TNPSC TAMIL
50 + 50 - குரூப் 1&2&4 தேர்வுக்கான திருக்குறள் வினாவிடை
1. 'ஊக்கமது கைவிடேல் 'என்பது ஔவையாரின் ஆத்திச்சூடி இவ்வரியோடு தொடர்புடைய திருக்குறளை தேர்ந்தெடுக்க.
A.மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து
B. உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை நில்லாது நீங்கி விடும்🤩
C. சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல்
D. விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று
2. "உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக் கள்ளத்தால் கள்வேம் எனில்"
மேற்காணும் குறளில் இருந்து நீவிர் அறிவது யாது?
A.நன்மை எது என ஆராயும் அறிவு உடையவர்கள் பயன்தராத சொற்களைப் பேச மாட்டார்கள்
B. தண்ணீரின் உயரத்துக்கு ஏற்ப நீர் பூக்கள் வளரும் ஊக்கத்தின் அளவுக்கு ஏற்ப மனிதர்கள் உயர்வார்கள்
C. அடுத்தவர் பொருளை களவாடலாம் என உள்ளதால் நினைப்பது கூட தீமையானது🤩
D. மோந்து பார்த்தால் அனிச்சமலர் வாடிவிடும் இந்த முகம் மாறினாலே விருந்தினர் உள்ளம் வாடிவிடும்
3. பொறாமை, பேராசை, சினம், கடுஞ்சொல் பேசுதல் ஆகிய நான்கு இல்லாமல் வாழ்வதே அறம் ஆகும் என உரைக்கும் திருக்குறள் எது?
A.அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல்🤩
B.மனத்துக்கண் மாசிலன் ஆதல்
C.ஆற்றுவார் ஆற்றல் இகழாமை
D.பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்
4. எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்வில்லை-------------- வார். இக்குறட்பா எந்த அதிகாரத்தில் பயின்று வந்துள்ளது?
A.அரண் வலியுறுத்தல்
B.இன்னா செய்யாமை
C. கொல்லாமை
D.பெரியாரைப் பிழையாமை🤩
5. பிற உயிர்களின்--------- கண்டு வருந்துவது அறிவின் பயன் ஆகும் என்று வள்ளுவர் கூறுவது?
A.மகிழ்வை
B.பகையை
C. துன்பத்தை🤩
D. செல்வத்தை
6 இரண்டாயிரம் ஆண்டுகளாக வழக்கில் இருக்கும் சில தமிழ் சொற்களை பொருத்துக
a)வேளாண்மை 1.அகநானூறு
b) உழவர் 2.குறுந்தொகை
c) மருந்து 3.திருக்குறள்
d) மீன் 4.நற்றிணை
e) மகிழ்ச்சி 5.தொல்காப்பியம்
A.43152
B.34125😍
C.31425
D.43512
7. அகவிருளை போக்கும் விளக்காகத் திருவள்ளுவர் உரைப்பது எது?
A.புறம் பேசாமை
B.பொய் பேசாமை😍
C.கலவாமை
D.கள்ளாமை
8.வள்ளுவர் மணற்கேணியோடு அறிவை எவ்வாறு ஒப்பிடுகிறார்?
A.உறவினர்களிடம் இருக்கும் செல்வத்தின் அளவு
B.இம்மை மறுமை பற்றி அறிவதை
C.வரவு, செலவு இரண்டையும் அதிகரிப்பதை
D.மனிதர்கள் நூல்களை கற்றுக்கொள்வதை😍
9. எந்த ஊரும் தன் ஊராகும் இதனை அறிந்தும் சிலர் சாகும்வரை கற்காமல் இருப்பது ஏன்? என்ற கருத்தை உணர்த்தும் திருக்குறள் எது?
A.யாதானும் நாடாமல் ஊராமால் என்னொருவன் சாந்துணையும் கல்லாத வாறு😍
B.தாம்இன் புறுவது உலகின் புறக்கண்டு காமுறுவர் கற்றறிந் தார்
C.உவப்பத் தலைக்கூடி உள்ளிப் பிரிதல் அனைத்தே புலவர் தொழில்
D.கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக
10. கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை குரலில் 'மாடு 'என திருவள்ளுவர் உரைப்பது எதை?
A.மக்கள்
B.பாதுகாப்பு
C.செல்வம்😍
D.விலங்கு
11.திருக்குறளுக்கு தமிழ் மரபுரை எழுதியவர்?
A.இரா. இளங்குமரனார் 😍
B. பரிமேழகர்
C. பெருஞ்சித்திரனார்
D. வ. உ. சிதம்பரம்
12."உள்ளுதொ றுள்ளதோ ருள்ளம் உருக்குமே வள்ளுவர் வாய்மொழி மாண்பு "என்று திருவள்ளுவரின் சிறப்பை கூறியவர்?
A. கபிலர்
B. தேனிக்குடி கீரனார்
C. மாங்குடி மருதனார்😍
D. பாரதி தாசன்
13. திருக்குறளுக்கு திருவள்ளுவர் முதலில் வைத்த பெயர்?
A. தெய்வ நூல்
B. பொய்யா மொழி
C. இயற்கை வாழ்வில்லம்
D. முப்பால் 😍
14. திருவள்ளுவர் கிமு 31 ல் தோன்றியவர் என்று கூறியவர் யார்?
A. V R R. தீட்சிதர்
B. ராசமாணிக்கனார்
C. மறைமலை அடிகள் 😍
D. உ. வே. சா.
15. திருக்குறள் இதுவரை எத்தனை மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது?
A. 105
B. 107😍
C. 108
D. 103
16. திருவள்ளுவரின் பெருமையை உணர்த்தும் நூல்?
A. திருவள்ளுவமாலை
B. நெஞ்சு விடு தூது 😍
C. தமிழ் விடு தூது
D. திருவள்ளுவ பயன்
17. திருக்குறளை முதன் முதலில் மலையத்துவசன் மகன் ஞானப்பிரகாசம் பதிப்பித்து வெளியிட்ட ஆண்டு?
A. 1812😍
B. 1821
C. 1848
D. 1822
18. திருவள்ளுவமாலை என்னும் நூலில் உள்ள புலவர்கள் மற்றும் பாடல்களின் எண்ணிக்கை?
A. 55&53
B. 54&52
C. 52&55
D. 53&55😍
19. திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர்?
A. மணக்குடவர் 😍
B. தருமர்
C. பரிமேலழகர்
D. மல்லர்
20. "இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும் பார்தாக்கப் பக்கு விடும்"
எனும் குறளில் பயின்றுள்ள அணி?
A உவமை அணி
B. உருவக அணி😍
C. இல்பொருளுவமை அணி
D. ஏகதேச உருவக அணி
21. பொருளென்னும் பொய்யா விளக்கம் _____________ எண்ணிய தேயத்துச் சென்று.
A. இருளென்னும்
B. இருள்அள்ளல்
C. இருளருக்கும் 😍
D. அருளோடும்
22. "உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த் தெறுபொருளும் வேந்தன் பொருள்"
என்னும் குறளில் முன்பு என்னும் குறளில் 'உல்கு' பொருள் என்பது எதைக் குறிக்கிறது?
A. அரசு உரிமையால் வரும் பொருள்
B. வரியில் வரும் பொருள்😍
C. பகையால் வரும் பொருள்
D. வெற்றியால் வரும் பொருள்
23. "ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர் தாக்கற்குப் பேருந் தகைத்து"
எனும் குறளில் 'பொருதகர்' எனபதின் பொருள் என்ன?
A. ஆட்டுக்கிடா 😍
B. கூகை
C. யானை
D. மயில்
24. "ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்"
இதில் 'விழுப்பம்' என்பதன் பொருள்?
A. சிறப்பு😍
B. துன்பம்
C. இன்பம்
D. உயிரினும் மேலாக
25. "ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின் ஏதம் படுபாக் கறிந்து"
இதில் 'உரவோர்' என்பதின் பொருள்?
A. குற்றம்
B. மன வலிமை இல்லாதவர்
C. மன வலிமையுடையோர் 😍
D. விலகாதவர்
26. என்றும் புலரா தியானர் நாட் செல்கினும் நின்றலன்ரந்து தேன் பிலிற்றும் நீர்மை தாய்க்கு
என்ற திருவள்ளுவமாலை பாடலை பாடியவர்?
A. இறையனார் 😍
B. கபிலர்
C. பரணர்
D. கீரனார்
27.சால்பு இலக்கண குறிப்பு தருக
A. பண்பு பெயர் 😍
B. பண்பு தொகை
C. வினை தொகை
D. குறிப்பு வினை முற்று
28. உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும் இன்னாச்சொனோ ற்பாரின் பின்
எனும் குறள் இடம் பெற்றுள்ள அதிகாரம்?
A. செய்ந்நன்றியறிதல்
B. பொறையுடைமை😍
C. வினைத்திட்பம்
D. ஒப்புரவறிதல்
29. துன்பம் உறவரினும்______துணிவாற்றி
_____பயக்கும் வினை.
A. எண்ணி,இன்பம்
B. செய்க, நன்மை
C. எண்ணி, நன்மை
D. செய்க, இன்பம் 😍
30.பொருத்துக
1.ஒல்காமை -துன்பம்
2.விழுமம் -வலியர்
3.திண்ணியர் -சிறப்பு
4.வீறு - தளராமை
A. 4123😍
B. 4213
C. 4321
D. 4132
31. இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை
பயின்று வந்துள்ள அணி?
A. உவமை அணி
B. எடுத்துக்காட்டு உவமை அணி 😍
C. இல்பொருளுவமை அணி
D. பிறிது மொழிதலனி
32. நீதித் திருக்குறளை நெஞ்சார தம் வாழ்வில் ஓதித் தொழுது எழுக ஓர்ந்து
என்று பாடியவர்?
A. நாமக்கல் கவிஞர்
B. கவிமணி😍
C. பாரதியார்
D. பாரதி தாசன்
33. திருவள்ளுவரின் நினைவைப் போற்றும் வகையில் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் எங்கு நிறுவப்பட்டுள்ளது?
A. கன்னியாகுமரி
B. வேலூர்😍
C. காஞ்சிபுரம்
D. விழுப்புரம்
34. திருக்குறளை முதன்முதலில் யார் எந்த மொழியில் மொழிபெயர்த்தார்?
A. பிரெஞ்சு -ஏரியல்
B. ஜெர்மனி -கிரவுல்
C. லத்தின் -வீரமாமுனிவர் 😍
D. ரஸ்யா -தால்சுதை
35. திருக்குறளில் எத்தனை அதிகாரங்கள் உடைமை என்னும் பெயரில் அமைந்துள்ளது?
A. 10😍
B. 8
C. 12
D. 14
36. உறை ஊற்றி ஊற்றி பார்த்தாலும் புளிக்காத பால் தந்தை தந்த தாய்ப்பால் முப்பால்!
யாருடைய கவிதை?
A. அறிவுமணி
B. கவிமணி
C. அறிவுமதி 😍
D. திருநாவுக்கரசு
37. பரிமேலழகர் உரையுடன் முதன்முதலாக திருக்குறளை பதிப்பித்தவர்?
A. ஞான பிரகாசம்
B. பாலசுப்ரமணியம்
C. ஜி யு போப்
D. ராமானுஜ கவிராயர் 😍
38. திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம்?
A. குன்றிமணி
B. நெருஞ்சி😍
C. குவளை
D. அனிச்சம்
39. பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்
பயின்று வந்துள்ள அணி?
A. உருவக அணி
B. உவமை அணி
C. ஏகதேச உருவக அணி😍
D. நிரல் நிறை அணி
40. அல்லற் படுப்பதூஉம் இல் எவரோடு பழகினால்?
A. வாள்போல் பகைவர்
B. தீயினத்தர் 😍
C. மெய்ப்பொருள் காண்பவர்
D. அறிவுடையார்
41. அறத்துப்பாலில் உள்ள இயல்களின் அதிக பிரிவுகளைக் கொண்டது?
A. பாயிரவியல்
B. இல்லறவியல்😍
C. ஊழியல்
D. துறவறவியல்
42. பொருள் அதிகாரத்தில் நட்பின் கீழ்வரும் பிரிவுகளின் எண்ணிக்கை?
A. 13
B. 2
C. 1
D 17😍
43. திருச்சிக்கு அருகில் அல்லூரில் திருவள்ளுவர் தவச்சாலை அமைத்தவர்?
A. இளங்குமரனார் 😍
B. வள்ளலார்
C. உ. வே. சா.
D. பெருஞ்சித்திரனார்
44. கடுகைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டி குறுகத் தரித்த குறள்
யாருடைய வரிகள்?
A. ஔவையார்
B. பரணர்
C. இடைக்காடனார் 😍
D. பாரதியார்
45. ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை ஆஅதும் என்னு_____.
A.வினை
B.மவர்😍
C.தரும்
D.படும்
46. தமிழ் மொழி அழகான சித்திர வேலைப்பாடு உடைய வெள்ளித்தட்டு திருக்குறள் அதில் வைக்கப்பட்ட தங்க ஆப்பிள் யாருடைய கூற்று?
A.வீரமாமுனிவர்
B.கவிமணி
C.ஜெயின்
D.கிரவுல் 😍
47. திருக்குறளில் அதிகம் பயன்படுத்திய எழுத்து?
A.னி😍
B.ளி
C.ன
D.ள
48. ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு ஆழி எனப்படு வார்
இக்குறளில் பயின்று வந்துள்ள அணி?
A.உவமை அணி
B.உருவக அணி
C.இல்பொருளுவமை அணி
D.ஏகதேச உருவக அணி 😍
49. தொடை நிலையத்தில் உள்ள மொத்த விகற்பங்கள் எத்தனை?
A.35😍
B.25
C.49
D.56
50. திருவள்ளுவரைப் போல் கம்பனைப்போல் இளங்கோவடிகள் போல் பிறந்ததில்லை எவரும் யாருடைய கூற்று?
A.பாரதியார்😍
B.பாரதிதாசன்
C.கவிமணி
D.ஔவையார்
51. நாட்டுடைமையாக்கப்பட்ட அரசுப் பேருந்துகளில் திருக்குறள் இடம்பெற செய்தவர்?
A.கருணாநிதி
B.காமராஜர்
C.M.G.R
D.அண்ணா 😍
52. ஜி யு போப் ஆங்கிலத்தில் எத்தனை ஆண்டுகள் திருக்குறளைப் படித்து சுவைத்து 1886-ம் திருக்குறளை மொழி பெயர்த்தார்?
A.20ஆண்டுகள்
B.40ஆண்டுகள்😍
C.25ஆண்டுகள்
D.50ஆண்டுகள்
53. திருக்குறளில் இடம்பெறாத ஒரே எழுத்து?
A.ஃ
B.ஐ
C.ஒள 😍
D.எ
54. திருக்குறள் அரங்கேற்றப்பட்ட இடம்?
A.ஸ்ரீரங்கம்
B.சிதம்பரம்
C.மதுரை😍
D.காஞ்சி
55. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் அற நூல்கள் மொத்தம் எத்தனை?
A. 6
B. 11😍
C. 1
D. 7
56. திருக்குறளில் கோடி என்ற சொல் எத்தனை இடங்களில் இடம்பெற்றுள்ளது?
A. 6
B. 8
C 7😍
D. 5
57. நாட்டின் சிறந்த அரண்களுள் நீருக்கு முதலிடம் தருபவர்?
A.ஔவையார்
B. பவணந்தி முனிவர்
C. சமண முனிவர்
D. திருவள்ளுவர் 😍
58. திருவள்ளுவரின் உருவப்படத்தை வரைந்தவர்?
A. பாலசுப்ரமணியம்
B. வேணுகோபால் சர்மா 😍
C. செல்வ கேசவா முதலியார்
D. ராஜ கோபால்
59. சோவியத்து அறிஞர் தால்சுதாய் வழிகாட்டுதலால் திருக்குறள் மூலத்தை நேரடியாக படிக்க விரும்பியே தமிழ் பயில தொடங்கினேன்
யாருடைய கூற்று
A. காந்தி 😍
B. நேரு
C. சுபாஷ் சந்திர போஸ்
D. அம்பேத்கார்
60. அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து தீதின்றி வந்த பொருள்
என்ற அறம் பொருள் இன்பம் மூன்றும் வந்த ஒரே திருக்குறள் எத்தனையாவது திருக்குறள்?
A. 756
B. 752
C. 758
D. 754😍
61. திருவள்ளுவர் பிறந்த இடமாகக் கருதப் படுவது?
A. மைலாப்பூர் 😍
B. திருவள்ளூர்
C. கிண்டி
D. திருவல்லிக்கேணி
62. பொல்லாத தில்லை புறை தீர்த்த வாழ்வினிலே என்று புகழ்ந்து கூறியவர்?
A. பாரதியார்
B. பாரதிதாசன் 😍
C. வள்ளுவர்
D. கம்பர்
63. திருக்குறளை தெலுங்கில் மொழி பெயர்த்தவர்?
A. கிரவுல்
B. அப்பாசாமி.
C. பாலசுப்ரமணியம்
D. வைத்தியநாதன்😍
64. திருக்குறள் இலக்கணக்குறிப்பு தருக
A. அன்மொழித்தொகை
B. பண்புத்தொகை
C. வினை தொகை
D. அடையடுத்த கருவியாகு பெயர் 😍
65. ஆராயும் அறிவு உடையவர்கள் எந்த வகையான சொற்களை பேசமாட்டார்?
A. பயன் தராத 😍
B. உயர்வான
C. விலையற்ற
D. பயன் உள்ள
66. பிரித்து எழுதுக. வன்பாற்கண்
A. வன் +பால் +கண்
B. வன்மை +பால் +கண்
C. வன்பால் +கண்😍
D. வன் +பார்கண்
67. திருக்குறளில் உள்ள மொத்த இயல்களின் எண்ணிக்கை?
A. 7
B. 5
C. 9😍
D. 3
68. உள்ளத்தில் ______இல்லாமல் இருப்பதே சிறந்த அறமாகும்.
A. குற்றம்😍
B. பாவம்
C. அழுக்காறு
D. ஆசை
69. "வணக்கம் வள்ளுவ" என்னும் கவிதை நூலுக்காக 2004ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்றவர் யார்?
A.கவிஞர் வைரமுத்து
B.கலைஞர் கருணாநிதி
C.ஈரோடு தமிழன்பன்😍
D.அப்துல் ரகுமான்
70. திருக்குறள் இதுவரை இந்திய மொழிகளில் மட்டும் மொத்தம் எத்தனை மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது?
A. 13
B. 16
C. 14😍
D. 16
71. திருக்குறள் நீதி இலக்கியம் என்ற நூலின் ஆசிரியர்?
A.வ. உ. சி
B. திருநாவுக்கரசு 😍
C. முனுசாமி
D. பாரதியார்
72. உலகினில் நாகரிகம் முற்றிலும் அழிந்துவிட்டாலும் திருக்குறளும் கம்பன் காவியம் இருந்தால் போதும் மீண்டும் அதனை புதுப்பித்து விடலாம் என்று கூறியவர்
A. ஜி. யு. போப்
B. கால்டுவேல் 😍
C. திரு.வி. க.
D.மனோன்மணி
73. திருவள்ளுவர் தோன்றியிராவிட்டால் தமிழன் என்னும் ஓர் இனம் இருப்பதாக உலகத்தாருக்கு தெரிந்திருக்காது திருக்குறள் என்னும் ஒரு நூல் தோன்றியிராவிட்டால் ஒரு மொழி இருப்பதாக உலகத்தாருக்கு தெரிந்திருக்காது என்று கூறியவர்
A. கால்டுவேல்
B. கி. ஆ. பொ.விஸ்வநாதம் 😍
C. பாரதியார்
D. பாரதிதாசன்
74.ஆண்மையின் கூர்மை எது என திருவள்ளுவர் கூறுவது?
A. வரியவருக்கு உதவுதல்
B. உறவினருக்கு உதவுதல்
C. பகைவர்க்கு உதவுதல் 😍
D. நண்பனுக்கு உதவுதல்
75. கான முயலெய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது
குறளில் வந்துள்ள அணி
A. பிறிதுமொழிதலணி😍
B. வஞ்ச புகழ்ச்சி அணி
C. தற்குறிப்பேற்ற அணி
D. உவமை அணி
76. புகழாலும் பழியாலும் அறியப்படுவது என திருவள்ளுவர் கூறுவது?
A.அடக்கமுடைமை
B.பொருளுடைமை
C.நடுநிலைமை 😍
D.நாணுடைமை
77. விலங்கொடு_________ அனையர்_________ கற்றாரோடு ஏனை யவர்.
A.கால்வல், கடலோடும்
B.எவ்வினையும், முற்றும்
C.மக்கள், இலங்குநூல் 😍
D.காவதன், எரிமுன்னர்
78. அரசரை அவரது _______காப்பாற்றும்.
A.செங்கோல்
B.வெண்குடை
C.படைவலிமை
D.குற்றமற்ற ஆட்சி 😍
79.பிரித்து எழுதுக.
கசடற
A.கசடு +அற 😍
B.கசட +அற
C.கச +தர
D.கசடு +உற
80. திருக்குறளின் சாரம் என்று அழைக்கப்படும் நூல்?
A.நாலடியார்
B.நீதிநெறி விளக்கம் 😍
C.பழமொழிநாநூறு
D.திரி கடுகம்
81. கன்னியாகுமரியில் உள்ள 133அடி திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்ட வருடம்?
A.2001 jan1
B.2000jan1😍
C.2005jan1
D.2003jan1
82. கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையை வடிவமைத்தவர் யார்?
A.செல்வ கேசவன்
B.ராஜமாணிக்கம்
C.கணபதீஸ்பதி 😍
D.பாலசுப்ரமணியம்
83.______ஒரு நாட்டின் அரண் அன்று.
A.காடு
B.வயல்😍
C.மலை
D.தெளிந்த நீர்
84. பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்
இதில் 'ஒள்ளியவர்' என்பதின் பொருள்?
A.அறிவுடையார் 😍
B.அறிவிலார்
C.பகைவர்
D.பெரியர்
85. திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படும் நாள்?
A.தை முதல் வாரம்
B.தை 1நாள்
C.தை 2நாள் 😍
D.தை 3நாள்
86. வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே என்று கூறியவர்?
A.பாரதியார்
B.பாரதிதாசன் 😍
C.கம்பன்
D.திரு வி க
87. அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை திறனறிந்து தேர்ந்து கொளல்
என்பதில் 'கேண்மை' என்பதின் பொருள்?
A.பகைமை
B.அன்பு
C.நட்பு 😍
D.இன்பம்
88. அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப் பேணித் தமராக் கொளல்
இதில் 'தமர்' என்பதன் பொருள் என்ன?
A.பெரியார்
B.உறவினர் 😍
C.பகைவர்
D.சகோதரர்
89. இலக்கண குறிப்பு தருக. செய்க
A. வியங்கோள் வினைமுற்று😍
B.பண்பு தொகை
சி வினைத்தொகை
D.உரிச்சொல்
90. "முதலி லார்க்கு ஊதியமில்லை மதலையாஞ் சார்பிலார்க் கில்லை நிலை" இதில் பயின்று வந்துள்ள அணி?
A.உவமை
B.உருவகம்
C.எடுத்துக்காட்டு உவமை😍
D.வஞ்சப்புகழ்ச்சி
91."கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு சொல்வேறு பட்டார் தொடர்பு" இக்குறளில் 'கனவிலும் நினைக்காதது யாருடைய நட்பு' என திருவள்ளுவர் கூறுகிறார்?
A.தீஞ்செயல்களை புரிவோரது நட்பு
B.தான் செய்யும் குற்றத்தை மன்னிக்கும் குணம் இல்லாதோர் நட்பு
C.தகுந்த நேரத்தில் உதவி செய்யாதோர் நட்பு
D.செயல் வேறு சொல் வேறு என்று உள்ளவர் நட்பு😍
92. "தாயின் பசியை கண்டபோதும் சான்றோர் பழிக்கும் செயல்களை செய்யாதே" என்று திருவள்ளுவர் கீழ்காணும் எந்த திருக்குறள் மூலம் உணர்த்துகிறார்?
A. தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும்
B.நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய வாயினர் ஆதல் அரிது
C.ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை😍
D.ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை ஆஅதும் என்னு மவர்
93. "அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு ஐந்துசால் ஊன்றிய தூண்" குறிப்பிடப்படும் இரு ஐந்து சால்புகள் யாவை?
A.இணக்கமும் வானமும்
B.இணக்கமும் பிணக்கும்
C.வானமும் நாணமும்
D.நாணமும் இணக்கமும்😍
94. "ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர் போஒம் அளவும்ஓர் நோய்" திருக்குறளில் திருவள்ளுவர், 'இறக்கும் வரை உள்ள நோய்' எது என்று கூறுகிறார்?
A.கொடிய குணம் உடையவன்
B.தான் செய்ய மனம் இருந்தும், தானம் செய்யாமல் இருப்பவன்
C.சொன்னாலும் செய்யாமல், தானாகவும் செய்யாமல் இருப்பவன்😍
D.மிகுதியாக உண்பவருக்கு உண்டாகும் நோய்
95. துன்பத்தில் மனக்கசப்பு என்னும் மோசமான துன்பம் மறைந்தால், இன்பத்தில் சிறந்த இன்பம் பெறலாம், என இன்பத்தையும் துன்பத்தையும் பற்றி ஒருங்கே திருவள்ளுவர் கூறும் திருக்குறள் எது?
A.பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி
B.இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை
C.இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்😍
D.மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல்
96. திருக்குறள் தெளிவுரை எழுதியவர்?
A.ஈவேரா
B.வ. உ. சிதம்பரனார்😍
C.கி. ராஜநாராயணன்
D.கு. சிவராமன்
97. "காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன் நாமம் கெடக்கெடும் நோய்" என்ற திருக்குறள் எந்த அதிகாரத்தில் பயின்று வந்துள்ளது?
A.மெய்யுணர்தல்😍
B.பெரியாரைத் துணைக்கோடல்
C.கொடுங்கோன்மை
D.கண்ணோட்டம்
98. "நச்சப் படாதவன் செல்வம் நடுஊருள் நச்சு மரம்பழுத் தற்று" இக்குறட்பாவில் பயின்று வரும் அணி எது?
A.உவமையணி😍
B.பிறிது மொழிதல் அணி
C.எடுத்துக்காட்டு உவமையணி
D.தற்குறிப்பேற்ற அணி
99. எதற்காக எழுதுகிறேன்? என்ற நூலின் ஆசிரியர் யார்?
A.கண்ணதாசன்
B.காளமேகப்புலவர்
C.புதுமைப்பித்தன்
D.ஜெயகாந்தன்😍
100. மனவலிமை, குடிகளை காத்தல், ஆட்சிமுறையை கற்றல், நூல்களைக் கற்றல், விடாமுயற்சி ஆகிய ஐந்தும் சிறப்பாக அமைந்தவரே அமைச்சர் ஆவார் என்பதை எக்குறட்பாவின் மூலம் நாம் அறியலாம்?
A.கருவியும் காலமும் செய்கையும் செய்யும் அருவினையும் மாண்ட தமைச்சு
B.வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோ டைந்துடன் மாண்ட தமைச்சு😍
C.மதிநுட்பம் நூலோ டுடையார்க் கதிநுட்பம் யாவுள முன்நிற் பவை
D.செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத் தியற்கை அறிந்து செயல்
Previous article
Next article
Leave Comments
Post a Comment