Ads Right Header

வினாக்கள் - பன்முகத் தன்மையினை அறிவோம்!


பன்முகத் தன்மையினை அறிவோம்

1) ஐந்தாயிரம்  ஆண்டுகள் பழமை வாய்ந்த நாகரீகத்தின் தாயகம்?

அ) சீனா
ஆ) இந்தியா
இ) ஜப்பான்
ஈ) எகிப்து 

2) நவீன இந்தியாவின் ஒரு பகுதியினர்?

அ) ஆரியர்கள்
ஆ) ஆல்பைன்கள்
இ) திராவிடர்கள்
ஈ) இவர்கள் அனைத்தும்

3) இந்தியாவில் காணப்படும் பன்முகத்தன்மையினை எத்தனை தலைப்புகளில் அறியலாம்?

அ) 5
ஆ 4
இ) 6 
ஈ) 2 

4) இந்தியா ஒரு_____

அ) கண்டம்
ஆ) துணைக்கண்டம்
இ) தீவு 
ஈ) இவை அனைத்தும் 

5) ஒரு பகுதியின் பொருளாதார நடவடிக்கைகளை ____மற்றும்____ தீர்மானிக்கின்றன?

அ) நிலவியல் கூறுகள்
ஆ) காலநிலை கூறுகள்
இ) இரண்டும்
ஈ) இரண்டும் அல்ல

6) பொருத்துக.

 அ) கடலோர மக்கள்- மீன்பிடித்தல்
ஆ) சமவெளி மக்கள்- வேளாண்மை
இ) மலைவாழ் மக்கள்- கால்நடை வளர்ப்பு

7) காபி, தேயிலை விளைய உகந்த இடம்?

அ) மலை 
ஆ) கடல் 
இ) சமவெளி
ஈ) புல்வெளி

8) சரியா? தவறா?

நில அமைப்பில் காணப்படும் பன்முகத்தன்மை அங்கு வாழும் தாவரங்கள் மற்றும் விலங்குகள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தாது?

அ) சரி 
ஆ) தவறு

9) இந்தியாவில் அதிக மழை பொழியும் இடம்?

அ) மௌசின்ராம்
ஆ) ஜெய்சால்மர்
இ) சிரபுஞ்சி 
ஈ) ராஜ்கோட்

10)  இந்தியாவில் குறைந்த மழை பொழியும் இடம்?

அ) மௌசின்ராம்
ஆ) ஜெய்சால்மர் 
இ) சிரபுஞ்சி 
ஈ) ராஜ்கோட்

11) மௌசின்ராம் எங்கு உள்ளது?

அ) மணிப்பூர்
ஆ) ராஜஸ்தான்
இ) சிக்கிம் 
ஈ) மேகாலயா

12) ஜெய்சால்மர் எங்கு உள்ளது?

அ) மணிப்பூர் 
ஆ) ராஜஸ்தான் 
இ) சிக்கிம் 
ஈ) மேகாலயா

13) கூற்று 1: ஒரு பகுதியின் தாவரங்கள், விலங்குகளின் வளம் என்பது அப்பகுதியில் நிலவும் இயற்கை நிலை மற்றும் காலநிலையை சார்ந்துள்ளது.

கூற்று 2: மக்களின் உணவு, உடை, வாழ்க்கைத்தரம் போன்றவை அப்பகுதியில் நிலவும் இயற்கை நிலை மற்றும் காலநிலையை சார்ந்துள்ளது.

அ) 1மட்டும் சரி 
ஆ) இரண்டும் தவறு
இ) 2 மட்டும் சரி
ஈ) இரண்டும் சரி

14) சரியா ?தவறா?

 சமுதாயங்கள் ஒன்றை ஒன்று சார்ந்து இருக்கும்.

அ) சரி
ஆ) தவறு 

15) ஒரு சமூகத்தின் அடிப்படை அலகு?

அ) மதம் 
ஆ) சமயம் 
இ) குடும்பம்
ஈ) மக்கள் 

16) குடும்பம் என்பது எத்தனை வகைப்படும்?

அ) 5 
ஆ) 2
இ) 4
ஈ) 3

17) இந்தியா ஒரு ____நாடு

மதசார்பற்ற
மதசார்புள்ள 

அ) 1மட்டும் சரி
ஆ) 2 மட்டும் சரி 
இ) இரண்டும் சரி
 ஈ) இரண்டும் தவறு

18)  கூற்று 1: அனைத்து மதங்களும் சமம்.

கூற்று 2 : மத விடுதலை நமது அடிப்படை உரிமை.

அ) 1மட்டும் சரி
ஆ) இரண்டும் தவறு
இ) 2 மட்டும் சரி
ஈ) இரண்டும் சரி

19) கூற்று : இந்தியா ஒரு உயர்ந்த பாரம்பரிய மிக்க கலாச்சார நாடு.
காரணம் : பல மதங்களைச் சார்ந்த மக்கள் பல்வேறு விழாக்களை ஒற்றுமையாக கொண்டாடுகின்றனர்.

அ) கூற்று சரி, காரணம் தவறு 
ஆ) இரண்டும் சரி 
இ) கூற்று தவறு, காரணம் சரி 
ஈ) இரண்டும் தவறு

20)  இந்தியாவின் 2001 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி_____ முக்கியம் மொழிகளைக் கொண்டுள்ளது.

அ) 110 
ஆ) 120 
இ) 122 
ஈ) 112 

21) இந்தியாவின் முக்கிய மொழிக்குடும்பங்கள்?

அ) இந்தோ-ஆரியன்
ஆ) திராவிடன் 
இ) ஆஸ்ட்ரோ ஆஸ்டிக் 
ஈ) சீனதிபெத்தியன்
உ) இவை அனைத்தும்

22) தமிழ் பழமையான____ மொழி?

அ) ஆரிய 
ஆ) திராவிட
இ) சீன 
ஈ) பிராகிருத

23) பொருத்துக.

அ) இந்தி- 41.03%
ஆ) வங்காளம்- 8.10%
இ) தெலுங்கு- 7.19%
ஈ) மராத்தி- 6.99%
உ) தமிழ்- 5.91%

24) இந்தியாவின் அலுவலக மொழிகள் எத்தனை?

அ) 20 
ஆ) 21 
இ) 22 
ஈ) 32 

25) இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்_____ அட்டவணையின்படி______ மொழிகள் அலுவலக மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது?

அ) 22,8
ஆ) 18,4
இ) 10,20
ஈ) 8,22

26) இந்திய அரசால் முதல் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட மொழி?

அ) தமிழ் 
ஆ) சமஸ்கிருதம்
இ) கிரேக்கம்
ஈ) சீனம்

27) தற்போது எத்தனை மொழிகள் உள்ளன?

அ) 5 
ஆ) 6 
இ) 7 
ஈ) 8 

28) தமிழ்மொழி எப்போது செம்மொழியாக அறிவிக்கப்பட்டது?

அ) 2002 
ஆ) 2005
இ) 2006 
ஈ) 2004

29) பொருத்துக.

அ) சாஞ்சி ஸ்தூபி- Raisen, மத்திய பிரதேசம்
 ஆ) கந்தர்ய மகாதேவா- Chhatarpur, மத்திய பிரதேசம்
 இ) தில்வாரா- Mount Abu ராஜஸ்தான்
ஈ) ப்ரகதீஸ்வரர் கோயில்- Thanjavur தமிழ்நாடு

30) இந்தியாவில்____ மாநிலங்களும் ____யூனியன் பிரதேசங்களும் உள்ளன?

அ)28,7
ஆ)7,28
இ)9,28
ஈ)29,7

31) பிஹீ திருவிழா மாநிலத்தில்___ கொண்டாடப்படுகிறது?

அ) ஒடிசா
ஆ) அசாம்
இ) நாகலாந்து
ஈ) மேகாலயா

32) பொருத்துக 

ஜொராஷ்ட்ரியம்-மதம் வேற்றுமையில் ஒற்றுமை- இந்தியா
 கடற்கரை பகுதிகள்- மீன்பிடித்தொழில்
 நீக்ரீட்டோக்கல்- இந்திய இனம் 

33)ஒரு பகுதியின்__ நடவடிக்கைகளை அப்பகுதியின் நிலவியல் கூறுகளும் காலநிலை களும் பெரிதும் தீர்மானிக்கின்றன?

அ) பொருளாதார ஆ)பண்பாட்டு
 இ)பண்முக 
ஈ)சமூக 

34)பல கிராமங்கள் இணைந்து___ உருவாகின்றன?

அ) நாடு 
ஆ)பஞ்சாயத்து 
இ)வீடு
ஈ) நகரம் 

35)பண்டைய காலங்களில்___ என்பது வழிபாடு மற்றும் கொண்டாட்டத்திற்கான வழி?

அ) நடனம் 
ஆ)உடை 
இ)பாட்டு
ஈ) உணவு  

36)நாம் அனைவரும் ஒரே நாட்டினர் என்ற உணர்வையும் நம் நாட்டுப் பற்றையும் சமர்ப்பிக்க செய்வது___ ஆகும்

அ) தேசிய விழாக்கள் ஆ)சடங்குகள் 
இ)கோவில் திருவிழா ஈ)திருமணம் 

37)இந்தியா ___ஆண்டுகள் பழமை வாய்ந்த நாகரிகத்தின் தாயகம் ?

அ)3000
 ஆ)5000
 இ)2000
ஈ) 4000


38)___என்பது பொது நலத்திற்காக மக்கள் இணைந்து வாழும் இடம்?

அ) நாடு 
ஆ)வீடு 
இ)குடும்பம் 
ஈ)சமூகம் 

39)___மாநிலத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது?

அ) பஞ்சாப் 
ஆ)கர்நாடகா
இ) தமிழ்நாடு 
ஈ)கேரளா 

40)இந்தியா__ உயர்ந்த மிக்க கலாச்சார நாடு 

 அ)பாரம்பரியம் ஆ)மலைகள்
இ) வீடுகள்
ஈ) மரங்கள் 

41)மோகினியாட்டம்___
மாநிலத்தில் செவ்வியல் நடனம் ஆகும் .

அ)தமிழ்நாடு 
ஆ)கேரளா 
இ)மணிப்பூர் 
ஈ)கர்நாடகா

42) கீழ்கண்டவற்றில் எந்த மதம் இந்தியாவில் நடைமுறையில் இல்லை?

 அ)கன்ஃபூசிய மதம் ஆ)ஜொராஸ்ட்ரியமதம்
இ)சீக்கிய மதம் 
ஈ)இஸ்லாமிய மதம்

43) வேற்றுமையில் ஒற்றுமை என்ற சொற்றொடரை உருவாக்கியவர்?

அ) அம்பேத்கர்
ஆ) மகாத்மா காந்தி
இ) ஜவஹர்லால் நேரு
ஈ) இராஜாஜி 

44) வி.ஏ. ஸ்மித் இந்தியாவை_____என்று அழைத்தார்?

அ) இனங்களின் அருங்காட்சியகம்
ஆ) மதச்சார்பற்ற நாடு
இ) தனித்துவமான பன்முகத்தன்மை கொண்ட நிலம் 
ஈ) பெரிய ஜனநாயகம்

45) நடனமும்_____ ஒன்றுடன் ஒன்று இணைந்தது?

அ) சித்திரமும்
ஆ) இயலும் 
இ) நாடகம்
ஈ) இசையும் 

46) "டிஸ்கவரி ஆஃப் இந்தியா" என்ற நூலினை எழுதியவர்? 

அ) நேதாஜி 
ஆ) வ.உ.சி 
இ) ஜவஹர்லால் நேரு
ஈ)  இராஜாஜி 

47) பல்வேறு இனமக்கள் இந்தியாவிற்குள் _____வழியாக இடம்பெயர்ந்தனர்?

அ) கடல் மற்றும் ஆகாயம்
ஆ) இரயில் மற்றும் ஆகாயம்
இ) நிலம் மற்றும் கடல்
ஈ) நிலம் மற்றும் ஆகாயம்

48) இந்தியாவில்______ மேலோங்கி இருக்கிறது?

அ) இருள் 
ஆ) பன்முகத்தன்மை
இ) வணிகம் 
ஈ) தூய்மை 

49) பொருத்துக.

 கதக்- வட இந்தியா
 கதகளி- கேரளா 
சத்ரியா- அசாம் 
குச்சிப்புடி- ஆந்திரா

50) பங்க்ரா ____மாநிலத்தின் நடனம்?

அ) குஜராத் 
ஆ) ராஜஸ்தான்
இ) பஞ்சாப்
ஈ) அசாம் 

51) கூற்று 1:  தும்ஹல் ஜம்மு காஷ்மீரின் நாட்டுப்புற நடனம்.

 கூற்று 2:  தெய்யம் ஆந்திராவின் நாட்டுப்புற நடனம்.

அ) 2 மட்டும் சரி 
ஆ) 1 மட்டும் சரி 
இ) இரண்டும் சரி
ஈ) இரண்டும் தவறு

52) உத்திரப்பிரதேசத்தின் நாட்டுப்புற நடனங்கள்?

அ) ராசலீலா
ஆ) சோலியா
இ) கார்பா 
ஈ) 1,2 மட்டும்

53) வி.ஏ. ஸ்மித் என்பவர் ஒரு _____

அ) புவியியலாளர்
ஆ) வரலாற்றாசிரியர்
இ) தொல்லியல் நிபுணர்
ஈ) நடன கலைஞர்

Previous article
Next article

1 Comments

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete

Ads Post 4

DEMOS BUY