TNPSC TAMIL
50 + 50 - Part 2 - இலக்கணக் குறிப்புகள்!
வினையாலணையும் பெயர்
எய்தாப் பழி -
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
நல்லொழுக்கம் , தீயொழுக்கம் - பண்புத்தொகைகள்
சொலல் -
தொழிற்பெயர்
அருவினை -
பண்புத்தொகை
அறிந்து
வினையெச்சம்
கலங்காது -
எதிர்மறை வினையெச்சம்
நூல்நோக்கி -
இரண்டாம் வேற்றுமைத்தொகை
பழியில்லா மன்னன் -
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
மடக்கொடி -
அன்மொழித்தொகை
படராப் பஞ்சவ , அடங்காப் பசுந்துணி , தேரா மன்னா , ஏசாச் சிறப்பின் -
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சங்கள்
தடக்கை -
உரிச்சொற்றொடர்
புன்கண் , பெரும்பெயர் , அரும்பெறல் , பெருங்குடி , கடுங்கோல் , செங்கோலன் , நன்மொழி - பண்புத்தொகைகள்
உகுநீர் , சூழ்கழல் , செய்கொல்லன் - வினைத் தொகைகள்
அவ்வூர் - சேய்மைச்சுட்டு வாழ்தல் - தொழிற்பெயர்
என்கால் , என்பெயர் , நின்னகர் , என்பதி - ஆறாம் வேற்றுமைத்தொகைகள்
தாழ்ந்த , தளர்ந்த -
பெயரெச்சங்கள்
புகுந்து -
வினையெச்சம்
சீர்த்த -
ஒன்றன்பால் வினைமுற்று
தழீஇய ( தழுவிய ) -
சொல்லிசை அளபெடை
கார்குலாம் ( காரது குலாம் ) -
ஆறாம் வேற்றுமைத்தொகை
உணர்த்துவான் -
வினையாலணையும் பெயர்
பார்த்தகண்ணை -
பெயரெச்சம்
தீர்கிலேன் , செய்குவென் -
தன்மை ஒருமை வினைமுற்றுகள்
நெடுநாவாய் -
பண்புத்தொகை
தாமரை நயனம்
உவமைத்தொகை
நனிகடிது -
உரிச்சொற்றொடர்
நெடுநாவாய் , நெடுநீர் - பண்புத்தொகைகள்
என்னுயிர் -
ஆறாம் வேற்றுமைத்தொகை
நன்னுதல் -
பண்புத்தொகை
நின்கேள் -
நான்காம் வேற்றுமைத்தொகை
சென்ற வட்டி -
பெயரெச்சம்
செய்வினை -
வினைத்தொகை
புன்கண் , மென்கண் - பண்புத்தொகைகள்
ஊர ( ஊரனே ) -
விளித்தொடர்
பொன்னும் துகிரும் முத்தும் பவளமும் மணியும் - எண்ணும்மைகள்
மாமலை -
உரிச்சொற்றொடர்
அருவிலை , நன்கலம் - பண்புத்தொகைகள்
செலவொழியா வழி -
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
வழிக்கரை -
ஆறாம் வேற்றுமைத்தொகை
உறுவேனில் -
உரிச்சொற்றொடர்
நீர்த்தடம் -
இரண்டாம் வேற்றுமை உருபும்
பயனும் உடன்தொக்கதொகை.
பந்தர் -
பந்தல் என்பதன் கடைப்போலி
அணைந்த வாகீசர் -
பெயரெச்சம்
பொங்குகடல் -
வினைத்தொகை
பெருமையறிந்து -
இரண்டாம் வேற்றுமைத்தொகை
அறிந்து , அடைந்து
வினையெச்சங்கள்
தேசம் -
இடவாகுபெயர்
வந்தவர்
வினையாலணையும் பெயர்
நற்கறிகள் , இன்னமுதம் பண்புத்தொகைகள்
தாய்தந்தை -
உம்மைத்தொகை
மல்லலம் குருத்து -
உரிச்சொற்றொடர்
தீண்டிற்று -
ஒன்றன்பால் வினைமுற்று
துளங்குதல் -
தொழிற்பெயர்
வருக , தருக , கெடுக -
வியங்கோள் வினைமுற்றுகள்
புதிது புதிது , சொல்லிச் சொல்லி - அடுக்குத்தொடர்கள்
செந்தமிழ் -
பண்புத்தொகை
சலசல -
இரட்டைக்கிளவி
போர்க்குகன் -
இரண்டாம் வேற்றுமை உருபும்
பயனும் உடன்தொக்கதொகை
கல்திரள்தோள் -
உவமைத்தொகை
திரைக்கங்கை
( அலைகளை உடைய கங்கை ) - இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கதொகை
இருந்தவள்ளல் -
பெயரெச்சம்
வந்துஎய்தினான் -
வினையெச்சம்
கூவா -
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
குறுகி , சேவிக்க -
வினையெச்சங்கள்
கழல் -
தானியாகுபெயர்
வந்தனென் -
தன்மை ஒருமை வினைமுற்று
அழைத்தி ( அழைப்பாய் ) -
முன்னிலை ஒருமை வினைமுற்று
வருக -
வியங்கோள் வினைமுற்று .
பணிந்து , வளைத்து , புதைத்து - வினையெச்சங்கள்
இருத்தி -
முன்னிலை ஒருமை வினைமுற்று
தேனும் மீனும் -
எண்ணும்மை
மாதவர் ( மா + தவர் ) -
உரிச்சொற்றொடர்
அமைந்த காதல் -
பெயரெச்சம்
பணிதல் -
தொழிற்பெயர்
ஆற்றுவார் , மாற்றார் வினையாலணையும் பெயர் .
இன்மை , திண்மை -
பண்புப் பெயர்கள்
சான்றவர்
வினையாலணையும் பெயர்
இருநிலம் -
உரிச்சொற்றொடர்
மன் , ஓ -
அசைச்சொற்கள்
அன்பும் ஆர்வமும் அடக்கமும் - எண்ணும்மை
இன்ப சொரூபம் -
உருவகம்
செங்கை , சேவடி , வெவ்விருப்பு - பண்புத்தொகைகள்
கனிவாய்
உவமைத்தொகை
வன்மறவோர்
பண்புத்தொகை
வெண்குடை
பண்புத்தொகை
கல்லா ஒருவற்கும் -
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
நாழி -
ஆகுபெயர்
ஈதல் -
தொழிற்பெயர்
துய்ப்பேம் -
தன்மைப் பன்மை வினைமுற்று
நிலத்தினும் , வானினும் , நீரினும் - உயர்வுச்சிறப்பும்மைகள்
கருங்கோல் , பெருந்தேன் - பண்புத்தொகைகள்
விடேன் -
தன்மை ஒருமை வினைமுற்று
கெடும் -
செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று
கொளல் -
அல் ஈற்றுத் தொழிற்பெயர்
Previous article
Next article
Leave Comments
Post a Comment