News
டி.என்.பி.எஸ்.சி. புதிதாக நிரப்ப இருக்கும் பணியிடங்கள் எவை ? தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கான பணியிடங்களில் தேர்வு மூலம் தகுதியானவர்களை தேர்ந்தெடுக்கும் பணியை மேற்கொண்டு வரும் டி.என்.பி.எஸ்.சி. , தற்போது கூடுதலாக சில கழக , வாரிய நிறுவனங்களில் இருக்கும் பணியிடங்களுக் கும் தேர்வை நடத்த இருக்கிறது . இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சிதலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது : அரசின் ஆணைப்படி , கூட்டுறவுத்துறை , மின்வாரியத்துறை , ஆவின் , வீட்டுவசதி வாரியத்துறை உள்பட அனைத்து கழக நிறுவனங்கள் , வாரிய நிறுவனங்களின் அனைத்து பணியிடங் களும்டி.என்.பி.எஸ்.சி . மூலம் நிரப்பப்பட இருக்கின்றன . அதற்கு முன்னோட்டமாக அந்த பணியிடங்களை குரூப் -2 , 2 ஏ , 4 தொகுதிகளாக பிரிக்க இருக்கிறோம் . இனி வரும் காலங்களில் எந்த கழகங்களும் , வாரியங்களும் தனியாக பணியாளர்களை நியமிக்க முடியாது . சம்பந்தப்பட்ட ஒவ்வொரு துறையில் இருந்து சேவை விதிகள் , அதற்கான தகுதிகள் ஆகியவற்றை கேட்டுவருகிறோம்.அவற்றை ஒழுங்குப்படுத்த வேண்டும் . ஒவ்வொரு துறைக்கும் தனித்தனி யாக தேர்வுநடத்த முடியாது . அதனால் அந்த பணிகளை தேவைக ளின் அடிப்படையில் தொகுதிகளாக பிரித்து , தேர்வு நடத்த திட்ட மிட்டுள்ளோம் . இதற்கான முழுத்தகவல்கள் மே மாதத்தில் வெளி யிடப்படும் . அதனைத்தொடர்ந்து மேற்சொன்ன கழகங்கள் , வாரியங்களில் இருக்கும் காலி பணியிடங்கள் டி.என்.பி.எஸ் . சி.யின் நடப்பாண்டு அட்டவணையில் சேர்க்க இருக்கிறோம் . இவ்வாறு அவர் கூறினார் .
டி.என்.பி.எஸ்.சி. புதிதாக நிரப்ப இருக்கும் பணியிடங்கள் எவை ?

Previous article
Next article
Leave Comments
Post a Comment