TNPSC TAMIL
Part 3 - 50 + 50 - இலக்கணக் குறிப்பு!
இரண்டாம் வேற்றுமைத்தொகை
அங்கணர் –
அன்மொழித்தொகை
நோக்கி -
வினையெச்சம்
எழுந்து , சென்று -
வினையெச்சங்கள்
பணிவிடம் -
ஆறாம் வேற்றுமைத் தொகை
கேளா -
செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்
ஒழுக்கம் -
தொழிற்பெயர்
படும் -
செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று .
காக்க -
வியங்கோள் வினைமுற்று
பரிந்து , தெரிந்து
வினையெச்சங்கள்
இழிந்த பிறப்பு
பெயரெச்சம்
நீர்முகில் -
இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை
கூவா -
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
குறுகி , சேவிக்க -
வினையெச்சங்கள்
தேவா -
விளி
கழல் -
தானியாகுபெயர்
வந்தனென் -
தன்மை ஒருமை வினைமுற்று
செவியறுத்து ( செவியை அறுத்து ) - இரண்டாம் வேற்றுமைத்தொகை
அறனறிந்து ( அறத்தை + அறிந்து ) ; திறனறிந்து திறனை + அறிந்து ) - இரண்டாம் வேற்றுமைத்தொகைகள்
தேர்ந்து கொளல் -
வினையெச்சம்
கொளல் -
அல் ஈற்று வியங்கோள் வினைமுற்று
உற்றநோய் -
பெயரெச்சம்
உறாஅமை -
செய்யுளிசை அளபெடை
பெற்றியார் -
வினையாலணையும் பெயர்
கொளல் -
தொழிற்பெயர்
வன்மை -
பண்புப்பெயர்
ஒழுகுதல் -
தொழிற்பெயர்
சூழ்வார் -
வினையாலணையும் பெயர்
தக்கார் , செற்றார் -
வினையாலணையும் பெயர்கள்
துணையார் , ஆள்வார் வினையாலணையும் பெயர்கள்
இல்லை -
குறிப்பு வினைமுற்று
பகைகொளல் ( பகையைக் கொளல் ) - இரண்டாம் வேற்றுமைத்தொகை
பொய்யா விளக்கம் -
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
இருளறுக்கும் ( இருளை அறுக்கும் ) - இரண்டாம் வேற்றுமைத்தொகை
அறனீனும் ; திறனறிந்து -
இரண்டாம் வேற்றுமைத்தொகைகள்
வந்த பொருள் -
பெயரெச்சம்
அறன் , திறன் -
கடைப்போலிகள்
வாராப் பொருளாக்கம் -
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சு
விடல் -
அல் ஈற்று வியங்கோள் வினைமுற்று
ஈன்குழவி -
வினைத்தொகை
செல்வச்செவிலி -
உருவகம்
குன்றேறி -
ஏழாம் வேற்றுமைத்தொகை
செய்க -
வியங்கோள் வினைமுற்று
செறுநர் செருக்கு ஆறாம் வேற்றுமைத்தொகை
ஒண்பொருள் , எண்பொருள் - பண்புத்தொகைகள்
காழ்ப்ப இயற்றியார் -
பெயரெச்சம்
நற்சங்கு , வெண்குழை - பண்புத்தொகைகள்
மலர்ச்சேவடி -
உவமைத்தொகை
மீளா ஆள் -
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
படர்ந்த தெண்டிரை -
பெயரெச்சம்
நதிப்பரப்பு -
ஆறாம் வேற்றுமைத்தொகை
தொழுது அறைகுவன் -
வினையெச்சம்
தடக்கரி -
உரிச்சொற்றொடர்
நெடுநீர் -
பண்புத்தொகை
பொருந்தி -
வினையெச்சம்
வரி உழுவை ( வரிகளைக்கொண்ட புலி ) - இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கதொகை
புடைத்து , நிமிர்ந்து , கிடந்து , மடித்து - வினையெச்சங்கள்
கால் மடித்து -
இரண்டாம் வேற்றுமைத்தொகை
வெள்ளெயிறு -
பண்புத்தொகை
பெருங்கிரி -
பண்புத்தொகை
முதிர்ந்தமேதி , பொதிந்தமெய் - பெயரெச்சங்கள்
கவையடிக்கேழல் -
இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கதொகை
செவிபுக -
ஏழாம் வேற்றுமைத்தொகை
நின்ற வேங்கை
பெயரெச்சம்
செங்கதிர் , பெருவரி - பண்புத்தொகைகள்
பூதரப்புயம்
உவமைத்தொகை
வால்குழைத்து -
இரண்டாம் வேற்றுமைத்தொகை
பெருஞ்சிரம் , தண்டளி , திண்டிறல் - பண்புத்தொகைகள்
எழுந்து , புதைத்து , வணங்கி - வினையெச்சங்கள்
வள்ளுகிர்ப்புலி ( கூர்மையான நகத்தை உடைய புலி ) - இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
நனிமனம் -
உரிச்சொல்தொடர்
சிரமுகம் ( சிரமும் முகமும் ) உம்மைத்தொகை
உயிர்செகுத்து -
இரண்டாம் வேற்றுமைத்தொகை
புகுக -
வியங்கோள் வினைமுற்று
மலரடி -
உவமைத்தொகை
நன்று நன்று -
அடுக்குத்தொடர்
கொலைப்புலி ( கொலையை விரும்பும் புலி ) - இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
ஒழுகுதல் , நோன்றல் , பொறுத்தல் - தொழிற்பெயர்கள்
பொழிதருமணி , பணைதருபருமணி , வருபுனல் , நிதிதருகவிகை -
வினைத்தொகைகள்
இவை இவை
அடுக்குத்தொடர்
நோக்காய் -
முன்னிலை ஒருமை வினைமுற்று
கோல்நோக்கி - இரண்டாம் வேற்றுமைத்தொகை
தார்வேந்தன் ( தாரை அணிந்த அரசன் ) - இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
வாழும்குடி -
பெயரெச்சம்
பழச்சுவை -
ஆறாம் வேற்றுமைத் தொகை
ஆரமிர்து ( அருமை + அமிர்து ) - பண்புத்தொகை
தரும் பொருளே -
செய்யும் என்னும் வாய்ப்பாட்டுப் பெயரெச்சம்
நீங்காப் பூரணமாய் -
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
காலமும் தேசமும் -
எண்ணும்மை
உயிர்த்திரள் -
ஆறாம் வேற்றுமைத் தொகை
சொலும் -
சொல்லும் என்பதன் இடைக்குறை விகாரம்
விழுப்பொருள் -
உரிச்சொற்றொடர்
தொன்மக்கள் -
பண்புத்தொகை
உள்ளம் -
ஆகுபெயர்
உரைகாலம்
வினைத்தொகை
பழந்தமிழ் -
பண்புத்தொகை
ஐயைதாள் -
ஆறாம் வேற்றுமைத் தொகை
தாள் தலை - ( தாளைத் தலையால் ) - இரண்டாம் வேற்றுமைத்தொகை
பணிகுவாம் -
தன்மைப் பன்மை வினைமுற்று
நிறைந்தனை , ஒன்றினை , தீர்ந்தனை , சார்ந்தனை , சாய்ந்தனை , பூண்டனை - முன்னிலை ஒருமை வினைமுற்றுகள்
Previous article
Next article
Leave Comments
Post a Comment