Ads Right Header

நெருக்கடி நிலை ஏற்பாடு!

 


நெருக்கடி நிலை ஏற்பாடு
நமது அரசியலமைப்பின் நெருக்கடிநிலை ஏற்பாடுகளின் படி கூட்டாட்சி அரசினை கைப்பற்றி வலுவான மைய அரசாக மாற்ற முடியும்.
அரசியலமைப்பின் இறையாண்மை, ஒற்றுமை, ஒருமைப்பாடு, மற்றும் நாட்டின் பாதுகாப்பு, மக்களாட்சி அரசியல் முறை, மற்றும் அரசியலமைப்பு ஆகியவற்றை பாதுகாக்க நெருக்கடிநிலை ஏற்பாடு உருவாக்கப்பட்டுள்ளது.
சரத்து 352 – 360 (பகுதி XVIII)
  • அரசியலமைப்பின்படி வழக்கமான அரசு இயந்திரம் மூன்று வித வழக்கத்திற்கு மாறான சூழல்களில் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்படும்.
  • தேசிய நெருக்கடி நிலை (சரத்து 352)
  • மாநில நெருக்கடி நிலை (குடியரசுத் தலைவர் ஆட்சிஃ அரசியலமைப்பு நெருக்கடிஃசரத்து 356)
  • நிதி நெருக்கடி நிலை (சரத்து 360)
  1. தேசிய நெருக்கடி நிலை (National Emergency)
  • இந்தியா முழுமைக்கோ அல்லது குறிப்பிட்ட பகுதிக்கோ போர் அல்லது அந்நிய ஆக்கிரமிப்பு அல்லது ஆயுதமேந்திய கலகத்தினால் அச்சுறுத்தல் ஏற்பட்டால் குடியரசுத் தலைவர் ஷரத்து 352-ஐ பயன்படுத்தி நெருக்கடி நிலையை செயல்படுத்துவார்.
  • கேபினட்டின் எழுத்து பூர்வமான பரிந்துரையின் பேரில் குடியரசுத் தலைவர் தேசிய நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்துவார்.
  • பிரகடனப்படுத்தப்பட்ட நெருக்கடி நிலையினை பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒரு மாத காலத்திற்குள் கட்டாயம் அங்கீகரிக்க வேண்டும். (உண்மையில் 2-மாதம் இருந்தது. 1978-ம் ஆண்டு 44-வது அரசியலமைப்பு திருத்தம் வாயிலாக ஒரு மாதமாக குறைக்கப்பட்டது.)
  • துவக்கத்தில் 6-மாதகாலத்திற்குள் நெருக்கடி நிலை தொடர பாராளுமன்றத்தின் இரு அவைகளும் ஒப்புதல் அளித்துவிட்டால் அடுத்து ஒவ்வொரு 6-மாத காலம் வீதம் எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் நெருக்கடி நிலையை நீடிக்கலாம். (இந்த ஏற்பாடு 1978-ம் ஆண்டு 44-வது திருத்தம் வாயிலாக சேர்க்கப்பட்டது)
  • முன்னால் பிரதமர் இந்திரா காந்தியினால் அறிவிக்கப்பட்ட “அவசர நிலைக்கால விதி” களை (1975 – 77) மீளாய்வு செய்தது. ஷா கமிஷன் ஆகும்.
நெருக்கடி நிலை இரத்து செய்தல்
  • நெருக்கடி நிலை தொடர்வகை நீக்க மக்களவை தீர்மானம் நிறைவேற்றினால் குடியரசுத் தலைவர் கட்டாயம் நெருக்கடி நிலையை முடிவுக்கு கொண்டுவரவேண்டும் (இந்த பாதுகாப்பு 1978-ம் ஆண்டு 77வது திருத்தம் மூலம் சேர்க்கப்பட்டது)
  • 1978-ம் ஆண்டு 44-வது திருத்தத்தின் படி மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் 1ஃ10 பங்கு உறுப்பினர்கள் எழுத்து மூலமான அறிக்கையை மக்களவைத் தலைவருக்கு வழங்கவேண்டும் (மக்களவை கூடாத போது குடியரசுத் தலைவரிடம் வழங்கவேண்டும்) இதற்காக 14 – நாட்களுக்குள் ஒரு சிறப்புக் கூட்டத்தை கூட்டி நெருக்கடி நிலையை முடிவுக்கு கொண்டுவரலாம்.
  • நெருக்கடி நிலையை முடிவுக்கு கொண்டுவரப்படும் தீர்மானத்தை மக்களவையில் சாதாரண பெரும்பான்மையில் நிறைவேற்றினால் போதும்.
தேசிய நெருக்கடி நிலையின் விளைவுகள்: மத்திய மாநில அரசுகளின் உறவுகள்
  • நிர்வாகத் துறை – மாநில அரசிற்கு மத்திய அரசானது எந்த துறை தொடர்பாகவும் கட்டளை இடலாம்.
  • நிதித்துறை – அரசியலமைப்பின் படி மத்திய அரசு மாநில அரசிற்கு வழங்கும் நிதிப் பங்கீடுகளை குடியரசுத்தலைவர் மாற்றியமைக்கலாம்.
  • மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்கும் நிதியினை குடியரசுத்தலைவர் குறைக்கவோ அல்லது நீக்கவோ முடியும்.
  • சட்டமியற்றும் துறை – பாராளுமன்றமானது மாநில பட்டியலில் உள்ள எந்த துறையின் மீதும் சட்டம் இயற்றலாம்.
  • மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களின் பணியை நீடித்தல்
  • மக்களவையின் இயல்பான காலத்தை (5 ஆண்டுகள்) பாராளுமன்ற சட்டம் வாயிலாக ஓர் ஆண்டு காலம் கூடுதலாக நீட்டிக்கலாம். (ஆண்டுக்கு ஒரு முறை வீதம் எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் நீடிக்கலாம்).
  • நெருக்கடி நிலையை முடிவுக்கு கொண்டு வந்ததில் இருந்து 6-மாதம் காலம் வரை நெருக்கடி நிலை நீடிக்கும் அதற்கு பின்பு செயலிழந்துவிடும்.
  • 5-வது மக்களவை (1971-77) ஆண்டுக்கு ஒருமுறை வீதம் இரண்டு முறை நீடிக்கப்பட்டது. மக்களவையின் காலத்தை நீடித்தது போல் பாராளுமன்றம் மாநில சட்டமன்றத்தின் ஆயுட் காலத்தை நீடிக்கலாம்.
அடிப்படை உரிமைகள்
  • சரத்து 358 மற்றும் 359 ஆகியன தேசிய நெருக்கடி நிலையின் போது அடிப்படை உரிமைகளை நிறுத்தி வைப்பது தொடர்பாக கூறுகிறது.
  • சரத்து 358-ஆனது ஷரத்து 19-ல் உத்திரவாதம் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை நிறுத்தி வைப்பது தொடர்பாகவும் சரத்து 359-ஆனது ஷரத்து 20 மற்றும் 21த்தவிர பிற அடிப்படை உரிமைகளை நிறுத்தி வைப்பது தொடர்பாகவும் கூறுகிறது.
  1. குடியரசுத்தலைவர் ஆட்சி (மாநில நெருக்கடி நிலை ஃ அரசியலமைப்பு நெருக்கடி நிலை)
  • சரத்து 355-ன் படி மத்திய அரசானது அரசியலமைப்பின் படி ஒவ்வொரு மாநில அரசும் செயல்படுவதையும் உறுதி செய்ய வேண்டும்.
  • குடியரசுத்தலைவர் ஆட்சி ஷரத்து 356-ன் இரண்டு முறைகளில் பிரகடனப்படுத்தப்படுகிறது.
  • சரத்து 356-ன் படி மாநில அரசானது அரசியலமைப்பின் படி செயல்பட முடியாத போது இது பிரகடனப் படுத்தப்படும்.
  • சரத்து 365-ன் படி மத்திய அரசு மாநில அரசிற்கு வழங்கும் வழிகாட்டுதல் படி மாநில அரசு செயல்படாமல் தோல்வி காணும்போது.
  • பாராளுமன்ற ஒப்புதல் மற்றும் காலம்
  • குடியரசுத்தலைவர் ஆட்சி பிரகடனப் படுத்தப்பட்டதிலிருந்து 2-மாத காலத்திற்குள் பாராளுமன்றத்தின் ஒப்புதலை பெறவேண்டும்.
  • பாராளுமன்றத்தினால் ஒப்புதல் வழங்கப்பட்டதிலிருந்து 6-மாத காலம் நீடிக்கும். அடுத்த ஒவ்வொரு 6 மாதகாலத்திற்கும் நெருக்கடி நீடிக்கலாம். ஆனால் 3-ஆண்டுகளுக்கு மேல் குடியரசுத்தலைவர் ஆட்சியை நீடிக்க இயலாது.
  • தேர்தல் ஆணையம், குடியரசுத்தலைவர் ஆட்சி செயல்படுத்தப்பட்டுள்ள மாநிலங்களில் பொது தேர்தல் நடத்துவதற்கு சாதகமான சூழல் இல்லை என்பதைக் கண்டிப்பாக உறுதியளிக்க வேண்டும்.
  • குடியரசுத்தலைவர் ஆட்சியை குடியரசுத்தலைவர் அது தொடர்பான தீர்மானத்தின் வாயிலாக முடிவுக்கு கொண்டுவரலாம். இது தொடர்பான பிரகடனத்திற்கு பாராளுமன்ற ஒப்புதல் தேவையில்லை.
குடியரசுத்தலைவர் ஆட்சியினால் ஏற்படும் விளைவுகள்
  • மாநில அரசு நிர்வாகத்தினை குடியரசுத்தலைவர் எடுத்துக் கொள்ள முடியும். குடியரசுத்தலைவர் மாநில ஆளுநரிடமோ அல்லது எந்த ஒரு நிர்வாக அமைப்பிடமோ மாநில நிர்வாகத்தை ஒப்படைக்கலாம்.
  • குடியரசுத்தலைவர் மாநில சட்டமன்றத்தை கலைக்கவோ அல்லது செயல்படாமல் நிறுத்திவைக்கவோ முடியும்.
  • மாநில சட்ட மசோதா மற்றும் பட்ஜெட்களை பாராளுமன்றம் நிறைவேற்றும்.
முதல் முறையாக குடியரசுத்தலைவர் ஆட்சி 1951-ம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டது.
·        மணிப்பர் மாநிலம் இதுவரை 10 முறை குடியரசுத் தலைவரின் ஆட்சியை சந்தித்துள்ளது.
·        ஊத்திர பிரதேசம் இதுவரை 9 முறை குடியரசுத் தலைவரின் ஆட்சியை சந்தித்துள்ளது.
·        பீகாரும்இ பஞ்சாபும் தலா 8 முறை குடியரசுத் தலைவரின் ஆட்சியை சந்தித்துள்ளது.
·        தமிழ்நாடு 4 முறை இதைச் சந்தித்துள்ளது.
தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்ட குடியரசுத்தலைவர் ஆட்சி காலங்களாவன:
·             1976 ஜனவரி 31 முதல் 1977 ஜூன் 30 வரை
·             1980 பிப்ரவரி 17 முதல் 1980 ஜூன் 30 வரை
·             1988 ஜனவரி 7 முதல் 1989 ஜனவரி 27 வரை
·             1991 ஜனவரி 30 முதல் 1991 ஜூன் 29 வரை
 
3. நீதி புனராய்வு
  • 1976-ம் ஆண்டு 42-வது அரசியலமைப்பு சட்டத் திருத்தம் மூலம் குடியரசுத் தலைவரின் ஆணை நீதி புனராய்வுக்கு உட்படாது என்றது.
  • ஆனால் 1978-ம் ஆண்டு 44-வது திருத்தம் மூலம் நீதிபுனராய்வுக்கு உட்படுத்தமுடியும் என்றது.
  • ளு.சு. பொம்மை வழக்கில் (1994) உச்ச நீதிமன்றம் மேற்கண்ட திருத்தத்தினை உறுதி செய்தது.
4. நிதிநிலை நெருக்கடி
  • சரத்து 360-ன் படி குடியரசுத் தலைவர் நிதிநிலை நெருக்கடியை பிரகடனப்படுத்தலாம். அதற்கான சூழல் இருப்பதாக திருப்தியற்றால் குடியரசுத்தலைவர் நிதி நெருக்கடியை செயல்படுத்தலாம்.
  • 1975-ம் ஆண்டு 38-வது திருத்தமானது குடியரசுத்தலைவர் நிதிநிலை நெருக்கடியை செயல்படுத்தலாம் என திருப்தியற்று செயல்படுத்தினால் எந்த ஒரு நீதிமன்றத்திலும் கேள்வி கேட்க முடியாது.
  • 1978-ம் ஆண்டு 44-வது திருத்தம் குடியரசுத்தலைவர் திருப்தி என்பது நீதிபுனராய்வுக்கு உட்படுத்த முடியாதது அல்ல என்கிறது.
பாராளுமன்ற ஒப்புதல் மற்றும் காலம்
  • நிதிநிலை நெருக்கடி பிரகடனப்படுத்தப்பட்ட நாளிலிருந்து 2-மாத காலத்திற்குள் பாராளுமன்றத்தின் ஒப்புதல் பெறவேண்டும்.
  • ஒரு முறை பாராளுமன்றத்தின் அனுமதி பெற்றுவிட்டால் இந்த நெருக்கடி நிலை காலாவதியாகும் வரை எத்தனை ஆண்டுகள் வேண்டுமாலும் நீடித்துக்கொள்ளலாம். இதன் செயல்பாட்டின் 2-முக்கிய நிகழ்வுகளாவன.
  • இந்த செயல்பாட்டின் அதிகபட்ச காலம் நிர்ணயிக்கப்படவில்லை.
  • நிதிநிலை நெருக்கடி தொடர்வதற்கு பாராளுமன்ற ஒப்புதல் தேவையில்லை.
  • நிதிநிலை நெருக்கடியை குடியரசுத்தலைவர் அவை தொடர்பான தீர்மானம் மூலம் முடிவுக்கு கொண்டு வரலாம். பாராளுமன்றத்தின் ஒப்புதல் தேவையில்லை.
நிதிநிலை நெருக்கடியினால் ஏற்படும் விளைவுகள்: 
  • மாநில அரசின் கீழ் பணியாற்றும் அனைத்து ஊழியர்கள் அல்லது எந்த ஒரு பிரிவு ஊழியர்களின் ஊதியம் மற்றும் படிகளை குறைத்தல்.
  • மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பணமசோதா அல்லது இதர நிதி மசோதாக்கைள குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பவேண்டும்.
  • குடியரசுத்தலைவரின் உத்தரவுப்படி கீழ்வரும் ஊழியர்களின் ஊதியம் மற்றும் படிகளை குறைக்க முடியும்.
  • மத்திய அரசின் கீழ் பணியாற்றும் அனைத்து அல்லது எந்த ஒரு பிரிவு ஊழியர்களின் ஊதியத்தை குறைக்கலாம்.
  • உச்ச மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஊதியத்தை குறைக்கலாம்.
1991-களில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போதும் இந்தியாவில் இதுவரை ஒரு முறை கூட நிதிநிலை நெருக்கடி அமுல்படுத்தப்படவில்லை.
 
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY