TNPSC TAMIL
7 ) யசோதரன் எந்நாட்டு மன்னன்?
14 ) மொழி என்பது போராட்டத்திற்குரிய ஒரு ……………… ஆகும்.
20 ) யசோதர காவியம் எத்தனை சருக்கங்களைக் கொண்டது ?
ஒன்பதாம் வகுப்பு தமிழ் இயல் -8
1 ) ஈ.வெ.ரா வுக்கு பெரியார் என்னும் பட்டம் எப்போது வழங்கப்பட்டது ?
A ) நவம்பர் 13,1944
B ) டிசம்பர் 3,1940
C ) நவம்பர் 2,1939
D ) நவம்பர் 13,1938 👍
2 ) பெரியார் சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்த ஆண்டு ?
A ) 1920
B ) 1924
C ) 1925 👍
D ) 1923
3 ) " தொண்டு செய்து பழுத்த பழம் தூய தாடி மார்பில் விழும் மண்டை சுரப்பை உலகு தொழும் " என பெரியாரை பற்றிப் பாடியவர் யார் ?
A ) அண்ணா
B ) மூ.வ
C ) பாரதிதாசன் 👍
D ) வல்லிக்கண்ணன்
4 ) உருவகம் அல்லாதது எது ?
A ) பிறவிஇருள்
B ) ஒளியமுது
C ) வாழ்க்கைப்போர்
D ) நிகழ்காலம் 👍
5 ) " லையன்ஸீக்கு பலி " - என்பது யாருடைய முதல் சிறுகதை ?
A ) வல்லிக்கண்ணன்
B ) பாரதிதாசன்
C ) கவிமணி
D ) ந.பிச்சமூர்த்தி 👍
6 ) " ஆக்குவது ஏனெல் அறத்தை
ஆக்குக போக்குவது ஏதெனில் வெகுளி போக்குக " - என்னும் பாடல் வரி இடம் பெற்ற நூல் எது ?
A ) திருக்குறள்
B ) நன்னூல்
C ) யசோதரகாவியம் 👍
D ) முத்தொள்ளாயிரம்
7 ) யசோதரன் எந்நாட்டு மன்னன்?
அ) மாளவம்
ஆ) மகதம்
இ) கலிங்கம்
ஈ) அவந்தி👍
8 ) யாப்பிலக்கண அடிப்படையில் சொற்கள் எத்தனை?
A ) 2
B ) 3 👍
C ) 4
D ) 5
9 ) தவறாக பொருந்தியுள்ளது எது ?
A ) இரண்டு சீர்- குறளடி
B ) மூன்று சீர் - சிந்தடி
C ) நான்கு சீர்- அளவடி
D ) ஐந்து சீர்- கழிநெடிலடி 👍
10 ) தளை எத்தனை வகைப்படும் ?
A ) 2
B ) 7 👍
C ) 8
D ) 10
11 ) " திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து அறனல்ல செய்யாமை நன்று " - என்னும் குறளில் எத்தொடை இடம்பெற்றுள்ளது ?
A ) எதுகை தொடை 👍
B ) மோனை தொடை ,
C ) இயைபுத் தொடை
D ) செந்தொடை
12 ) " திங்கள்முடி சூடுமலை
தென்றல் விளையாடுமலை " - என்று பாடியவர் யார் ?
A ) பாரதிதாசன்
B ) தாயுமானவர்
C ) குமரகுருபரர் 👍
D ) புலவர் குழந்தை
13 ) பொருந்தாதது எது ?
A ) புத்துலக தொலைநோக்காளர்
B ) வைக்கம் வீரர்
C ) பெண்ணிணப் போர் முரசு
D ) சுத்ததியாகி👍
14 ) மொழி என்பது போராட்டத்திற்குரிய ஒரு ……………… ஆகும்.
அ) போர்க்கருவி👍
ஆ) வாயில்
இ) துணை
ஈ) இணை
15 ) பெரியார் விதைத்த எவை ?
1 ) பெண்களுக்கான இட ஒதுக்கீடு
2 ) பெண்களுக்கான சொத்துரிமை
3 ) கலப்பு திருமணம்
4 ) தமிழில் தெய்வ வழிபாடு
A ) 1,2,4
B ) 2,4
C ) 1,2,3,4👍
D ) 1,4
16 ) பெரியார் எதை எதிர்க்கவில்லை ?
A ) இந்தி திணிப்பு
B ) குலக்கல்வித் திட்டம்
C ) கள்ளுக்கடை மூடல் 👍
D ) மணக்கொடை
17 ) கூற்று ( 1 ) : - பெண்விடுதலையை விட நாட்டு விடுதலை தான் முதன்மையானது என்று பெரியார் கூறினார் .
( 2 ) : - குடும்பச் சொத்தில் மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கு வழங்கப் பட வேண்டும் என பெரியார் வலியுறுத்தினார் .
A ) கூற்று 1 சரி , 2 தவறு
B ) கூற்று 1 தவறு 2 சரி
C ) கூற்று 1,2 சரி
D ) கூற்று 1,2 தவறு👍
18 ) பெரியார் நடத்தாத இதழ்?
A ) குடியரசு
B ) இந்தியா👍
C ) உண்மை
D ) ரிவோல்ட்
19 ) ரவி பொருள் கூறுக.
அ) ஆணின் பெயர்
ஆ) கதிரவன் 👍
இ) சினம்
ஈ) நற்செயல்
20 ) யசோதர காவியம் எத்தனை சருக்கங்களைக் கொண்டது ?
A ) 5 👍
B ) 3
C ) 2
D ) 4
21 ) " இணைகின்றன " -என்பதை பகுபத உறுப்பிலக்கணம் படி பிரித்து எழுதுக ?
A ) இணை + கிறு + அன் + அ
B ) இணை + கின்று + அன் + அ 👍
C ) இணை + கின்று + அன
D ) இணை + கிறு + அன
22 ) " இயற்கையையும் வாழ்க்கை அனுபவங்களையும் இணை நல்வாழ்க்கைக்கான மெய்யியல் உண்மைகளைக் காணும் முயற்சிகளே பிச்சமூர்த்தியின் கவிதைகள் " - என எழுதியவர் யார் ?
A ) பாரதிதாசன்
B ) மூ.வ
C ) சி.மணி
D ) வல்லிக்கண்ணன் 👍
23 ) கலைமகள் இதழ் வழங்கிய பரிசை ந.பிச்சமூர்த்தி பெற்ற ஆண்டு ……………
அ) 1932👍
ஆ) 1933
இ) 1934
ஈ) 1935
24 ) " வாயிலும் சன்னலும் " -என்பதன் இலக்கணக்குறிப்பு யாது ?
A ) உம்மைத்தொகை
B ) எண்ணும்மை 👍
C ) அடுக்குத்தொடர்
D ) இருபெயரொட்டுப் பண்புத்தொகை
25 ) யசோதரகாவியம் எம் மொழி நூலைத் தழுவி எழுதப்பட்டது ?
A ) தெலுங்கு
B ) பாலி
c ) வடமொழி👍
D ) பிராகிருதம்
D ) பிராகிருதம்
26 ) யசோதர காவியம் என்னும் நூலின் ஆசிரியர் யார் ?
A ) யசோதரன்
B ) நல்லத்துவனார்
c ) பெருவாயின் முள்ளியார்
D ) ஆசிரியர் பெயர் தெரியவில்லை👍
27 ) " தம் மக்கள் மெய் தீண்டல் உயிருக்கு இன்பம் " எனக் கூறியவர் யார் ?
A ) ஔவையார்
B ) பாரதியார்
c ) பெரியார்
D ) திருவள்ளுவர் 👍
28 ) பிச்சை, ரேவதி என்ற புனைபெயர்களில் படைப்புகளை எழுதியவர் யார்?
அ) கண்ண தாசன்
ஆ) மீரா
இ) தாராபாரதி
ஈ) ந.பிச்சமூர்த்தி👍
29 ) அசை - எத்தனை வகைப்படும் ?
A ) 3
B ) 4
C ) 2 👍
D ) 5
30 ) தொடை எத்தனை வகைப்படும்?
A ) 7
B ) 8 👍 www.tnkural.com
C ) 5
D ) 6
31) புதுக்கவிதையின் தந்தை எனப் போற்றப்படுபவர் யார்?
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) மீரா
ஈ) ந.பிச்சமூர்த்தி👍
32) யாப்புப்பிடியில் இருந்து விடுபட்டவையே …………… ஆகும்.
அ) மரபுக் கவிதை
ஆ) சங்கப் பாடல்
இ) காப்பியம்
ஈ) புதுக்கவிதை👍
33) “புதுக்கவிதைகள் தோற்றமும் வளர்ச்சியும்” என்னும் நூலை எழுதியவர் ……………
அ) நெல்லைக்கண்ணன்
ஆ)வல்லிக்கண்ணன்👍
இ) ஈரோடு தமிழன்பன்
ஈ) ந. பிச்சமூர்த்தி
34) யசோதர காவியத்தின் சருக்கங்கள் எத்தனை?
அ) ஐந்து👍
ஆ) மூன்று
இ) நான்கு
ஈ) ஆறு
35) ‘ஆக்குவது ஏதெனில் அறத்தை ஆக்கு’ என்று குறிப்பிடும் இலக்கியம்
அ) கலித்தொகை
ஆ) யரோதர காவியம்👍
இ) நன்னூல்
ஈ) புறநானூறு
36) யசோதர காவியம் ………….. நூல்களில் ஒன்று.
அ) எட்டுத்தொகை
ஆ) பத்துப்பாட்டு
இ) ஐம்பெருங்காப்பியம்
ஈ) ஐஞ்சிறுகாப்பியம்👍
37) ஐஞ்சிறு காப்பியங்களில் தவறானது?
அ) நீலகேசி
ஆ) உதயண குமார காவியம்
இ) சூளாமணி
ஈ) திருக்குறள்👍
38) நேர்/நேர்/நிரை
அ) கருவிளங்காய்
ஆ) கூவிளம்
இ) தேமாங்காய்
ஈ) தேமாங்கனி👍
39) வயம் – பொருந்தாத ஒன்றை தேர்க
அ) வலிமை
ஆ) வெற்றி
இ) வேட்கை
ஈ) வெள்ளம்👍
40) ஓதம் – சரியான ஒன்றை தேர்க
அ) குதிரை
ஆ) ஆடு
இ) ஈரம்👍
ஈ) முயல்
41) காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது – இக்குறளின் ஈற்றுச் சீரின் வாய்பாடு யாது?
அ) நாள்
ஆ) மலர்
இ) காசு
ஈ) பிறப்பு👍
42) மரபுக் கவிதை இயற்றும் முறைகளைக் கூறும் இலக்கணம் எது?
அ) சொல்
ஆ) பொருள்
இ) யாப்பு👍
ஈ) அணி
43) சீர் எத்தனை வகைப்படும்?
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) நான்கு👍
ஈ) ஐந்து
44) காய்ச்சீர்களை ………….. என்று அழைக்கிறோம்.
அ) கலித்தளை
ஆ) இயற்சீர்கள்
இ) வெண்சீர்கள்👍
ஈ) ஒன்றிய வஞ்சித்தளை
45) தொடை என்பதன் பொருள் யாது?
அ) எடுத்தல்
ஆ) தொடுத்தல்👍
இ) முடித்தல்
ஈ) எழுதுதல்
46) காய் முன் நிரை வருவது ………
அ) கலித்தளை👍
ஆ) இயற்சீர் வெண்டளை
இ) வெண்சீர் வெண்டளை
ஈ) ஒன்றிய வஞ்சித்தளை
47) ஆறுசீர் அல்லது அதற்கு மேற்பட்ட சீர்களைக் கொண்டது ……
அ) அளவடி
ஆ) நெடிலடி
இ) கழிநெடிலடி👍
ஈ) சிந்தடி
48) ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல் – இவ்வடிகளில் இடம்பெற்ற தொடை நயங்கள் …………….
அ) எதுகை, மேனை👍
ஆ) அளபெடை, இரட்டை
இ) இயைபு, முரண்
ஈ) அந்தாதி, செந்தொடை
49) திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
அறனல்ல செய்யாமை நன்று – இவ்வடிகளில் இடம்பெற்ற தொடை நயம் …………
அ) எதுகை👍
ஆ) மோனை
இ) இயைபு
ஈ) அந்தாதி
50) லாவோட்சின் சிந்தனை …………. எனப்படும்.
அ) லாவோட்சின் பக்கம்
ஆ) தாகாவியம்
இ) தாவோவியம்👍
ஈ) லாவோட்சும் சினமும்
Previous article
Next article
Leave Comments
Post a Comment