Ads Right Header

ஒன்பதாம் வகுப்பு தமிழ் இயல் 9.


1 ) தஞ்சாவூரில் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற ஆண்டு?

A) 1970
B) 1981
C) 1995👍
D) 1968 

2 ) " இம்மை செய்தது மறுமைக்கு ஆமெனும் அறவிலை வணிகன் ஆய் அலன் " எனும் பாடல் வரி இடம் பெற்ற நூல் எது ? 
A ) புறநானூறு 👍
B ) அகநானூறு 
C ) பரிபாடல் 
D ) திருக்குறள் 

3 ) " தமிழ் பண்பாடு " -என்னும் இதழைத் தொடங்கியவர் யார் ? 
A ) ஆலந்தூர் கிழார்
B ) தனிநாயகம் அடிகள் 👍
C ) ராமகிருஷ்ணன் 
D ) ஜெயமோகன் 

4 ) " ஒரு சிறு இ " என்னும் தொகுப்பிற்காக சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்ட ஆண்டு?
A) 2010
B) 2014
C) 2016👍
D) 2018

5 ) " நசை பெரிது உடையர் நல்கலும் நல்குவர் பிடிபசி களைஇய பெருங்கை வேழம் " -என்னும் பாடல் வரி இடம் பெற்ற நூல் எது ? 
A ) புறநானூறு 
B ) நற்றிணை 
C ) குறுந்தொகை 👍
D ) அகநானூறு

6 ) " வேழம் " -என்னும் சொல்லின் 
பொருள் யாது ? 
A ) விருப்பம் 
B ) பெண் யானை 
C ) அரசன் 
D ) ஆண் யானை 👍

7 ) தவறாக பொருந்தியுள்ளது எது ? 
A ) நசை- விருப்பம் 
B ) நல்கல் - வாங்குதல் 👍
C ) பொளிக்கும் - உரிக்கும் 
D ) யா - ஒருவகை மரம் 

8 ) சரியாக பொருந்தியுள்ளது எது ? 
A ) நல்கலும் நல்குவர் எச்சவும்மை 👍
B ) களைஇய -இன்னிசை அளபடை 
C ) அனைவருக்கும் எண்ணும்மை 
D ) சரிந்து -பெயரெச்சம் 

9 ) சு . சமுத்திரத்தின் சாகித்திய அகாடமி விருது பெற்ற நூல் எது ? 
A ) வாடாமல்லி 
B ) வேரில் பழுத்த பலா 👍
C ) குற்றம் பார்க்கில் 
D ) பாலைப்புறா 

10 ) " இனிய உளவாக இன்னாத கூறல் ... " - என்னும் குறளில் எவ்வணி பயின்று வந்துள்ளது ? 
A ) உவமை அணி 👍
B ) உருவக அணி 
C ) எடுத்துக்காட்டு உவமையணி 
D ) சொற்பொருள் பின்வருநிலையணி 

11 ) " யா " மரம் என்பது எந்நிலத்தில் வளரும் ? 
A ) குறிஞ்சி 
B ) மருதம் 
C ) பாலை 👍
D ) நெய்தல் 

12 ) " எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம்முயிர் போல் எண்ணி " -என்னும் பாடல் வரியின்ஆசிரியர் யார் ? 
A ) பாரதியார் 
B ) பாரதிதாசன் 
C ) வள்ளலார்👍
D ) தனிநாயகம் அடிகள்

13 )  அகமும் புறமும்
அ) கடிதத்தொகுப்பு 
ஆ) கட்டுரைத் தொகுப்பு👍
இ) சிறுகதைத் தொகுப்பு
ஈ) கவிதைத் தொகுப்பு

14 ) " சிற்பியின் மகள் " - என்னும் நூலின் ஆசிரியர் யார் ? 
A ) முகமது செரிபூ 
B ) பூவண்ணன் 👍
C ) சி.மணி 
D ) தனிநாயகம் அடிகள் 

15 ) குறுந்தொகை முதன்முதலாக பதிப்பிக்கப்பட்ட ஆண்டு ? 
A ) 1912 
B ) 1914 
C ) 1911 
D ) 1915 👍

16 ) " பிடிபசி " - என்னும் சொல்லின் இலக்கண குறிப்பு யாது ? 
A ) பண்புத்தொகை 
B ) வினைத்தொகை 
c ) ஆறாம் வேற்றுமைத்தொகை 👍
D ) நான்காம் வேற்றுமைத்தொகை 

17 ) சு . சமுத்திரத்தின் தமிழக அரசின் விருது பெற்ற நூல் எது ? 
A ) வேரில் பழுத்த பலா 
B ) குற்றம் பார்க்கில் 👍
C ) வாடாமல்லி 
D ) பாலைப்புறா

18 ) குறுந்தொகையை முதன் முதலில் பதிப்பித்தவர் யார் ? 
A ) உ.வே.சா 
B ) சௌரிப்பெருமாள் 👍
C ) தனிநாயகம் அடிகள் 
D ) ஆறுமுகநாவலர்

19 ) சு . சமுத்திரம் எம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ? 
A ) தூத்துக்குடி 
B ) கன்னியாகுமரி 
C ) திருநெல்வேலி👍
D ) தென்காசி

20 ) கடவுள் வாழ்த்து நீங்கலாக குறுந்தொகையில் அமைந்த பாடல்களின் எண்ணிக்கை?
A ) 401 👍
B ) 400 
C ) 402 
D ) 404 

21 ) " குறிக்கோள் இல்லாதவன் வெறும் சதைப்பிண்டம் " - என்று கூறியவர்? 
A ) கூடலூர்கிழார் 
B ) ஆலந்தூர் கிழார் 👍
C ) ஆலந்தூர் மோகனரங்கன் 
D ) கபிலர் 

22 ) " sapens " - என்பதன் பொருள் யாது ? 
A ) அறிவற்றவன் 
B ) புத்தியில்லாதவன் 
C ) முட்டாள் 
D ) அறிவுடையோன் 👍

23 ) " உள்ளற்க உள்ளம் சிறுகுவ " - 
என்று கூறும் நூல் ? 
A ) நாலடியார் 
B ) திருக்குறள் 👍
c ) பழமொழி நானூறு 
D ) புறநானூறு 

24 ) கல்யாண்ஜியின் புனைப்பெயர் யாது 
A ) வாணிதாசன் 
B) வண்ணதாசன்👍
C ) ரேவதி 
D) கவிதாசன்

25 ) சில இறகுகள் சில பறவைகள்
அ) கடிதத்தொகுப்பு 👍
ஆ) கட்டுரைத் தொகுப்பு
இ) சிறுகதைத் தொகுப்பு
ஈ) கவிதைத் தொகுப்பு

26 ) குறுந்தொகையின் 
அடிவரையறை என்ன ? 
A ) 4-8   👍
B ) 3-6 
C ) 4-41
D ) 9-12

27 ) " பாலை பாடிய பெருங்கடுங்கோ " -
எம் மரபைச் சேர்ந்த மன்னர் ? 
A ) சேர 👍
B ) சோழ 
C ) பாண்டிய 
D ) வேளிர் 

28 ) சு.சமுத்திரம் எழுதாத நூல் எது ? 
A ) மண் சுமை 
B ) தலைப்பாகை 
C ) காகித உறவு 
D ) வாடிவாசல் 👍

29 ) வண்ணதாசனின் கட்டுரைத் தொகுப்பு எது ? 
A ) அகமும் புறமும் 👍
B ) புலரி 
C ) முன்பின் 
D ) ஆதி 

30 ) முதலாவது உலகத் தமிழ் மாநாடு நடத்தப்பட்ட ஆண்டு ? 
A ) 1965 
B ) 1966 👍
C ) 1967 
D ) 1968 

31 ) " படுதிரை வையம் பாத்திய பண்பே " - எனும் பாடல் வரி இடம் பெற்ற நூல்?
A ) புறநானூறு 
B ) பரிபாடல் 
C ) அகநானூறு 
D ) தொல்காப்பியம் 👍

32 ) உலகத் தமிழ் மாநாடு இருமுறை எந்நகரில் நடத்தப்பட்டுள்ளது ? 
A ) மதுரை 
B ) யாழ்ப்பாணம் 
C ) கோலாலம்பூர் 👍
D ) சென்னை 

33 ) " உயரப் பறத்தல் " -என்னும் சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர் யார் ? A ) ந.பிச்சமூர்த்தி  
B ) வண்ணதாசன் 👍
C ) தனிநாயகம் அடிகள் 
D ) பாரதியார்

34 ) கலித்தொகையில் பாலைத் திணையைப் பாடியவர் யார் ? 
A ) கபிலர் 
B ) அம்மூவனார் 
C ) நல்லத்துவனார் 
D ) பெருங்கடுங்கோ 👍

35 ) " எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்கு " என்னும் குறளில் எவ்வணி பயின்று வந்துள்ளது ? 
A ) சொற்பொருள் பின்வருநிலையணி👍 
B ) வஞ்சப்புகழ்ச்சி அணி 
C ) பொருள் பின்வருநிலையணி 
D ) சொல் பின்வருநிலையணி

36) இமயத்துக் கோடு உயர்ந்தன்ன – இவ்வடியில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள் யாது?
அ) கொம்பு
ஆ) மலையுச்சி👍
இ) சங்கு
ஈ) மேடு

37) “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று பாடியவர் யார்?
அ) கபிலர்
ஆ) வள்ளுவர்
இ) கணியன் பூங்குன்றனார்👍
ஈ) ஔவையார்

38) நான் மனிதன்; மனிதனைச் சார்ந்த எதுவும் எனக்குப் புறமன்று – என்ற கூற்றை கூறியவர்
அ) ஹாக்கின்ஸ்
ஆ) ரஷல்லி
இ) வேட்ஸ்வொர்த்
ஈ) தெறென்ஸ்👍

39) முதிர்ந்த ஆளுமைக்கான இலக்கணம் கூறியவர் யார்?
அ) ஹாக்கின்ஸ்
ஆ) கோர்டன் ஆல்போர்ட்👍
இ) தெறென்ஸ்
ஈ) ஷெல்லி

40) “பூட்கையில்லோன் யாக்கை போல” இத்தொடரில் ‘பூட்கை’ என்பதன் பொருள் யாது?
அ) எல்லை
ஆ) வாழ்க்கை
இ) நட்பு
ஈ) குறிக்கோள்👍

41) தேவ ரனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுகலான் – இக்குறட்பாவில் வரும் அணி ……..
அ) உருவகம்
ஆ) உவமை
இ) வஞ்சப்புகழ்ச்சி👍
ஈ) தற்குறிப்பேற்றம்


42) ஒழுக்கவியலை நன்கறிந்து எழுதிய உலகமேதை யார்?
அ) ஆல்பர்ட் சுவைட்சர்👍
ஆ)கோர்டன் ஆல்போர்ட்
இ) தெறென்ஸ்
ஈ) ஹாக்கின்ஸ்

43) கங்கையையும், இமயத்தில் பெய்யும் மழையையும் உவமைகளாக எடுத்துக் கூறும் நூல் எது?
அ) அகநானூறு
ஆ) புறநானூறு👍
இ) கலித்தொகை
ஈ) பரிபாடல்

44) தனிநாயக அடிகள் தொடங்கி நடத்திய இதழ் எது?
அ) தென்றல்
ஆ) குயில்
இ) தமிழ்ப்பண்பாடு👍
ஈ) தமிழ்க்கலச்சாரம்

45) உலகத்தமிழாய்வு மன்றம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் உருவாகக் காரணமாக இருந்தவர் யார்?
அ) அமுதன் அடிகள்
ஆ) குன்றக்குடிகள் அடிகள்
இ) தனிநாயக அடிகள்👍
ஈ) ஞானியாரடிகள்

46) மார்க்ஸ் அரேலியஸ் என்பவர் ……………….
அ) தத்துவஞானி
ஆ) பேரரசர்👍
இ) விஞ்ஞானி
ஈ) கவிஞர்

47) செனக்கா என்பவர் ……………….
அ) தத்துவஞானி👍
ஆ) பேரரசர்
இ) விஞ்ஞானி
ஈ) கவிஞர்

48) கேடில்விழுச் செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை – இக்குறளில் பயின்று வந்துள்ள அணி?
அ) சொல் பின்வருநிலையணி
ஆ) பொருள் பின்வருநிலையணி👍
இ) சொற்பொருள் பின்வருநிலையணி
ஈ) வஞ்சப் புகழ்ச்சியணி




















Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY