் அதன் தாக்கமும்

Net Zero Emissions அடைவதற்கு இந்தியா முன்பு இருக்கும் சவாலகள்

Draas, CHAMPIONS PORTAL,  SOVEREIGN GREEN BOND, 

Smart Agriculture பற்றி விவரி

  இவ்வாறு கேள்விகள் ஆராய்ந்து எழுதி விவரிப்பது போல் இருந்தது,

தற்போது குரூப் 2 - மெயின் தேர்வு எவ்வாறு இருக்கும் 

1) குரூப் 1 தேர்வின் தரத்தில் சற்றும் குறைவில்லாமல் இருக்கும்

2) செய்தித் தாள்களை படிப்பது அவசியம்

3) பட்ஜெட் ( மத்திய மாநில)  அவசியம் குறிப்பு எடுக்க வேண்டும்

4) இன்னும் பழைய பஞ்சாங்மான வறுமை, வேலையின்மை, கொத்தடிமை போன்ற கேள்விகளை எதிர்பாத்து படித்தால் தோல்வி உறுதி,

5 ) கேள்விகள் மற்றும் பதில்கள் அங்கு கேட்கப்பட்டதற்கு எழுதவேண்டுமே ஒழிய தனக்கு தெரிந்ததை எழுதக்கூடாது.

நன்றி: திரு.மணிகண்டன்.

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY