TNPSC TAMIL
ஏழாம் வகுப்பு தமிழ் இயல் 3.
வினாக்கள் - ஏழாம் வகுப்பு இயல் 3.
ஏழாம் வகுப்பு தமிழ் இயல் 3.
1 ) " ஈன்ற வயிறோ இதுவே தோன்றுவன் மாதோ போர்க்களத்தானே" - என்ற புறநானூற்று பாடல் வரியின் ஆசிரியர் யார் ?
A ) ஒளவையார்
B ) வெண்ணிக்குயத்தியார்
c ) காவற்பெண்டு
D ) நல்லத்துவனார்
2 ) கோப்பெருநற்கிள்ளியின் செவிலித் தாயாக விளங்கியவர் ?
A ) ஒளவையார்
B ) ஒக்கூர் மாசாத்தியார்
C ) காவற்பெண்டு
D ) வெண்ணிக்குயத்தியார்
3 ) " புலி சேர்ந்து போகிய கல் அளை போல " இதில் ' குகை'என்னும் பொருள்?
A ) சேர்ந்து
B ) போகிய
C ) அளை
D ) போல
4 ) கல் + அளை - என்பதனைச் சேர்த்து எழுத கிடைக்கும் சொல்
A ) கல்லளை
B ) கல்அளை
C ) கல்லளை
D ) கல்லுளை
5 ) " வாரணம் " - என்னும் சொல்லின் பொருள் ?
A ) குதிரை
B ) பாக்கு
C ) வீரன்
D ) யானை
6 ) " வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடல் " -என்னும் நூலை
தொகுத்து வெளியிட்டவர் யார்?
A ) நா.அண்ணாமலை
B ) பக்தவச்சல பாரதி
c ) நா . வானமாமலை
D ) அழகிரிசாமி
7 ) பொருத்துக .
1 ) பொக்கிஷம் - ( 1 ) அழகு
2 ) சாஸ்தி - ( 2 ) செல்வம்
3 ) விஸ்தாரம் - ( 3 ) மிகுதி
4 ) சிங்காரம் - ( 4 ) பெரும்பரப்பு
A ) 1-2, 2-3 ,3-4, 4-1
B ) 1-2, 2-4, 3-2, 4-1
C ) 1-2, 2-1,3-3, 4-4
D ) 1-2, 2-3, 3-1, 4-4
8 ) முத்துராமலிங்கத்தேவரின் அழைப்பையேற்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மதுரைக்கு வருகை புரிந்த ஆண்டு என்ன ?
A ) செப்டம்பர் 16,1939
B ) செப்டம்பர் 6,1939
C ) செப்டம்பர் 6,1938
D ) செப்டம்பர் 6,1939
9 ) பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் தபால் தலை இந்திய அரசால் வெளியிடப்பட்ட ஆண்டு ?
A ) 1990
B ) 1995
C ) 1994
D ) 1999
10 ) பசும்பொன் முத்துராமலிங்க தேவரை
' சுத்த தியாகி ' என்று புகழ்ந்தவர் யார்?
A ) பாரதிதாசன்
B ) நேதாஜி
C ) பெரியார்
D ) திரு.வி.க
11 ) விடுதலைக்குப்பின் முத்துராமலிங்க தேவர் நடத்திய வார இதழ் என்ன ?
A ) வந்தே மாதரம்
B ) விவேகமணி
C ) பார்வர்ட் பிளாக்
D ) நேதாஜி
12 ) " வசையொழிய வாழ்வாரே வாழ்வார் " -என்று பாடியவர் யார் ?
A ) வ.உ.சி
B ) திருவள்ளுவர்
C ) ஔவையார்
D ) பாரதியார்
13 ) " வந்தேமாதரம் என்போம் எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம் " - என்று பாடியவர் யார் ?
A ) பாரதியார்
B ) நாமக்கல் கவிஞர்
C ) பாரதிதாசன்
D ) சுரதா
14 ) சாகித்ய அகாடமி விருது பெற்ற முதல் தமிழ் நூல் எது ?
A ) கடற்கரையிலே
B ) தமிழ் விருந்து
C ) தமிழின்பம்
D ) ஆற்றங்கரையினிலே
15 ) இயல்பு வழக்கு எத்தனை வகைப்படும் ? tnkural.com
A ) 2
B ) 3
C ) 4
D ) 5
16 ) பாஞ்சாலி சபதம் எத்தனை சருக்கங்களை உடையது?
A ) 5
B ) 10
C ) 8
D ) 4
17 ) பொருத்துக .
1 ) பந்தர் - ( 1 ) முதற்போலி
2 ) மைஞ்சு - ( 2 ) முற்றுப்போலி
3 ) அஞ்சு - ( 3 ) இடைப்போலி
4 ) அரையர் - ( 4 ) கடைப்போலி
A ) 1-4,2-2,3-3,4-1
B ) 1-4,2-1,3-3,4-2
C ) 1-4,2-3,3-2,4-1
D ) 1-4,2-1,3-2,4-3
18 ) கீழ்க்கண்டவற்றில் தவறானது எது ?
A ) தெய்வீகத்தையும் தேசியத்தையும் தமது இரு கண்களாகப் கருதியவர் முத்துராமலிங்கத்தேவர் .
B ) இலக்கண நெறி மாறாமல் முறையாக அமைந்த சொல் இலக்கண போலி ஆகும்
C ) எழுவாய் , பயனிலை , செயப்படுபொருள் ஆகியவை
ஒரு தொடரில் இடம்பெறும் மூன்று பகுதிகள் ஆகும் .
D ) ஒரு தொடரில் யார் ? எது ? எவை ? என்னும் வினாக்களுக்கு விடையாக அமைவது எழுவாய் .
19 ) குறிஞ்சிப்பாட்டை எழுதியவர் யார் ?
A ) பாரதியார்
B ) நக்கீரர்
C ) கபிலர்
D ) பரணர்
20 ) தவறாக பொருந்தியுள்ளது எது ?
A ) மணியாச்சி தியாகி- வாஞ்சிநாதன்
B ) கள்ளுக்கடை மறியல் பெண்மணி -அம்புஜத்தம்மாள்
c ) வெள்ளையரை எதிர்த்த தீரன்- சின்னமலை
D ) எளிமையின் இலக்கணம் - கக்கன்
21 ) பொருத்துக .
1 ) துணிவு - ( 1 ) courage
2 ) தியாகம்- ( 2 ) sacrifice
3 ) முழக்கம் - ( 3 ) slogan
4 ) குளுரை - ( 4 ) vow
5 ) கதைப்பாடல்- ( 5 ) ballad
A ) 1-1,2-5,3-4,4-3,5-2
B ) 1-1,2-2,3-4,4-3,5-5
C ) 1-2,2-1,3-3,4-4,5-5
D ) 1-1,2-2,3-3,4-4,5-5
22 ) ' யாண்டு ' -என்னும் சொல்லின் பொருள் ?
A ) எனது
B ) எங்கு
C ) எவ்வளவு
D ) எது
23 ) பண்டைக்கால தமிழ் மக்களின் வாழ்க்கை முறை , நாகரிகம் , பண்பாடு , வீரம் , முதலியவற்றை வெளிப்படுத்தும் நூலாக விளங்குவது எது ?
A ) தொல்காப்பியம்
B ) நற்றிணை
C ) புறநானூறு
D ) அகநானூறு
24 ) வாசல் + அலங்காரம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்.
A ) வாசல்அலங்காரம்
B ) வாசலங்காரம்
C ) வாசலலலங்காரம்
D ) வாசலிங்காரம்
25 ) பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பிறந்த மாவட்டம் எது ?
A ) திருநெல்வேலி
B ) இராமநாதபுரம்
C ) தூத்துக்குடி
D ) சிவகங்கை
26 ) " தேசியம் காத்த செம்மல் " - என முத்துராமலிங்க தேவரை பாராட்டியவர் யார் ?
A ) பெரியார்
B ) பாரதிதாசன்
C ) திலகர்
D ) திரு.வி.கல்யாண சுந்தரனார்
27 ) பசும்பொன் - முத்துராமலிங்கதேவர் சுதந்திரப் போராட்டத்திற்காக சிறையில் கழித்த நாட்கள்?
A ) 20,075
B ) 4000
C ) 6000
D ) 10,000
28 ) ........ காலகட்டத்தில் மதுரையில் இருபத்திமூன்று தொழிலாளர் சங்கங்களின் தலைவராக முத்துராமலிங்க தேவர் திகழ்ந்தார் .
A ) 1938
B ) 1935
C ) 1948
D ) 1932
29 ) உழவர்களின் நலன் காக்க
முத்துராமலிங்க தேவர் மிகப்பெரிய அளவிலான மாநாட்டை எங்கு
நடத்தினார் ?
A ) கமுதி
B ) ராஜபாளையம்
C ) மதுரை
D ) தூத்துக்குடி
30 ) இரண்டாம் உலகப்போரின்போது முத்துராமலிங்க தேவர் எந் நகரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார் ?
A ) அமராவதி
B ) கல்கத்தா
C ) வேலூர்
D ) தாமோ
31 ) குற்றப்பரம்பரைச் சட்டம் எப்போது நீக்கப்பட்டது ?
A ) 1934
B ) 1938
C ) 1948
D ) 1952
32 ) முத்துராமலிங்க தேவர் முதன்முதலில் உரையாற்றிய இடம் எது ?
A ) தூத்துக்குடி
B ) காரைக்குடி
C ) சாயல்குடி
D ) மன்னார்குடி
33 ) பசும்பொன் முத்துராமலிங்கதேவர் மரணமடைந்த ஆண்டு என்ன ?
A ) 1962
B ) 1963
C ) 1973
D ) 1961
34 ) வ.உ.சிதம்பரனாருக்கு இரட்டை வாழ்நாள் சிறை தண்டனை வழங்கிய நீதிபதி யார்?
A ) ஜான் ஸ்மித்
B ) பிரான்சிஸ் ஆலன்
C ) பின்ஹே
D ) ஜாக்சன்
35 ) யார் இயற்றிய நூலை
" மனம் போல் வாழ்வு " -என்று தமிழில் வ.உ.சிதம்பரனார் மொழிபெயர்த்தார் ?
A ) பின்ஹே
B ) ஆலன்
C ) ஜான் ஸ்மித்
D ) லிலியன் வாட்சன்
36 ) " சொல்லின் செல்வர் " என போற்றப்படுபவர் யார் ?
A ) திரு.வி.க
B ) சுரதா
C ) பாரதியார்
D ) இரா.பி. சேது
37 ) இலக்கண போலி அல்லாத
சொல் எது ?
A ) புறநகர்
B ) கடைக்கண்
C ) கால்வாய்
D ) கறுப்பு ஆடு
38 ) கீழ்க்கண்டவற்றில் தவறானது எது ?
A ) நாகரிகம் கருதி மறைமுகமாகக் குறிப்பிடுதல் இடக்கரடக்கல்
B ) போலி மூன்று வகைப்படும் .
c ) அரையர் , இலஞ்சி , என்பவை முதற்போலிக்கு எடுத்துக்காட்டாகும் .
D ) அஃறிணைப் பெயர்களில் இறுதியில் நிற்கும் மகர எழுத்திற்குப் பதிலாக னகரம் கடைப்போலியாக வரும் .
39 ) " மஞ்சு " என்பது எவ்வகை போலி ?
A ) இடைப்போலி
B ) கடைப்போலி
C ) முதற்போலி
D ) முற்றுப்போலி
40 ) ரா.பி . சேது எழுதாத நூல் எது ?
A ) ஆற்றங்கரையினிலே
B ) கடற்கரையினிலே
C ) தமிழ் விருந்து
D ) இன்பத் தமிழ்
41 ) மெய்யறிவு , மெய்யறம்- என்னும் நூல்களை இயற்றியவர் யார்?
A ) திரு.வி.க
B ) வ.உ.சி
C ) இரா.பி.சேது
D ) முத்துராமலிங்கதேவர்
42 ) " தென்னாட்டு சிங்கம் என்று தேவரைச் சொல்கிறார்களே அது சாலப் பொருந்தும் என அவரது தோற்றத்தைப் பார்த்த உடனே நினைத்தேன் , அவர் பேசத் தொடங்கியதும் சிங்கத்தின் முழக்கம் போலவே இருந்தது என முத்துராமலிங்க தேவரை
புகழ்ந்தவர் யார் ?
A ) ராஜாஜி
B ) பெரியார்
C ) அண்ணா
D ) நேதாஜி
43 ) பொருந்தாத ணையைக் கண்டறிக
A ) காவற்பெண்டு -பெண்பாற் புலவர்
B ) காவற்பெண்டு- சங்க காலப் புலவர்
C ) காவற்பெண்டு- புறநானூற்றில்
பாடல் பாடினார் .
D ) காவற்பெண்டு- கோப்பெருநற்கிள்ளியின் தாய்
44 ) முத்துராமலிங்கத்தேவர் தொடக்க கல்வி பயின்ற இடம் எது ?
A ) பசும்பொன்
B ) கமுதி
C ) மதுரை
D ) இராமநாதபுரம்
45 ) முத்துராமலிங்கத் தேவர் முதன்முதலில் சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற ஆண்டு?
A ) 1947
B ) 1937
C ) 1946
D ) 1938
46 ) பாரதமாதா கூட்டுறவு பண்டகசாலை ஏற்படுத்தப்பட்ட இடம் ?
A ) கமுதி
B ) பசும்பொன்
C ) சாயல்குடி
D ) இராமநாதபுரம்
47 ) இலக்கண நெறியில் இருந்து பிறழ்ந்து , சிதைந்து வழங்கும் சொற்கள் .
A ) இலக்கணமுடையது
B ) இலக்கணப்போலி
C ) மரூவு
D ) முதற்போலி
48 ) சுடுகாட்டை நன்காடு என்பது ?
A ) குழுஉக்குறி
B ) மங்கலம்
C ) இடக்கரடக்கல்
D ) இலக்கணப்போலி
49 ) முன்பின் தொக்கப்போலி என குறிப்பிடப்படுவது எது ?
A ) இலக்கணமுடையது
B ) இலக்கணப்போலி
C ) மரூஉ
D ) முதற்போலி
50 ) பெண் தொழிலாளர்களுக்கு மகப்பேறு காலத்தில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வேண்டும் என்று போராடியவர் யார் ?
A ) முத்துராமலிங்க தேவர்
B ) நேதாஜி
C ) திரு.வி.க
D ) காந்திஜி
Previous article
Next article
Leave Comments
Post a Comment