Ads Right Header

(6/7 விடைகள்)ஆறாம் வகுப்பு தமிழ் இயல் 7.


ஆறாம் வகுப்பு தமிழ் இயல் 7.

[ 1/50 ] சிவகங்கையின் வெற்றிக்காக தன் உடலில் தீ வைத்துக் கொண்ட ஆயுதக் கிடங்குகள் குதித்த வீரப்பெண் 

 உடையாள் 
வேலு நாச்சியார் 
குயிலி 👍
சகுந்தலை

[ 2/50 ] வேலுநாச்சியாரை காட்டி கொடுக்க சொல்லி ஆங்கிலேயரால் துன்புறுத்தப்பட்ட பெண் யார் ?

முத்துப்பேச்சி 
சகுந்தலை 
உடையாள் 👍
குயிலி

[ 3/50 ] அண்ணல் காந்தியின் அகிம்சை எனும் சின்ன கைத்தடி எதன் ஊன்றுகோலாக தாராபாரதியால் உருவகபடுத்தப்படுவது?

பெருமை 
அஞ்சாமை 
எளிமை 
அறம் 👍

[ 4/50 ] தாராபாரதியின் கவிதையில் எது கலைக்கூடமாக காட்சி தருகின்றது 

பள்ளிக்கூடம் 
ஓவியக்கூடம் 
சிற்பக்கூடம் 👍
சிறைக்கூடம்

[ 5/50 ] இலக்கண அடிப்படையில் சொற்கள் எத்தனை வகைப்படும் 

4 👍

10

2

[ 6/50 ] வீரமங்கை வேலுநாச்சியாரின் அமைச்சர் யார்?

காலிங்கராயன் 
சேர்வராயன் 
தாண்டவராயன் 👍
மருது சகோதரர்கள்

[ 7/50 ] எங்கு நடைபெற்ற போரில் முத்துவடுகநாதர் ஆங்கில படையுடன் போரிட்டு வீரமரணமடைந்தார்?

பழனி 
மாமதுரை 
காட்டுமன்னார்கோவில் காளையார்கோவில்👍

[ 8/50 ] காந்தியடிகள் ஒரு முறை காரைக்குடியை சுற்றி உள்ள ஊர்களில் சுற்றுப்பயணம் செய்தார் . அப்போது எந்த ஊரில் ஒரு பணக்காரர் வீட்டில் தங்கியிருந்தார் 

கானாடுகாத்தான் 👍
செங்கப்படுத்தான்காடு 
திருப்பத்தூர் 
கல்லுப்பட்டி

[ 9/50 ] வேலுநாச்சியார் ஐதர் அலியை சந்தித்த இடம் 

ராமநாதபுரம் 
மங்களூர் 
ஹைதராபாத் 
மைசூர் 👍

[ 10/50 ] 1919 ல் ஆங்கிலேய ..... என்னும் கடுமையான சட்டத்தை நடைமுறைப்படுத்தி இருந்தது?

டயர் சட்டம் 
புல்லட் சட்டம் 
சைமன் சட்டம்
ரௌலட் சட்டம்👍

[ 11/50 ] வீரமங்கை வேலுநாச்சியாரின் தளபதி 

தாண்டவராயன் 
காலிங்கராயன் 
சேர்வராயன் 
மருது சகோதரர்கள்👍

[ 12/50 ] பாரதியாரை பத்திரமாக பாதுகாக்க வேண்டும் என்று காந்தி யாரிடம் கூறினார்

தீரர் சத்தியமூர்த்தி 
பாரதிதாசன் 
ராஜாஜி 👍
சுத்தானந்த பாரதியார்

[ 13/50 ] இவற்றுள் தாராபாரதியின் நூல் அல்லாதது எது?

புதிய விடியல்கள் 
காந்தள் நாட்கள் 👍
இது எங்கள் கிழக்கு 
விரல்நுனி வெளிச்சங்கள்

[ 14/50 ]தாராபாரதி அள்ள அள்ள குறையாத அமுத சுரபியாக திகழ்வது எது என்கிறார்.

தமிழ்நாடு 
தமிழன்னை 
பாரதநாடு 👍
குமரி தாய்

[ 15/50 ]  யாருடைய தேனிசை பாடல்கள் காவிரிக்கரையில் எதிரொலிப்பதாக தாராபாரதி கூறுகிறார்?

காளிதாசன் 👍
பாரதிதாசன் 
வாணிதாசன் 
கண்ணதாசன்

[ 16/50 ] காந்தியடிகள் முதன்முறையாக சென்னைக்கு எப்போது வந்தார் 

1944 பிப்ரவரி 
1920 பிப்ரவரி 
1919 பிப்ரவரி👍
1921 பிப்ரவரி

[ 17/50 ] கங்கை அலைகள் யாருடைய கவிதை வரிகளுக்கு இசை அமைப்பதாக தாராபாரதி குறிப்பிடுகிறார்.

திருஞானசம்பந்தர் 
திருநாவுக்கரசர் 
கம்பர் 👍
சுந்தரர்

[ 18/50 ] காந்தியடிகள் எங்கு வாழ்ந்த காலத்தில் தமிழ் கற்க தொடங்கியதாக கூறினார்.

தென்னாபிரிக்கா 👍
பிரான்ஸ் 
தமிழ்நாடு 
லண்டன்

[ 19/50 ] ராமநாதபுரத்தை ஆட்சி செய்த .............. மன்னரின் ஒரே மகள் வேலுநாச்சியார்.

சவரிமுத்து 
வீரபாண்டியன் 
செல்லமுத்து 👍
குலோத்துங்கன்

[ 20/50 ] வேலுநாச்சியாருக்கு 5000 குதிரை படை வீரர்களை தந்து உதவியவர் 

கோபால் நாயக்கர் 
ஐதர் அலி👍
இரண்டாம் அக்பர் ஷா 
திப்பு சுல்தான்

[ 21/50 ] பெயர்ச்சொல் வினைச்சொல் ஆகியவற்றின் தன்மையை மிகுதி படுத்த வருவது 

வினைச்சொல் 
இடைச்சொல் 
உரிச்சொல் 👍
பெயர்ச்சொல்

[ 22/50 ] தாராபாரதி இயற்பெயர்  

ராதாகிருஷ்ணன் 👍
அரங்கசாமி 
பி வி அகிலாண்டம் 
ந.செகதீசன்

[ 23/50 ] தமிழ்நாட்டில் காந்தி அடிகள் அருங்காட்சியகம் எங்கு உள்ளது 

திருச்சி 
கன்னியாகுமரி 
மதுரை 👍
சென்னை

[ 24/50 ] வேலு நாச்சியாரை மணந்த சிவகங்கை மன்னர் யார்?

முத்துவடுகநாதர் 👍
மருது பாண்டியர் 
திருமலை நாயக்கர்
உக்கிரதேவர்

[ 25/50 ] சிவகங்கை எத்தனை ஆண்டுகள் ஆங்கிலேயர்கள் வசம் இருந்தது 

6
8 👍
4

[ 26/50 ]இந்தியா பூமியில் வாசலாக திகழும் நாடு என்று தாராபாரதி பாடுகிறார்.

தெற்கு 
கிழக்கு 👍
வடக்கு 
மேற்கு

[ 27/50 ]காந்தியடிகள் தலைமையில் சென்னையில் நடந்த இலக்கிய மாநாட்டிற்கு வரவேற்புக் குழு தலைவராக இருந்தவர் 

உவே சா 👍
ஜி யு போப் 
வையாபுரிப்பிள்ளை 
ராசமாணிக்கனார்

[ 28/50 ] தாராபாரதியின் சிறப்பு பெயர் 

பாவலர்மணி 
மொழிஞாயிறு 
புலவரேறு 
கவிஞாயிறு👍

[ 29/50 ] மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு காந்தியடிகள் செல்ல மறுத்ததன் காரணம் 

எல்லாருக்கும் அனுமதி வழங்கப்பட்டது. 
காந்தியடிகளுக்கு உடல்நிலை சரியில்லை.
 எல்லா மக்களுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.👍
செல்வந்தர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது.

[ 30/50 ] வேலு நாச்சியார் படையில் ஆண்கள் படை பிரிவுக்கு தலைமை ஏற்றிருந்தவர் ?

கோபால நாயக்கர் 
மருது சகோதரர்கள் 👍
சந்தனம் சேர்வை 
ஊமைத்துரை

[ 31/50 ] வேலு நாச்சியார் படையில் பெண்கள் படைப் பிரிவுக்கு தலைமையேற்று இருந்தவர்? 

குந்தவை நாச்சியார் 
உமையாள் 
குயிலி 👍
வேலு நாச்சியார்

[ 32/50 ] ராஜாஜியின் வீட்டில் காந்தியடிகளை சந்தித்த கவிஞர் யார் 

சுத்தானந்த பாரதியார் 
பாரதிதாசன் 
வா வே சு ஐயர் 
பாரதியார்👍

[ 33/50 ]  காந்தியடிகளின் தோற்றத்தில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய பெருமைக்குரிய இடம்.

வேதாரண்யம் 
கன்னியாகுமரி 
மதுரை 👍
தஞ்சாவூர்

[ 34/50 ] வினை என்னும் சொல்லுக்கு செயல் என்பது பொருள் செயலை குறிக்கும் சொல்.

வினைச்சொல்👍
உரிச்சொல் 
இடைச்சொல் 
பெயர்ச்சொல்

[ 35/50 ]  புதுமைகள் செய்த தேசமிது பூமியின் கிழக்கு வாசலிது என்ற கவிதை வரிகள் யாருடையது ?

மீரா 
சுரதா 
தாராபாரதி 👍
புவியரசு

[ 36/50 ] ஆங்கில படையுடன் வேலுநாச்சியார் முதலில் போர் செய்த இடம் .

திண்டுக்கல் 
காளையார்கோவில் 👍
கொல்லங்குடி 
சிங்கம்புனரி

[ 37/50 ]காந்தியடிகளின் மிகவும் கவர்ந்த நூல் எது?

ராமாயணம் 
திருக்குறள் 👍
பகவத் கீதை 
மகாபாரதம்

[ 38/50 ] தேசம் உடுத்திய நூலாடை என தாராபாரதியால் குறிப்பிடப்படும் நூல்? 

கதர் பிறந்த கதை 
கம்பராமாயணம் 
காந்தி பிள்ளைத்தமிழ் 
திருக்குறள்👍

[ 39/50 ] வேலுநாச்சியார் ஹைதர் அலியிடம் எந்த மொழியில் உரையாடினார் 

அரபு 
தமிழ் 
உருது 👍
ஆங்கிலம்

[ 40/50 ] எந்தக் கன்னியின் கூந்தலுக்காக காஷ்மீரத்து மலர்கள் மாலையாக தொடுக்கப்படுகின்றன என்று தாராபாரதி பாடுகிறார் 

தென் முனை 
குமரிமுனை 👍
வடமுனை 
பாரிமுனை

[ 41/50 ] உடையாளின் பெருமையை உணர்வதற்காக வேலுநாச்சியார் நடுகல் நட செய்து தாம் வைத்திருந்த எதைக் காணிக்கையாக்கினார் 

தாலி 👍
ரத்தத் திலகம் 
போர்வாள் 
குருங்கத்தி

[ 42/50 ] தமிழில் சில எழுத்துக்கள் தனித்து நின்று பொருள் தரும் ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்து வந்தும் பொருள் தரும் இவ்வாறு பொருள் தருபவை.

சொல் 👍

யாப்பு 

எழுத்து 

பொருள்


[ 43/50 ] காந்தியடிகளை கவர்ந்த தமிழ் கையேடு என்ற நூலை இயற்றியவர் 

ஜி யு போப் 👍
வையாபுரிப்பிள்ளை
உ வே சா 
ராசமாணிக்கனார்


[ 44/50  மெய்யுணர்வமெய்யுணர்வு .............மேலாடை என்று தாராபாரதி பாடுகிறார் 

தமிழ்த்தாய்க்கு 
சுதந்திரதேவிக்கு 
பூமித்தாய்க்கு 
இந்தியத்தாய்க்கு👍

[ 45/50 ] ஆங்கிலேயரை வெல்ல வேலுநாச்சியார் .. கோட்டையில் தங்கி ஒரு படையைத் திரட்டி பயிற்சி அளித்தார் 

திருச்சி 
திண்டுக்கல் 👍
செஞ்சி
நாமக்கல்

[ 46/50 ] எந்த நாளில் சிவகங்கைக் கோட்டைக்குள் செல்வதற்கு பெண்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது .

ஆயுத பூஜை 
பொங்கல் 
கார்த்திகை
விஜயதசமி👍

[ 47/50 ] காந்தியடிகள் தலைமையில் சென்னையில் இலக்கிய மாநாடு நடைபெற்ற ஆண்டு.

1939 
1938 
1936 
1937👍

[ 48/50 ] பெயர்ச் சொல்லையும் வினைச் சொல்லையும் சார்ந்து வரும் சொல் ஆகும் இது தனித்து இயங்காது.

உரிச்சொல் 
வினைச்சொல் 
பெயர்ச்சொல் 
இடைச்சொல்👍

[ 49/50 ] தாராபாரதி இயற்றாத வரிகள் எது.

புல்வெளி எல்லாம் பூக்காடாகி புன்னகை செய்த பொற்காலம் .

மேற்கு மலைகள் நதிகளை அனுப்பி கிழக்கு கரையில் நலம் கிடைக்கும்.

கல்லைக் கூட காவியமாகி கட்டி நிறுத்திய கலைக்கூடம்.

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம் / காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்.👍

[ 50/50 ] இந்த பெரியவரின் அடி நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்னும் ஆவல் உண்டாகிறது என்று காந்தியடிகள் குறிப்பிட்ட நபர் .

இராசமாணிக்கனார் 
ஜி யு போப் 
உவேசா 👍
வீரமாமுனிவர்





Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY