Ads Right Header

10th – பாடம் - 4 தேசியம்: காந்தியக் காலகட்டம் - I


10th – பாடம் - 4
தேசியம்: காந்தியக் காலகட்டம் - I
 
1. மகாத்மா காந்தி எங்கு வாழ்ந்த இந்தியர்களின் சமூக உரிமைக்காகப்
போராடினார்?
a) அமெரிக்கா
b) இங்கிலாந்து
c) தென்னாப்பிரிக்கா
d) ஆஸ்திரேலியா
 
2. மகாத்மா காந்தி எப்போது இந்தியா திரும்பினார்?
a) 1916
b) 1915
C) 1918
d) 1917
 
3. கூற்று 1: காந்தியடிகள் அனைவரும் பின்பற்றத்தக்க சத்தியாகிரகம் என்ற புதிய விடுதலைப் போராட்ட முறையை அறிமுகம் செய்தார்.
கூற்று 2: காந்தியடிகள் தீவிர தேசியவாதத்தை பின்பற்றினார்.
a) அனைத்தும் சரி
b) 2 மட்டும் சரி
c) அனைத்தும் தவறு
d) 1 மட்டும் சரி
 
4. காந்தியடிகள் எங்கு பிறந்தார்?
a) குஜராத்
b) கல்கத்தா
c) பம்பாய்
d) டெல்லி
 
5. காந்தியடிகள் எப்போது பிறந்தார்?
a) 1879 அக்டோபர் 2
b) 1889 அக்டோபர் 2
c) 1869 அக்டோபர் 2
d) 1859 அக்டோபர் 2
 
6. காந்தியடிகளின் தந்தை ஆற்றிய பணி?
a) போர்பந்தரின் திவான்
b) ராஜ்கோட்டின் திவான்
c) இரண்டும் அல்ல
d) இரண்டும்
 
7. காந்தியடிகளின் தந்தை பெயர் என்ன?
a) மோகன்தாஸ் காந்தி
b) கரம்சந்த் காந்தி
c) மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி
d) காபா காந்தி
 
8. காந்தியடிகளின் தாய் -ன் தீவிர பக்தையாவார்.
a) சைவம்
b) வைணவம்
c) பௌத்தம்
d) சீக்கியம்
 
9. காந்தியடிகள் சட்டம் பயில எங்கு சென்றார்?
a) தென்னாப்பிரிக்கா
b) அமெரிக்கா
c) ஆஸ்திரேலியா
d) இங்கிலாந்து
 
10. காந்தியடிகள் எப்போது வழக்கறிஞர் பட்டம் பெற்றார்?
a) 1888 ஜூன்
b) 1889 ஜூன்
c) 1891 ஜூன்
d) 1890 ஜூன்
 
11. காந்தியடிகள் சட்டம் பயில எப்போது இங்கிலாந்து சென்றார்.
a) 1888
b) 1889
c) 1891
d) 1890
 
12. காந்தியடிகள் சட்டம் பயில் எவ்வழியாக இங்கிலாந்து சென்றார்?
a) கடற்பயணம்
b) ரயில் பயணம்
c) விமானம் மூலம்
d) தரைவழிப்பயணம்
 
13. இந்தியா திரும்பிய காந்தியடிகள் எங்கு வழக்குரைஞராக பணியாற்ற மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன?
a) குஜராத்
b) கல்கத்தா
c) பம்பாய்
d) டெல்லி
14. காந்தியடிகள் எப்போது தென்னாப்பிரிக்கா சென்றார்?
a) 1892 ஏப்ரல்
b) 1893 மார்ச்
c) 1892 ஜூன்
d) 1893 ஏப்ர ல்
 
15. காந்தியடிகள் எங்கு முதல் முறையாக இனவெறியை
எதிர்கொண்டார்?
a) தென்னாப்பிரிக்கா
b) அமெரிக்கா
c) ஆஸ்திரேலியா
d) இங்கிலாந்து
 
16. காந்தியடிகள் டர்பனில் இருந்து --- க்கு செல்லும் போது - ரயில் நிலையத்தில் முதல் வகுப்புப் பெட்டியிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார்.
a) டிரான்ஸ்வால், பிரிட்டோரியா
b) பிரிட்டோரியா, டிரான்ஸ்வால் 
c) பிரிட்டோரியா, பீட்டர்மாரிட்ஸ்பர்க்
d) பீட்டர்மாரிட்ஸ்பர்க், பிரிட்டோரியா
 
17. காந்தியடிகள் எங்கு வாழ்ந்த இந்திய மக்களின் குறைகளை களைவதற்கான அமைப்பை ஏற்படுத்த அறிவுறுத்தினார்?
a) டிரான்ஸ்வால்  
b) பிரிட்டோரியா
c) பீட்டர்மாரிட்ஸ்பர்க்
d) இவை அனைத்தும்
 
18. சட்டமறுப்பு இது யாருடைய புத்தகம்?
a) அடால்ஸ்டாய்
b) னூன் ரஸ்கின்
c) தாரோ
d) ஸ்மட்ஸ்
 
19. Undo the last - இது யாருடைய புத்தகம்?
a) டால்ஸ்டாய்
b) ஜான் ரஸ்கின்
c) தாரோ
d) ஸ்மட்ஸ்
 
20. கடவுளின் அரசாங்கம் உன்னில் உள்ளது - இது யாருடைய புத்தகம்?
a) டால்ஸ்டாய்
b) ஜான் ரஸ்கின்
c) தாரோ
d) ஸ்மட்ஸ்
 
21. ஃபீனிக்ஸ் குடியிருப்பு ஏற்படுத்தப்பட்ட ஆண்டு?
a) 1907
b) 1906
c) 1905
d) 1910
 
22. டால்ஸ்டாய் பண்ணை ஏற்படுத்தப்பட்ட ஆண்டு? 
a) 1907
b) 1906
c) 1905
d) 1910
 
23. ஃபீனிக்ஸ் குடியிருப்பு, டால்ஸ்டாய் பண்ணை யாரால்
ஏற்படுத்தப்பட்டது?
a ) ஜான் ரஸ்கின்
b) காந்தியடிகள்
c) டால்ஸ்டாய்
d) ஸ்மட்ஸ்
 
24. டிரான்ஸ்வாலில் வாழ்ந்த இந்திய மக்கள் தலை வாரியாக செலுத்த வேண்டி இருந்த வரி எவ்வளவு?
a) டாலர்கள்
b) 8 பவுண்டுகள்
c) 3 பவுண்டுகள்
d) 8 டாலர்கள்
25. கூற்று 1: காந்தியடிகள் மேற்கத்திய சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டார்.
கூற்று 2: ஆனால் மேற்கத்திய நாகரிகம் மற்றும் தொழில் மயமாக்களை கடுமையாக விமர்சித்தார்.
a) அனைத்தும் சரி
b) 2 மட்டும் சரி
c) அனைத்தும் தவறு
d) 1 மட்டும் சரி
 
26. தென்னாப்பிரிக்காவில் ஒப்பந்த தொழிலாளர்கள் மீது விதிக்கப்பட்டிருந்த தலைவர் எந்த ஒப்பந்தத்தின் படி ரத்து செய்யப்பட்டது?
a) தீன் - காந்தி ஒப்பந்தம்
 b) அமிர் - காந்தி ஒப்பந்தம்
c) ஸ்மட்ஸ்-காந்தி ஒப்பந்தம்
d) சம்பரான் காந்தி ஒப்பந்தம்
 
27. காந்தியடிகள் யாரை அரசியல் குருவாக ஏற்றார்?
அ) பால கங்காதர திலகர்
b) அன்னிபெசன்ட் அம்மையார்
c) கோபாலகிருஷ்ண கோகலே
d) பிரோஸ் ஷா மேத்தா
 
28. இந்தியா திரும்பும் முன் இங்கிலாந்து சென்ற காந்தியடிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன?
a) இங்கிலாந்தை ஆதரித்தல் & உதவி வழங்குதல்
b) அவசர ஊர்தி சேவைகளை வழங்க உறுதியேற்றல்
c) பிரிட்டன் இராணுவத்தில் இந்தியர்களை சேர்க்க முயற்சித்தல்
d) இவை அனைத்தும்
 
29. தீன் காதியா முறை எங்கு பின்பற்றப்பட்டது?
a) அகமதாபாத்
b) சம்பரான்
c) கேதா
d) குஜராத்
 
30. இந்திய விவசாயிகள் தங்கள் நிலத்தில் எத்தனை பங்கு அவுரி பயிரிட கட்டாயப்படுத்தப்பட்டனர்?
a) 5/20 பங்கு
b) 8/20 பங்கு
c) 3/20 பங்கு
 d) 4/20 பங்கு
 
31. எந்த நூற்றாண்டின் கடைசியில் செயற்கை சாயங்களால் இண்டிகோ விற்பனை குறைந்தது?
a) 18ம் நூற்றாண்டு
b). 20ம் நூற்றாண்டு
c) 11ம் நூற்றாண்டு
d) 19ம் நூற்றாண்டு
 
32. எந்த நாட்டின் செயற்கை சாயங்களால் இண்டிகோ விற்பனை
குறைந்தது?
a) ஜெர்மன்
b) இங்கிலாந்து
c) அமெரிக்கா
d) செரீபியா
33. சம்பரானுக்கு வருமாறு காந்தியடிகளை அழைத்த இந்திய விவசாயி
யார்?
a) பிரஜ்கிஷோர்
b) ராஜேந்திர சுக்லா
c) ராஜ்குமார் சுக்லா
d) இவர்கள் அனைவரும்
 
34. இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் யார்?
a) பிரஜ் கிஷோர் பிரசாத்
b) ராஜேந்திர பிரசாத்
c) ராஜிவ் சுக்லா  
d) ஜவஹர்லால் நேரு
 
35. பிரஜ்கிஷோர் பிரசாத் புரிந்த பணி?
a) தணிக்கை கணக்காளர்
b) ஆட்சியாளர்
c)வருவாய் அதிகாரி
d) வழக்குரைஞர்
 
36. கூற்று 1: துணை ஆளுநர் குழு உருவாக்கப்பட்டு தீன் காதியா முறை
ஒழிக்க பரிந்துரை செய்யப்பட்டது.
கூற்று 2: ஆனால் அந்தக் குழுவில் காந்தியடிகள் இடம் பெற்றிருக்கவில்லை.
a ) அனைத்தும் சரி
b) 2 மட்டும் சரி
c) அனைத்தும் தவறு
d) 1 மட்டும் சரி
 
37. அகமதாபாத் மில் வேலைநிறுத்தம் நடைபெற்ற ஆண்டு?
a) 1916
b) 1917
c) 1918
d] 1920
 
38. கேதா சத்தியாகிரகம் நடைபெற்ற ஆண்டு?
a) 1918
b) 1919
c) 1920
d) 1921
 
39. காந்தியடிகள் கருப்புச் சட்டம் என எதை அழைத்தார்?
a) படைத்துறைச் சட்டம்
b) தீன் காதியா சட்டம்
c) ரௌலட் சட்டம்
d) இந்திய அரசுச் சட்டம்
 
40. விசாரணையின்றி சிறையிலடைப்பது, பிடி உத்தரவின்றி கைது ஆகியவற்றை காவல் துறைக்கு வழங்கிய சட்டம்?
a) படைத்துறைச் சட்டம்
b) தீன் காதியா சட்டம்
c) ரௌலட் சட்டம்
d) இந்திய அரசுச் சட்டம்
 
41. காந்தியடிகள் கருப்புச் சட்டத்தை எதிர்த்து எப்போது நாடு தழுவிய சத்தியாகிரகத்திற்கு அழைத்தார்?
a) 1919 மார்ச் 6
b) 1919 ஏப்ரல் 6
c) 1919 ஜூன் 6
d) 1919 ஜூலை 6
 
42. இவற்றுள் ரௌலட் சட்டத்திற்கு எதிரான போராட்டம் எங்குத் தீவிரமடைந்தது?
a) குஜராத்
b) டெல்லி
c) கல்கத்தா
d) பஞ்சாப்
 
43. இவற்றுள் ரௌலட் சட்டத்திற்கு எதிரான போராட்டம் எங்குத் தீவிரமடைந்தது?
a) அமிர்தசரஸ்
b) லாகூர்
c) இரண்டிலும்
d) இரண்டிலும் அல்ல
 
44. 1919 ஏப்ரல் , அமிர்தசரசில் கைது செய்யப்பட்ட தலைவர்கள்?
a) காந்தியடிகள்
b) Dr.சைஃபுதீன் கிச்லு
c) Dr.சத்யபால்
d) பிரஜ்கிஷோர் பிரசாத்
 
45. ஜாலியன்வாலா பாக் எங்குள்ளது?
a) அமிர்தசரஸ்
b) லாகூர்
c) ஆக்ரா
d) வங்காளம்
46. பைசாகி திருநாள் என்பது -
a) சமணர்களின் அறுவடைத்திருநாள்
b) பெளத்தர்களின் அறுவடைத்திருநாள்
c) இந்துக்களின் அறுவடைத்திருநாள்
d) சீக்கியர்களின் அறுவடைத்திருநாள்
 
47. ஜாலியன்வாலா பாக்கில் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது எப்போது?
a) 1919 ஏப்ர ல் 12
b) 1919 ஏப்ர ல் 13
c) 1919 ஏப்ர ல் 14
d) 1919 ஏப்ரல் 15
 
48. ஜாலியன்வாலா பாக் துப்பாக்கி சூட்டில் பலியானோர் எண்ணிக்கை ? அதிகாரபூர்வ அரசுத் தகவலின் படி)
a) 350
b) 317
c) 379
d) 389
49. இரபீந்திரநாத் தாகூர் --- என்ற பட்டத்தை திருப்பிக் கொடுத்தார்?
a) Knighting Eagle
b) வீரத்திருமகன்
c) கெய்சர்-இ-ஹிந்த்
d) Knight Hood
 
50. காந்தியடிகள் ---- என்ற பதக்கத்தை திருப்பிக் கொடுத்தார்?
a) Knighting Eagle
b) வீரத்திருமகன்
c) கெய்சர்-இ-ஹிந்த்
d) Knight Hood
 
51. முதலாவது உலகப்போர் எப்போது முடிவுக்கு வந்தது?
a) 1918
b) 1919
c) 1917
d) 1916
 
52. இஸ்லாமிய மதத்தலைவர் என உலகம் முழுவதும் அழைக்கப்பட்டவர் எந்த நாட்டை சேர்ந்தவர்
a ) ஆப்கான்
b) ஈரான்
c) துருக்கி
d) ஈராக்
 
53. இஸ்லாமிய மதத்தலைவர் என உலகம் முழுவதும் அழைக்கப்பட்டவர் யார்?
a) மௌலானா
b) கலிபா
 c) முகமது அலி
d) சௌகத் அலி
 
54. கிலாபத் இயக்கம் யார் தலைமையில் இயங்கியது?
a) கலிபா
b) முகமது அலி
c) சௌகத் அலி
d) காந்தியடிகள்
 
55. யாருடைய அதிகாரம் மற்றும் பெருமைகளை நிலைநிறுத்தும் பொருட்டு கிலாபத் இயக்கம் இயங்கியது?
a) மௌலானா
b) கலிபா
c) முகமது அலி
d) நபிகள் நாயகம்
 
55. எங்கு நடந்த அகில இந்திய கிலாபத் இயக்க மாநாட்டிற்கு காந்தியடிகள் தலைமையேற்றார்?
a) கல்கத்தா
b) பம்பாய்
c) டெல்லி
d) அலகாபாத்
 
57. எப்போது நடந்த அகில இந்திய கிலாபத் இயக்க மாநாட்டிற்கு காந்தியடிகள் தலைமையேற்றார்?
a) 1919 டிசம்ப ர்
b) 1919 நவம்பர்
c) 1919 அக்டோபர்
d) 1919 ஆகஸ்ட்
 
58. அல்லாஹு அக்பர், வந்தே மாதரம், இந்து - முஸ்லீம் வாழ்க என்ற ----
யின் யோசனையை காந்தியடிகள் ஆதரித்தார்.
a) கலிபா
b) முகமது அலி
c) சௌகத் அலி
d) நபிகள் நாயகம்
 
59. எப்போது நடந்த கிலாபத் கூட்டத்தில் காந்தியடிகளின் அகிம்சை மற்றும் ஒத்துழையாமை இயக்கம் ஏற்கப்பட்டது?
a) 1919 டிசம்பர் 19
b) 1919 நவம்பர் 29
c) 1920 ஜூன் 9
d) 1920 செப்டம்பர் 20
 
60.எங்கு நடந்த கிலாபத் கூட்டத்தில் காந்தியடிகளின் அகிம்சை மற்றும் ஒத்துழையாமை இயக்கம் ஏற்கப்பட்டது?
a) கல்கத்தா
b) பம்பாய்
c) டெல்லி
d) அலகாபாத்
 
61. ஒத்துழையாமை இயக்கம் எப்போது தொடங்கியது?
a ) 1921 ஆகஸ்ட் 1
b) 1920 ஆகஸ்ட் 1
c) 1921 ஜூலை 1
d) 1920 ஜூலை 1
 
62. எங்கு நடந்த கூட்டத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் ஒத்துழையாமை இயக்கத்திற்கு அனுமதி வழங்கியது?
a) கல்கத்தா
b)பம்பாய்
c) நூக்பூர்
d) அலகாபாத்
 
63. எப்போது நடந்த கூட்டத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் ஒத்துழையாமை இயக்கத்திற்கு அனுமதி வழங்கியது?
a) 1920 டிசம்பர்
b) 1919 நவம்பர்
c) 1920 ஜூன்
d) 1920 செப்டம்பர்
 
64. ஒத்துழையாமை இயக்கத்திற்கான தீர்மானம் யார் தலைமையில் நடந்த காங்கிரஸ் அமர்வில் நிறைவேற்றப்பட்டது?
a) காந்தியடிகள்
b) சுபாஷ் சந்திர போஸ்
c) விஜயராகவாச்சாரி
d) மோதிலால் நேரு
 
65. எங்கு நடந்த காங்கிரஸ் அமர்வில் ஒத்துழையாமை இயக்கத்திற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது?
a) பர்தோலி
b) நாக்பூர்
c) அலகாபாத்
d) பம்பாய்
 
66. எப்போது நடந்த காங்கிரஸ் அமர்வில் ஒத்துழையாமை இயக்கத்திற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது?
a) 1920 டிசம்பர்
b) 1921 மார்ச்
c) 1922 பிப்ரவரி
d) 1920 செப்டம்பர்
 
67. காந்தியடிகள் எங்கு வரிகொடா இயக்கப் பிரச்சாரத்தை அறிவித்தார்?
a) பர்தோலி
b) நாக்பூர்
c) அலகாபாத்
d) பம்பாய்
 
68. காந்தியடிகள் எப்போது வரிகொடா இயக்கப் பிரச்சாரத்தை அறிவித்தார்?
a) 1920 டிசம்ப ர்
b) 1921 மார்ச்
c) 1922 பிப்ரவரி
d) 1920 செப்டம்பர்
 
69. வரிகொடா இயக்கப் பிரச்சாரம் யார் மத்தியில் காந்தியடிகளின் மதிப்பைப் பெருகியது?
a) மாணவர்கள்
b) வழக்குரைஞர்கள்
c) இந்திய சிப்பாய்கள்
d) விவசாயிகள்
 
70. யாருடைய இந்திய சுற்றுப்பயண புறக்கணிப்பு வரிகொடா இயக்கப் பிரச்சாரத்தால் வெற்றிகரமாக முடிந்தது?
a)குயின் விக்ட்டோரியா
b). குயின் எலிசபெத்
c) பிரின்ஸ் வேல்ஸ்
d) இவர்கள் எவருமல்ல
 
 
71. கிலாபத் இயக்கம் எதனால் முடிவுக்கு வந்தது?
a) துருக்கி கலீபா அலுவலகம் மூடப்பட்டதால்
b) போதிய பயிற்சி பெற்ற தலைவர்கள் இல்லாததால்
c) சௌரி சௌரா நிகழ்வினால்
d) இவை அனைத்தும்
 
72. சௌரி சௌரா என்ற கிராமம் எங்குள்ளது
a) 1922 பிப்ரவரி 5
b) 1923 பிப்ர வரி 5
c) 1921 பிப்ரவரி 5
d) 1920 பிப்ர வரி 5
 
73. சௌரி சௌரா என்ற கிராமம் எங்குள்ளது.
a) லாகூர் பஞ்சாப்
b) நாக்பூர் - ஹரியானா
c) கோரக்பூர்-உத்திரபிரதேசம்
d) ஆக்ரா - டெல்லி
 
74. சௌரி சௌரா நிகழ்வில் உயிரிழந்த காவலர்கள் எண்ணிக்கை எத்தனை?
a) 32 பேர்
b) 29 பேர்
c)27 பேர்
d) 22 பேர்
 
75. ஒத்துழையாமை இயக்கம் மற்றும் வரிகொடா இயக்கம் எதனால்
முடிவுக்கு வந்தது?
a) துருக்கி கலீபா அலுவலகம் மூடப்பட்டதால்
b) போதிய பயிற்சி பெற்ற தலைவர்கள் இல்லாததால்
c) சௌரி சௌரா நிகழ்வினால்
d) இவை அனைத்தும்
 
76. இவர்களுள் யார் ஒத்துழையாமை இயக்கத்தை தொடர விரும்பினர்?மாற்றத்தை விரும்பாதவர்கள்)
a) மோதிலால் நேரு , சி.ஆர். தாஸ் 
b) வல்லபாய் பட்டேல், சி.ராஜாஜி 
c ) சி.ராஜாஜி, மோதிலால் நேரு
d)   இவர்கள் அனைவரும்
 
77. சட்டப் பேரவைகளில் பணியாற்றுவதன் மூலம் மட்டுமே தேச நலன்கள் மேம்படும் என வாதிட்டவர்கள் யார்?
a) மோதிலால் நேரு, சி.ஆர்.தாஸ் 
b) வல்லபாய் பட்டேல், சி.ராஜாஜி 
c) சி.ராஜாஜி, மோதிலால் நேரு
d) இவர்கள் அனைவரும்
 
78. சுயராஜ்ஜியக் கட்சியை தோற்றுவித்தது யார்? 
a) மோதிலால் நேரு, சி.ஆர்.தாஸ்
b) வல்லபாய் பட்டேல், ச.ராஜாஜி
c) சி.ராஜாஜி, மோதிலால் நேரு
d) இவர்கள் அனைவரும்
 
79. சுயராஜ்ஜியக் கட்சி எப்போது தோற்றுவிக்கப்பட்டது?
a) 1922 ஜனவரி 1
b) 1983 பிப்ர வரி 1
c) 1923 ஜனவரி 1
d) 1922 பிப்ரவரி 1
 
80. சி.ஆர். தாஸ் எப்போது மறைந்தார்?
a) 1925
b) 1924
c) 1923
d) 1926
 
81. யாருடைய மறைவுக்குப் பின் சுயராஜ்ஜியக் கட்சி வீழ்ச்சியடைந்தது?
a ) மோதிலால் நேரு
b) சி.ஆர்.தாஸ்
c) வல்லபாய் பட்டேல்
d) சி.ராஜாஜி
 
82. எப்போது சுயராஜ்ஜியக் கட்சி சட்டப்பேரவைகளில் இருந்து விலகிக்கொண்டது?
a) 1925
b) 1924
c) 1923
d) 1926
 
83. எந்தெந்த சட்டப்பேரவைகளில் சுயராஜ்ஜியக் கட்சியின் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்?
a ) இம்பீரியல் சட்டப்பேரவை
b) ஆங்கிலேய இந்தியாவின் பேரரசு சட்டப்பேரவை
c) பல்வேறு மாகாணங்களின் சட்டப்பேரவை
d) இவை அனைத்தும்
 
84. எந்த அரசுடன் ஒத்துழைக்க விரும்பாததால் சுயராஜ்ஜியக் கட்சியின் உறுப்பினர்கள் அவர்களுக்கான துறைகளில் பொறுப்பேற்க மறுத்தனர்?
a)கல்கத்தா
b) டெல்லி
c) வங்காளம்
d) பம்பாய்
 
85. எந்த ஆண்டின் இந்திய அரசுச் சட்டப்படி இரட்டை ஆட்சி அறிமுகப்படுத்தப்பட்டது?
a) 1915
b) 1935
c) 1919
d) 1939
 
86. எந்த ஆண்டின் மாகாண சுயாட்சி மூலம் இரட்டை ஆட்சி முறை
முடிவுக்கு வந்தது?
a) 1915
b) 1935
c) 1919
d) 1939
 
87. இரட்டை ஆட்சியில் இந்தியர்களின் கீழ் இருந்த துறைகள்?
a) உள்ளாட்சி, கல்வி, பொதுசுகாதாரம்
b) நிதி, பாதுகாப்பு, காவல்துறை.
c) நீதித்துறை நிலவருவாய் நீர்ப்பாசனம்
d) பொதுப்பணி, வேளாண்மை,வனங்கள்
 
88. இரட்டை ஆட்சியில் ஆங்கிலேயர்களின் கீழ் இருந்த துறைகள் என்னென்ன?
a) உள்ளாட்சி, கல்வி, பொது சுகாதாரம்
b) நிதி,பாதுகாப்பு,காவல்துறை
c) நீதித்துறை, நிலவருவாய், நீர்ப்பாசனம்
d) பொதுப்பணி, வேளாண்மை, வனங்கள்
 
89. இந்து மகா சபை யார் தலைமையில் பிரபலமடைந்தது?
a) பால கங்காதர திலகர்
b) மதன் மோகன் மாளவியா
c) சுபாஷ் சந்திர போஸ்
d) இவர்கள் எவருமில்லை
 
90. முஸ்லீம் லீக் யார் தலைமையில் பிரபலமடைந்தது?
a) ஜின்னா சகோதரர்கள்
b) கலீபா சகோதரர்கள்
c) அலி சகோதரர்கள்
d) இவர்கள் எவருமில்லை
 
 
91. இந்து - முஸ்லீம்களின் இதயங்களை ஈர்க்கும் வகையில் காந்தியடிகள் எப்போது உண்ணாவிரதம் தொடங்கினார்? 
a) 1925
b) 1923
c) 1926
d) 1924
 
92. இந்திய சட்டப்பூர்வ ஆணையத்தை நியமிப்பதாக ஆங்கிலேய அரசு எப்போது அறிவித்தது?
a) 1927 டிசம்ப ர் 10
b) 1926 நவம்ப ர் 10
c) 1926 டிசம்ப ர் 8
d) 1927 நவம்ப ர் 8
 
93. கூற்று 1: சைமன் குழுவில் மொத்தம் ஏழு உறுப்பினர்கள் இடம்பெற்றிருந்தனர்.)
கூற்று 2 ஆனால் சைமன் குழுவில் இந்தியர் ஒருவர் கூட இடம் பெறவில்லை .
a) அனைத்தும் சரி
b)  மட்டும் சரி
c) அனைத்தும் தவறு
d) 1 மட்டும் சரி
 
94. இந்தியாவுக்கு அரசியல் சாசனம் உருவாக்குவதை குறிக்கோளாகக் கொண்டு அனைத்துக் கட்சி கூட்டம் எப்போது நடைபெற்றது?
a) 1928
b) 1927
c) 1926
d) 1924
 
95. இந்திய அரசியல் சாசன வரைவுக்கான திட்டம் வகுக்க யார் தலைமையிலான கமிட்டி அமைக்கப்பட்டது?
a) காந்தியடிகள்
b) சுபாஷ் சந்திர போஸ்
c) மோதிலால் நேரு
d) அம்பேத்கார்
 
96. கூற்று 1: அனைத்துக் கட்சி மாநாட்டில் ஜின்னாவின் 14 அம்சங்கள் என்ற தீர்மானம் நிராகரிக்கப்பட்டது.
கூற்று 1: ஆனால் மத்திய சட்டப் பேரவையில் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு (1/3 பங்கு) வெற்றி கண்டது.
a ) அனைத்தும் சரி
b) 2 மட்டும் சரி
 c) அனைத்தும் தவறு
d) 1 மட்டும் சரி
x

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY