Ads Right Header

விடைகள் - இந்திய அரசமைப்புச் சட்டம் & மக்களாட்சி.


இந்திய அரசமைப்புச் சட்டம்

1) நமது அரசமைப்புச் சட்டம் எப்போது நடைமுறைக்கு வந்தது?

அ) ஆகஸ்ட் 15, 1947
ஆ) நவம்பர் 21, 1949
இ) ஜனவரி 26, 1950👍
ஈ) பிப்ரவரி 2, 1951

2) இவற்றுள் எப்போது "முழு சுதந்திர நாள்" கொண்டாடப்பட்டது?

அ) ஜனவரி 26,1930👍
ஆ) ஜனவரி 26,1949
இ) ஜனவரி 26,1948
ஈ) ஜனவரி 26, 1947

3) 1929-ம் ஆண்டு எங்கு நடந்த காங்கிரஸ் மாநாட்டில் முழு சுயராஜ்யத்தை  அடைவது என்ற முழக்கம் வலுப்பெற்றது?

அ) நாக்பூர் 
ஆ) லாகூர்👍
இ) கராச்சி
ஈ) மும்பை

4) இந்திய அரசமைப்பு நிர்ணய மன்றம் என்ற அமைப்பு எப்போது உருவாக்கப்பட்டது?

அ) 1949
ஆ) 1948
இ) 1947
ஈ) 1946 👍

5) முதன்முதலில் எத்தனை உறுப்பினர்களைக் கொண்ட இந்திய அரசமைப்பு நிர்ணய மன்றம் உருவாக்கப்பட்டது?

அ) 412 உறுப்பினர்கள்
ஆ) 389 உறுப்பினர்கள்👍
இ) 374 உறுப்பினர்கள்
ஈ) 395 உறுப்பினர்கள்

6) இந்திய அரசமைப்பு நிர்ணய மன்றத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?

அ) ராஜேந்திர பிரசாத்👍
ஆ) ஜவகர்லால்நேரு 
இ) சர்தார் வல்லபாய் பட்டேல் 
ஈ) அம்பேத்கர் 

7) இந்திய அரசமைப்பு நிர்ணய மன்றத்தில் எத்தனை பெண் உறுப்பினர்கள் இடம்பெற்றிருந்தனர்?

அ) 10 பெண் உறுப்பினர்கள் 
ஆ) 15 பெண் உறுப்பினர்கள்👍
இ) 20 பெண் உறுப்பினர்கள் 
ஈ) 25 பெண் உறுப்பினர்கள்

8) எத்தனை பேர் கொண்ட அரசமைப்புச் சட்ட வரைவுக் குழு உருவாக்கப்பட்டது?

அ) 18 பேர் 
ஆ) 10 பேர் 
இ) 5 பேர்
ஈ)  8 பேர்👍


9) அரசமைப்புச் சட்ட வரைவுக் குழுவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?

அ) பி.என். ராவ் 
ஆ) ஜவகர்லால் நேரு
இ) டாக்டர் அம்பேத்கர்👍
ஈ) வல்லபாய் பட்டேல்

10) அரசமைப்புச் சட்ட வரைவுக் குழுவின் ஆலோசகராக நியமிக்கப்பட்டவர் யார்?

அ) பி.என். ராவ்👍
ஆ) ஜவகர்லால் நேரு
இ) டாக்டர் அம்பேத்கர்
ஈ) வல்லபாய் பட்டேல்

11) அரசியலமைப்புச் சட்ட வரைவுக் குழுவின் முதல் கூட்டம் எப்போது நடைபெற்றது?

அ) அக்டோபர் 14, 1946
ஆ) டிசம்பர் 9, 1946👍
இ) செப்டம்பர் 21, 1946
ஈ) நவம்பர் 18, 1946

12) அரசியலமைப்புச் சட்டம் இறுதி செய்யப்படுவதற்கு முன் சுமார் _____திருத்தங்கள் அதில் மேற்கொள்ளப்பட்டன?

அ) 2,500 திருத்தங்கள்
ஆ) 1,000 திருத்தங்கள் 
இ) 2,000 திருத்தங்கள்👍
ஈ) 1,500 திருத்தங்கள்

13) எத்தனை நாடுகளின் அரசமைப்புச் சட்டங்களை வாசித்து நமது அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கினார்?

அ) 90 நாடுகள் 
ஆ) 60 நாட்கள்👍
இ) 30 நாடுகள்
ஈ) 10 நாடுகள் 

14) நமது அரசமைப்புச் சட்டத்தை எழுதி முடிக்க தேவைப்பட்ட காலம்?

அ) 2 ஆண்டுகள், 11 மாதம், 17 நாட்கள்👍
 ஆ) 2 ஆண்டுகள், 8 மாதம், 10 நாட்கள்
இ) 2 ஆண்டுகள், 5 மாதம், 23 நாட்கள் 
ஈ) 2 ஆண்டுகள், 3 மாதம், 16 நாட்கள் 

15) எப்போது முழுமையான அரசமைப்பு சட்டம் தயாரானது?

அ) டிசம்பர் 9, 1946
ஆ) அக்டோபர் 16, 1947
இ) ஆகஸ்ட் 21, 1948👍
ஈ) நவம்பர் 26,1949

16) ஆண்டுதோறும் அரசமைப்புச் சட்ட நாள் எப்போது கொண்டாடப்படுகிறது?

அ) டிசம்பர் 9,1946 
ஆ) அக்டோபர் 16,1947 
இ) ஆகஸ்ட் 21, 1948
ஈ) நவம்பர் 26, 1949👍

17) நமது அரசமைப்புச் சட்டத்தை உருவாக்குவதற்கு எவ்வளவு செலவானது?

அ) 52 லட்சம்
ஆ) 64 லட்சம் 👍
இ) 76 லட்சம் 
ஈ) 88 லட்சம் 

18) நமது அரசியல் சட்டம் உருவானபோது_____ இடம் பெற்றிருந்தன?

அ) 448 உறுப்புகள், 25 பகுதிகள், 12 அட்டவணைகள்
ஆ) 460 உறுப்புகள், 20 பகுதிகள், 11 அட்டவணைகள்
இ) 395 உறுப்புகள், 22 பகுதிகள், 8 அட்டவணைகள்👍
ஈ) 360 உறுப்புகள், 28 பகுதிகள், 5 அட்டவணைகள்

19) தற்போது நமது அரசியல் சட்டத்தில்____உள்ளன?

அ) 448 உறுப்புகள், 25 பகுதிகள்,12 அட்டவணைகள் 👍
ஆ) 460 உறுப்புகள், 20 பகுதிகள், 11 அட்டவணைகள் 
இ) 395 உறுப்புகள், 22 பகுதிகள், 8 அட்டவணைகள்
ஈ) 360 உறுப்புகள், 28 பகுதிகள், 5 அட்டவணைகள்

20) இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உண்மைப் பிரதிகள் நாடாளுமன்ற நூலகத்தில்______ வாயு நிரப்பப்பட்ட பேழையில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது?

அ) கார்பன்
ஆ) நைட்ரஜன்
இ) ஹீலியம்👍
ஈ) ஆக்சிஜன்

21) கூற்று 1: அரசமைப்புச் சட்டத்தின்  முன்னுரைதான் முகப்புரை என்றழைக்கப்படுகிறது. அது இந்தியாவை இறையாண்மை, சமத்துவம், மதசார்பின்மை மக்களாட்சிக் குடியரசு என்று வரையறை செய்கிறது.
 கூற்று 2:  இந்திய அரசமைப்புச் சட்டமானது மாநில மற்றும் ஒன்றிய அரசுகள் சட்டமன்ற ஆட்சி முறையைப் பின்பற்றி ஆட்சி செய்ய வழிவகை செய்துள்ளது.

அ) 2 மட்டும் சரி
ஆ) அனைத்தும் சரி 👍
இ) 1 மட்டும் சரி
ஈ) அனைத்தும் தவறு


மக்களாட்சி

1) "மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் ஆட்சி மக்களாட்சி" என்று கூறியவர் யார்?

அ) நெல்சன் மண்டேலா
ஆ) காந்தியடிகள்
இ) ஆபிரகாம் லிங்கன்👍
ஈ)  பிடல் காஸ்ட்ரோ

2) மக்களாட்சியின் பிறப்பிடம் எது?

அ) கிரேக்கம்👍
ஆ) ரோமானியப் பேரரசு
இ) ஐஸ்லாந்து 
ஈ) சான் மரினோஸ்

3) கூற்று1: ஒரு நாட்டின் குடிமக்கள் தேர்தல் வழியில் தங்களது பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கவும் அதன் மூலம் அரசு அதிகாரத்தில் நேரடியாக பங்கேற்பதையும் தான் மக்களாட்சி என்கிறோம்.

கூற்று 2: மக்களாட்சி அமைப்புகளில் முடிவெடுக்கும் அதிகாரம் தலைவரிடம் குவிந்திருக்காது.  மாறாக அவர் ஒரு குழுவிடம்தான் இருக்கும்.

அ) 2 மட்டும் சரி
ஆ) அனைத்தும் சரி👍 
இ) 1 மட்டும் சரி
ஈ) அனைத்தும் தவறு

4)  இவற்றுள் எந்த நாட்டில் நேரடி மக்களாட்சி முறை பின்பற்றப்படுகிறது?

1) இந்தியா
2) இங்கிலாந்து 
3) அமெரிக்கா ஐக்கிய நாடுகள்
4) ஸ்விட்சர்லாந்து 

அ) 1,2,3 மட்டும் சரி
ஆ) அனைத்தும் சரி 
இ) 4 மட்டும் சரி👍
ஈ) அனைத்தும் தவறு

5) இவற்றுள் எந்த நாட்டில் பிரதிநிதித்துவ மக்களாட்சி முறை பின்பற்றப்படுகிறது?

1) இந்தியா 
2) இங்கிலாந்து 
3) அமெரிக்கா ஐக்கிய நாடுகள் 
4) சுவிட்சர்லாந்து 

அ) 1,2,3 மட்டும் சரி👍
ஆ) அனைத்தும் சரி
இ) 4 மட்டும் சரி
ஈ) அனைத்தும் தவறு

6) நாடாளுமன்ற மக்களாட்சி முறைக்கு எடுத்துக்காட்டு?

அ) இந்தியா, இங்கிலாந்து👍
ஆ) அமெரிக்கா, கனடா
இ) கனடா, இங்கிலாந்து
ஈ) அமெரிக்கா, இந்தியா

7) அதிபர் மக்களாட்சி முறைக்கு எடுத்துக்காட்டு?

அ) இந்தியா, இங்கிலாந்து
ஆ) அமெரிக்கா, கனடா👍
இ) கனடா, இங்கிலாந்து
ஈ)  அமெரிக்கா, இந்தியா

8) உலக மக்களாட்சி தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?

அ) அக்டோபர் 7
ஆ) ஆகஸ்ட் 22 
இ) செப்டம்பர் 15👍
ஈ)  ஜூலை 27

9)  உலக மக்களாட்சி தினத்தை எந்த ஆண்டு ஐநா சபை அறிவித்தது?

அ) 2004
ஆ) 2005 
இ) 2006 
ஈ) 2007 👍

10) உலகில் எழுதப்பட்ட அரசமைப்புச் சட்டங்களில் மிகப்பெரியது எது?

அ) இங்கிலாந்து அரசமைப்புச் சட்டம் 
ஆ) இந்திய அரசமைப்புச் சட்டம் 👍
இ) அமெரிக்கா அரசமைப்புச் சட்டம் 
ஈ) கனடா அரசமைப்புச் சட்டம் 

11) உலகிலேயே முதன் முதலில் பெண்களுக்கு ஓட்டுரிமை அளித்த நாடு எது?

அ) ஆஸ்திரேலியா
ஆ) ஐஸ்லாந்து 
இ) அமெரிக்கா
ஈ) நியூசிலாந்து 👍

12) அமெரிக்க ஐக்கிய நாடுகளில் எந்த ஆண்டு பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்பட்டது?

அ) 1915
ஆ) 1920👍
இ) 1925
ஈ) 1930 

13) ஐக்கிய பேரரசில் எந்த ஆண்டு பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்பட்டது?

அ) 1916
ஆ) 1917
இ) 1918👍
ஈ) 1919 

14) சரியா? தவறா?

 மக்களாட்சி அரசில், 18வயது நிறைவுற்ற அனைத்துக் குடிமக்களுக்கும் தங்களுக்கான பிரதிநிதியைத் தேர்ந்தெடுக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது?

அ) சரி 👍
ஆ) தவறு

15) நியூசிலாந்து நாட்டில் எந்த ஆண்டு பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்பட்டது?

அ) 1980
ஆ) 1890
இ) 1983
ஈ) 1893👍

16) இந்தியக் குடிமக்களில்____ சதவீதம் பேர் தங்களது நாட்டின் மக்கள் ஆட்சியின் மீது நம்பிக்கை கொண்டு உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன?

அ) 54 சதவீதம் 
ஆ) 79 சதவீதம்👍
இ) 47 சதவீதம்
ஈ) 60 சதவீதம்

17) பொருத்துக. மக்களாட்சியின் தோற்றம்

அ) சான்மரீனோஸ்- கி.பி. 301 
ஆ) அமெரிக்கா- கி.பி. 1789
இ) மனிதத் தீவு- கி.பி. 927
ஈ) கிரேக்கம்- கி.பி. 5ஆம் நூற்றாண்டு
உ) ஐசுலாந்து- கி.பி. 930
ஊ) இங்கிலாந்து- கி.பி. 13 ஆம் நூற்றாண்டு


18)  உலகிலேயே பழமையான மற்றும் நீண்ட காலமாக செயல்பட்டு வரும் நாடாளுமன்றத்தைக்_____ கொண்டுள்ளது?

அ) மனிதத் தீவு
ஆ) கிரேக்கம் 
இ) ஐஸ்லாந்து👍
ஈ) இங்கிலாந்து

19)  இங்கிலாந்து நாட்டின் மகாசாசனம் (மாக்னா கார்டா) எந்த ஆண்டு எழுதப்பட்டது?

அ) 1215👍
ஆ) 1261
இ) 1224
ஈ)1257

20) மன்னராட்சியின் கீழ் சுயாட்சி நடைபெறும் நாட்டிற்கு எடுத்துக்காட்டு?

அ) சான் மரினோ
ஆ) ரோமானியப் பேரரசு
இ) மனிதத் தீவு👍
ஈ) கிரேக்கம்

21) ஆதிமனிதன்_____ பகுதியில் குடியேறி விவசாயம் செய்யத் தொடங்கினான்?

அ) சமவெளி
ஆ) மலைப்பகுதி 
இ) குன்றுகள் 
ஈ) ஆற்றோரம் 👍

22) கூற்று 1: நேரடி மக்களாட்சி முறையில் மக்களை சட்டமியற்றும் அதிகாரம் பெற்றிருப்பார்கள், அரசியல்வாதிகள் நாடாளுமன்ற செயல்முறைகளின் படி ஆட்சி செய்பர்.

ஆ) கூற்று 2: நேரடி மக்களாட்சியில் மக்களே சட்டங்களை உருவாக்குகின்றனர். அனைத்து சட்டத் திருத்தங்களையும் மக்கள்தான் அங்கீகரிப்பர்.

அ) 2 மட்டும் சரி
ஆ) அனைத்தும் சரி👍
இ) 1 மட்டும் சரி
ஈ) அனைத்தும் தவறு
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY