TNPSC TAMIL
விடைகள் - எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 8.
விடைகள்.
1.அறநெறியில் வாழ்பவர்கள் உயிரைக் கவர வரும் ……………… க் கண்டு அஞ்சமாட்டார்கள்.
A) புலனை
B) அறனை
C) நமனை👍
D) பலனை
2. ஒன்றே ……………. என்று கருதி வாழ்வதே மனிதப்பண்பாகும்.
A) குலம்👍
B) குளம்
C) குணம்
D) குடம்
3. ‘நமனில்லை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………
A) நம் + இல்லை
B) நமது + இல்லை
C) நமன் + நில்லை
D) நமன் + இல்லை👍
4. நம்பர்க்கு + அங்கு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ………………
A) நம்பரங்கு
B) நம்மார்க்கு
C) நம்பர்க்கங்கு👍
D) நம்பங்கு
5. திருமந்திரம் …………………. என்றும் அழைக்கப்படும்.
A) தமிழ் தொள்ளாயிரம்
B) தமிழ் மூவாயிரம்👍
C) இசைத்தமிழ்
D) இன்பத்தமிழ்
6. ஈயில் - பொருள் கூறுக
A) கூசாமல்
B) படங்கள்
C) வழங்கினால்👍
D) அடியார்
7 )அயோத்திதாசர் எழுதாத நூல் எது ?
A ) புத்தரது ஆதிவேதம்
B ) இந்திரர் தேச சரித்திரம்
C ] புத்தர் கதைகள் 👍
D ] விவாக விளக்கம்
8 ) " என் பகுத்தறிவு பிரச்சாரத்திற்கும் சீர்திருத்தக் கருத்துக்களுக்கும் முன்னோடிகளாகத் நிகழ்ந்தவர்கள் பண்டிதமணி அயோத்திதாசரும் தங்கவயல் அப்பாதுரையாரும் ஆவார்கள் " என்று கூறியவர் யார் ?
A ) அண்ணா
B ) பெரியார் 👍
C ] அம்பேத்கர்
D ] பாரதிதாசன்
9 ) சிறுகதை மன்னன் என்று போற்றப்படுபவர் யார் ?
A ) வ.வே.சு.ஐயர்
B ) சுப்ரமணியம்
C ) அசோகமித்திரன்
D ) புதுமைப்பித்தன் 👍
10 ) " பா " -எத்தனை வகைப்படும் ?
A ) 2
B ) 3
C ) 4 👍
D ) 5
11 ) தொடை - எத்தனை வகைப்படும் ?
A ) 2
B ) 6
C ) 7
D ) 8 👍
12 ) பொருத்துக :
1 ) ஞானி - ( 1 ) integrity
2 ) தொண்டு ( 2 ) rational
3 ) தத்துவம் - ( 3 ) charity
4 ) நேர்மை - ( 4 ) saint
5 ) பகுத்தறிவு - ( 5 ) philosophy
A ) 1-4,2-3,3-5,4-1,5-2 👍
B ) 1-4,2-3,3-1,4-5,5-2
C ) 1-4,2-1,3-3,4-5,5-2
D ) 1-4,2-5,3-3,4-1,5-2
13 ) ஆண்மையின் கூர்மை எதுவென வள்ளுவர் கூறுகிறார் ?
A ) வறியவருக்கு உதவுதல்
B) பகைவருக்கு உதவுதல் 👍
C ) நண்பனுக்கு உதவுதல்
D ) உறவினருக்கு உதவுதல்
14 ) " பண்பிலின் பெற்ற பெருஞ்செல்வம் நண்பால் கலம் தீமையால்திரிந்து அற்று ” - என்னும் குறளில் எவ்வணி பயின்று வந்துள்ளது ?
A ) உருவக அணி
B ) உவமையணி 👍
C ) ஏகதேச உருவக அணி
D) வேற்றுமையணி
15 ) " பேராண்மை என்ப தறுகண்ஒன்று உற்றக்கால் . “ - என்னும் குறள் இடம்பெறும் அதிகாரம் என்ன ?
A ) பண்புடைமை
B ) படைச்செருக்கு 👍
C ) நட்பு
D ) மானம்
16 ) " கான முயல் எய்த அம்பினில் யானை பிழைத்தவேல் எந்தல் இனிது " - எனும் குறளில் எவ்வணி பயின்று வந்துள்ளது ?
A ) வஞ்சப்புகழ்ச்சி அணி
B ) வேற்றுமையணி
C ) ஏகதேச உருவக அணி
D ) பிறிதுமொழிதலணி 👍
17 ) வறுமைவந்த காலத்தில் ............ குறையாமல் வாழ வேண்டும் என வள்ளுவர் கூறுகிறார் ?
A ) இன்பம்
B | செல்வம்
C ] ஊக்கம் 👍
D ) நிலம்
18 ) எது பெருமை தரும் என வள்ளுவர் கூறுகிறார் ?
A ) செல்வம் சேர்த்தல்
B ) பெரிய முயற்சி 👍
C ) ஊக்கம்
D எதிரியை வீழ்த்துதல்
19 ) செல்வம் மிகுந்த காலத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என வள்ளுவர் உரைக்கிறார் ?
A ) ஊக்கம்
B ) அன்பு
C ] பணிவுடன் 👍
D ] அகங்காரமாக
20 ) மழை அளவு பெருமை உடையவராக இருந்தாலும் ...... அளவு சிறுபிழை செய்தால் அவர் புகழ் அழிந்து விடும் என வள்ளுவர் கூறுகிறார் .
A ] கடுகு
B ) முயல்
C ) கொன்றைப் பூ
D ] குன்றிமணி 👍
21 ) தவறானது எது ?
A ) முதல் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது -மோனை
B ) இரண்டாம் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது -எதுகை
C ) இறுதி எழுத்து அல்லது இறுதி ஓசை ஒன்றி வரத் தொடுப்பது- அசை 👍
D ) ஒரு பாடலின் இறுதிச் சீர் அல்லது அடியின் இறுதிப்பகுதி அடுத்த பாடலின் அடியின் முதலில் வருமாறு பாடுவது அந்தாதித் தொடை
22 ) தவறாக பொருந்தியுள்ளது எது ?
A ) வெண்பா- செப்பலோசை
B ) ஆசிரியப்பா -அகவல் ஓசை
C ) கலிப்பா -துள்ளல் ஓசை
D ) வஞ்சிப்பா -செப்பலோசை 👍
23 ) யாப்பு இலக்கணத்தின் படி செய்யுளுக்கு உரிய உறுப்புகள்
எத்தனை ?
A ) 5
B ) 6 👍
C ) 7
D ) 8
24 ) " தளை " " எத்தனை வகைப்படும் ?
A ) 7 👍
B ) 8
C ) 6
D ) 9
25 ) புதுமைப்பித்தன் எழுதாத நூல் எது ?
A ) கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்
B ) பொன்னகரம்
C ) சாப விமோசனம்
D ) மணிக்கொடி 👍
26 ) புதுமைப்பித்தனின் இயற்பெயர் என்ன ?
A ) இராசமாணிக்கம்
B ) விருத்தாசலம் 👍
C ) துரைராசு
D ) முத்தையா
27. மனிதர்கள் தம் ……………. தீய வழியில் செல்ல விடாமல் காக்க வேண்டும்.
A) ஐந்திணைகளை
B) அறுசுவைகளை
C) நாற்றிசைகளை
D) ஐம்பொறிகளை👍
28. ஞானியர் சிறந்த கருத்துகளை மக்களிடம் ……………..
A) பகர்ந்தனர்👍
B) நுகர்ந்த னர்
C) சிறந்தனர்
D) துறந்தனர்
29. ‘ஆனந்தவெள்ளம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………….
A) ஆனந்த + வெள்ளம்
B) ஆனந்தன் + வெள்ளம்
C) ஆனந்தம் + வெள்ளம்👍
D) ஆனந்தர் + வெள்ளம்
30. உள் + இருக்கும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ………………..
A) உள்ளேயிருக்கும்
B) உள்ளிருக்கும்👍
C) உளிருக்கும்
D) உளருக்கும்
31. பராபரம் - பொருள் கூறுக
A. நீக்கியவர்
B. மேலான பொருள்👍
C. தந்தை
D. அரசன்
32. குணங்குடி மஸ்தான் சாகிபுவின் இயற்பெயர்.
A.முகமது சுல்தான்
B.சுல்தான் அப்துல்காதர்👍
C.இப்ராஹீம்
D.அப்துல் காதர்
33.குணங்குடி மஸ்தான் சாகிபுவின் படைப்புகளில் தவறானது?
A. எக்காளக் கண்ணி
B. மனோன்மணிக் கண்ணி
C. பராபரக்கண்ணி 👍
D. நந்தீசுவரக் கண்ணி
34. அயோத்திதாசர் பதிப்பித்த நூல்
A. போகர் எழுநூறு👍
B. இந்திரர் தேச சரித்திரம்
C. விவாக விளக்கம்
D. புத்தர் சரித்திர பா
35. அயோத்திதாசர் எழுதிய நூல்
A. அகத்தியர் இருநூறு
B. சிமிட்டு இரத்தினச் சுருக்கம்
C. பாலவாகடம்
D. புத்தரது ஆதிவேதம்👍
36. அயோத்திதாசர் …………….. சமூகச் சீர்திருத்தத்தின் தந்தை என்று போற்றப்படுகிறார்.
A) தமிழக
B) இந்திய
C) தென்னிந்திய👍
D) ஆசிய
37. அயோத்திதாசர் நடத்திய இதழ் ……………..
A) ஒருபைசாத் தமிழன்👍
B) காலணாத் தமிழன்
C) அரைப்பைசாத் தமிழன்
D) அரையணாத் தமிழன்
38. கல்வியோடு …………. கற்க வேண்டும் என்பது அயோத்திதாசர் கருத்து.
A) சிலம்பமும்
B) கைத்தொழிலும்👍
C) கணிப்பொறியும்
D) போர்த்தொழிலும்
39. அயோத்திதாசரின் புதுமையான சிந்தனைகளுக்கு அடித்தளமாக அமைந்தது அவரது …………
A) ஆழ்ந்த படிப்பு👍
B) வெளிநாட்டுப்பயணம்
C) இதழியல் பட்டறிவு
D) மொழிப்புலமை
40. மக்களின் ஒழுக்கத்துடன் தொடர்புடையது …………….
A) வானம்
B) கடல்
C) மழை👍
D) கதிரவன்
41. அயோத்திதாசர் பிறந்த நாள் …………………
A) 20.05.1945
B) 20.05.1845 👍
C) 20.05.1835
D) 20.05.1925
42. திராவிட மகாஜன சங்கம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு …………
A) 1892👍
B) 1897
C) 1898
D) 1992
43. “ பெருஞ்செல்வம் ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.
A) பெரிய + செல்வம்
B) பெருஞ் + செல்வம்
C) பெரு + செல்வம்
D) பெருமை + செல்வம் 👍
44. திரிந்து + அற்று என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் .
A) திரிந்தது அற்று
B) திரிந்தற்று 👍
C) திரிந்துற்று
D) திரிவுற்று
45. ' ஒன்றே குலம் ஒருவனே தேவன் ' என்று கூறியவர்
A ) பட்டினத்தார்
B ) திருமூலர் 👍
C ) குணங்குடி மஸ்தான்
D ) திருவள்ளுவர்
46. நம்பர் - பொருள் கூறுக.
A ) அடியார் 👍
B ) உள்ளம்
C ) கோயில்
D ) எமன்
47. அயோத்திதாச பண்டிதரின் இயற்பெயர் என்ன ?
A ) கருப்பசாமி
B ) கண்ணையன்
C ) காத்தவராயன் 👍
D ) கருப்பண்ணன்
48. திருமந்திரம் எத்தனை பாடல்கள் கொண்டது?
A) 2000
B) 3000👍
C) 4000
D) 5000
Previous article
Next article
Leave Comments
Post a Comment