வினாக்கள் - 10th - 19 ம் நூற்றாண்டில் சமூக சமய சீர்திருத்த இயக்கங்கள்.
10th – பாடம் -1
19 ம் நூற்றாண்டில் சமூக சமய சீர்திருத்த இயக்கங்கள்.
1. யாரை உருவாக்கும் நோக்கில் ஆங்கிலக் கல்வி அறிமுகம் செய்யப்பட்டது?
a) சிந்தனையாளர்களை
b) எழுத்தர்களை
c) அறிவாளிகளை
d) மொழி மாற்றிகளை
2. 19ம் நூற்றாண்டின் சீர்திருத்த இயக்கங்கள் எவை?
a) பிரம்மசமாஜம், பிரார்த்தனை சமாஜம்
b) அலிகார் இயக்கம்
c) 1 மட்டும்
d) இவை அனைத்தும்
3. 19ம் நூற்றாண்டின் சமயப் புத்தெழுச்சி மீட்டெடுப்பு இயக்கங்கள்
எவை ?
a) ஆரிய சமாஜம், தியோபந்த் இயக்கம்
b) ராமகிருஷ்ணா மிஷன்
c) இவை அனைத்தும்
d)2 மட்டும்
4. தமிழகத்தில் ஒடுக்குமுறைப்பாங்குடைய சமூகக்கட்டமைப்பை எதிர்க்கும் முயற்சியை மேற்கொண்டவர்கள்?
a) ஜோதிபா பூலே
b) நாராயணகுரு , அய்யங்காளி
c) வைகுண்ட சுவாமிகள், அயோத்திதாசர்
d) இவர்கள் அனைவரும்
5. புனேயில் ஒடுக்குமுறைப்பாங்குடைய சமூகக்கட்டமைப்பை எதிர்க்கும் முயற்சியை மேற்கொண்டவர்கள்?
a) ஜோதிபா பூலே
b) நாராயணகுரு, அய்யங்காளி
c) வைகுண்ட சுவாமிகள், அயோத்திதாசர்
d) இவர்கள் அனைவரும்
6. கேரளாவில் ஒடுக்குமுறைப்பாங்குடைய சமூகக்கட்டமைப்பை எதிர்க்கும் முயற்சியை மேற்கொண்டவர்கள்?
a) ஜோதிபா பூலே
b) நாராயணகுரு, அய்யங்காளி
c) வைகுண்ட சுவாமிகள், அயோத்திதாசர்
d) இவர்கள் அனைவரும்
7. ராஜாராம் மோகன்ராயின் காலம்?
a) 1817-1905
b) 1838-1884
c) 1772-1833
d) 1820-1891
8. ராஜாராம் மோகன்ராய் எந்தெந்த மொழிகளில் புலமை பெற்றிருந்தார்
a) சமஸ்கிருதம், அரபி
b) பாரசீகம், ஆங்கிலம்
c) வங்காளம்
d) இவை அனைத்தும்
9. ராஜாராம் மோகன்ராய் ----- ----ஐ எதிர்த்தார்?
a) பொருளற்ற சமய சமய சடங்குகள்
b) கேடுவிளைவிக்கும் சமூக மரபுகள்
c) இரண்டும்
d) இரண்டும் அல்ல
10. கூற்று 1: ராஜாராம் மோகன்ராய் இந்துக்களின் மறை நூல்கள் ஒரு கடவுள் கோட்பாட்டை உபதேசிப்பதாக கூறினார்.
கூற்று 2: மேலும் அவர் உருவ வழிபாட்டை எதிர்த்தார்.
a) 2 மட்டும் சரி
b) அனைத்தும் சரி
c) 1 மட்டும் சரி
d) அனைத்தும் தவறு
11. சதி ஒழிப்பு சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?
a) 1857
b) 1836
c) 1829
d) 1234
12. சதி ஒழிப்பு சட்டம் யாரால் இயற்றப்பட்டது?
a) காரன் வாலிஷ்
b) வில்லியம் பெண்டிங்
c) ராபர்ட் கிளைவ்
d) வாரன் ஹாஸ்டிங்
13. ராஜாராம் மோகன்ராய் பற்றி தவறானது எது?
a) சதி குழந்தை திருமணத்தை எதிர்த்தார்
b) பலதார மணத்தை ஆதரித்தார்
c) விதவைகள் மறுமணத்தை ஆதரித்தார்
d) பெண்களுக்கான கல்வியை ஆதரித்தார்
14. உபநிடதங்கள் கூறும் எல்லையற்ற ஆதி அந்தமில்லாத தெய்வீகம் எது?
a) சிவம்
b) பிரம்மம்
c) விஷ்ணு
d) இவை எதுவுமல்ல
15. பிரம்மசமாஜம் யாரால் நிறுவப்பட்டது?
அ) தேவேந்திரநாத் தாகூர்
b) கேசவ் சந்திர சென்
c) ராஜாராம் மோகன்ராய்
d) ஆத்மராம் பாண்டுரங்
16. பிரம்மசமாஜம் நிறுவப்பட்ட ஆண்டு?
a) 1829
b) 1828
c) 1827
d) 1826
17. ராஜாராம் மோகன்ராய் கல்கத்தாவில் கோவில் கட்டியது எப்போது?
a) ஆகஸ்ட் 20
b) ஆகஸ்ட் 18
c) ஆகஸ்ட்ட ம்
d) ஆகஸ்ட் 22
18. யாரைத் தன்பக்கம் ஈர்ப்பதில் பிரம்மசமாஜம் தோல்வி அடைந்தது?
a) கற்றறிந்த மேதைகளை
b) நவீன வங்காள பண்பாட்டு & நடுத்தர வர்க்கத்தினரை
c) கீழ்த்தட்டு மக்களை
d) கல்வியறிவு பெற்ற வங்காளிகளை
19. யாரின் மீதான பிரம்மசமாஜத்தின் தாக்கம் போற்றுதலுக்குரியது?
a) கற்றறிந்த மேதைகளை
b) நவீன வங்காள பண்பாட்டு & நடுத்தர வர்க்கத்தினரை
c) கீழ்த்தட்டு மக்களை
d) கல்வியறிவு பெற்ற வங்காளிகளை
20. ராஜாராம் மோகன் ராய் எந்த ஆண்டு இயற்கை எய்தினார்?
a) 1834
b) 1833
c) 1832
d) 1830
21. ராஜாராம் மோகன் ராய் இறந்த பிறகு அவர் விட்டுச்சென்ற பணிகளை தொடர்ந்தது யார்?
a) தேவேந்திரநாத் தாகூர்
b) கேசவ் சந்திர சென்
c) ஈஸ்வர சந்திர வித்யாசாகர்
d) ஆத்மராம் பாண்டுரங்
22. தேவேந்திரநாத் தாகூர் நம்பிக்கை பற்றிய எத்தனை கொள்கை கூறுகளை முன்வைத்தார்?
a) 5
b) 3
c) 4
d) 2
23. தேவேந்திரநாத் தாகூரின் காலம்?
a) 1817-1905
b) 1838-1884
c) 1772-1833
d) 1820-1891
24. தேவேந்திரநாத் தாகூர் ---- சீர்திருத்தவாதியாவார்
a) மிதவாத
b) தீவிரவாத
c) சாதாரண சமாஜ்
d) இவை அனைத்தும்
25. கேசவ சந்திர சென்னின் காலம்?
a) 1817-1905
b) 1838-1884
c) 1772-1833
d) 1820-1891
26. கேசவ சந்திர சென் எந்த ஆண்டு பிரம்மசமாஜத்தில் இணைந்தார்?
a) 1857
b) 1859
c) 1855
d) 1861
27. எந்த ஆண்டு பிரம்மசமாஜத்தில் பிளவு ஏற்பட்டது?
a) 1888
b) 1886
c) 1884
d) 1885
28. கேகவ சந்திர சென் எந்த மதத்தால் கவரப்பட்டார்?
a)சமணம்
b) பௌத்தம்
c) இஸ்லாம்
d) கிறித்துவம்
29. பிரம்மசமாஜத்தில் பிளவு ஏற்பட்ட பிறகு தேவிந்திரநாத் தாகூரின் சமாஜம் ---என அழைக்கப்பட்டது?
a) சாதாரண சமாஜ்
b) கண்டா சமாஜ்
c) ஆதி பிரம்ம சமாஜ்
d) இவற்றுள் எதுவுமில்லை
30. குழந்தை திருமணத்தை எதிர்த்தோர் பிரம்ம சமாஜத்திலிருந்து விலகி -- எனும் அமைப்பை நிறுவினர்?
a) சாதாரண சமாஜ்
b) கண்டா சமாஜ்
c) ஆதி பிரம்ம சமாஜ்
d) இவற்றுள் எதுவுமில்லை
31. ஈஸ்வர் சந்திர வித்யாசாகரின் காலம்?
a) 1817-1905
b) 1838-1884
c) 1772-1833
d) 1820-1891
32. விதவைகள் மறுமணச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?
a) 1856
b) 1858
c) 1855
d) 1860
33. முதல் திருமண வயதுச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?
a) 1856
b) 1858
c) 1855
d) 1860
34. முதல் திருமண வயதுச் சட்டம் கூறிய திருமண வயது?
a) 11 வயது
b) 10 வயது
c) 12 வயது
d) 13 வயது
35. திருமண வயது ஒப்புதல் கமிட்டி?
a) 1924
b) 1918
c) 1929
d) 1932
36. இரண்டாவது திருமணச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?
a) 1929
b) 1925
c) 1891
d) 1827
37. இரண்டாவது திருமணச் சட்டம் கூறிய திருமண வயது?
a) 11 வயது
b) 10 வயது
c) 12 வயது
d) 13 வயது
38. மூன்றாவது திருமணச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?
a) 1929
b) 1925
c) 1891
d) 1827
39. மூன்றாவது திருமணச் சட்டம் கூறிய திருமண வயது?
a ) 11 வயது
b) 10 வயது
c) 12 வயது
d) 13 வயது
40. பிரார்த்தனை சமாஜம் நிறுவப்பட்ட ஆண்டு?
a) 1857
b) 1867
c) 1877
d) 1847
41. நவீன வங்காள உரைநடையின் முன்னோடி?
a) தேவேந்திரநாத் தாகூர்
b) கேசவ் சந்திர சென்
c) ஈஸ்வர் சந்திர வித்யாசாகர்
d) ஆத்மராம் பாண்டுரங்
42 பிரார்த்தனை சமாஜத்தை நிறுவியவர் யார்?
a) தேவேந்திரநாத் தாகூர்
b) கேசவ் சந்திர சென்
c) ஈஸ்வர் சந்திர வித்யாசாகர்
d) ஆத்மராம் பாண்டுரங்
43. மகாதேவ் கோவிந்த ரானடே - இவரின் காலம்?
a) 1825-1898
b) 1842-1901
C) 1861-1884
d) 1824-1883
44. ஆத்மராம் பாண்டுரங் - இவரின் காலம்?
a) 1825-1898
b) 1842-1901
c) 1861-1884
d) 1824-1883
45. மகாதேவ் கோவிந்த் ரானடேவால் விதவை மறுமணச் சங்கம் நிறுவப்பட்ட ஆண்டு?
a) 1870
b) 1884
c) 1861
d) 1876
46. மகாதேவ் கோவிந்த் ரானடே வால் புனே சர்வஜனிக் சபா நிறுவப்பட்ட ஆண்டு?
a) 1870
b) 1884
c) 1861
d) 1876
47. மகாதேவ் கோவிந்த் ரானடேவால் தக்காணக் கல்விக்கழகம் நிறுவப்பட்ட ஆண்டு?
a) 1870
b) 1884
c) 1861
d) 1876
48. குலாம்கிரி - இது யாருடைய நூல்?
a) ஜோதிபா பூலே
b) நாராயணகுரு
c) அய்யங்காளி
d) வைகுண்ட சுவாமிகள்
49. குலாம்கிரி - இதன் பொருள் என்ன?
a) சாதி ஏற்றத் தாழ்வுகள்
b) விதவைகள்
c) அடிமைத்தனம்
d) இவற்றில் எதுவுமில்லை
50. ஆரிய சமாஜம் எங்கு சமய சீர்திருத்தங்களை மேற்கொண்டது.
a ) வங்காளம்
b) பஞ்சாப்
c) மகாராஷ்டிரா
d) குஜராத்
51. ஆரிய சமாஜம் யாரால் நிறுவப்பட்டது?
a) இராமகிருஷ்ண பரமஹம்சர்
b) மேடம் H.P. பிளவட்ஸ்கி
c) சுவாமி தயானந்த சரஸ்வதி
d) சுவாமி விவேகானந்தர்
52. தயானந்த சரஸ்வதியின் நூல் எது?
அ) வேதங்களுக்கு திரும்புவோம்
b) சத்யார்த்தபிரகாஷ்
c) எதிர்மத மாற்றம்
d) சுத்தி
53. கூற்று 1 ஆரிய சமாஜம் இந்துமதத்திலிருந்த மூடநம்பிக்கைகளை
குறிப்பாக புராண இலக்கியங்களை ஆதரித்தது.
கூற்று 2: மதம் மாறிய இந்துக்களை மீண்டும் இந்துக்களாக மாற்ற சுத்தி எனும் சுத்திகரிப்பு சடங்கை வகுத்தது.
a) 1 மட்டும் சரி
b) அனைத்தும் சரி
c) 2 மட்டும் சரி
d) அனைத்தும் தவறு
54. ஆரிய சமாஜத்தின் முக்கிய முழக்கம் யாது?
a) வேதங்களுக்கு திரும்புவோம்
b) சத்யார்த்த பிரகாஷ்
c) எதிர்மத மாற்றம்
d) இவை அனைத்தும்
55. ஆரிய சமாஜத்தின் முக்கியக் குறிக்கோள் யாது?
a ) வேதங்களுக்கு திரும்புவோம்
b) சத்யார்த்த பிரகாஷ்
c) எதிர்மத மாற்றம்
d) தூய்மைக் கோட்பாடு
56. ஆரிய சமாஜம் எப்போது பிளவுற்றது.
a) 1884
b) 1893
c) 1895
d) 1887
57. எதன் காரணமாக ஆரிய சமாஜம் பிளவுற்றது?
a) வேதங்களுக்கு அளித்த ஆதரவினால்
b) DAV பள்ளிகளினால்
c) எதிர்மத மாற்றத்தினால்
d) தூய்மைக் கோட்பாடு
58. ஷரத்தானந்தா - இவரின் காலம்?
a) 1825-1898
b) 1836-1886
c) 1857-1926
d) 1824-1883
59. இராமகிருஷ்ணா பரமஹம்சர் - இவரின் காலம்?
a) 1825-1898
b) 1836-1886
c) 1857-1926
d) 1863-1902
60. இராமகிருஷ்ணா பரமஹம்சர் எந்த ஊரை சேர்ந்தவர்?
a) தட்சிணேசுவரம் - கல்கத்தா
b) தட்சிணேசுவரம் - வங்காளம்
c) தட்சிணேசுவரம் - மும்பை
d) தட்சிணேசுவரம் - குஜராத்
61. இராமகிருஷ்ணா பரமஹம்சர் யாருடைய தீவிர பக்தர்?
a ) சிவன்
b) விஷ்ணு
c) காளி
d) விநாயகர்
62. ஜீவன் என்பதே சிவன் - இது யார் கூற்று?
a) இராமகிருஷ்ண பரமஹம்சர்
b) மேடம் . பிளவட்ஸ்கி
c) சுவாமி தயானந்த சரஸ்வதி
d) சுவாமி விவேகானந்தர்
63. ராமகிருஷ்ணா மிஷன் யாரால் நிறுவப்பட்டது?
a) இராமகிருஷ்ண பரமஹம்சர்
b) மேடம் H.P. பிளவட்ஸ்கி
c) சுவாமி தயானந்த சரஸ்வதி
d) சுவாமி விவேகானந்தர்
64. இராமகிருஷ்ணா பரமஹம்சர் எப்போது இயற்கை எய்தினார்?
a) 1898
b) 1886
c) 1926
d) 1883
65. சுவாமி விவேகானந்தர் - இவரின் காலம்?
a) 1825-1898
b) 1836-1886
C) 1857-1926
d) 1863-1902
66. சுவாமி விவேகானந்தர் பரிந்துரைத்த கோட்பாடு?
a) மரபுசார்ந்த தத்துவ நிலைப்பாடு
b) மனிதகுலத்திற்கு தொண்டு செய்தல்
c) இரண்டும் அல்ல
d) இரண்டும்
67. எந்த ஆண்டு சிகாகோவில் உலக சமய மாநாடு நடைபெற்றது?
a) 1895
b) 1874
c) 1893
d) 1886
68. பிரம்மஞான சபை யாரால் நிறுவப்பட்டது?
a)இராமகிருஷ்ண பரமஹம்சர்
b) மேடம் H.P. பிளவட்ஸ்கி
c) சுவாமி தயானந்த சரஸ்வதி
d) கர்னல் H.S. ஆல்காட்
69. பிரம்மஞான சபை எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
a) 1886
b) 1875
c) 1890
d) 1892
70. பிரம்மஞான சபை முதலில் எங்கு நிறுவப்பட்டது?
a) பிரிட்டன்
b) இத்தாலி
c) அமெரிக்கா
d) லண்ட ன்
71. பிரம்மஞான சபை சென்னையில் எங்கு நிறுவப்பட்டது?
a) அண்ணா நகர்
b) வேளச்சேரி
c) சைதாப்பேட்டை
d) அடையாறு
72. பிரம்மஞான சபை சென்னையில் எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
a) 1886
b) 1875
c) 1890
d) 1892
73. மேடம் H.P. பிளாவட்ஸ்கி / இவரின் காலம்?
a) 1823-1907
b) 1831-1891
c) 1832-1907
d) 1844-1886
74. கர்னல் H.S. ஆல்காட் - இவரின் காலம்?
a) 1823-1907
b) 1831-1891
c) 1832-1907
d) 1844-1886
75. பிரம்மஞான சபை இந்தியாவில் எந்த சமயம் புத்துயிர் பெற முக்கிய பங்காற்றியது?
a) சமணம்
b) பௌத்தம்
c) இந்து
d) கிறித்துவம்
76. அன்னி பெசன்ட் - இவரின் காலம்?
a) 1823-1907
b) 1847-1933
c) 1832-1907
d) 1844-1886
77. அன்னி பெசன்ட் - இவருடன் தொடர்புடையது எது?
a) தன்னாட்சி இயக்கம்
b) நியூ இந்தியா
c) காமன்வீல்
d) இவை அனைத்தும்
78. நியூ இந்தியா, காமன்வீல் என்பவை?
a) புத்தகங்கள்
b) கட்டுரைகள்
c) செய்தித்தாள்கள்
d) இவற்றில் எதுவுமில்லை
79. அயர்லாந்திற்கு வழங்கப்பட்டதைப் போல இந்தியாவிற்கும் ---- வழங்கப்பட வேண்டும் என அன்னிபெசன்ட் கூறினார்.
a) சுதந்திரம்
b) மத நல்லிணக்கம்
c) கருத்துரிமை
d) தன்னாட்சி
80. பிராமண எதிர்ப்பியக்கத்தின் தொடக்ககால தலைவர்?
a) நாராயண குரு
b) அய்யன்காளி
c) ஜோதிபா பூலே
d) சர் சையத் அகமதுகான்
81. ஜோதிபா பூலே எந்த ஆண்டு பிறந்தார்?
a) 1844
b) 1827
c) 1834
d) 1852
82. ஜோதிபா பூலே ஒடுக்கப்பட்டோருக்கான முதல் பள்ளியை எந்த ஆண்டு தொடங்கினார்?
a) 1844
b) 1827
c) 1834
d) 1852
83. ஜோதிபா பூலே ஒடுக்கப்பட்டோருக்கான முதல் பள்ளியை எங்கு
தொடங்கினார்?
a) புனே
b) டெல்லி
c) குஜராத்
d) மகாராஷ்டிரா
84. கூற்று 1 ஜோதிபா பூலே சத்தியசோதக் சமாஜ் எனும் அமைப்பை பிராமணரல்லாத மக்களுக்காக உருவாக்கினார்.
கூற்று 2: அவர் எழுதிய நூலான குலாம்கிரி அவருடைய பெரும்பாலான தீவிரக்கருத்துக்களை சுருக்கி கூறுகிறது.
a) 1 மட்டும் சரி
b) அனைத்தும் சரி
c) 2 மட்டும் சரி
d) அனைத்தும் தவறு
85. ஜோதிபா பூலே எங்கு பிறந்தார்?
a ) கேரளா
b) மகாராஷ்டிரா
c) வங்காளம்
d) குஜராத்
86. நாராயண குரு எந்த ஆண்டு பிறந்தார்?
a) 1857
b) 1856
c) 1855
d) 1854
87. நாராயண குரு எங்கு பிறந்தார்?
a) கேரளா
b) மகாராஷ்டிரா
c) வங்காளம்
d) டெல்லி
88. சத்திய சோதக் சமாஜ் - இதன் பொருள் என்ன?
a) ஏழை மக்கள் பாதுகாப்பு சங்கம்
b) ஏழை மக்கள் நலவாழ்வு சங்கம்
c) உண்மையை நாடுவோர் சங்கம்
d) உண்மையை பேசுவோர் சங்கம்
89. சாது ஜன பரிபாலன சங்கம் யாரால் நிறுவப்பட்டது?
a) நாராயண குரு
b) அய்யன்காளி
c) ஜோதிபா பூலே
d) சர் சையத் அகமதுகான்
90. அய்யன்காளி - இவரது காலம்?
a) 1817-1898
b) 1832-1880
c) 1826-1905
d) 1863-1941
91. கூற்று 1: நாராயண குரு அருவிபுரம் எனும் ஊரில் கோவில் ஒன்றைக் கட்டி அதை மக்கள் அனைவருக்கும் அர்ப்பணித்தார் கூற்று 2: குமாரன் ஆசான், டாக்டர் பால்பு போன்றோர் இவரால் கவரப்பட்டவர்களாவர்.
a ) 1 மட்டும் சரி
b) அனைத்தும் சரி
c) 2 மட்டும் சரி
d) அனைத்தும் தவறு
92. அய்யன்காளி எங்கு பிறந்தார்?
a) திருவிதாங்கூர்
b) வெங்கனூர்
c) கொல்லம்
d) வயநாடு
93. ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன யோகம் எனும் அமைப்பை உருவாக்கியது யார்?
a) நாராயண குரு
b) அய்யன்காளி
c) ஜோதிபா பூலே
d) சர் சையத் அகமதுகான்
94. சாது ஜன பரிபாலன சங்கம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
a) 1905
b) 1906
c) 1907
d) 1908
95. சாது ஜன பரிபாலன சங்கம் - இதன் பொருள் என்ன?
a) ஏழை மக்கள் பாதுகாப்பு சங்கம்
b) ஏழை மக்கள் நலவாழ்வு சங்கம்
c) உண்மையை நாடுவோர் சங்கம்
d) உண்மையை பேசுவோர் சங்கம்
96. சர் சையத் அகமதுகான் - இவரது காலம்?
a) 1826-1905
b) 1853-1941
c) 1817-1898
d) 1832-1880
97. சர் சையத் அகமதுகான் - இவர் எங்கு பிறந்தார்?
a ) கேரளா
b) மகாராஷ்டிரா
c) வங்காளம்
d) டெல்லி
98. சர் சையத் அகமதுகான் ஆங்கில அறிவியல் நூல்களை எந்த
மொழியில் மொழியாக்கம் செய்தார்?
a) இந்தி
b) சமஸ்கிருதம்
c) உருது
d). தெலுங்கு
99. அலிகார் இயக்கம் யாரால் தொடங்கப்பட்டது?
a) முகமது குவாசிம் நானோதேவி
b) ரஷித் அகமத் கங்கோத்ரி
c) மௌலானா முகமது-உல்-ஹாசன்
d) சர் சையது அகமது கான்
100. அலிகார் முகமதிய ஆங்கிலோ- ஓரியண்டல் கல்லூரி எந்த ஆண்டு
தொடங்கப்பட்டது?
a) 1856
b) 1875
C) 1920
d] 1942
101. அலிகார் முகமதிய ஆங்கிலோ- ஓரியண்டல் கல்லூரி எந்த ஆண்டு பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்பட்டது?
a) 1856
b) 1875
c) 1920
d) 1942
102. அலிகார் முகமதிய ஆங்கிலோ- ஓரியண்டல் கல்லூரி யாரால நிறுவப்பட்டது?
a) முகமது குவாசிம் நானோதேவி
b) ரஷித் அகமத் கங்கோத்ரி
c) மௌலானா முகமது-உல - ஹாசன்
d) சர் சையது அகமது கான்
103. ரஷித் அகமத் கங்கோதரி - இவரது காலம்?
a) 1826-1905
b) 1863-1941
c) 1847-1898
d) 1832 1880
104. முகமது குவாசிம் நானோதேவி - இவரது காலம்?
a) 1826-1905
b) 1863-1941
c) 1817-1898
d) 1832-1880
105. முஸ்லீம் உலேமாக்கள் யார் தலைமையில் உத்திரபிரதேசத்தில் சகரன்பூரில் பள்ளி ஒன்றை நிறுவினர்?
a) முகமது குவாசிம் நானோதேவி
b) ரஷித் அகமத் கங்கோத்ரி
c) மௌலானா முகமது -உல்-ஹாசன்
d) சர் சையது அகமது கான்
106. முஸ்லீம் உலேமாக்கள் உத்திரபிரதேசத்தில் சகரன்பூரில் பள்ளி
ஒன்றை எந்த ஆண்டு நிறுவினர்?
a) 1865
b) 1866
c) 1867
d) 1868
107. கூற்று 1: தியோபந்த பள்ளி தனது மாணவர்களை அரசுப் பணிக்கு தயார் செய்தது.
கூற்று 2: தியோபந்த் பள்ளி அகில இந்திய காங்கிரசு கட்சி உருவாக்கப்பட்டதை வரவேற்றது.
a) 1 மட்டும் சரி
b) அனைத்தும் சரி
c) 2 மட்டும் சரி
d) அனைத்தும் தவறு
108. அகில இந்திய காங்கிரசு கட்சி எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
a) 1885
b) 1888
c) 1886
d) 1887
109. தி யுனைடெட் பேட்ரியாட்டிக் அசோசியேசன் என்ற அமைப்பு யாருடையது?
a) மௌலானா முகமது-உல்-ஹாசன்
b) சர் சையது அகமது கான்
c) முகமது குவாசிம் நானோதேவி
d) ரஷித் அகமத் கங்கோத்ரி
110. முகமதன் ஆங்கிலோ- ஓரியன்டல் அசோசியேசன் என்ற அமைப்பு யாருடையது?
a) ரஷித் அகமத் கங்கோத்ரி
b) மௌலானா முகமது-உல்-ஹாசன்
c) சர் சையது அகமது கான்
d) முகமது குவாசிம் நானோதேவி
111. FATWA - இதன் பொருள் என்ன?
a) இறையியலாளர்கள் அவை
b) சமய ஆணை
c) உண்மையான முஸ்லிம்கள்
d) உண்மை விளம்பி
112 ஜமைத்-உல்-உலேமா இதன் இதன் பொருள் என்ன?
a) இறையியலாளர்கள் அவை
b) சமய ஆணை
c) உண்மையான முஸ்லிம்கள்
d)உண்மை விளம்பி
113. ஜமைத்-உல்-உலேமா என்ற அமைப்பு யார் தலைமையில் இயங்கியது?
a) ரஷித் அகமத் கங்கோத்ரி
b) மௌலானா முகமது-உல்-ஹாசன்
c) சர் சையது அகமது கான்
d) முகமது குவாசிம் நானோதேவி
114. எந்த ஆண்டு தியோபந்த உலேமா சையத் அகமத்கானுடைய அமைப்புகளுக்கு எதிராக சமய ஆணை பிறப்பித்தது?
a) 1885
b) 1887
c) 1886
d) 1888
115. பார்சிகளின் சீர்திருத்த இயக்கம் எங்கு தொடங்கப்பட்டது.
a) பம்பாய்
b) டெல்லி
c) கல்கத்தா
d) குஜராத்
116. பார்சிகள் எங்கிருந்து இந்தியா வந்தனர்?
a) ஈராக்
b) ஈரான்
c) பாரசீகம்
d) கிரேக்கம்
117. பார்சிகள் எந்த நூற்றாண்டில் இந்தியா வந்தனர்?
a) 9ம் நூற்றாண்டு
b) 8ம் நூற்றாண்டு
c) 10ம் நூற்றாண்டு
d) ம் நூற்றாண்டு
118. ரஹ்னுமாய் மஜ்தயாஸ்னன் சபா - என்ற அமைப்பு யாரால் உருவாக்கப்பட்டது?
a) பெரோசா மேத்தா
b) பர்துன்ஜி நௌரோஜி
c) தீன்சா வாச்சா
d) பெர்ரம்ஜி மல்பாரி
119. ரஹனுமாய் மஜ்தயாஸ்னன் சபா - என்ற அமைப்பு எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?
a) 1854
b) 1852
c) 1851
d) 1853
120. ராஸ்ட் கோப்தார் - இதன் பொருள் என்ன?
a) இறையியலாளர்கள் அவை
b) சமய ஆணை
c) சீர்திருத்த சங்கம்
d) உண்மை விளம்பி
121. இவர்களுள் யார் குழந்தை திருமணத்திற்கு எதிராக சட்டம் இயற்றப்பட வேண்டும் என இயக்கம் நடத்தியது?
a) பெரோசா மேத்தா
b) பர்துன்ஜி நௌரோஜி"
c) தீன்சா வாச்சா
d) பெர்ரம்ஜி மல்பாரி
122 நிரங்கரி இயக்கத்தின் நிறுவனர்?
a) பாபாராம் சிங்
b) பாபா தயாள்தாஸ்
c) இருவரும்
d) இருவரும் அல்ல
123. நிரங்கரி இயக்கத்தின் முக்கியக் குறிக்கோள்?
a) உருவமற்ற இறைவனை வழிபடுவது
b) சீக்கியர்களின் அடையாளங்களை அணிவது
C) மது, மாமிசத்தை கைவிடுவது
d) குழந்தை திருமணத்தை தடை செய்வது
124. நாம்தாரி இயக்கத்தின் நிறுவனர்?
a) பாபாராம் சிங்
b) பாபா தயாள்தாஸ்
c) இருவரும்
d) இருவரும் அல்ல
125. நாம்தாரி இயக்கத்தின் முக்கியக் குறிக்கோள்?
a) சீக்கிய மதத்தின் புனிதத்தை மீட்டெடுப்பது
b) குழந்தை திருமணத்தை தடை செய்வது
c) உருவமற்ற இறைவனை வழிபடுவது
d) சீக்கியர்களின் அடையாளங்களை அணிவது
126. சிங்சபா எனும் அமைப்பு எங்கு நிறுவப்பட்டது?
a) கல்கத்தா
b) ஆக்ரா
c) அமிர்தசரஸ்
d) டெல்லி
127. சிங்சபா எனும் அமைப்பின் முக்கியக் குறிக்கோள்?
a) சீக்கிய மதத்தின் புனிதத்தை மீட்டெடுப்பது
b) குழந்தை திருமணத்தை தடை செய்வது
c) உருவமற்ற இறைவனை வழிபடுவது
d) சீக்கியர்களின் அடையாளங்களை அணிவது
128. சிங்சபா எந்த இயக்கத்தின் முன்னோடி?
a) கால்சா
b) அலிகார்
c) அகாலி
d) இவற்றுள் எதுவுமில்லை
129. அமிர்தசரஸில் சீக்கியர்களுக்காக கட்டப்பட்ட கல்லூரி?
a) கால்சா
b) அலிகார்
c) அகாலி
d) இவற்றுள் எதுவுமில்லை
130. இராமலிங்க அடிகள் எங்கு பிறந்தார்?
a) கடலூர்
b) வடலூர்
c) மருதூர்
d) புகலூர்
131. இராமலிங்க அடிகள் - இவரது காலம்?
a) 1809-1851
b) 1845-1914
c) 1835-1894
d) 1823-1874
132. சமரச வேத சன்மார்க்க சங்கம் எனும் அமைப்பு எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
a) 1866
b) 1856
c) 1867
d) 1869
133. இராமலிங்க அடிகள் இலவச உணவுச்சாலையை எந்த ஆண்டு நிறுவினார்?
a) 1866
b) 1856
c) 1867
d) 1869
134. இராமலிங்க அடிகள் இலவச உணவுச்சாலையை எந்த ஊரில் நிறுவினார்?
a) கடலூர்
b) வடலூர்
c) மருதூர்
d) புகலூர்
135. இராமலிங்க அடிகளாரின் பாடல்கள் எந்தத் தலைப்பில் தொகுக்கப்பட்டன?
a) மருட்பா
b) திருவருட்பா
c) அருட்பா
d) பொருட்பா
135. பழமைவாத சைவர்கள் இராமலிங்க அடிகளாரின் பாடல்கள் என்னவென்று கூறினர்?
a) மருட்பா
b) திருவருட்பா
c) அருட்பா
d) பொருட்பா
136. வைகுண்ட சுவாமிகள் - இவரது காலம்?
a) 1809-1851
b)1845-1914
c) 1835-1894
d) 1823-1874
137. கூற்று 1: வைகுண்ட சுவாமிகளின் இயற்பெயர் முடிசூடும் பெருமாள்
என்பதாகும்.
கூற்று 2: உயர்சாதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் அவரது பெயர் முத்துக்குட்டி என மாற்றப்பட்டது.
a ) 1 மட்டும் சரி
b) அனைத்தும் சரி
c) 2 மட்டும் சரி
d) அனைத்தும் தவறு
138. சத்ய ஞான சபா எங்குள்ளது?
a) கடலூர்
b) வடலூர்
c) மருதூர்
d) புகலூர்
139. வெள்ளைப் பிசாசுகளின் ஆட்சியென்று ஆங்கிலேயரை விமர்சித்தவர் யார்?
a ) பாபாராம் சிங்
b) பாபா தயாள்தாஸ்
c) இராமலிங்க அடிகள்
d) வைகுண்ட சுவாமிகள்
140. கறுப்புப் பிசாசுகளின் ஆட்சி என்று வைகுண்ட சுவாமிகள் யாருடைய ஆட்சியைக் குறிப்பிட்டார்?
a) ஆற்காடு நவாப் ஆட்சி
b) முகலாயர் ஆட்சி
c) திருவிதாங்கூர் அரசர் ஆட்சி
d) போர்த்துகீசியர் ஆட்சி
141. எதற்காக வைகுண்ட சுவாமிகள் தியானம் செய்ய தொடங்கினார்?
a) சாதி வேற்றுமைகளை ஒழிக்க
b) சமூக ஒருங்கிணைப்பிற்கு
c) இரண்டிற்கும்
d) இரண்டிற்கும் அல்ல
142. எந்த ஆண்டு வைகுண்ட சுவாமிகள் தியானத்தை தொடங்கினார்?
a) 1834
b) 1833
c) 1832
d) 1831
143. வைகுண்ட சுவாமிகள் எங்கு தெய்வீக அனுபவத்தை பெற்றார்?
a ) திருவிதாங்கூர்
b) திருச்செந்தூர்
c) திருவண்ணாமலை
d) திருமலை
144. சமத்துவ சமாஜம் எனும் அமைப்பை நிறுவியது யார்?
a) வைகுண்ட சுவாமிகள்
b) அயோத்தி தாசர்
c) இராமலிங்க அடிகள்
d) தயானந்த சரஸ்வதி
145. அயோத்தி தாசர் - இவரது காலம்?
a) 1809-1851
b) 1845-1914
C) 1835-1894
d) 1823-1874
146. பொது மக்கள் யாரை அய்யா (தந்தை) என அழைத்தனர்?
a) வைகுண்ட சுவாமிகள்
b) அயோத்தி தாசர்
c) இராமலிங்க அடிகள்
d) தயானந்த சரஸ்வதி
147. யாருடைய சமய வழிபாட்டு முறை அய்யாவழி என அறியப்பட்டது?
a) இராமலிங்க அடிகள்
b) தயானந்த சரஸ்வதி
c) வைகுண்ட சுவாமிகள்
d) அயோத்தி தாசர்
148. கூற்று 1: வைகுண்ட சுவாமிகள் உருவ வழிபாட்டை ஆதரித்தார்.
கூற்று 2: அவரது கருத்துக்கள் அகிலத்திரட்டு எனும் பெயரில் தொகுக்கப்பட்டது.
a ) 1 மட்டும் சரி
b) அனைத்தும் சரி
c) 2 மட்டும் சரி
d) அனைத்தும் தவறு
149. ஒடுக்கப்பட்டோரின் கோவில் நுழைவுக்கு ஆதரவாக அயோத்தி தாசர் நிறுவிய அமைப்பு?
a)திராவிட மகாஜனசபை
b) திராவிடர்க் கழகம்
c) அத்வைதானந்தா சபா
d) சமத்துவ சமாஜம்
150. பொருத்துக:
1882 - திராவிடர்க் கழகம்
1885 - திராவிட பாண்டியன்
1891 - திராவிட மகாஜனசபை
1907 - ஒரு பைசா தமிழன்
151. அயோத்தி தாசர் எந்த ஆண்டு இயற்கை எய்தினார்?
a) 1914
b) 1915
c) 1916
d) 1917
152. திராவிடர்க் கழகம் எனும் அமைப்பு பாரால் நிறுவப்பட்டது?
a) அயோத்தி தாசர்
b) ஜான் திரவியம்
c) இருவரும்
d) இருவரும் அல்லர்
153. திராவிட மகாஜனசபை என்ற அமைப்பின் முதல் மாநாடு எங்கு நடைபெற்றது?
a) சென்னை
b) நீலகிரி
c) கடலூர்
d) நாகப்பட்டினம்
154. ஒரு பைசா தமிழன் என்பது --- பத்திரிகை?
a) மாதாந்திரப் பத்திரிக்கை
b) தினசரிப் பத்திரிக்கை
c) வருடாந்திரப் பத்திரிக்கை
d) வாராந்திரப் பத்திரிக்கை
155. அயோத்தி தாசர் எந்த ஆண்டு இலங்கை சென்றார்?
a) 1897
b) 1898
c) 1899
d) 1896
156. இலங்கை சென்ற அயோத்தி தாசர் எந்த சமயத்தை தழுவினார்?
a) சமணம்
b) சைவம்
c) வைணவம்
d) பௌத்தம்
157. யாருடைய தாக்கத்தின் விளைவாக அயோத்தி தாசர் இலங்கை சென்றார்?
a ) இராமகிருஷ்ண பரமஹம்சர்.
b) மேடம் H.P. பிளவட்ஸ்கி
c) அன்னிபெசன்ட் அம்மையார்
d) கர்னல் H.S. ஆல்காட்
158. ஒடுக்கப்பட்டவர்களை அயோத்தி தாசர் --- என அழைத்தார்?
a) திராவிடர்
b) மதமற்ற திராவிடர்
c) சாதி பேதமற்ற திராவிடர்
d). இவை அனைத்தும்
159. சாக்கிய பௌத்த சங்கம் எனும் அமைப்பை அயோத்தி தாசர் எங்கு நிறுவினார்?
a) சென்னை
b) நீலகிரி
c) கடலூர்
d) நாகப்பட்டினம்
160. சாக்கிய பெளத்த சங்கம் எனும் அமைப்பை அயோத்தி தாசர் எந்த ஆண்டு நிறுவினார்?
a) 1899
b) 1898
c) 1897
d) 1896
161. எந்த சமய நிலைப்பாட்டிலிருந்து அயோத்தி தாசர் தமிழ் இலக்கியங்களுக்கும் நாட்டார் வழக்காற்றியல் மரபுக்கும் புதிய விளக்கங்கள் கொடுத்தார்?
a) சமணம்
b) சைவம்
c) வைணவம்
d) பௌத்தம்
Leave Comments
Post a Comment