Ads Right Header

பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 5. வினாவிடை!



 1.தான் அறியாத ஒன்றை அறிந்து கொள்வதற்காக வினவுவது………….
A) அறிவினா
B) அறியாவினா
C) ஐயவினா
D) ஏவல் வினா
 
2.மேரி மெக்லியோட் பெத்யூன் என்னும் அமெரிக்கக்  கல்வியாளரின் ,  
வாழ்க்கையை உனக்குப் படிக்கத் தெரியாது என்ற தலைப்பில் நூலாகப் படைத்தவர்
A) அகிலன்
B) கமலாலயன்
C) கீதாலயன்
D) ஜெயகாந்தன்
 
3.கொற்கைக் கோமான் கொற்கையம் பெருந்துறை என்று குறிப்பிடும் நூல்
A) அகநானூறு
B) புறநானூறு
C) ஐங்குறுநூறு
D) நற்றிணை
 
4.வினாவிற்கு விடையாக இனிமேல் நேர்வதைக் கூறுவது ........... ..............
A) உறுவது கூறல் விடை
B) உற்றது உறைத்தல் விடை
C) இனமொழி விடை
D) வினா எதிர் வினாதல் விடை
 

5.உடன்பட்டுக் கூறும் விடை …………………….. 
A) சுட்டுவிடை
B) மறைவிடை
C) நேர்விடை
D) ஏவல்விடை
 
6.கொற்கை என்னும் ஊர் அமைந்துள்ள மாவட்டம்
A) திருநெல்வேலி
B) மதுரை
C)தூத்துக்குடி
D) கன்னியாகுமரி
 
7.அருந்துணை என்பதைப் பிரித்து எழுதுக
A) அருமை + துணை
B) அரு + துணை
C)அருமை + இணை
D) அரு + இணை
 
8.தவறாக பொருந்தியுள்ளதை தேர்ந்தெடு?
A)பெருக்கி - வினையெச்சம்
B)திருத்தி - வினையெச்சம்
C)அகற்றி - வினையெச்சம்
D)அருந்துணை - வினையெச்சம்
 
9.கற்றவர் வழி அரசு செல்லும் என்று கூறும் இலக்கியம் எது?
A) காப்பிய இலக்கியம்
B) பக்தி இலக்கியம்
C)சங்க இலக்கியம்
D)நீதி இலக்கியம்
 
10.செய்குதம்பிப்பாவலர் இவ்வாறு அழைக்கப்படுகிறார்……………………
A) சதாவதானி
B)தசாவதானி
C) மொழி ஞாயிறு
D) கவிமணி
 
11. மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும் என்னும் சின்னமனூர்ச் செப்பேட்டுக் குறிப்பு உணர்த்தும் செய்தி …………………….
A) சங்க காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது
B) காப்பியக் காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது
C)பக்தி இலக்கியக் காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது
D) சங்கம் மருவிய காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது
 
12.மொழிபெயர்த்தல் என்னும் தொடரைத் தொல்காப்பியர் கையாண்ட இடம் ……………
A) பெயரியல்
B) வினையியல்
C)மரபியல்
D) உயிரியல்
 
13.ஊறும் நீர்போலக் கற்கும் அளவு அறிவு சுரக்கும் என்று கூறியவர் யார்?
A) ஒளவையார்
B) கபிலர்
C)திருவள்ளுவர்
D) செய்குதம்பிப் பாவலர்
 
14.வினாவிற்கு வினாவை திரும்பக் கேட்பது ………………
A) ஏவல் விடை
B) வினா எதிர்வினாதல் விடை
C) மறைவிடை
D) நேர்வினா
 
15.ஆடத்தெரியுமா என்ற வினாவிற்குப் பாடத்தெரியும் என்று கூறுவது…………..
A) வினாஎதிர் வினாதல்
B) உற்றது உரைத்தல்
C)உறுவது கூறல்
D) இனமொழி விடை
 
 
16.செய்குதம்பிப் பாவலர் சிறந்து விளங்கிய கலை ......
A) ஓவியம்
B) சதாவதானம்
C) நாட்டியம்
D) சிற்பம்
 
17.வினா ...................வகைப்படும்
A) நான்கு
B) ஐந்து
C) ஆறு  
D) ஏழு

 
18.என்னிடம் பாரதிதாசன் கவிதைகள் இரண்டு படிகள் உள்ளன. உன்னிடம் பாரதிதாசனின் கவிதைகள் இருக்கிறதாஎன்று கொடுப்பதற்காக வினவுவது? A) கொளல் வினா
B) ஐய வினா
C)கொடை வினா
D) ஏவல் வினா
 
19.செய்குதம்பிப் பாவலரின் மாவட்டம் .......................வட்டம்....................
A) கன்னியாகுமரிஇடலாக்குடி
B) தஞ்சாவூர்படைத்தலைவன்குடி
C) கடலூர்மஞ்சக்குப்பம்
D) சென்னை மயிலாப்பூர்
 
20.மொழிபெயர்க்கப்பட்டதால் நோபல் பரிசு பெற்ற இந்தியக் கவிஞர் யார்?
A) வி.சூ. நைப்பால்
B) இரட்யார்ட் கிப்ளிவ்
C)வெங்கட்ராமன்
D) இரவீந்திரநாத் தாகூர்
 
21.செய்குதம்பிப் பாவலர் …………...வயதிலேயே செய்யுள் இயற்றும் திறன் பெற்றவர்
A) பத்து
B) பதினைந்து
C)பதினெட்டு
D) இருபது –
 

22 விடை……………… வகைப்படும்
A) ஆறு
B)ஏழு
C)எட்டு
D) ஒன்பது
 
23.நேரடி விடைகளாக இருக்கும் வெளிப்படை விடைகள் எத்தனை?
A) மூன்று
B) நான்கு
C) ஐந்து
D) ஆறு
 
24..குறிப்பு விடைகளில் பொருந்தாததைக் கண்டறிக
A) நேர் விடை
B) ஏவல் விடை
C) உறுவது கூறல்
D) இனமொழி
 
25.செய்யுளனில் சொற்களைப் பொருளுக்கு ஏற்றவாறு சேர்த்தோ மாற்றியோ பொருள் .......என்று பெயர் கொள்ளும் முறைக்கு
A) பொருள்கோள்
B) வழாநிலை
C)அணி
D) வழுவமைதி
 
26.பொருள்கோள் …………….. வகைப்படும்
 A) 6
B) 7
C) 8
D) 9
 
27.சதாவதானி என்பது ……………………….
A) நூறு செயல்களை ஒரே நேரத்தில் செய்து காட்டுவது
B) ஆயிரம் யானைகளைப் போரில் கொல்வது
C) நூறு மலர்களை ஒரே இடத்தில் குவிப்பது
D) ஆயிரம் பேருக்கு உணவிடுவது
 
28.பாடலின் தொடக்கம் முதல் முடிவு வரை நேராகவே பொருள் கொள்ளுமாறு அமைவது………………. ஆகும்
A) ஆற்று நீர்ப் பொருள்கோள்
B)நிரல் நிறைப் பொருள்கோள்
C)கொண்டு கூட்டுப் பொருள்கோள்
D) மொழிமாற்றுப் பொருள்கோள்
 
29.ஒரு செய்யுளில் சொற்கள் முறையே பிறழாமல் நிரல் நிறையாக அமைந்து வருவது ………………………
A) நிரல் நிறைப் பொருள்கோள்
B) விற்பூட்டுப் பொருள்கோள்
C)ஆற்று நீர்ப் பொருள்கோள்
D) மொழிமாற்றுப் பொருள்கோள்
 
30.நிரல் நிறைப் பொருள்கோள்……………………….. -வகைப்படும்
A) மூன்று
B)நான்கு
C)ஆறு
D) இரு

 
31..செய்குதம்பிப்பாவலர் சதாவதானி என்று பாராட்டுப் பெற்ற இடம்.......... நாள்…………..
A) சென்னை தீவுத் திடல், 1909 மார்ச் 8
B) சென்னை விக்டோரியா அரங்கம், 1907 மார்ச் 10
C) தஞ்சாவூர் திலகர் திடல், 1908 பிப்ரவரி 
D) திருச்சி அண்ணா மைதானம், 1906 மார்ச் 6
 
32. மொழிபெயர்ப்பு முயற்சியில் ஈடுபடும் நிறுவனங்கள் ……..
A) சாகித்திய அகாதெமி
B) தேசிய புத்தக நிறுவனம்
C)தென்னிந்திய புத்தக நிலையம்
D) இவை அனைத்தும்
 
33.காசினியில் இன்றுவரை அறிவின் மன்னர் கண்டுள்ள கலைகளெல்லாம் தமிழில் எண்ணிப் பேசி மகிழ் நிலை வேண்டும் என்று கூறியவர் யார்?
A) குலோத்துங்கள்
B) பராந்தகன்
C) இராஜராஜன்
D) இராஜேந்திரன்
 
34.ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது மொழிபெயர்ப்பு என்று கூறியவர்……………………
A) மு. கு. ஜகந்நாதர்
B) மணவை முஸ்தபா
C) அ. முத்துலிங்கம்
D)அப்துல் ரகுமான்
 
 
35.உலக நாகரிக வளர்ச்சிக்கும் பொருளியல் மேம்பாட்டிற்கும் மொழிபெயர்ப்பும் ஒரு காரணமாகும் என்று கூறியவர்
A) மு. கு. ஜகந்நாதர்
B) மணவை முஸ்தபா
C)மு. மேத்தா
D) அ. முத்துலிங்கம்
 
36.வடமொழிக் கதைகளைத் தழுவிப் படைக்கப்படாத இலக்கியத்தைக் கண்டறிக
A) சீவக சிந்தாமணி
B) கம்பராமாயணம்
C) சிலப்பதிகாரம்
D) வில்லிபாரதம்
 
37.தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்என்று பாடியவர்?
A) பாரதியார்
B) பாரதிதாசன்
C) வாணிதாசன்
D) அப்துல் ரகுமான்
 
38.வடமொழிக் கதையைத் தழுவி எழுதப்பட்ட இலக்கியத்தைக் கண்டறிக
 A) பெருங்கதை
B) முக்கூடற்பள்ளு
C)கலிங்கத்துப் பரணி
D) மணிமேகலை
 
 
39.மொழிபெயர்ப்பின் மூலம் பெற்றிருக்கக்கூடிய கொள்கை ……………….
A) நடப்பியல்
B) தத்துவவியல்
C)இலக்கியத் திறனாய்வு
D) திறனாய்வு
 
40.வால்காவிலிருந்து கங்கை வரை என்ற நூலைக் கணமுத்தையா தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்ட ஆண்டு…………………
A) 1942
B) 1945
C) 1949
D) 1952
 
41.மொழிபெயர்ப்பினால் புதிய சொற்கள் உருவாகி …………………ஏற்படுகிறது
A) மொழிவளம்
B) மொழி வளமிழப்பு
C)மொழி சிதைவு
D) மொழி மாற்றம்
 
42.செய்குதம்பிப் பாவலரின் நினைவைப் போற்றும் வகையில் மணிமண்டபமும் பள்ளியும் அமைந்துள்ள இடம் ……………………….
A) கன்னியாகுமரி
B)இடலாக்குடி
C)சென்னை
D) மயிலாப்பூர்
 
 
43.செய்யுளில் எழுவாய்களை வரிசைப்படுத்தி அவை ஏற்கும் பயனிலைகளை எதிர் எதிராகக் கொண்டு பொருள் கொள்ளுதல் -………………-ஆகும்
A) விற்பூட்டுப் பொருள்கோள்
B)எதிர் நிரல் நிறைப் பொருள்கோள்
C) முறை நிரல் நிறைப் பொருள்கோள்
D) மொழிமாற்றுப் பொருள்கோள்
 
44.ஒரு செய்யுளில் பல அடிகளில் சிதறிக் கிடக்கும் சொற்களைப் பொருளுக்கு ஏற்றவாறு ஒன்றோடொன்று கூட்டிப் பொருள் கொள்வது ………..ஆகும்
A) கொண்டு கூட்டுப் பொருள்கோள்
B) ஆற்று நீர்ப் பொருள்கோள்
C) மொழிமாற்றுப் பொருள்கோள்
D)நிரல் நிறைப் பொருள்கோள்
 
45.சென்றிடுவீர் எட்டுத்திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்என்று பாடியவர்
A) பாரதிதாசன்
B) வாணிதாசன்
C) பாரதியார்
D) கண்ணதாசன்

46. ஆசிரியர் மாணவனிடம் இப்பாடலின் பொருள் யாது?
அ) அறிவினா
ஆ) ஐயவினா
இ) அறியாவினா
ஈ) கொளல்வினா

47. இச்செயலைச் செய்தது மங்கையா? மணிமேகலையா?
அ) அறிவினா
ஆ) அறியாவினா
இ) ஐயவினா
ஈ) ஏவல்வினா

48. திருவிளையாடற்புராணத்தின் ஆசிரியர் யார்?
அ) சமண முனிவர்
ஆ) அகத்தியர் முனிவர்
இ) பரஞ்சோதி முனிவர்
ஈ) இடைக்காடனார்

49. திருவிளையாடற்புராணம் படலங்களின் எண்ணிக்கை ………………………
அ) 64
ஆ) 96
இ) 30
ஈ) 18

50. கேள்வியினான், காடனுக்கும் கபிலனுக்கும் – இச்சொற்களுக்குரிய இலக்கணக் குறிப்புகளைக் கண்டறிக.
அ) வினையாலணையும் பெயர், எண்ணும்மை
ஆ) எண்ணும்மை, வினையாலணையும் பெயர்
இ) முற்றெச்சம், உம்மைத் தொகை
ஈ) வினையெச்சம், தொழிற் பெயர்

51. பரஞ்சோதி முனிவர் ……………………… நூற்றாண்டைச் சேர்ந்தவர்.
அ) பத்தாம்
ஆ) பதினேழாம்
இ) பதினெட்டாம்
ஈ) பதினைந்தாம்


Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY