TNPSC TAMIL
ஏழாம் வகுப்பு தமிழ் இயல் 9.
வினாக்கள் - ஏழாம் வகுப்பு தமிழ் இயல் 9.
ஏழாம் வகுப்பு தமிழ் இயல் 9.
1 ) சே . பிருந்தா எழுதாத நூல் எது ?
A ) மழை பற்றிய பகிர்தல்கள்
B ) மகளுக்குச் சொன்ன கதை
C ) வீடு முழுக்க வானம்
D ) மலை அருவி
2 ) " தானொரு " -என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.
A ) தா + ஒரு
B ) தான் + னொரு
C ) தான் + ஒரு
D ) தானோ + ஒரு
4) Integrity
A ) நேர்மை
B ) பண்பாடு
C ) சுதந்திரம்
D ) நீதி
3 ) காயிதேமில்லத்தை " இப்படிப்பட்ட தலைவர் கிடைப்பது அரிது அவர் நல்ல உத்தமமான மனிதர் " -என்று புகழ்ந்தவர் யார் ?
A ) அண்ணா
B ) பெரியார்
C ) கருணாநிதி
D ) காமராஜர்
5 ) சந்திப்பிழையுள்ள தொடர் எது ?
A ) நான் எப்போதும் எளிமையைக் கடைப்பிடிப்பேன் .
B ) என் பணிகளை நேர்மையாகச் செய்வேன்.
C ) காயிதேமில்லத் என்னும் சொல்லுக்கு
" சமுதாய வழிகாட்டி " என்று பொருள்
D ) குயிலுக்குக் கூடு கட்டத் தெரியாது .
6 ) பிரயாணம் என்னும் நூலின்
ஆசிரியர் யார் ?
A ) சே.பிருந்தா
B ) மேத்தா
C ) புதுமைப்பித்தன்
D ) பாவண்ணன்
7 ) " தலைக்கு ஒரு பழம் கொடு " -என்பது எவ்வகை ஆகுபெயர் ?
A ) இடவாகு பெயர்
B ) காலவாகு பெயர்
C ] சினையாகு பெயர்
D ) பண்பாகு பெயர்
8 ) மழை சடசடவெனப் பெய்தது- இத்தொடரில் அமைந்துள்ளது .
A ) முதலாகுபெயர்
B ) சினையாகு பெயர்
C ] அடுக்குத்தொடர்
D ) இரட்டைக்கிளவி
9 ) கண்ணதாசனின் இயற்பெயர் என்ன ?
A ) விருத்தாச்சலம்
B ) முத்தையா
C ] ராதாகிருஷ்ணன்
D ) கிருஷ்ணமூர்த்தி
10 ) கண்ணதாசன் எந்த சிறப்புப் பெயரால் அழைக்கப்பட்டார் ?
A ) கவிஞாயிறு
B ) கவிப்பேரரசு
C ) கவியரசு
D ) கவிப்பிதாமகன்
11 ) தவறாக பொருந்தியுள்ளது எது :
A ) சாந்தம் -அமைதி
B ) தாரணி -உண்மை
C ) இரக்கம் -கருணை
D ) பேதங்கள் - வேறுபாடுகள்
12 ) மழையளவு -என்னும் சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது ?
A ) மலை + யளவு
B ) மலை + அளவு
C ) மலையின் + அளவு
D ) மலையில் + அளவு
13 ) காயிதே மில்லத்தின்
இயற்பெயர் என்ன ?
A ) முகமது ஜெயசி
B ) முகமது இஸ்மாயில்
C ) முகம்மது மாலிக்
D ) முஹம்மது
14 ) காயிதே மில்லத் சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய காலம் ?
A ) 1952-1956
B ) 1948-1952
C ) 1946-1952
D ) 1946-1953
15 ) ' காயிதேமில்லத் ' என்னும் எம் மொழிச் சொல்லுக்கு சமுதாய வழிகாட்டி என்பது பொருள் ?
A ) அரபு
B ) உருது
C ) ஹீப்ரூ
D ) கிரேக்கம்
16 ) காயிதே மில்லத் தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று பேசிய.இடம் எது?
A ) சட்டமன்றம்
B ) நாடாளுமன்றம்
C ) ஊராட்சி மன்றம்
D ) நகர மன்றம்
17 ) விடுதலைப் போராட்டத்தின் போது காயிதேமில்லத் .............. இயக்கத்தில் கலந்து கொண்டார் .
A ) வெள்ளையனே வெளியேறு
B ) உப்புக் காய்ச்சும் போராட்டம்
C ) சுதேசி இயக்கம்
D ) ஒத்துழையாமை இயக்கம்
18 ) " இயேசு காவியம் " என்னும் நூலின் ஆசிரியர் யார் ?
A ) வாணிதாசன்
B ) கண்ணதாசன்
C ) சே.பிருந்தா
D ) தனிநாயகம்
19 ) பாவண்ணன் இயற்றாத நூல் எது ?
A ) நேற்று வாழ்ந்தவர்கள்
B ) கடலோர வீடு
C ) வீடு முழுக்க வானம்
D ) மீசைக்கார பூனை
20 ) " தானொரு " - என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது .........
A ) தா + ஒரு
B ) தான் + னொரு
C ) தான் + ஒரு
D ) தானே + ஒரு
21 ) கீழ்க்கண்டவற்றில் பொருளாகு பெயர் என்ன ?
A ) மல்லிகை சூடினாள்
B ) டிசம்பர் சூடினாள்
C ) தலைக்கு ஒரு பழம் கொடு
D ) பொங்கல் உண்டான்
22 ) பொருளின் பெயர் அதன் உறுப்பு ஆகிவருவது .
A ) பொருளாகு பெயர்
B ) சினையாகு பெயர்
C ) பண்பாகு பெயர்
D ) இடவாகு பெயர்
23 ) " தமிழக அரசியல் வானில் கவ்வியிருந்த காரிருளை அகற்ற வந்தஒளிக்கதிராகக் காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயில் அவர்கள் திகழ்கிறார் " -என்று புகழ்ந்தவர்?
A ) அறிஞர் அண்ணா
B ) ஜவகர்லால் நேரு
C ) பெரியார்
D ) பாரதிதாசன்
24 ) கீழ்க்கண்டவற்றில் காயிதே மில்லத் பற்றிக் கொடுக்கப்பட்டவைகளில் தவறானது எது ?
A ) திருச்சியில் ஜமால் முகமது கல்லூரி தொடங்க காரணமாக இருந்தார் .
B ) கல்வி ஒன்றுதான் ஒட்டுமொத்த சமூக வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கும் என்று எண்ணினார் .
C ) தமிழக திட்டக் குழு உறுப்பினராக பணியாற்றினார்.
D ) இந்திய நாட்டின் கனிம வளங்களை பற்றி நாடாளுமன்றத்தில் எடுத்துரைத்தார் .
25 ) அடுக்குத் தொடரில் ஒரே சொல் .......
முறை அடுக்கி வரும் .
A ) இரண்டு
B ) மூன்று
C ) நான்கு
D ) ஐந்து
26 ) ......... வினைக்கு அடைமொழியாகக் குறிப்பு பொருளில் வரும் .
A ) முதலாகு பெயர்
B ) இரட்டைக்கிளவி
C ) அடுக்குத்தொடர்
D ) கருவியாகுபெயர்
27 ) இந்தியாவுக்கும் சீனாவுக்கும் போர் மூண்ட ஆண்டு ?
A ) 1962
B ) 1972
C ) 1926
D ) 1990
28 ) இனிப்பு தின்றான் என்பது
A ) இடவாகுபெயர்
B ) காலவாகுபெயர்
C ) பண்பாகு பெயர்
D ) தொழிலாகு பெயர்
29 ) குற்றாலக்குறவஞ்சி பாடியவர் யார் ?
A ) சுப்புரத்தினதாசன்
B ) குமரகுருபரர்
C ) முனைப்பாடியார்
D ) திரிகூடராசப்பக் கவிராயர்
30 ) கீழ்க்கண்டவற்றில் இரட்டைக்கிளவி இல்லாத தொடர் எது ?
A ) பறவை படபட வெனப் பறந்தது .
B ) புகைவண்டி சடசடவெனச் சென்றது .
c ) அமுதன் திடீரென பாம்பு பாம்பு பாம்பு என்று கத்தினான்.
D ) மரக்கிளை சடசடவென முறிந்தது .
31 ) ஒன்றன் பெயர் அதனை குறிக்காமல் அதனோடு தொடர்புடைய வேறு ஒன்றிற்கு ஆகி வருவது?
A ) இடப்பெயர்
B ) ஆகுபெயர்
C ) திரிபு
D ) எதுவுமில்லை
32 ) கடலோர வீடு என்ற நூலின் ஆசிரியர்
A ) பாவண்ணன்
B ) கண்ணதாசன்
C ) சே. பிருந்தா
D ) சுரதா
33 ) Charity
A ) ஈகை
B ) பந்தம்
C ) நட்பு
D ) கருணை
34 ) இரட்டை கிளவியில் ஒரு சொல் எத்தனை முறை வரும்?
A ) 1
B ) 2
C ) 3
D ) 4
35 ) சேர்த்து எழுதுக "முதுமை + மொழி"
A ) முதுமொழி
B ) முதுமைமொழி
C ) முதியமொழி
D ) முதும்மொழி
36 ) Preaching
A ) கடமை
B ) உரிமை
C ) உபதேசம்
D ) சொற்பொழிவு
37 ) வேறுபட்ட ஒன்றை கண்டுபிடி.
A ) விறுவிறு
B ) பிடிபிடி
C ) கலகல
D ) மளமள
38 ) மல்லிகை சூடினாள் - இதில் உள்ள ஆகுபெயர்?
A ) காலவாகு பெயர்
B ) இடவாகு பெயர்
C ) சினவாகு பெயர்
D ) முதலாகு பெயர்
39 ) வீடு முழுக்க வானம்
A ) பாரதியார்
B ) சே.பிருந்தா
C ) கண்ணதாசன்
D ) சுரதா
40 ) இரட்டையாக இணைந்து வந்து பிரித்தால் பொருள் தராதது?
A ) ஆகுபெயர்
B ) இரட்டைக்கிளவி
C ) அடுக்குத்தொடர்
D ) வினையெச்சம்.
Previous article
Next article
Leave Comments
Post a Comment