3 மாநிலங்கள்,768 கிலோமீட்டர் என நீண்ட...! உலகின் மிக நீளமான மின்னல்!
ஏப்ரல் 2020 இல் டெக்சாஸ், லூசியானா மற்றும் மிசிசிப்பி முழுவதும் 477.2 மைல்கள் (768 கிலோமீட்டர்) ஒரு ஒற்றை ப்ளாஷ் நீட்டிக்கப்பட்டது என்று உலக வானிலை அமைப்பு திங்களன்று தெரிவித்துள்ளது. இது 2018 இல் பிரேசிலில் 440.6 மைல்கள் (709 கிலோமீட்டர்) உறுதிபடுத்தபட்ட பழைய சாதனையை முறியடித்தது.
இதே போன்று 2020 ஆம் ஆண்டில் உருகுவே மற்றும் வடக்கு அர்ஜென்டினா மீது ஒரே ஒரு மின்னல் 17.1 வினாடிகள் நீடித்தது, இது பழைய சாதனையான 16.7 வினாடிகளை முறியடித்தது.
வானிலை அமைப்புக்கான பதிவுகளை உறுதிப்படுத்தும் தலைமை அதிகாரி ராண்டால் செர்வெனி கூறுகையில் "பொதுவாக மின்னல் 10 மைல்களுக்கு மேல் நீடிக்காது மற்றும் ஒரு வினாடிக்கும் குறைவாகவே நீடிக்கும். இந்த இரண்டு மின்னல் பதிவுகளும் முற்றிலும் அசாதாரணமானவை இரண்டுமே மேகம் முதல் மேகம் வரை, தரையில் இருந்து பல ஆயிரம் அடி உயரத்தில் இருந்ததால் யாருக்கும் ஆபத்து இல்லை", என கூறினார்.
பருவநிலை மாற்றத்துடன் தொடர்பில்லாத இந்தப் பதிவுகள் புதிய செயற்கைக்கோள் கண்காணிப்பு தொழில்நுட்பத்தின் மூலம் கண்டறியப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டன. இரண்டு பகுதிகளும் தீவிர புயல்கள் ஏற்படும் உலகின் சில இடங்கள் என்பதால் மெகாஃப்ளாஷ்கள் உருவாக முடியும் என்று கூறினார்.
Leave Comments
Post a Comment