TNPSC TAMIL
7 ) கூற்று ( 1 ) : - முல்லைப் பெரியாறு அணையைக் கட்டியவர் ஜான் பென்னிகுயிக் கூற்று ( 2 ) : - தென் மாவட்டங்களான கன்னியாகுமரி கோயமுத்தூர் திருநெல்வேலி மட்டும் அணையால் பயன்பெறுகிறது .
14 ) " கண்ணுக்குப் புலப்படாத தண்ணீரும் புலப்படும் உண்மைகளும் " -என்னும் நூலின் ஆசிரியர் யார் ?
21 ) கீழ்க்கண்டவற்றில் துணைவினை எது ?
42 ) ' மிசை ' - என்பதன் எதிர்ச்சொல் என்ன ?
49 ) மல்லல் -எனும் சொல்லின் பொருள் ?
வினாக்கள் - ஒன்பதாம் வகுப்பு தமிழ் இயல் -2 .
ஒன்பதாம் வகுப்பு தமிழ் இயல் -2
வினாக்கள்
1 ) " சனி நீராடு " ' என்பது யாருடைய வாக்கு ?
A ) பாரதியார்
B ) பாரதிதாசன்
C ) திருவள்ளுவர்
D ) ஒளவையார்
2 ) கூற்று : -பாண்டிய மண்டலத்து நிலப்பகுதியில் ஏரியைக் கண்மாய் என்று அழைப்பர் . காரணம் : -கம்மாய் என்பது வட்டார வழக்குச் சொல்லாகும் .
A ) கூற்றும் காரணமும் சரி
B ) கூற்று தவறு காரணம் சரி
C ) கூற்று சரி காரணம் தவறு
D ) கூற்றும் காரணமும் தவறு
3 ) மழை உழவுக்கு உதவுகிறது , விதைத்த விதை ஆயிரமாய்ப் பெருகுகிறது நிலமும் மரமும் உயிர்கள் நோயின்றி வாழ வேண்டும் என்ற நோக்கில் வளர்கின்றன என கூறிய சங்ககாலப் புலவர் யார் ?
A ) திருவள்ளுவர்
B ) நக்கீரர்
C ) ஔவையார்
D ) மாங்குடி மருதனார்
4 ) காவிரிப் பாசனப் பகுதிக்குத் தனிப் பொறுப்பாளராக ஆங்கிலேய அரசால் சர் ஆர்தர் காட்டன் நியமிக்கப்பட்ட ஆண்டு ?
A ) 1820
B ) 1829
C ) 1873
D ) 1834
5 ) தவறாக பொருந்தியுள்ளது எது ?
A ) கூவல் - தேக்கப்பட்ட பெரிய நீர்நிலை . B ) புனற்குளம் - நீர் வரத்து மடையின்றி மழைநீரையே கொண்டுள்ள குளிக்கும் நீர் நிலை .
C ) குண்டு - குளிப்பதற்கேற்ற சிறுகுளம் . D ) குமுழி ஊற்று - அடி நிலத்தது நீர் நிலமட்டத்தில் கொப்பளித்து வரும் ஊற்று .
6 ) சரியாக பொருந்தியுள்ளது எது ?
A ) கண்மாய் -சிறிதாய் அமைந்த குளிக்கும் நீர் நிலை
B ) ஊற்று- கமலை நீர் பாய்ச்சும் அமைப்பு C ) ஏரி - மக்கள் பருகும்நீர் உள்ள நிலை
D ) இலஞ்சி - பல்வகைக்கும் பயன்படும் நீர் தேக்கம் .
7 ) கூற்று ( 1 ) : - முல்லைப் பெரியாறு அணையைக் கட்டியவர் ஜான் பென்னிகுயிக் கூற்று ( 2 ) : - தென் மாவட்டங்களான கன்னியாகுமரி கோயமுத்தூர் திருநெல்வேலி மட்டும் அணையால் பயன்பெறுகிறது .
A ) கூற்று 1,2 சரி
B ) கூற்று 1 சரி 2 தவறு
C ) கூற்று 1 தவறு 2 சரி
D ) கூற்று 1,2 தவறு
8 ) " விசனம் " - என்னும் சொல்லின் பொருள் ?
A ) கவலை
B ) மணம்
C ) உட்கார
D ) மேல்
9 ] கவிஞர் தமிழ்ஒளி வாழ்ந்த காலம் ?
A ) 1920-1965
B ) 1924-1965
C ) 1934-1965
D ) 1914-1965
10 ) கவிஞர் தமிழ்ஒளி எழுதாத நூல் எது?
A ) கண்ணப்பன் கிளிகள்
B ) குருவிப்பட்டி
C ) மாதவி காவியம்
D ) தமிழர் திருமணம்
11 ) " உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரோ " -என்ற புறநானூற்று பாடல் வரியின் ஆசிரியர் யார் ?
A ) பாண்டியன் நெடுஞ்செழியன்
B ) குடபுலவியனார்
C ) நக்கீரர்
D ) காவற்பெண்டு
12 ) " குளம் தொட்டுக் கோடு பதித்து வழிசீத்து வளம்தொட்டு உழுவயல் ஆக்கி " - என்னும் பாடல் வரி இடம் பெற்ற நூல் எது ?
A ) நற்றிணை
B ) புறநானூறு
C ) சிறுபஞ்சமூலம்
D ) பரிபாடல்
13 ) கீழ்க்கண்டவற்றில் பண்புத்தொகை அல்லாத சொல் எது ?
A ) அடுபோர்
B ) மூதூர்
C ) நல்லிசை
D ) புன்புலம்
14 ) " கண்ணுக்குப் புலப்படாத தண்ணீரும் புலப்படும் உண்மைகளும் " -என்னும் நூலின் ஆசிரியர் யார் ?
A ) மா.கிருஷ்ணன்
B ) மா.அமரேசன்
C ) வைரமுத்து
D ) பாரதிதாசன்
15 ) ஒரு ஆப்பிளை உற்பத்தி செய்ய தேவைப்படும் தண்ணீரின் அளவு என்ன?
A ) 2500 லிட்டர்
B ) 250 லிட்டர்
C ) 822 லிட்டர்
D ) 1780 லிட்டர்
16 ) சந்திப்பிழையுள்ள தொடர் எது ?
A ) நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்குப் பாய்வது போல
B ) மெல்லப் பாயும் தண்ணீர் கல்லையும் கரைக்கும்
C ) கிணற்றுத் தண்ணீரை வெள்ளம் கொண்டு போகாது
D ) தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவேன்
17 ) பெயர் வினை அல்லாதது எது ?
A ) தந்தி + அடி
B ) ஆணை + இடு
C ) முன் + எறு
D ) கேள்வி + படு
18 ) தமிழில் எத்தனை துணைவினைகள் உள்ளன ?
A ) 20
B ) 40
C ) 35
D ) 42
19 ) வினைச்சொற்களை அமைப்பின் அடிப்படையில் எத்தனை வகையாகப் பிரிக்கலாம் ?
A ) 2
B ) 40
C ) 3
D ) 4
20 ) கீழ்க்கண்டவற்றில் தவறானது எது ?
A ) எழுதிப் பார்த்தாள் இதில் ' பார்'- என்பது பார்த்தல் என்னும் பொருளை தருகிறது .
B ) ஒரு கூட்டு வினையின் முதல் உறுப்பாக வந்து தன் அடிப்படைப் பொருளைத் தரும் வினை முதல் வினை எனப்படும் .
C ) முதல் வினைக்குத் துணையாக வேறு இலக்கணப் பொருளைத் தரும் வினை துணைவினை எனப்படும்
D ) கூட்டுவினையின் முதல் வினை செய அல்லது செய்து என்னும் வினையெச்ச வடிவில் இருக்கும்.
21 ) கீழ்க்கண்டவற்றில் துணைவினை எது ?
A ) புத்தகம் மேசையில் இருக்கிறது
B ) அப்பா வந்திருக்கிறார்
C ) அவன் வானொலியில் பாட்டு வைத்தான்
D ) நான் சொன்னதை நீ கருத்தில் கொள்ளவில்லை .
22 ) நீர்நிலைகளோடு தொடர்பில்லாதது எது ?
A ) அகழி
B ) ஆறு
C ) இலஞ்சி
D ) புலரி
23 ) தவறாக பொருந்தியுள்ளது எது ?
A ) தண்ணீர் தண்ணீர் - கந்தர்வன்
B ) தண்ணீர் தேசம்- வைரமுத்து
C ) வாய்க்கால் மீன்கள்- வெ . இறையன்பு D ) மழைக்காலமும் குயிலோசையும் - மா.கிருஷ்ணன்
24 ) கந்தர்வனின் இயற்பெயர் என்ன ?
A ) இறையரசன்
B ) விருத்தாச்சலம்
C ) நாகலிங்கம்
D ) முத்தையா
25 ) பொருத்துக :
1 ) யாக்கை - ( 1 ) முயற்சி
2 ) தாட்கு - ( 2 ) உடம்பு
3 ) புணரியோர் - ( 3 ) தந்தவர்
4 ) புன்புலம் - ( 4 ) புல்லிய நிலம்
A ) 1-2,2-4,3-1,4-3
B ) 1-2,2-3,3-1,4-4
C ) 1-1,2-2,3-3,4-4
D ) 1-2,3-1,3-3,4-4
26 ) சேக்கிழார் வாழ்ந்த காலம் என்ன ?
A ) கி.பி 11 - ம் நூற்றாண்டு
B ) கி.மு 12- ம் நூற்றாண்டு
C ) கி.பி 12- ம் நூற்றாண்டு
D ) கி.பி 14 - ம் நூற்றாண்டு
27 ) திருத்தொண்டர் புராணம் எத்தனை நாயன்மார்களின் சிறப்புகளை கூறுகிறது ?
A ) 60
B ) 63
C ) 62
D ) 64
28 ) " வானகமே இளவெயிலே மரச்செறிவே நீங்களெல்லாம் கானலின் நீரோ ? வெறும் காட்சிப் பிழைதானோ ? என்று பாடியவர் யார் ?
A ) பாரதிதாசன்
B ) கந்தர்வன்
C ) பாரதியார்
D ) மூ.வ
29 ) குளிர்ந்த மலர்களையுடைய
மரம் எது ?
A ) வஞ்சி
B ) குரா மரம்
c ) வேப்ப மரம்
D ) அரச மரம்
30 ) " வாவி " - என்னும் சொல்லின் பொருள் ?
A ) வண்டு
B ) நெற்பயிர்
C ) முத்து
D ) பொய்கை
31 ) கீழ்க்கண்டவற்றில் தவறானது எது ?
A ) மணற்பாங்கான இடத்தில் தோண்டிச் சுடுமண் வளையமிட்ட கிணற்றுக்கு உறைகிணறு என்று பெயர் .
B ) கல்லணையின் நீளம் 1090 மீட்டர்
C ) உலக சுற்றுச்சூழல் தினம் ஜீன் -5 ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது .
D ) இந்திய நீர்பாசனத்துறையின் தந்தை என சர் ஆர்தர் காட்டன் அழைக்கப்படுகிறார் .
32 ) கோதாவரி ஆற்றின் குறுக்கே தௌலீஸ்வரம் அணைக் கட்டப்பட்ட ஆண்டு ?
A ) 1850
B ) 1873
C ) 1877
D ) 1883
33 ) தமிழ் மரபில் நீரும் நீராடலும் வாழ்வியலோடு பிணைக்கப்பட்டவையாக விளங்குகின்றன என்று கூறியவர் யார் ?
A ) ஆண்டாள்
B ) பாரதிதாசன்
C ) கந்தர்வன்
D ) தொ . பரமசிவன்
34 ) " வெறுங்கனவு " - என்பதன் இலக்கணக் குறிப்பு யாது ?
A ) வினையெச்சம்
B ) வினைத்தொகை
C ) பண்புத்தொகை
D ) வேற்றுமைத்தொகை
35 ) " கவிஞனின் காதல் " -என்னும் நூலின் ஆசிரியர் யார் ?
A ) கந்தர்வன்
B ) பாரதிதாசன்
C ) தொ.பரமசிவன்
D ) தமிழ்ஒளி
36 ) ÷காவிரியின் பாதை எல்லாம் பூவிரியும் கோலத்தை அழகாக விரித்துரைக்கும் நூல் எது ?
A ) குறிஞ்சிப்பாட்டு
B ) மணிமேகலை
C ) திருவாய்மொழி
D ) பெரியபுராணம்
37 ) தவறாக பொருந்தியுள்ளது எது ?
A ) தரளம் - முத்து
B ) பணிலம் -சங்கு
C ) கழை- நெருப்பு
D ) வேரி - தேன்
38 ) திருத்தொண்டத்தொகை- என்னும் நூலின் ஆசிரியர் யார் ?
A ) சேக்கிழார்
B ) சுந்தரர்
C ) ஒட்டக்கூத்தர்
D ) புகழேந்தி
39 ) " பக்திச் சுவை நனி சொட்டச் சொட்ட பாடிய கவி வலவ " -என சேக்கிழாரைப் புகழ்ந்தவர் யார் ?
A ) குலோத்துங்க சோழன்
B ) பாரதியார்
C ) மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார்
D ) ஒட்டக்கூத்தர்
40 ) பண்டைய வேந்தர்களின் வீரம் , வெற்றி , கொடை குறித்தும் குறுநில மன்னர்கள் , புலவர்கள் சான்றோர்கள் உள்ளிட்டவர்களின் பெருமைகளைப் பற்றியும் அன்றைய மக்களின் புறவாழ்க்கையைப் பற்றியும் கூறும் நூல் எது ?
A ) பெரியபுராணம்
B ) அகநானூறு
C ) நற்றிணை
D ) புறநானூறு
41 ) கந்தர்வன் எழுதாத நூல் எது ?
A ) சாசனம்
B ) ஒவ்வொரு கல்லாய்
C ) கொம்பன்
D ) குருவிப்பட்டி
42 ) ' மிசை ' - என்பதன் எதிர்ச்சொல் என்ன ?
A ) கீழே
B ) மேலே
C ) இசை
D ) வசை
43 ) " திருத்தொண்டர் திருவந்தாதி " - என்னும் நூலின் ஆசிரியர் யார் ?
A ) சேக்கிழார்
B ) சுந்தரர்
C ) ஆண்டாள்
D ) நம்பியாண்டார் நம்பி
44 ) தமிழ் மொழியைப் போலவே முதல் வினைகளுக்குப் பின்பு துணைவினைகள் இடம்பெறும் மொழி
A ) தெலுங்கு
B ) ஜப்பானீஸ்
C ) ஹூப்ரூ
D ) ஆங்கிலம்
45 ) ............... மொழியிலேயே
துணைவினைகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது ?
A ) பேச்சு
B ) எழுத்து
C ) வட்டார
D ) கிளை
46. சரியான சொற்றொடரைத் தேர்வு செய்க ?
A ) உண்டி முதற்றே உணவின் பிண்டம்
B ) உணவின் முதற்றே உண்டி பிண்டம்
C ) பிண்டம் முதற்றே உண்டி உணவின்
D ) உணவின் பிண்டம் உண்டி முதற்றே
47 ) குடபுலவியனார் பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு எதற்கு அறிவுரை வழங்கினார் ?
A ) நீர்நிலை பெருக்குதல்
B ) போர் செய்யாமை
C ) அறம் செய்
D ) வேளாண்மை பெருக்கு
48 ) " நீரின்று அமையாது யாக்கை " - என்று பாடியவர் யார் ?
A ) குடபுலவியனார்
B ) பாண்டியன் நெடுஞ்செழியன்
C ) திருவள்ளுவர்
D ) ஔவையார்
49 ) மல்லல் -எனும் சொல்லின் பொருள் ?
A ) மறுமை
B ) பூவரசமரம்
C ) வளம்
D ) பெரிய
50 ) " நீராடல் பருவம் " -இடம் பெறும் சிற்றிலக்கியம்?
A ) பிள்ளைத்தமிழ்
B ) கலம்பகம்
C ) பள்ளு
D ) உலா
Previous article
Next article
Leave Comments
Post a Comment