Ads Right Header

விடைகள் - மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும்.


மனித உரிமைகளும் 
ஐக்கிய நாடுகள் சபையும்.

1) இங்கிலாந்து அரசரை சட்டத்திற்கு உட்படுத்திய இங்கிலாந்தின் மகாசாசனம் ( The Magna Carta) எந்த ஆண்டில் எழுதப்பட்டது?

அ) 1215👍
ஆ) 1217
இ) 1224
ஈ) 1221

2) இங்கிலாந்தின் மக்கள் உரிமைகளின் தொகுப்பான உரிமை மனு(The Petition Of Right) எந்த ஆண்டு எழுதப்பட்டது?

அ) 1874
ஆ) 1756
இ) 1628👍
ஈ) 1540 

3) மக்களின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கான இங்கிலாந்து நாட்டின் ஹேபியஸ் கார்பஸ் திட்டம் எந்த ஆண்டு எழுதப்பட்டது?

அ)1645
ஆ) 1679👍
இ) 1613
ஈ) 1627

4) ஆங்கில உரிமைகள் மசோதா எழுதப்பட்ட ஆண்டு?

அ) 1654
ஆ) 1677
இ) 1689👍
ஈ) 1663

5) சட்டத்தின் கீழ் அனைத்துக் குடிமக்களும் சமம் என்று கூறும் பிரான்சின் ஆவணம் எந்த ஆண்டில் எழுதப்பட்டது?

அ) 1789👍
ஆ) 1785
இ) 1783
ஈ) 1787

6) அமெரிக்க அரசியலமைப்புச் சட்டம் மற்றும் உரிமைகள் மசோதா எழுதப்பட்ட ஆண்டு?

அ) 1743
ஆ) 1767
இ) 1791👍
ஈ) 1755 

7) ஐக்கிய நாடுகள் சபையின் சாசனச் சட்டம் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?

அ) 1947
ஆ) 1945👍
இ) 1940
ஈ) 1943

8)  ஐக்கிய நாடுகள் சபையின் சாசனச் சட்டம் எங்கு நடந்த மாநாட்டில் உருவாக்கப்பட்டது?

அ) மான்செஸ்டர்
ஆ) சான் பிரான்சிஸ்கோ👍
இ) வாஷிங்டன்
ஈ) பெய்ஜிங்

9) ஐக்கிய நாடுகள் சபை எப்போது உருவாக்கப்பட்டது?

அ) 1948, ஜூலை 15
ஆ) 1947, ஆகஸ்ட் 21
இ) 1946, பிப்ரவரி 18
ஈ) 1945, அக்டோபர் 24👍

10) உலக மனித உரிமைகள் அறிவிப்பு ஐ.நா. பொதுச் சபையால் எப்போது ஏற்றுக்கொள்ளப்பட்டது?

அ) 1948👍
ஆ) 1947
இ) 1946
ஈ) 1945

11) மனித உரிமைகளுக்கான சட்டத்தை உருவாக்குவதற்காக ஐக்கிய நாடுகள் சபை யார் தலைமையில் ஆணையம் ஒன்றை நிறுவியது?

அ) பிராங்கிளின் டி.ரூஸ்வெல்டின்
ஆ) எலினார் ரூஸ்வெல்டின்👍
இ) மேத்யூ ரூஸ்வெல்டின்
ஈ) வில்லியம் ரூஸ்வெல்டின்

12)  உலக மனித உரிமைகள் அறிவிப்பு ஐ.நா சபையால் எங்கு அறிவிக்கப்பட்டது?

அ) லண்டன் 
ஆ) வியன்னா
இ) பாரிஸ்👍
ஈ) பெய்ஜிங்

13) உலக மனித உரிமைகள் அறிவிப்பு ஐ.நா பொதுச்சபையின் தீர்மானம்_____ இன்படி அறிவிக்கப்பட்டது?

அ) தீர்மானம் 240B
ஆ) தீர்மானம் 231D
இ) தீர்மானம் 217A👍
ஈ) தீர்மானம்  224F

14) உலக மனித உரிமைகள் அறிவிப்பு ஐ.நா பொதுச் சபையால் எப்போது அறிவிக்கப்பட்டது?

அ) 1947, அக்டோபர் 27
ஆ) 1948, டிசம்பர் 10👍
இ) 1949, செப்டம்பர் 14
ஈ) 1950, நவம்பர் 25

15) மனித உரிமைகள் தினம் எந்த ஆண்டிலிருந்து கடைபிடிக்கப்படுகிறது?

அ) 1950👍
ஆ) 1951
இ) 1952
ஈ) 1953

16) மனித உரிமைகள் தினம் எப்போது கடைபிடிக்கப்படுகிறது?

அ) அக்டோபர் 27
ஆ) டிசம்பர் 10👍
இ) செப்டம்பர் 14
ஈ) நவம்பர் 25

17) பண்டைய பாரசீகத்தின் முதல் மன்னர் யார்?

அ) மகா டாரியஸ்
ஆ) மகா கேம்பைசஸ் 
இ) மகா டாமிரிஸ்
 ஈ) மகா சைரஸ்👍

18) இவர்களுள் அடிமைகளை விடுவித்து மக்கள் அனைவரும் தங்கள் சொந்த மதத்தைத் தேர்ந்தெடுக்கும் உரிமை உண்டு என்று அறிவித்தவர் யார்?

அ) மகா டாரியஸ்
ஆ) மகா சைரஸ்👍
இ) மகா கேம்பைசஸ்
ஈ) மகா டாமிரிஸ்

19) உலகில் அதிகமாக மொழிபெயர்க்கப்பட்ட ஆவணம் எது?

அ) இங்கிலாந்தின் மகாசாசனம் 
ஆ) உலக மனித உரிமைகள் அறிவிப்பு 👍
இ) சைரஸ் சிலிண்டர்
ஈ) ஆங்கில உரிமைகள் மசோதா 

20) மனித உரிமைகளின் நவீன சர்வதேச மகா சாசனம் என்று_____ அழைக்கப்படுகிறது?

அ) இங்கிலாந்தின் மகாசாசனம் 
ஆ) உலக மனித உரிமைகள் அறிவிப்பு 👍
இ) சைரஸ் சிலிண்டர்
ஈ)  ஆங்கில உரிமைகள் மசோதா

21) சைரஸ் சிலிண்டர்- இதன் காலம் என்ன?

அ) கி.மு. 574 
ஆ) கி.மு. 567
இ) கி.மு. 545 
ஈ) கி.மு. 539 👍

22) கூற்று 1: உலக மனித உரிமைகள் அறிவிப்பின் கொள்கைகள் 185க்கும் மேலான நாடுகளின் அரசியல் அமைப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.

கூற்று 2: மேலும் உலக மனித உரிமைகள் அறிவிப்பு 500க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

அ) 2 மட்டும் சரி 
ஆ) 1 மட்டும் சரி
இ) அனைத்தும் சரி👍
ஈ) அனைத்தும் தவறு

23) இவற்றுள் மனித உரிமைகள் கொண்டுள்ள அடிப்படை மதிப்புகள் என்னென்ன?

1) கண்ணியம் 
2) நீதி 
3) சமத்துவம்

அ) 3 மட்டும் சரி
ஆ) அனைத்தும் சரி👍
இ) 1,2 மட்டும் சரி
ஈ) அனைத்தும் தவறு

24) இவற்றுள் மனித உரிமைகளின் அடிப்படை பண்புகள் என்னென்ன?

1) இயல்பானவை 
2) அடிப்படையானவை
3) மாற்ற முடியாதவை
4)  பிரிக்க முடியாதவை
5) உலகளாவியவை
 6) சார்புடையவை

அ) அனைத்தும் சரி 👍
ஆ) 2,3,5 மற்றும் சரி
இ) அனைத்தும் தவறு 
ஈ) 1,2,4 மட்டும் சரி

25)  மனித உரிமைகள் பிரகடனத்தில் எத்தனை சட்ட பிரிவுகள் உள்ளன?

அ) 20 சட்டப்பிரிவுகள்
ஆ) 25 சட்டப்பிரிவுகள்
இ) 30 சட்டப்பிரிவுகள் 👍
ஈ) 35 சட்டப்பிரிவுகள்

 26) மன்னர் மகா சைரஸின் ஆணையான "சைரஸ் சிலிண்டர்" எந்த மொழியில் பதிவு செய்யப்பட்டுள்ளது?

அ) சுமேரியன் மொழியில்
ஆ) பாரசீக மொழியில்
இ) எகிப்திய மொழியில்
ஈ)  அக்காடியன் மொழியில்👍

27) மன்னர் மகா சைரஸின் ஆணையான "சைரஸ் சிலிண்டர்" எந்த எழுத்துகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது?

அ) சைரிலிக்
ஆ) கியூனிஃபார்ம்👍
இ) கிரேட்டன்
ஈ) சீனியர்

28) ஐக்கிய நாடுகள் சபையின் அலுவல் மொழிகள் எத்தனை?

அ) 4 
ஆ) 5 
இ) 6👍
ஈ) 7 

29) "சைரஸ் சிலிண்டர்"- இவை உலக மனித உரிமைகள் பிரகடனத்தின் முதல் ____விதிகளுக்கு இணையாக உள்ளன?

அ) 2
ஆ) 3
இ) 4👍
ஈ) 5

 30) "சைரஸ் சிலிண்டர்"-இது ஐக்கிய நாடுகள் சபையின் _____அலுவல் மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது?

அ) 5
ஆ) 6👍
இ) 7 
ஈ) 8 

31) வாழ்க்கைக்குத் தேவையான கல்வி, சுகாதாரம், உணவு, உடை, தங்குமிடம் மற்றும் சமூக பாதுகாப்பு ஆகியவற்றை உள்ளடக்கியது_____ ஆகும்?

அ) வாழ்வியல் உரிமைகள்
ஆ) அரசியல் உரிமைகள்
இ) கலாச்சார உரிமைகள்
ஈ) சமூக உரிமைகள்👍

32) சுதந்திரம், அடிமைத்தனத்திலிருந்து விடுபடுதல், நியாயமற்ற முறையில் கைது செய்யாமை ஆகியன_____ உரிமைகளுள் அடங்கும்?

அ) வாழ்வியல் உரிமைகள்👍
ஆ) அரசியல் உரிமைகள்
இ) கலாச்சார உரிமைகள்
ஈ) சமூக உரிமைகள்

33) இந்தியாவின் தேசிய மனித உரிமைகள் ஆணையம் எப்போது நிறுவப்பட்டது?

அ) 1993, அக்டோபர் 12👍
ஆ) 1994, ஜூலை 15
இ) 1995, செப்டம்பர் 20
ஈ) 1996, மார்ச் 10

34) இந்தியாவின் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?

அ) மும்பை 
ஆ) பெங்களூரு 
இ) புதுடெல்லி 👍
ஈ) கொல்கத்தா

35) இந்தியாவின் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவரையும் உறுப்பினர்களையும் நியமிப்பது யார்?

அ)  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி 
ஆ) குடியரசுத் தலைவர்👍
இ) குடியரசுத் துணைத் தலைவர்
ஈ) பிரதம அமைச்சர்

36) இந்தியாவின் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவிக்காலம் என்ன?

 அ) மூன்று ஆண்டுகள்
ஆ)  நான்கு ஆண்டுகள் 
இ)  ஐந்து ஆண்டுகள் 👍
ஈ) ஆறு ஆண்டுகள்

37)  இந்தியாவின் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அப்பதவியில் வகிப்பதற்கு அதிகபட்ச வயது வரம்பு என்ன?

அ) 68 வயது 
ஆ) 70 வயது 👍
இ) 65 வயது
ஈ)  63 வயது 

38) இந்தியாவின் தேசிய மனித உரிமைகள் ஆணையம்____ அமைப்பாகும்?

அ) சட்டபூர்வமான
ஆ) சுதந்திரமான 
இ) அரசியலமைப்பு சாராத
ஈ) இவை அனைத்தும்👍

39) கூற்று 1:மனித உரிமைகள் உலகிலுள்ள அனைத்து மக்களுக்கும் மற்றும் அனைத்து நாடுகளுக்கும் உரியதாகும். எந்த ஒரு தேசமும் தனிநபருக்கான மனித உரிமைகளைப்  பறிக்க இயலாது.

கூற்று 2: மனித உரிமைகளானது தேசிய இனம்,பாலினம், இன, மத மற்றும் வயது ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் எல்லா இடங்களிலும் அனைவருக்கும் உரித்தானதாகும்.

அ) 2 மட்டும் சரி
ஆ) அனைத்தும் சரி 👍
இ) 1 மட்டும் சரி
ஈ)  அனைத்தும் தவறு

40) கூற்று 1: சிவில் உரிமைகள் என்பது ஒரு குறிப்பிட்ட நாட்டில் அல்லது மாநிலத்தில் குடியுரிமை பெறுவதன் மூலம் ஒருவர் அனுபவிக்கும் உரிமைகளாகும். சிவில் உரிமைகள் சமூகத்தினால் உருவாக்கப்படுகின்றன.

கூற்று 2: சிவில் உரிமைகள் நாட்டிற்கு நாடு அல்லது அரசாங்கத்திற்கு அரசாங்கம் பெரிதும் வேறுபடுகின்றன.  இவை அரசியலமைப்பு சட்டத்துடன் தொடர்பானவையாகும்.

அ) 2 மட்டும் சரி
ஆ) அனைத்தும் தவறு
இ) 1 மட்டும் சரி
ஈ)  அனைத்தும் சரி 👍

41) தேசிய மனித உரிமைகள் ஆணையம் எத்தனை பிரிவுகளைக் கொண்டுள்ளது?

அ) 2
ஆ) 3
இ) 4
ஈ)  5👍

42) தமிழ்நாட்டில் மனித உரிமைகள் ஆணையம் எப்போது உருவாக்கப்பட்டது?

அ) 1996, ஆகஸ்ட் 24 
ஆ) 1997, ஏப்ரல் 17 👍
இ) 1998, ஜூலை 21
ஈ) 1999,  ஜனவரி 15

43) தமிழ்நாட்டின் மனித உரிமைகள் ஆணையம் எத்தனை உறுப்பினர்களை உள்ளடக்கியது?

அ) 2
ஆ) 3 👍
இ) 4 
ஈ) 5 

44) இந்திய அரசியலமைப்பின்___ அட்டவணையில் உள்ள மாநில பட்டியல், பொது பட்டியல் ஆகியவற்றின் கீழ் உள்ள துறைகள் தொடர்பான மனித உரிமை மீறல் தொடர்பானவைகளை  மாநில மனித உரிமைகள் ஆணையம் விசாரிக்கும்?

அ) ஐந்தாவது 
ஆ) ஆறாவது 
இ) ஏழாவது👍 
ஈ) எட்டாவது 

45) தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் ஒரு _____ஆவார்?

அ) ஓய்வு பெற்ற இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி👍
ஆ) ஓய்வு பெற்ற இந்திய உச்சநீதிமன்ற நீதிபதி
இ) ஓய்வு பெற்ற இந்திய உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி
ஈ) ஓய்வு பெற்ற இந்திய உயர் நீதிமன்ற நீதிபதி

46) இவற்றுள் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர்கள் யார்?

1) சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையத்தின் தலைவர்
2)  பழங்குடியினருக்கான தேசிய ஆணையத்தின் தலைவர்
3) பட்டியல் சமூகத்திற்கான தேசிய ஆணையத்தின் தலைவர் 
4) பெண்களுக்கான தேசிய ஆணையத்தின் தலைவர்
5) ஓர் உச்சநீதிமன்ற நீதிபதி மற்றும் ஓர் உயர் நீதிமன்ற நீதிபதி

அ) 1,4 மட்டும் சரி
ஆ) 5 மட்டும்  சரி 
இ) 2,3 மட்டும் சரி
ஈ) இவர்கள் அனைவரும்👍

47) இவற்றுள் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் பிரிவுகள் என்னென்ன?

1) சட்டப்பிரிவு
2) புலனாய்வுப் பிரிவு
3) நிர்வாகப் பிரிவு
4)பயிற்சியளித்தல் பிரிவு
5)  ஆராய்ச்சி மற்றும் திட்ட பிரிவு

அ) 1, 3, 5 மட்டும் சரி
ஆ) அனைத்தும் சரி👍
இ) 2,4 மட்டும் சரி
ஈ) அனைத்தும் தவறு

48) இந்திய அரசியலமைப்பின் சட்டப்பிரிவு____ குழந்தை தொழிலாளர் முறையை தடை செய்கிறது?

அ) சட்டப் பிரிவு 24👍
ஆ) சட்டப்பிரிவு 23
இ) சட்டப்பிரிவு 22
ஈ) சட்டப்பிரிவு 21

49) இந்திய அரசியலமைப்பின் சட்டப்பிரிவு ____குழந்தைகள் ஆரோக்கியமாக வளர வழிவகைச் செய்கிறது?

அ) சட்டப்பிரிவு 35(G)
ஆ) சட்டப்பிரிவு 27 (B)
இ)சட்டப்பிரிவு 39(F)👍
ஈ)  சட்டப்பிரிவு 32(C)

50) இந்திய அரசியலமைப்பின் சட்ட பிரிவு ____6 வயது வரை அனைத்துக் குழந்தைகளுக்கும் ஆரம்பகால குழந்தைப் பராமரிப்பு மற்றும் கல்வியை வழங்க அரசு முயல்கிறது?

அ) சட்டப்பிரிவு 48
ஆ) சட்டப்பிரிவு 42
இ) சட்டப்பிரிவு 40
ஈ) சட்டப்பிரிவு 45👍

 51) ____ஆம் ஆண்டு நடைபெற்ற உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் மாநாட்டில் பிரிவு 1 -இன் படி 18 வயதுக்குட்பட்ட அனைவரும் குழந்தை எனப்படுவர்?

அ) 1988
ஆ) 1989👍
இ) 1990
ஈ) 1991 

52) குழந்தைகள் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் மாநாட்டின் அறிக்கை____இல் வெளியிடப்பட்டது?

அ) 1991, ஜனவரி 13
ஆ) 1990, அக்டோபர் 15
இ) 1989, நவம்பர் 20👍
ஈ) 1988, ஜூலை 24

53)  சர்வதேசப் பெண்கள் ஆண்டு?

அ) 1978👍
ஆ) 1979
இ) 1980
ஈ) 1981

54)  சர்வதேசக் குழந்தைகள் ஆண்டு?

அ) 1978
ஆ) 1979👍
இ) 1980
ஈ) 1981

55) 6 முதல் 14 வயது வரையிலான அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி அரசு வழங்குவதற்கு சட்டப்பிரிவு____ வழிவகை செய்கிறது?

அ) சட்டப்பிரிவு 23 (C)
ஆ) சட்டப் பிரிவு 25 (B)
இ)  சட்டப்பிரிவு 27 (D)
ஈ) சட்டப் பிரிவு 21 (A)👍

56) 15 வயது பூர்த்தியடையாத எந்த ஒரு குழந்தையும் வேலைக்கு அமர்த்த குழந்தை தொழிலாளர் சட்டம் (தடை மற்றும் சீரமைப்பு சட்டம்)____ தடை செய்கிறது?

அ) 1984
ஆ) 1985
இ) 1986👍
ஈ) 1987

57)  போக்சோ சட்டம்____ குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கிறது?

அ) 2010
ஆ) 2011
இ) 2012👍
ஈ) 2013

58) சிறார் நீதி சட்டம் ____ போதுமான கவனிப்பு இல்லாமல் இருக்கும் குழந்தைகளை நட்பு ரீதியில் அணுகி அவர்களை சீர்திருத்த முயற்சி மேற்கொள்கிறது?

அ) 2000👍
ஆ) 2001
இ) 2002
ஈ) 2003

59) இந்தியாவில் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட 24 மணி நேர கட்டணமில்லா அவசர தொலைத்தொடர்பு சேவை எண்?

அ) 1088
ஆ) 1908
இ) 1098👍
ஈ) 1808

60) ___ ஆம் ஆண்டில் நடைபெற்ற மாநாட்டில் பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான பாகுபாடுகளையும் நீக்குவதற்கான மசோதாவை ஐ.நா பாதுகாப்புச் சபை ஏற்றுக் கொண்டது?

அ) 1976
ஆ) 1977
இ) 1978
ஈ) 1979👍

61) UNIFEM என்பது என்ன?

அ) பெண்களுக்கான ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டு நிதி அமைப்பு👍
ஆ) ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக சபை 
இ) மனித உரிமைகள் கண்காணிப்பகம்
ஈ) குழந்தைகள் பாதுகாப்பு நிதியம் 

62) ECOSOC என்பது என்ன?

அ) பெண்களுக்கான ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டு நிதி அமைப்பு
ஆ) ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக சபை👍
இ) மனித உரிமைகள் கண்காணிப்பகம்
ஈ) குழந்தைகள் பாதுகாப்பு நிதியம் 

63) நான்காவது உலக மகளிர் மாநாடு எங்கு நடைபெற்றது?

அ) மாஸ்கோ
ஆ) சிட்னி
இ) பெய்ஜிங்👍
ஈ) டோக்கியோ

64) நான்காவது உலக மகளிர் மாநாடு எப்போது நடைபெற்றது?

அ) 1992
ஆ) 1993
இ) 1994
ஈ) 1995👍

65) UNIFEM என்ற அமைப்பு எப்போது தொடங்கப்பட்டது?

அ) 1994
ஆ) 1995👍
இ) 1996
ஈ) 1997

65) பொருத்துக.

அ) 1856- இந்து விதவை மறுமணச் சட்டம் 
ஆ) 1956- இந்து வாரிசு சட்டம் 
இ) 1961- வரதட்சணை தடைச் சட்டம் 
ஈ) 1955- இந்து திருமண சட்டம்
உ) 1948- தொழில் துறை சட்டம் 

66) பொருத்துக.

அ) 1951-தோட்ட தொழிலாளர்கள் சட்டம்
ஆ) 1961- மகப்பேறு நலச்சட்டம்
இ) 1952- சுரங்க சட்டம்
ஈ) 2005- வன்கொடுமை தடுப்புச் சட்டம் 
உ) 1997-பெண்களை கேலி செய்வதற்கு எதிரான சட்டம்

67) பத்திரிக்கைகள், செய்தி தாள்கள் போன்றவற்றில் பெண்களை அநாகரீகமாக சித்தரிப்பதை அநாகரிகமாக சித்தரிப்பதற்கு எதிரான சட்டம் ____தடை செய்கிறது?

அ) 1998
ஆ) 1999👍
இ) 1997
ஈ) 1996 

68) நான்காவது உலக மகளிர் மாநாட்டின் இலக்குகளை நடைமுறைப்படுத்துவதற்காக ____எனும் அமைப்புகள் செயல்பட்டு வருகிறது?

அ)  பெண்களுக்கான ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டு நிதி அமைப்பு👍
ஆ) ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக சபை 
இ) மனித உரிமைகள் கண்காணிப்பகம்
ஈ)  இவை அனைத்தும்
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY