TNPSC TAMIL
வினாக்கள் - 50 + 50 - பதினோறாம் வகுப்பு தமிழ் முழுவதும்!
(100 வினாக்கள்)
1) தமிழர் பாரம்பரிய நாள்?
அ) ஜனவரி 15
ஆ) ஏப்ரல் 14
இ) ஜனவரி 14
ஈ) ஏப்ரல் 15
2) வடக்கு வீதி என்ற சிறுகதைத் தொகுப்பு இலங்கை அரசின் சாகித்திய அகாதமி விருது பெற்ற ஆண்டு?
அ) 1995
ஆ) 1996
இ) 1998
ஈ) 1999
3) மொழி முதல் எழுத்துக்களின் எண்ணிக்கை?
அ) 12
ஆ) 22
இ) 15
ஈ) 19
3) பாயிரம் இல்லது___ அன்றே?
அ) காவியம்
ஆ) பனுவல்
இ) பாடல்
ஈ) கவிதை
5) மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார் எந்த மாவட்டத்தில் பிறந்தார்?
அ) மதுரை
ஆ) தஞ்சை
இ) திருச்சி
ஈ) திருநெல்வேலி
6) புல்லின் இதழ்கள் என்ற நூலை எழுதியவர் யார்?
அ) வால்ட் விட்மன்
ஆ) ஸ்டோஃபான் மல்லார்மே
இ) பாப்லோ நெரூடா
ஈ) எர்னஸ்ட் காசிரர்
7) வெளிச்சம், நுண்கலை முதலிய இதழ்களை நடத்தியவர்?
அ) சு. வில்வரத்தினம்
ஆ) கா. சிவதம்பி
இ) அரவிந்தன்
ஈ) இந்திரன்
8) சந்திரபிரபா_____-வது தீர்த்தங்கரர்?
அ) 6
ஆ) 7
இ) 8
ஈ) 9
9) புனைந்துரை என்பது?
அ) நூலுக்கு முகம் போன்றது
ஆ) நூலின் பெருமை முதலியவை விளங்க அலங்கரித்துச் சொல்வது
இ) நூலில் சொல்லிய பொருள் அல்லாதவற்றை நூலின் புறத்திலே சொல்வது
ஈ) நூலுக்கு முன் சொல்லப்படுவது
10) கூற்று 1: நன்னூல், தொல்காப்பியத்தை முதல் நூலாகக் கொண்ட வழிநூல்.
கூற்று 2 :இது கி.பி. 13ம் நூற்றாண்டில் பவணந்தி முனிவரால் எழுதப்பட்ட இலக்கண நூல்
அ) கூற்று 1 சரி,2 தவறு
ஆ) கூற்று 1 தவறு, 2 சரி
இ) கூற்று 1,2 சரி
ஈ) கூற்று 1,2 தவறு
11) மசானபு ஃபுகோகா எந்த ஆண்டு ஒற்றை வைக்கோல் புரட்சி என்ற நூலை எழுதினார்?
அ) 1978
ஆ) 1976
இ) 1982
ஈ) 1984
12) "மண்ணின் மார்பு
சுரந்த காலமது
வெட்டுண்டன மரங்கள்
வான் பொய்த்தது
மருகியது மண்"- என்ற வரிகள் இடம் பெற்றுள்ள நூலை எழுதியவர் யார்?
அ) பெரியவன் கவிராயர்
ஆ) அழகிய பெரியவன்
இ) அரவிந்தன்
ஈ) இந்திரன்
13) திருமலை முருகன் பள்ளு கூறும் நெல் வகைகள்?
அ) 10
ஆ) 8
இ) 19
ஈ) 14
14) பேயனார் எழுதிய பாடல்களில் கிடைக்கப் பெற்றவை?
அ) 101
ஆ) 100
இ) 103
ஈ) 105
15) 'காட்டின் மூலவர்' என்றழைக்கப்படுவது?
அ) சிங்கம்
ஆ) யானை
இ) புலி
ஈ) கரடி
16) டாக்டர். கிருஷ்ணமூர்த்தி, வேணு மேனன் ஏலிஸ் விருதினை பெற்ற ஆண்டு?
அ) 1997
ஆ) 1999
இ) 1998
ஈ) 2000
17) தமிழிசை இயக்கத்தின் தந்தை?
அ) ஆபிரகாம் பண்டிதர்
ஆ) ஆர்.கே. சண்முகம்
இ) கல்கி
ஈ) விபுலாநந்தர்
18) "காழ்வரை நில்லாக் கடுங்களிற்று ஒருத்தல் யாழ்வரைத் தங்கி யாங்கு" - என்ற வரி இடம்பெற்றுள்ள நூல்?
அ) புறநானூறு
ஆ) நற்றிணை
இ) கலித்தொகை
ஈ) அகநானூறு
19) ஐங்குறுநூறு____ பாக்களால் ஆனது?
அ) வெண்பா
ஆ) ஆசிரியப்பா
இ) கலிப்பா
ஈ) வஞ்சிப்பா
20) அகிற்புகை- இலக்கண குறிப்பு தருக?
அ) நான்காம் வேற்றுமைத்தொகை
ஆ) மூன்றாம் வேற்றுமைத்தொகை
இ) ஐந்தாம் வேற்றுமை தொகை
ஈ) ஆறாம் வேற்றுமை தொகை
21) "விண்பொரு நெடுவரை குறிஞ்சிக்கிழவ" என்று கூறும் நூல்?
அ) தொல்காப்பியம்
ஆ) புறநானூறு
இ) திருமுருகாற்றுப்படை
ஈ) சிறுபாணாற்றுப்படை
22) தமிழ்நாட்டில் மட்டும் 'மலை' என்ற சொல்____ இடப்பெயர்களில் முன்னொட்டாக வருகிறது?
அ) 19
ஆ) 17
இ) 21
ஈ) 23
23) உம்பர் என்பதன் பொருள்?
அ) வள்ளல்
ஆ) மன்னன்
இ) எமன்
ஈ) தேவர்
24) புறநானூறு நூலினை உ.வே.சா அவர்கள் பதிப்பித்து வெளியிட்ட ஆண்டு?
அ) 1894
ஆ) 1915
இ) 1920
ஈ) 1934
25) 'சுதந்திர தாகம்' என்ற புதினம் சாகித்திய அகாதமி விருது பெற்ற ஆண்டு?
அ) 1997
ஆ) 1999
இ) 2001
ஈ) 2003
26) காவடிச் சிந்தின் தந்தை?
அ) பாரதியார்
ஆ) அண்ணாமலையார்
இ) முருகன்
ஈ) அருணகிரிநாதர்
27) பொருத்துக.
அ) வெள்ளிவீதியார்- குறுந்தொகை
ஆ) அண்ணாமலையார்- காவடிசிந்து
இ) வாடிவாசல்- சி. சு. செல்லப்பா
ஈ) இளம்பெருவழுதி- புறநானூறு
28) தமிழ்ப் பதிப்புலகின் தலைமகன்____
அ) உ.வே.சா
ஆ) மீனாட்சிசுந்தரனார்
இ) சி.வை. தாமோதரனார்
ஈ) கல்கி
29) "மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்" என்ற குறட்பாவில் பயின்று வந்துள்ள அணியை காண்க?
அ) வேற்றுமை அணி
ஆ) எடுத்துக்காட்டு உவமையணி
இ) பொருள் பின்வருநிலையணி
ஈ) உவமை அணி
30) ஒப்புரவு என்பதன் பொருள்?
அ) அடக்கமுடையது
ஆ) பண்புடையது
இ) ஊருக்கு உதவுவது
ஈ) செல்வமுடையது
31) மனித மூளை சுமார்____வாட் சக்தியை உற்பத்தி செய்கிறது?
அ) 10
ஆ) 15
இ) 20
ஈ) 25
32) மூளைக்கு ஒரு நிமிடத்திற்கு______ மில்லி குருதி தேவைப்படுகிறது?
அ) 600
ஆ) 700
இ) 800
ஈ) 900
33) "உங்கள் உடலின் முக்கிய பணி, உங்கள் மூளையைத் தாங்கிச் செல்வது!"- என்று கூறியவர்?
அ) ஐன்ஸ்டைன்
ஆ) எடிசன்
இ) நியூட்டன்
ஈ) ஹாக்கிங்
34) "அடுத்த நூற்றாண்டு" என்ற நூலை எழுதியவர்?
அ) மீரா
ஆ) சுந்தரம்
இ) அரவிந்தன்
ஈ)சுஜாதா
35) குண்டலகேசி எந்த நூலுக்கு மறுப்பு நூல் எழுதப்பட்டது?
அ) வளையாபதி
ஆ) நீலகேசி
இ) சீவகசிந்தாமணி
ஈ) மணிமேகலை
36) வெப்பம் குளிர்- இலக்கண குறிப்பு தருக?
அ) எண்ணும்மை
ஆ) உவமைத்தொகை
இ) உம்மைத்தொகை
ஈ) உருவகம்
37) பெருங்கலம் என்னும் சொல்லுக்குரிய புணர்ச்சி விதிகளை தேர்வு செய்க?
அ) ஈறு போதல், தன்னொற்றிரட்டல்
ஆ) ஈறு போதல், இனமிகல்
இ) ஈறுபோதல், ஆதிநீடல்
ஈ) ஈறுபோதல், இனையவும்
38) பரிப்பு என்பதன் பொருள்?
அ) வழி
ஆ) வலிமை
இ) பாய்மரம்
ஈ) இயக்கம்
39) உலக நீரிழிவு நோய் நாள்?
அ) நவம்பர் 14
ஆ) நவம்பர் 11
இ) டிசம்பர் 14
ஈ) டிசம்பர் 11
40) முதல் மரபணு பொறியியல் தொழில்நுட்பச் செயற்கை மனித இன்சுலின் பாக்டீரியாவை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஆண்டு?
அ) 1976
ஆ) 1979
இ) 1978
ஈ) 1980
41) "துணையாய் வருவது தூயநற் கல்வி" என்ற வரி இடம்பெற்றுள்ள நூல்?
அ) திருமந்திரம்
ஆ) நாலடியார்
இ) கொன்றைவேந்தன்
ஈ) திருக்குறள்
42) தமிழ்நாடு இடைநிலை கல்வி வாரியம் தொடங்கப்பட்ட ஆண்டு?
அ) 1910
ஆ) 1911
இ) 1835
ஈ) 1857
43) சார்லஸ் வுட் அறிக்கை?
அ) 1835
ஆ) 1842
இ) 1850
ஈ) 1854
44) பிரசம் என்பதன் பொருள்?
அ) வறுமை
ஆ) கணவன் வீடு
இ) தேன்
ஈ) சுவை
45) நற்றிணையின் பேரெல்லை?
அ) 12 அடி
ஆ) 11 அடி
இ) 10 அடி
ஈ) 9 அடி
46) தொல்காப்பியத்தின் முதற்பதிப்பு?
அ) 1920
ஆ) 1915
இ) 1894
ஈ) 1847
47) பாரதியார் தமிழில்____ என்ற பெயரில் கருத்துப் படங்களை மட்டுமே கொண்ட இதழ் ஒன்றை நடத்த விரும்பினார்?
அ) சித்திரபுத்தன்
ஆ)சித்ராவெளி
இ) சித்திரவளி
ஈ) சித்திரம்
48) பாரதியார் பெண்களுக்காக____ இதழில் குறள்வெண்பா எழுதியுள்ளார்?
அ) இந்தியா
ஆ) சக்கரவர்த்தினி
இ) விஜயா
ஈ) சுதேசமித்திரன்
49) நிழல் போலத் தொடர்ந்தான் -இது எவ்வகை உவமை?
அ) வினை
ஆ) பயன்
இ) வடிவம்
ஈ) மெய்
50) ஏடு, சுவடி, பொத்தகம், பனுவல் முதலிய சொற்கள் தரும் பொருள்?
அ) நூல்
ஆ) ஓலை
இ) எழுத்தாணி
ஈ) தாள்
51) டைரியம் என்பது எம்மொழிச்சொல்?
அ) ஜெர்மன்
ஆ) இலத்தீன்
இ) ஆங்கிலம்
ஈ) பிரெஞ்சு
52) ஆனந்தரங்கன் கோவை என்ற நூலை எழுதியவர்?
அ) பிரபஞ்சன்
ஆ) புலவரேறு அரிமதி தென்னகன்
இ) ஈஸ்வரன்
ஈ) தியாகராஜ தேசிகர்
53) ஹிஜித் என்றுஅரபு சொல்லின் பொருள்?
அ) வாழ்தல்
ஆ)பிறப்பிடம்
இ) இடம்பெயர்தல்
ஈ) தங்குதல்
54) கம்பலை என்பதன் பொருள் ?
அ) அரசவை
ஆ) மலை
இ) பேரொளி
ஈ) அச்சம்
55) சீறாப்புராணத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை?
அ) 4027
ஆ) 5027
இ) 4092
ஈ) 5092
56) உறுபகை- இலக்கணக்குறிப்பு தருக?
அ) உருவகம்
ஆ) உரிச்சொற்றொடர்
இ) உவமைத்தொகை
ஈ) உம்மைத்தொகை
57) அகநானுறு____ புலவர்களால் பாடப்பட்டது?
அ) 154
ஆ) 164
இ) 132
ஈ) 145
58) கொண்மூ என்பதன் பொருள்?
அ) மேகம்
ஆ) பகை
இ) அச்சம்
ஈ) போர்
59) சாதரிப்பண் எந்த நிலத்துக்கு உரியது?
அ) குறிஞ்சி
ஆ) முல்லை
இ) மருதம்
ஈ) நெய்தல்
60) முண்டகப்பூ எந்த நிலத்திற்கு உரியது?
அ) முல்லை
ஆ) மருதம்
இ) குறிஞ்சி
ஈ) நெய்தல்
61) இராசராசன் சேர நாட்டை வென்ற ஆண்டு?
அ) 980
ஆ) 988
இ) 998
ஈ) 992
62) சோழன் செங்கணான் கட்டிய கோயில்களின் எண்ணிக்கை?
அ) 70
ஆ) 74
இ) 78
ஈ) 76
63) திரிகூடராசப்பக் கவிராயரின் கவிதை கிரீடம்?
அ) குற்றாலக்குறவஞ்சி
ஆ) தலபுராணம்
இ) பிள்ளைத்தமிழ்
ஈ) யமக அந்தாதி
64) அயன் என்பது?
அ) விஷ்ணு
ஆ) பிரம்மன்
இ) சிவன்
ஈ) முருகன்
65) சுடுகாடு- இலக்கணக்குறிப்பு தருக?
அ) பண்புத்தொகை
ஆ) தொழிற்பெயர்
இ) பெயரெச்சம்
ஈ) வினைத்தொகை
66) பிங்கல நிகண்டு என்னும் நூலில் காணப்படும் பண்களின் எண்ணிக்கை?
அ) 100
ஆ) 110
இ) 103
ஈ) 107
67) பொருத்துக.
அ) விரியன் -சிலம்பு
ஆ) திருமுருகு -தண்டை
இ) நாங்கூழ்ப்புழு -பாடகம்
ஈ) குண்டலப்பூச்சி -காலாழி
68) தத்துவ மீனலோசனி வித்துவ பால சபை துவங்கப்பட்ட ஆண்டு?
அ) 1910
ஆ) 1918
இ) 1920
ஈ) 1928
69) தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர்?
அ) பம்மல் சம்பந்தர்
ஆ) கல்கி
இ) முத்துச்சாமி
ஈ) சங்கரதாசு
70) 'ழ' என்பது___?
அ) சிற்றிதழ்
ஆ) வார இதழ்
இ) பருவ இதழ்
ஈ) தின இதழ்
71) பசுவய்யா என்றப் புனைப்பெயரில் கவிதைகள் எழுதியவர்?
அ) சங்கரதாசு சுவாமிகள்
ஆ) சி.சு. செல்லப்பா
இ) சுந்தர ராமசாமி
ஈ) பாவண்ணன்
72) நவை என்பதன் பொருள்?
அ) விருப்பம்
ஆ) சுவை
இ) நகைச்சுவை
ஈ)குற்றம்
73) தமிழ்க்கவிஞர்- இலக்கண குறிப்பு தருக?
அ) இருபெயரொட்டு பண்புத்தொகை
ஆ) பண்புத்தொகை
இ) பெயரெச்சம்
ஈ) வினைத்தொகை
74) 'குயில்' என்னும் இலக்கிய இதழை நடத்தியவர்?
அ) பாரதியார்
ஆ) துரைமாணிக்கம்
இ) அப்துல் ரகுமாரன்
ஈ) பாரதிதாசன்
75) பதிற்றுப்பத்தில் குமட்டூர்க் கண்ணனார் பாடியது?
அ) முதல் பத்து
ஆ) இரண்டாம் பத்து
இ) மூன்றாம் பத்து
ஈ) நான்காம் பத்து
76) நிரையம் என்பதன் பொருள்?
அ) வெள்ளம்
ஆ) நாடு
இ) நரகம்
ஈ) அச்சம்
77) "வீட்டுக்கு உயிர் வேலி!
வீதிக்கு விளக்குத்தூண்!
நாட்டுக்குக் கோட்டை மதில்!
நடமாடும் கொடிமரம் நீ"- இது யாருடைய பாடல்?
அ) தாராபாரதி
ஆ) பாரதிதாசன்
இ) பாரதியார்
ஈ) வாணிதாசன்
78) "பட்டிமண்டபத்துப் பாங்கறிந்து ஏறுமின்"- என்று கூறும் நூல்?
அ) சிலப்பதிகாரம்
ஆ) மணிமேகலை
இ) கம்பராமாயணம்
ஈ) சீவகசிந்தாமணி
79) "நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்" என்று பாடியவர்?
அ) பாரதியார்
ஆ) அண்ணா
இ) பாரதிதாசன்
ஈ) தாராபாரதி
80) ஆக்கப்பெயர் விகுதி பெறாத சொல்லைத் தேர்க?
அ) காவலாளி
ஆ) மேலாளர்
இ) உதவியாள்
ஈ) ஆசிரியர்
81) "எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தார் அப்பா
யானும் வந்தேன் ஒரு சித்தன் இந்த நாட்டில்"- என்று பாடியவர்?
அ) பாரதிதாசன்
ஆ) திருமூலர்
இ) பாரதியார்
ஈ) சிவவாக்கியர்
82) சித்தர்களில் ஆதி சித்தராக கருதப்படுபவர்?
அ) திருமூலர்
ஆ) சிவவாக்கியர்
இ) பத்திரகிரியார்
ஈ) கடுவெளிச்சித்தர்
83) "பட்டுப்போன மரக்கிளை,
அமர்ந்து ஓய்வெடுக்கும் காகம்;
இலையுதிர் கால மாலை"- என்ற கவிதையை எழுதியவர்?
அ) மோரிடாகோ
ஆ) பாஷோ
இ) இஸ்ஸா
ஈ) தேனரசன்
84) சிவராமலிங்கம் புனைப்பெயர்களில் பொருந்தாதது?
அ) பானுசந்திரன்
ஆ) அரூப் சிவராம்
இ) தருமு சிவராம்
ஈ) பாவண்ணன்
85) "வெறும் காகிதம் தின்பது கல்வியல்ல" என்று கூறியவர்?
அ) பாரதியார்
ஆ) மீனாட்சி
இ) அப்துல்ரகுமான்
ஈ) மீரா
86) வில்லிபாரதம்____ பருவங்களைக் கொண்டது?
அ) 5
ஆ) 10
இ) 15
ஈ) 20
87) மரணத்திற்குப் பிறகு மனிதர் நிலை என்ற நூலை இயற்றியவர்?
அ) பரிதிமாற்கலைஞர்
ஆ) பாரதியார்
இ) திரு.வி.க
ஈ) மறைமலையடிகள்
88) வில்லிபாரதத்தில் "சூரியனின் தோன்றல்" என்று குறிப்பிடப்படுபவர் யார்?
அ) கண்ணன்
ஆ)கன்னன்
இ) அர்ச்சுனன்
ஈ) பிரமன்
89) கண்மலர்- இலக்கண குறிப்பு தருக?
அ) உவமை
ஆ) உருவகம்
இ) எண்ணும்மை
ஈ) உம்மைத்தொகை
90) தூரகதம் என்பதன் பொருள்?
அ) யானை
ஆ) சூரியன்
இ) குதிரை
ஈ) மான்
91) விஸ்வபாரதி பல்கலைக்கழகம் நிறுவப்பட்ட ஆண்டு?
அ) 1920
ஆ) 1891
இ) 1929
ஈ) 1921
92) அயம் என்பதன் பொருள்?
அ) பிரமன்
ஆ) பசு
இ) மான்
ஈ) குதிரை
93) ஏழிலி என்பதன் பொருள் ?
அ) அச்சம்
ஆ) ஆனந்தம்
இ) மேகம்
ஈ) கடல்
94) தமிழின் முதல் பா வடிவ நாடக நூல்?
அ) இரகசிய வழி
ஆ) மனோன்மணியம்
இ) மாங்குடி
ஈ) பிசிராந்தையார்
95) சிலப்பதிகாரம் குறிப்பிடும் ஆடற்கலைகள்?
அ) 8
ஆ) 9
இ) 10
ஈ) 11
96) கூவும் குயிலும் கரையும் காகமும் -தொடரில் இடம் பெற்ற மரபு?
அ) பெயர் மரபு
ஆ) வினை மரபு
இ) ஒலி மரபு
ஈ) இவை மூன்றும்
97) இரவீந்திரநாத் தாகூர் நோபல் பரிசு பெற்ற ஆண்டு?
அ) 1910
ஆ) 1913
இ) 1917
ஈ) 1920
98) மனோன்மணீயம் பல்கலைக்கழகம் எங்கு அமைந்துள்ளது?
அ) திருச்சி
ஆ) திருநெல்வேலி
இ) மதுரை
ஈ) வேலூர்
99) கொள் - என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடு?
அ) கொள்க
ஆ)கொள்ளுதல்
இ) கொள்ளும்
ஈ) கொள்வேன்
100) சாதிப் பிரிவினிலே தீயை மூட்டுவோம் -என்பது யார் கூற்று?
அ) பாம்பாட்டிச் சித்தர்
ஆ) சிவவாக்கியர்
இ) திருமூலர்
ஈ) பட்டினத்தார்
Previous article
Next article
Leave Comments
Post a Comment