Ads Right Header

விடைகள் - அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி & தேர்தல் அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்த குழுக்கள்!


அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி

1) இன்றைய உலகம்____ஐ பெரிதும் விரும்புகிறது?

அ) முடியாட்சி 
ஆ) குடியரசு 
இ) மக்களாட்சி🌹
ஈ) குடியாட்சி 

2) உயர்குடியாட்சி நாடுகளுக்கு எடுத்துக்காட்டு______

அ) வடகொரியா, சவூதி அரேபியா
ஆ) இங்கிலாந்து, ஸ்பெயின் 🌹
இ) பூடான், ஓமன், கத்தார்
ஈ) சீனா, வெனிசுலா 

3) ஒரு நபர் (வழக்கமாக அரசர்) ஆல் அமைக்கப்படும் அரசாங்கம்_____ எனப்படும்?

அ) முடியாட்சி 🌹
ஆ) குடியரசு
இ) மக்களாட்சி
ஈ) குடியாட்சி 

4) சிறு குழு ஆட்சி நாடுகளுக்கு எடுத்துக்காட்டு_____

அ) வடகொரியா, சவுதி அரேபியா 
ஆ) இங்கிலாந்து, ஸ்பெயின்
இ) பூடான், ஓமன், கத்தார்
ஈ) சீனா, வெனிசுலா🌹

5) முழு அதிகாரம் கொண்ட ஒரு நபரால் அமைக்கப்படும் அரசாங்கம்_____ எனப்படும்?

அ) முடியாட்சி
ஆ) மதகுருமார்களின் ஆட்சி
இ) தனிநபர் ஆட்சி🌹
ஈ) குடியாட்சி

6) பொருத்துக.

அ) முடியாட்சி-பூடான், ஓமன் கத்தார் 
ஆ) தனிநபர் ஆட்சி-வடகொரியா, சவுதி அரேபியா 
இ) மதகுருமார்கள் ஆட்சி- வாட்டிகன்
ஈ) மக்களாட்சி- இந்தியா,USA, பிரான்ஸ்
 உ) குடியரசு- இந்தியா, ஆஸ்திரேலியா

7) MONARCHY-இதன் தமிழாக்கம் என்ன?

அ) உயர்குடியாட்சி
ஆ) முடியாட்சி🌹
இ) தனிநபர் ஆட்சி 
ஈ) சிறுகுழு ஆட்சி 

8) AUTOCRACY-இதன் தமிழாக்கம் என்ன?

அ) உயர்குடியாட்சி
ஆ) முடியாட்சி 
இ) தனிநபர் ஆட்சி🌹
ஈ) சிறுகுழு ஆட்சி

9) மக்களாட்சி- இதன் ஆங்கில சொல் என்ன?

அ)  Republic
ஆ) Democracy🌹
இ) Theocracy
ஈ) Aristocracy

10) பொருத்துக.

அ) Republic- குடியாட்சி
ஆ) Oligarchy- சிறுகுழு ஆட்சி
இ) Theocracy- மதகுருமார்கள் ஆட்சி
ஈ) Aristocracy- உயர்குடியாட்சி

11) மக்களின் சிறிய குழு ஒன்று ஒரு நாட்டையோ அல்லது அமைப்பையோ கட்டுப்படுத்துவது_____ எனப்படும்?

அ) உயர்குடியாட்சி
ஆ) மக்களாட்சி
இ) சிறுகுழு ஆட்சி🌹
ஈ) குடியாட்சி

12)  ஒரு நாட்டின் தகுதியுள்ள குடிமக்கள் வாக்களிக்கப்பட்ட தனிநபரோ அல்லது குழுவாகவோ தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மூலம் அமைக்கப்படும் அரசாங்கம்_____ எனப்படும்?

அ) உயர்குடியாட்சி
ஆ) மக்களாட்சி 🌹
இ) சிறுகுழு ஆட்சி
ஈ) குடியாட்சி 

13) குடியரசு எனும் சொல் எந்த நாட்டில் வடிவமைக்கப்பட்டது?

அ) சீனா 
ஆ) எகிப்து
இ) ஆஸ்திரியா 
ஈ) ரோம் 🌹

14)குடியரசு என்னும் சொல் எப்போது வடிவமைக்கப்பட்டது?

அ) கி.மு. 400 
ஆ) கி.பி. 500
இ) கி.மு. 500🌹
ஈ) கி.பி. 400 

15) குடியரசு எனும் சொல் Res publica எனும்____ மொழியிலிருந்து பெறப்பட்டது?

அ) ஆஸ்திரிய 
ஆ) இலத்தீன் 🌹
இ) பாரசீகம் 
ஈ) கிரேக்க

16)  இந்திய அரசியலமைப்பு எப்போது ஏற்றுக்கொள்ளப்பட்டது?

அ) 1949, டிசம்பர் 26
ஆ) 1950, அக்டோபர் 26
இ) 1949, நவம்பர் 26🌹
ஈ) 1950, ஜனவரி 26 

17) இந்திய அரசியலமைப்பு எப்போது நடைமுறைக்கு வந்தது?

அ) 1949, டிசம்பர் 26
ஆ) 1950, அக்டோபர் 26
இ) 1949, நவம்பர் 26
ஈ) 1950, ஜனவரி 26 🌹

18) res publica -இதன் பொருள் என்ன?

அ) பொது விவகாரம்🌹
ஆ) மக்களின் அரசாங்கம்
இ) மக்கள் அதிகாரம்
ஈ) மக்களாட்சி

19)  மக்களாட்சி (DEMOCRACY) எனும் சொல்____ மொழியிலிருந்து பெறப்பட்டது?

அ) ஆஸ்திரிய
ஆ) லத்தின் 
இ) பாரசீகம் 
ஈ) கிரேக்க🌹

20) Democracy இதன் பொருள் என்ன?

அ) பொது விவகாரம்
ஆ) மக்களின் அரசாங்கம்
இ) மக்கள் அதிகாரம்🌹
ஈ) குடியரசு 

21) Democracy என்னும் சொல் ____லிருந்து பெறப்பட்டது?

அ) demos🌹
ஆ) cratia🌹
இ) demo
ஈ) cratiah

22) 2500 ஆண்டுகளுக்கு முன்பாகவே மக்களாட்சி தோன்றிய நாடு?

அ) கிரேக்கம்
ஆ) பாரசீகம் 
இ) எகிப்து 
ஈ) ஏதென்ஸ்🌹

23) மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் ஆட்சி 'மக்களாட்சி' என குறிப்பிடுபவர்?

அ) ஜவஹர்லால் நேரு
ஆ) காந்தியடிகள்
இ) சாணக்கியர் 
ஈ) ஆபிரகாம் லிங்கன் 🌹

24) "ஒரு உண்மையான மக்களாட்சியை 20 பேர் குழுவாக அமர்ந்து கொண்டு செயல்படுத்த முடியாது. இது கீழ்நிலையிலுள்ள ஒவ்வொரு கிராம மக்களால் செயல்படுத்தப்படுவதாகும்"என கூறியவர் யார்?

அ) ஜவகர்லால் நேரு
ஆ) காந்தியடிகள்🌹
இ) சாணக்கியர்
ஈ) ஆபிரகாம் லிங்கன்

25) நாடாளுமன்ற அரசாங்க மக்களாட்சி முறைக்கு எடுத்துக்காட்டு?

அ) அமெரிக்க ஐக்கிய நாடுகள், பிரான்ஸ்
ஆ) இந்தியா, இங்கிலாந்து🌹
இ) பிரான்ஸ், இங்கிலாந்து
ஈ) இந்தியா, அமெரிக்கா ஐக்கிய நாடுகள்

 26) பண்டைய காலத்தில் உள்ளாட்சி அமைப்பின் அடிப்படை அழகாக இருந்தது சுய ஆட்சி____ ஆகும்.

அ) வணிக நகரங்கள்
ஆ) கிராமங்கள் குழுக்கள்🌹
இ) குடும்பங்கள் 
ஈ) தனிநபர் ஒருவர்

27) அர்த்தசாஸ்திரம் என்னும் நூலை எழுதியவர் யார்?

அ) கௌடில்யர்
ஆ) சாணக்கியர்
இ) விஷ்ணு குப்தர்
ஈ) All the above🌹

28) அதிபர் அரசாங்க மக்களாட்சி முறைக்கு எடுத்துக்காட்டு?

அ) அமெரிக்க ஐக்கிய நாடுகள், பிரான்ஸ்🌹
ஆ) இந்தியா, இங்கிலாந்து
இ) பிரான்ஸ், இங்கிலாந்து
ஈ) இந்தியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள்

29) மக்களாட்சி____ வகைப்படும்?

அ) 3
ஆ) 4
இ) 2 🌹
ஈ) 5 

30) மக்களாட்சி வகைகள் என்பது____ஐக் குறிக்கிறது?

அ) மக்கள் சமமாகப் பங்குகேற்க அனுமதியளிக்கும் சமூக அமைப்பு
ஆ) மக்கள் சமமாகப் பங்கேற்க அனுமதியளிக்கும் அரசாங்க வகைகள்
இ) இரண்டும் 🌹
ஈ) இரண்டும் அல்ல 

31) நேரடி மக்களாட்சி நாடுகளுக்கு எடுத்துக்காட்டு?

அ) இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா ஐக்கிய நாடுகள்
ஆ) பண்டைய கிரேக்க அரசுகள், சுவிட்சர்லாந்து🌹
இ) அமெரிக்கா ஐக்கிய நாடுகள், சுவிட்சர்லாந்து
ஈ) பண்டைய கிரேக்க அரசுகள், இங்கிலாந்து

 32) மறைமுக மக்களாட்சி (பிரதிநிதித்துவ மக்களாட்சி) நாடுகளுக்கு எடுத்துக்காட்டு?

அ) இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா ஐக்கிய நாடுகள்🌹
ஆ) சுவிட்சர்லாந்து, பண்டைய கிரேக்க அரசுகள்
இ) அமெரிக்க ஐக்கிய நாடுகள், சுவிட்சர்லாந்து
ஈ) பண்டைய கிரேக்க அரசுகள், இங்கிலாந்து 

33) இந்தியாவில் உள்ள நாடாளுமன்ற மக்களாட்சி அரசாங்கத்தின் முக்கிய கூறுகள் என்ன?

அ) கொள்கை முடிவெடுப்பதில் மக்கள் பங்கு பெறுதல்
ஆ) கொள்கை முடிவெடுப்பதில் மக்கள் ஒப்புதல் அளித்தல்
இ) இரண்டும் 🌹
ஈ) இரண்டும் அல்ல

34) உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு எது?

அ) சீனா
ஆ) இந்தியா 🌹
இ) ரஷ்யா
ஈ) அமெரிக்கா

35) இந்தியாவில் மக்களாட்சி எதன் அடிப்படையில் இயங்குகிறது?

அ) இறையாண்மை
ஆ) சமதர்மம், குடியரசு
இ) மக்களாட்சி
ஈ)  மதசார்பின்மை
உ) All the above🌹

36) இந்திய அரசின் தலைவர் யார்?

அ)  பிரதம அமைச்சர் 
ஆ) குடியரசுத் தலைவர்🌹
 இ) உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
 ஈ) துணை குடியரசு தலைவர் 

37) இந்தியாவின் பிரதம அமைச்சர் யாரால் நியமனம் செய்யப்படுகிறார்?

அ)  குடியரசுத் தலைவர்🌹
ஆ) உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி 
இ) துணை குடியரசுத் தலைவர் 
ஈ) தலைமை தேர்தல் ஆணையர் 

38) இந்தியாவில்____ நிலைகளில் மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்து எடுக்கப்படுகின்றனர்?

அ)  நடுவண் அரசு 
ஆ) மாநில அரசு 
இ) உள்ளாட்சி அமைப்புகள் ஈ) இவை அனைத்தும்🌹

39)  நாடாளுமன்றத்தின் மேலவை என்பது?

அ)  ராஜ்யசபா,மக்களவை
ஆ) மாநிலங்களவை, லோக்சபா
இ) மக்களவை ,லோக்சபா ஈ) மாநிலங்களவை,
ராஜ்யசபா🌹

40)  நாடாளுமன்றத்தின் கீழவை என்பது?

அ)  ராஜ்யசபா, மக்களவை ஆ) மாநிலங்களவை,
லோக்சபா
இ) மக்களவை, லோக்சபா🌹 ஈ) மாநிலங்களவை, ராஜ்யசபா

41) நாடாளுமன்றத்தின் மேலவை உறுப்பினர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்?

அ) மக்களால் நேரடியாக ஆ) மறைமுக தேர்தல் மூலம்🌹 இ) இரண்டும் 
ஈ) இரண்டும் அல்ல 


42) மக்களவையில் எத்தனை உறுப்பினர்கள் நேரடியாக குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்படுகின்றனர்?

அ) 10 உறுப்பினர்கள்
ஆ) 2 உறுப்பினர்கள் 🌹
இ) 12 உறுப்பினர்கள்
 ஈ) அவ்வாறு எதுவும் இல்லை 


43) மாநிலங்களவையில் எத்தனை உறுப்பினர்கள் நேரடியாக குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்படுகின்றனர்?
அ) 10 உறுப்பினர்கள் 
ஆ) 2 உறுப்பினர்கள்
இ) 12 உறுப்பினர்கள் 🌹
ஈ) அவ்வாறு எதுவும் இல்லை 

44) இந்தியாவின் நாடாளுமன்ற கட்டிடம் எங்கு உள்ளது?

அ)  புதுடில்லி 🌹
ஆ) கல்கத்தா 
இ) மும்பை 
ஈ) சென்னை 

45) இந்தியாவின் நாடாளுமன்ற கட்டிடம் எப்போது வடிவமைக்கப்பட்டது?

அ) 1910-1911
ஆ) 1912-1913 🌹
இ) 1914-1915
ஈ) 1916-1917

 46) இந்தியாவின் நாடாளுமன்ற கட்டிடம் யாரால் வடிவமைக்கப்பட்டது?

அ)  எட்வின் லுட்டியன்ஸ் ஆ) ஹேர்பர்ட் பேக்கர் 
இ) ஜான் மேத்யூ 
ஈ) 1,2 மட்டும் 🌹

47) ஆபிரகாம் லிங்கன் எந்த நாட்டு அதிபர்?

அ) பிரான்ஸ் 
ஆ) பிரிட்டன் 
இ) ரஷ்யா 
ஈ) அமெரிக்கா🌹

48) இந்திய நாடாளுமன்ற கட்டிடம் எப்போது தொடங்கப்பட்டது ?

அ) 1923
ஆ) 1927
இ) 1921 🌹
ஈ)1925 

49)இந்திய நாடாளுமன்ற கட்டிடம் எப்போது கட்டி முடிக்கப்பட்டது?
அ) 1923 
ஆ) 1927 
இ) 1921 🌹
ஈ) 1925 

50) இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் மக்களவையின் முதல் பொதுத்தேர்தல் எப்போது நடைபெற்றது? 

அ) 1951 அக்டோபர் 25 🌹
ஆ) 1952 பிப்ரவரி 21 
இ) 1951 செப்டம்பர் 25 
ஈ) 1952 மார்ச் 21

51) இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் மக்களவையின் முதல் பொதுத்தேர்தல் எப்போது முடிவுற்றது?

அ) 1951 அக்டோபர் 25 
ஆ) 1952 பிப்ரவரி 21 🌹
இ) 1951 செப்டம்பர் 25
 ஈ) 1952 மார்ச் 21 

52) இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் நடந்த மக்களவையின் முதல் பொதுத்தேர்தலில் எத்தனை இடங்கள் இருந்தன ?

அ) 534 இடங்கள்
ஆ) 449 இடங்கள்
இ)  489 இடங்கள்🌹
ஈ) 514 இடங்கள் 

53) இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் நடந்த மக்களவையின் முதல் பொதுத்தேர்தலில் எத்தனை இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது ?
அ) 358 இடங்கள் 
ஆ) 360 இடங்கள்
இ) 362 இடங்கள்
ஈ) 364 இடங்கள் 🌹

54) இந்திய வரலாற்றின் முதல் பொதுத் தேர்தல் எப்போது நடைபெற்றது? 

அ) 1920 🌹
ஆ) 1935 
இ) 1947 
ஈ) 1950

55) இந்திய வரலாற்றின் முதல் பொதுத் தேர்தல் எதற்காக நடைபெற்றது?

அ) மத்திய சட்ட சபைக்கு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க
ஆ) மாகாண சட்டசபைக்கு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க 
இ) இரண்டும்🌹
 ஈ) இரண்டும் அல்ல

தேர்தல் அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்த குழுக்கள்

1) இந்திய தேர்தல் முறை எந்த நாட்டை பின்பற்றி ஏற்றுக்கொள்ளப்பட்டது?

அ) அமெரிக்கா 
ஆ) சோவியத் யூனியன்
இ) சீனா 
ஈ) இங்கிலாந்து 👍

2) இந்திய அரசியலமைப்பின் எத்தனையாவது சட்ட பிரிவுகள் தேர்தல் விதிமுறைகளை பற்றி கூறுகின்றன?

அ) 348 லிருந்து 354 வரை
ஆ) 324 லிருந்து 329 வரை👍
இ) 335 லிருந்து 342 வரை
ஈ) 367 லிருந்து 371 வரை

 3) இந்திய அரசியலமைப்பின் எத்தனையாவது பகுதியில் தேர்தல் விதிமுறைகள் கூறப்பட்டுள்ளன?

அ) XII பகுதி
ஆ) XIV பகுதி
இ) XV பகுதி👍
ஈ) XIII பகுதி

 4) தேர்தல் ஆணையம் அமைத்திட வழி வகை செய்யும் சட்டப்பிரிவு என்ன?

அ) சட்டப்பிரிவு 324👍
ஆ) சட்டப்பிரிவு 323
இ) சட்டப்பிரிவு 322
ஈ) சட்டப்பிரிவு 321

5) கூற்று 1 :தற்போது தேர்தல் ஆணையமானது ஒரு தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் இரண்டு தேர்தல் ஆணையர்களை உள்ளடக்கியுள்ளது.

கூற்று 2: பாராளுமன்றத் தேர்தல் சம்பந்தமான அனைத்து விவரங்களை பெறுவதற்கான சட்டங்களை நாடாளுமன்றமும் மாநில சட்டசபைத் தேர்தல் சம்பந்தமான அனைத்து விவரங்களை பெறுவதற்கான சட்டங்களை மாநில சட்டசபை அரசியலமைப்பிற்குட்பட்டு இயற்றலாம்.

அ) 2 மட்டும் சரி
ஆ) அனைத்தும் சரி 👍
இ) 1 மட்டும் சரி
ஈ) அனைத்தும் தவறு

6) இந்தியாவில் தேசிய வாக்காளர் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?

அ) ஜனவரி 23 
ஆ) ஜனவரி 24 
இ) ஜனவரி 25 👍
ஈ) ஜனவரி 26 

7) பிரதமர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்?

அ) மாநிலங்களவை
ஆ) ராஜ்யசபா
இ) மக்களவை&லோக்சபா👍

 8) தேசிய அளவில் அரசாங்கத்தின் தலைவர் யார்?

அ) குடியரசுத் தலைவர்
ஆ) முப்படைத் தளபதி
இ) துணை குடியரசுத் தலைவர் 
ஈ) பிரதம அமைச்சர்👍

9) ஒருவர் தாம் செலுத்திய வாக்கு சரியானபடி பதிவாகி உள்ளதா என தெரிந்து கொள்ளும் வாய்ப்பை தேர்தல் ஆணையம் எப்போது அறிமுகப்படுத்தியது?

அ) 2014👍
ஆ) 2015
இ) 2013
ஈ) 2016

10) NOTA எப்போது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது?

அ) 2012
ஆ) 2013
இ) 2014👍
ஈ) 2015

11)  உலகில் NOTA-வை அறிமுகப்படுத்தியதில் இந்தியா எத்தனையாவது நாடு?

அ) 13வது
ஆ) 14வது👍
இ) 15வது
ஈ) 16வது

12) NOTA பற்றிக் கூறும் இந்திய தேர்தல் நடத்தை விதி எண்?

அ) 46-P
ஆ) 47-O
இ) 48-P
ஈ) 49-O👍

13) VVPAT -என்பது _____

அ) அகில இந்திய விவசாயிகள் சங்கம்
ஆ) இந்திய வணிகம்& தொழிற்சாலை சம்மேளத்தின் கூட்டமைப்பு
இ) வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கைச் சோதனை 👍
ஈ) அகில இந்திய மாணவர் சம்மேளனம்

14) NOTA- இதன் விரிவாக்கம் என்ன?

அ) No one of the above
ஆ) Not of the above
இ) Nothing of the above
ஈ) None of the above👍

15) இந்தியாவில் எத்தனை வகையான தேர்தல்கள் நடைபெறுகின்றன?

அ) 2 👍
ஆ) 3 
இ) 4 
ஈ) 5

16) பின்வருவனவற்றுள் எதில் நேரடித் தேர்தல் முறை பின்பற்றப்படுகிறது?

அ) MP-க்களை தேர்ந்தெடுத்தல்👍
ஆ) MLA-க்களை தேர்ந்தெடுத்தல் 👍
இ) குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுத்தல்
ஈ)  ஆளுநரை தேர்ந்தெடுத்தல்

17)_____ தேர்தல் முறை வலுவான மக்களாட்சி கொண்டதாக கருதப்படுகிறது?

அ) மறைமுக தேர்தல் 
ஆ) நேரடித் தேர்தல்👍
இ) இரண்டும்
ஈ) இரண்டும் அல்ல

18) குடியரசுத் தலைவர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்?

அ) மறைமுக தேர்தல்👍
ஆ) நேரடி தேர்தல் 
இ) இரண்டும்
ஈ) இரண்டும் அல்ல 

19) தேர்தல் முறை அதிக செலவு கொண்டதாக உள்ளது ? 

அ) மறைமுக தேர்தல்
ஆ) நேரடி தேர்தல் 👍

20)சரியா? தவறா?

பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் மற்றும் சட்டமன்றங்களில் நியமிக்கப்படும் நியமன உறுப்பினர்கள் தேர்தல் குழாம் குழுவில் இடம் பெறுவர் .

அ) சரி
ஆ) தவறு👍

21) தேர்தல் குழாம் என்பதை யாரை தேர்ந்தெடுக்கும் குழு?

அ) பிரதம அமைச்சர் 
ஆ) துணை குடியரசுத் தலைவர் 
இ) மாநில ஆளுநர் 
ஈ) குடியரசுத் தலைவர் 👍

22)  அரசியல் கட்சியின் அங்கங்கள் எவை?

அ) தலைவர் 
ஆ) தொண்டர்கள் 
இ) செயற்குழு உறுப்பினர்கள் 
ஈ) இவர்கள் அனைத்தும்👍

23)  உலகில் கட்சி முறையினை எத்தனை வகைப் படுத்தலாம்?

அ) இரண்டு
ஆ) மூன்று 👍
இ) நான்கு 
ஈ) ஐந்து

24) ஒரு அரசியல் கட்சி தேசிய கட்சி தகுதியை பெற எத்தனை மாநிலங்களில் மாநில கட்சி என்ற தகுதியை பெற்றிருக்க வேண்டும் ?

அ) இரண்டு 
ஆ) மூன்று 
இ) நான்கு 
ஈ) ஐந்து 👍

25) ஒரு கட்சி முறைக்கு எடுத்துக்காட்டு____

அ) USA, இங்கிலாந்து 
ஆ) இந்தியா ,இலங்கை 
இ) பிரான்ஸ் ,இத்தாலி
 ஈ) சீனா, கியூபா👍

 26) முன்னாள் சோவியத் யூனியன் எதற்கு எடுத்துக்காட்டு ?
 
அ) ஒரு கட்சி முறை 👍
ஆ) இரு கட்சிமுறை 
இ) பல கட்சி முறை 
ஈ) இவை அனைத்தும்

27) இரு கட்சி முறைக்கு எடுத்துக்காட்டு___ 

அ) USA,இங்கிலாந்து 👍
ஆ) இந்தியா ,இலங்கை 
இ) பிரான்ஸ், இத்தாலி 
ஈ) சீனா, கியூபா 


28) பல கட்சி முறைக்கு எடுத்துக்காட்டு__

அ) USA ,இங்கிலாந்து 
ஆ) இந்தியா ,இலங்கை 👍
இ) பிரான்ஸ், இத்தாலி👍
 ஈ) சீனா, கியூபா 

29) 2017ஆம் ஆண்டு நிலவரப்படி அங்கீகரிக்கப்பட்டுள்ள தேசிய கட்சிகளின் எண்ணிக்கை?

அ) 5
ஆ) 6
இ) 7👍
ஈ) 8 

30) பிராந்திய கட்சிகள் என அழைக்கப்படுபவை எவை? 

அ) தேசிய கட்சிகள் 
ஆ) மாநில கட்சிகள் 👍
இ) இரண்டும் 
ஈ) இரண்டும் அல்ல 

31) தேசிய கட்சி எனும் தகுதி பெற மக்களவைத் தேர்தலிலோ அல்லது மாநில சட்டசபைத் தேர்தலிலோ குறைந்தபட்சம் நான்கு மாநிலங்களில் பதிவான செல்லத்தகுந்த வாக்குகளில் குறைந்தபட்சம் எத்தனை சதவீத வாக்குகளை பெற்றிருக்க வேண்டும்?

அ) 8% 
ஆ) 7% 
இ) 6% 👍
ஈ) 5% 

32) தேசிய கட்சி எனும் தகுதி பெற மக்களவையில் குறைந்தபட்சம் எத்தனை சதவீத இடங்களில் வெற்றி பெற வேண்டும் ?

அ) 2%
ஆ) 3%👍
இ) 4%
ஈ) 5%

33) அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இடையில் ஒரு பாலமாக__ன் செயல்பாடுகள் இருக்கின்றன? 

அ) அரசியல்வாதிகள் 
ஆ) தேர்தல் ஆணையம் 
இ) பொதுத் தேர்தல் 
ஈ) அரசியல் கட்சிகள்👍

34) பொதுக்கணக்கு குழுவின் தலைவராக ___இவர் மக்கள் நலனுக்காக செலவிடப்படும் 
பொதுப்பணத்தை ஆய்வு செய்கிறார் ?

அ)எதிர்க்கட்சித் தலைவர்👍 ஆ) சபாநாயகர்
 இ) ஆளுநர்
 ஈ) முதலமைச்சர் 

35)அழுத்த குழுக்கள் எனும் சொல் எங்கு உருவாக்கப்பட்டது?

அ) இந்தியா
ஆ)  இங்கிலாந்து
இ)  அமெரிக்கா👍
 ஈ) அயர்லாந்து


36) அழுத்த குழுக்கள்___ என்றும் அழைக்கப்படுகின்றன?

அ) நலகுழுக்கள் 
ஆ) தனிப்பட்ட நல குழுக்கள் இ) இரண்டும்
 ஈ) இரண்டும் அல்ல 👍

37) கூற்று1: பொது நலன்களை பாதுகாக்கவும் ஊக்குவிக்கவும் தீவிரமாக செயல்படும் குழு அழுத்தக்குழு எனப்படுகிறது.

 கூற்று2: மேலும் அடுத்த குழுக்கள் தேர்தலில் போட்டியிடுகின்றன.

அ) 1மட்டும் சரி👍
ஆ)  அனைத்தும் சரி 
இ)  2 மட்டும் சரி 
ஈ)அனைத்தும் தவறு

38)கூற்று 1:எதிர்க்கட்சித் தலைவர் கேபினட் அமைச்சர் எனும் தகுதியைப் பெறுகிறார்.

கூற்று 2:மேலும் அவர் மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் தலைவரையும் உறுப்பினர்களையும் தேர்ந்து எடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறார் .

அ) 1 மட்டும் சரி
ஆ) அனைத்தும் சரி 👍
இ) 2 மட்டும் சரி 
ஈ) அனைத்தும் தவறு

39) பொருத்துக.

அ) FICCI - இந்திய வணிகம்& தொழிற்சாலை சம்மேளத்தின் கூட்டமைப்பு

ஆ) AITUC-அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் 

இ) AIKS- அகில இந்திய விவசாயிகள் சங்கம் 

ஈ) IMA-இந்திய மருத்துவ சங்கம் 

40) AISF என்பது__ 

அ) தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் 
ஆ) இளம் பதாகா சங்கம்
இ)நர்மதா பச்சாவோ அந்தோலன்
ஈ) அகில இந்திய மாணவர் சம்மேளனம்👍

41) YBA என்பது ___

அ) தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்
ஆ)  இளம் பதாகா சங்கம்👍 இ) நர்மதா பச்சாவோ அந்தோலன்
ஈ) அகில இந்திய மாணவர் சம்மேளனம் 

42) தமிழகத்தில் யார் காலத்தில் குடவோலை முறை வழக்கத்தில் 
இருந்தது ?

அ) சேரர்கள் 
ஆ) சோழர்கள் 👍
இ) பாண்டியர்கள்
 ஈ) பல்லவர்கள்



Previous article
Next article

1 Comments

Ads Post 4

DEMOS BUY