Ads Right Header

விடைகள் - எட்டாவகுப்பு தமிழ் இயல் 4.

 


எட்டாவகுப்பு தமிழ் இயல் 4.


1. ‘செங்குட்டுவனுக்குத் தம்பி இளங்கோ’ இதில் இடம்பெறும் நான்காம் வேற்றுமைப் பொருள் ……………….
A) அதுவாதல்
B) பொருட்டு
C) முறை👍
D) எல்லை

2. ஐ.நா அவையின் முதல் பெண் தலைவர் யார்?
a) லெட்சுமி ஷெகல்
b) விஜயலட்சுமி பண்டிட்👍
c) இந்திராகாந்தி
d) சரோஜினி நாயுடு 

3. "ஏடன்று கல்வி : சிலர் எழுதும் பேசும் இயலன்று கல்வி: பார்க்க கெட்டா தென்னும் வீடன்று கல்வி,  ஒரு தேர்வு தந்த விளைவன்று கல்வி அது வளர்ச்சி வாயில்" - என்று கூறியவர் யார்?
a) ஞானக்கூத்தன்
b) திரு.வி.க
c) வாணிதாசன்
d) குலோத்துகன்👍

4." கல்வி கரையில் கற்றவர் நாள் சில" - எனும் பாடல் வரி இடம் பெற்ற நூல் எது?
a) திருக்குறள் 
b) நீதிநெறி விளக்கம்
c) நாலடியார்👍
d) பழமொழி நானூறு

5. குமரகுருபர் வாழ்ந்த காலம்?
a) 15 -ம் நூற்றாண்டு 
b) 17- ம் நூற்றாண்டு👍
c) 16- ம் நூற்றாண்டு 
d) 18- ம் நூற்றாண்டு

6. கடவுள் உட்பட எத்தனை வெண்பாக்களை நீதிநெறி விளக்கம் கொண்டுள்ளது?
a) 100
b) 102👍
c) 103
d) 101

7. கீழ்கண்டவற்றுள் குமரகுருபரர் எழுதாத நூல் எது?
a) சகலகலாவல்லிமாலை
b) முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ்
c) கந்தர் கலிவிருத்தம்👍
d) கயிலைக் கலம்பகம்

8. ஆலங்குடி சோமு எம் மாவட்டத்தில் பிறந்தவர்?
a) புதுக்கோட்டை
b) சிவங்கங்கை👍
c) மதுரை
d) தஞ்சாவூர் 

9. இயற்கை இறையுறையுள்
A ) கம்பராமாயணம்
B ) பெரிய புராணம்
C ) தேவார திருவாசக 
திருவாய்மொழிகள்👍
D ) சிந்தாமணி

10) தமிழ் தென்றல் என அழைக்கப்பட்டவர் யார்?
a) ஆலங்குடி சோமு
b) மு.வரதராசனார்
c) திரு.வி.க👍
d) மேத்தா

11) " ஜெயகாந்தனோடு பல்லாண்டு"  என்ற நூலை எழுதியவர் யார்?
a) திரு.வி.க
b) பி.ச.குப்புசாமி👍
c) ஆலங்குடி சோமு
d) அகிலன்

12) திரு.வி.க இயற்றாத நூல் எது?
a) மனித வாழ்க்கையும் காந்தியடிகள்
b) பெண்ணின் பெருமை
c) தமிழமுதம்👍
d) பொதுமை வேட்டல்

13) வேற்றுமை எத்தனை வகைப்படும்?
a) 5
b) 6
c) 7 
d) 8👍

14) கீழ்வண்டவற்றுள் பொருந்தாதது எது?
a) இரண்டாம் வேற்றுமை - ஐ
b) மூன்றாம் வேற்றுமை - ஆல்
c) நான்காம் வேற்றுமை - கு
d) ஐந்தாம் வேற்றுமை- அது👍

15) "விளி வேற்றுமை" என்று அழைக்கப்படும் வேற்றுமை எது?
a) ஐந்தாம் வேற்றுமை
b) ஏழாம் வேற்றுமை
c) எட்டாம் வேற்றுமை 👍
d) நான்காம் வேற்றுமை

16) தவறாக பொருந்தியுள்ளது எது?
a) திறமை - talent
b) சீர்திருத்தம் - oranment👍
c) நிறுத்தற்குறி - punctuation
d) விழிப்புணர்வு - awareness

17) "கற்றோர்க்கு கல்வி நலனே கலனல்லால் " - என்னும் வரி இடம்பெற்ற நூல் எது?
a) கலிவெண்பா
b) கயிலைக்கலம்பகம்
c) நீதிநெறி விளக்கம்👍
d)கந்தர் கலிவெண்பா

18) கற்றவர்க்கு அழகு தருவது எது?
a) தங்கம்
b) வெள்ளி
c) வைரம்
d) கல்வி👍

19) "தடம்" - என்னும் சொல்லின் பொருள் ?
a) செருக்கு
b) அடையாளம்👍
c) வழி
d) பாதை

20) மனிதன் விலங்கிலிருந்து மாறுபட்டு உயர்ந்து நிற்பதற்கு அடிப்படையாக விளங்குவது ____________ ஆகும்.
a) உடை
b) இருப்பிடம்
c) அறிவு
d) கல்வி👍

21) "கோயிலப்பா" என்னும் சொல்லை பிரித்து எழுத கிடைப்பது?
a) கோ + அப்பா
b) கோயில் + லப்பா 
c) கோயில் + அப்பா👍
d) கோ + இல்லப்பா

22) ஆலங்குடி சோமு பெற்ற விருது எது?
a) பத்மபூஷண்
b) கலைமாமணி👍
c) பாரத ரத்னா
d) பத்ம விபூஷன்

23) பெயர்சொல்லிின் பொருளை வேறுபடுத்துவது __________ ஆகும்.
a) எழுவாய்
b) செயப்படுபொருள்
c) பயனிலை
d) வேற்றுமை👍

24) உடனிகழ்ச்சிப் பொருளில் _______ வேற்றுமை வரும்.
a) மூன்றாம்👍
b) நான்காம்
c) ஐந்தாம்
d) ஆறாம்

25) "அறத்தான் வருவதே இன்பம்" - இத்தொடரில் ______வேற்றுமை பயின்று வந்துள்ளது.
a) இரண்டாம்
b) மூன்றாம்👍
c) ஆறாம்
d) ஏழாம்

26) "முல்லைக்குக் தேர் கொடுத்தான் " இதில் இடம்பெறும் நான்காம் வேற்றுமை பொருள் ?
a) தகுதி
b) நட்பு 
c) பகை
d) கொடை👍

27) உரிமை பொருளில் வரும் வேற்றுமை _______.
a) முதல் வேற்றுமை
b) ஐந்தாம் வேற்றுமை
c) ஆறாம் வேற்றுமை👍
d) ஏழாம் வேற்றுமை

28) "மலர் பானையை வனைந்தாள்" - இத்தொடர் _______ பொருளைக் கொண்டது.
a) ஆக்கல்👍
b) அழித்தல்
c) கொடை
d) அடைதல்

29) பொருத்துக.
1) மூன்றாம் வேற்றுமை - (1) இராமனுக்கு தம்பி இலக்குவன்
2) நான்காம் வேற்றுமை - (2) பாரியினது தேர்
3) ஐந்தாம் வேற்றுமை - (3) மண்ணால் குதிரை செய்தான்
4) ஆறாம் வேற்றுமை - (4) ஏவுதல் கலையில் சிறந்தவன் ஏகலைவன்
a) 1-4,2-1,3-2,4-3
b) 1-3,2-1,3-4,4-2 👍
c) 1-3,2-2,3-1,4-4 
d) 1-4,2-3,3-2,4-1

30) " ஒரு ஆரம்ப பள்ளி ஆசிரியரின் குறிப்புகள் " - என்னும் நூலின் ஆசிரியர் யார்?
a) திரு.வி.க
b) பி.ச.குப்புசாமி👍
c) ஜெயகாந்தன்
d) ஆலங்குடி சோமு

31. இயற்கை இன்பக்கலம் 
a ) மணிமேகலை 
b ) கலித்தொகை 👍
C ) திருக்குறள் 
d ) பத்துப்பாட்டு 

32.இயற்கை வாழ்வில்லம் 
a ) திருக்குறள் 👍
b ) பெரிய புராணம் 
c ) மணிமேகலை 
d ) சீவகசிந்தாமணி 

33. இயற்கைத் தவம் 
a ) கலித்தொகை 
b ) சீவகசிந்தாமணி 👍
c ) கம்பராமாயணம் 
d ) மணிமேகலை 

34 . இயற்கைப் பரிணாமம் 
a ) பெரிய புராணம் 
b ) திருக்குறள் 
C ) திருவாசகம் 
d ) கம்பராமாயணம்👍

35. இயற்கை ஓவியம் 
a ) சிலப்பதிகாரம் 
b ) கலித்தொகை 
C ) திருக்குறள் 
d ) பத்துப்பாட்டு👍

36 ) ‘புகை மனிதனுக்குப் பகை’ – இதில் இடம்பெறும் நான்காம் வேற்றுமைப் பொருள் ……………………
A ) தகுதி
B ) நட்பு
C ) பகை👍
D ) முறை

37 ) இரண்டாம் வேற்றுமை உருபு ……………….
A ) கண்
B ) ஐ👍
C ) கண்
D ) ஓடு

38 ) ‘தலையின் இழிந்த மயிர்’ – இதில் இடம்பெறும் ஐந்தாம் வேற்றுமைப் பொருள்
A ) நீங்கல்👍
B ) ஒப்பு
C ) எல்லை
D ) ஏது

39 ) பெயர்ச்சொல்லுடன் இணைக்கப்படும் அசைகளை ...... என்பர்.
A ) மூன்றாம் வேற்றுமை
B ) வேற்றுமை உருபுகள்👍
C ) வேற்றுமை மரபுகள்
D ) எதுவுமில்லை

40 ) உருபு இல்லாத வேற்றுமைகள் எவை?
A ) முதலாம் வேற்றுமை
B ) எட்டாம் வேற்றுமை
C ) இரண்டும் சரி👍
D ) இரண்டும் தவறு






Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY