Ads Right Header

விடைகள் - எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 2.

 


எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 2.

1. எந்த பழங்குடியினர் சமூகத்தினர் தான் பேசும் மொழியினை 'ஆல்அலப்பு' என அழைக்கின்றனர்?

a) காடர்👍
b) இருளர்
c) தோடர்
d) நாகர்

2. பொ௫ட்பால் எத்தனை இயல்களைக் 
கொண்டது? 
a) இரண்டு
b) மூன்று👍
c) நான்கு
d) ஐந்து

3 . 'ஊசியிலை' என்னும் சொல்லைப் 
பிரித்து எழுதக் கிடைக்கும் சொல்? 
a) ஊசி + சிலை
b) ஊசி + இலை👍
c) ஊசி + யிலை
d) ஊ + இலை

4.சுகுவாமிய் பழங்குடியினரின் 
தலைவராக விளங்கியவர்?
a) சியாட்டஸ்
b) சுவாமிய்குவே
c) சிடாட்டல்
d) சியாட்டல்👍

5. 'பாலால்' என்னும் சொல்லை 
பிரித்து எழுத கிடைப்பது?
a) பா + லால்
b) பாலு + ஆல்
c) பா + ஆல்
d) பால் + ஆல்👍

6. நாட்டில் பெரும் பஞ்சம் ஏற்ப்பட்ட 
காலங்களில், மக்கள் பட்ட துயரங்களை 
அக்காலத்தில் வாழ்ந்த புலவர்கள் என்ன 
பாடல்களாக பாடினர்?
a) வள்ளை
b) கும்மி👍
c) சடங்கு
d) ஒப்பாரி

7. பயனில்லாத களர்நிலத்திற்கு 
ஒப்பானவர்கள்?
a) அன்பில்லாதவர்
b) ஒழுக்கமற்றவர்
c) வலிமையற்றவர்
d) கல்லாதவர்👍

8. பருத்தி + எல்லாம் என்பதை 
சேர்த்து எழுத கிடைக்கும் சொல்?
a) பருத்திஎல்லாம்
b) பருத்தியெல்லாம்👍
c) பருத்திதெல்லாம்
d) பருத்தெல்லாம்

9. "நன்செய் புன்செய் உணவை ஊட்டி 
நாட்டு மக்கள் வறுமை ஓட்டி" இவ்வரிகள் 
இடம்பெற்ற நூல்?
a) தமிழச்சி
b) கொடிமுல்லை
c) தொடுவானம்👍
d) எழிலோவியம்

10. "சீருக்கு + ஏற்ப " என்பதை சேர்த்து எழுத கிடைக்கும் சொல்?
a) சீருக்கேற்ப👍
b) சீருக்கு ஏற்ப
c) சீருகேற்ப
d) சீர்க்கேற்ப

11. அறத்து பால் எத்தனை இயல்களை 
கொண்டது?
a) ஐந்து
b) நான்கு 👍
c) மூன்று
d) இரண்டு 

12. "முறையில் + இருந்து" என்பதை 
சேர்த்து எழுத கிடைக்கும் சொல்?
a) முறையாய் இருந்து
b) முறையிலிருந்து👍
c) முறையிருந்து
d) முறையில் இருந்து

13. தமிழக பழங்குடியினர் நூலின் 
ஆசிரியர்?
a) பழனியப்பன்
b) சுப்பிரமணியம்
c) பக்தவச்சல பாரதி👍
d) சுந்தரலிங்கம்

14. தொடுவானம் என்னும் நூலின் 
ஆசிரியர் ?
a) கம்பன்
b) மீரா
c) வைரமுத்து
d) வாணிதாசன்👍

15. "மேய்ந்தற்று" என்னும் சொல்லை
 பிரித்து எழுத கிடைப்பது?
a) மேயும் + அற்று
b) மேய்ந் + தற்று
c) மேய் + அற்று
d) மேய்ந்து + அற்று👍

16. திருக்குறள் எத்தனை பகுப்பு 
கொண்டது ?
a) எண்பால்
b) ஐம்பால்
c) ஒன்பால்
d) முப்பால்👍

17. மக்களின் பண்புகளை அவரவர்  
தோற்றத்தால் அல்லாமல் ..........வகையால் 
உணர்ந்து கொள்ள வேண்டும் ?
a) செயல்👍
b) நட்பு 
c) அன்பு 
d) பாசம்

18. "செத்திறந்த" என்னும் சொல்லை 
பிரித்து எழுத கிடைப்பது?
a) செத்து + திறந்த
b) செ + திறந்த
c) செத்து + இறந்த👍
d) செ + இறந்த

19.காத்து நொண்டி சிந்து பாடலை 
இயற்றியவர் யார்? 
a) செ. இராசு
b) வெங்கம்பூர் சுவாமிநாதன்👍
c) ராசைய்யா
d) அரங்கநாதன் 

20.'இன்னோசை' என்னும் சொல்
 பிரித்து எழுதக் கிடைப்பது?
a) இனிமை + ஓசை👍
b) இனி + ஓசை
c) இன் + ஓசை
d) இன் + னோசை

21.'மறப்பதேயில்லை' என்னும் 
சொல்லைப் பிரித்து எழுதுக. 
a) மறப்பதே + யில்லை
b) மறப்பதே  + இல்லை👍
c) மறப்பது + யில்லை 
d) மறப்பது + இல்லை

22.'நீரானது' என்னும் சொல்லைப் 
பிரித்து எழுதக் கிடைக்கும் சொல்?
a) நீரா + னது
b) நீர் + அனது
c) நீ + ரானது
d) நீர் + ஆனது👍

23.'செஞ்சொல் மாதரின் வள்ளைப்பாட்டிற்கேற்ப 
முழவை மீட்டுவது ________.
  1. கடல்
  2. ஓடை👍
  3. குளம்
  4. கிணறு

24.'மார்க்கம்+ஆன' என்பதனை 
சேர்ந்தெழுதக் கிடைக்கும் சொல்?
a) மார்ககம் ஆன
b) மார்க்கமென
c) மார்க்கமான👍
d) மார்க்கமேன

25.'வைத்து+ஊறு' என்பதனை 
சேர்ந்தெழுதக் கிடைக்கும் சொல்?
a) வைத்து ஊறு
b) வைத்தாறு
c) வைத்தூறு👍
d) வைத்துறு

26.புகழாலும் பழியாலும் அறியப்படுவது?
a) நடுவு நிலைமை👍
b) அடக்கமுடைமை
c) பொருளுடைமை
d) நாணுடைமை

27.நிறைந்த நீர்வளத்தோடு பயிர்கள் 
விளையும் நிலம்?
a) பாலை நிலம்
b) செம்மண்
c) புன்செய்
d) நன்செய்👍

28.குறைந்த நீரால் விளையும் நிலம்?
a) செழிந்த நிலம்
b) நன்செய்
c) வண்டல் நிலம்
d) புன்செய்👍

29. பொருள் கூறுக "சேகரம்"
a) மலர்கள்
b) கூட்டம்👍
c) சிரித்தது
d) வானம்

30.'தகவிலர்' என்னும் சொல்லைப் 
பிரித்து எழுதக் கிடைப்பது
a) தகவு + இலர்👍
b) தக + இலர்
c) தக + விலர்
d) தகவு + பலர்

31.பஞ்சக் கும்மிகள் என்னும் நூலைத் 
தொகுத்தவர்?
a) செ.மீரா
b) செ.வீரா
c) செ.முரசு
d) செ.இராசு👍

32.'நெடுமை+தேர் என்பதனை 
சேர்ந்தெழுதக் கிடைக்கும் சொல்?
a) நெடுதேர்
b) நெடுத்தேர்
c) நெடுந்தேர்👍
d) நெடுமைதேர்

33.தமிழகத்தின் வேர்ட்ஸ் வொர்த் என 
புகழப்படுபவர் யார்? 
a) அறிஞர் அண்ணா 
b) வண்ணதாசன்
c) வாணிதாசன்👍
d) செல்லிதாசன்

34.கோணக்காத்து பாட்டு பாடலில் 
கவிஞர் வேண்டும் தெய்வம் _______
a) பெருமாள்
b) முருகன்👍
c) திருமால்
d) சிவன்

35.எல்லா மக்களுக்கும் பொருந்தும் 
அறக்கருத்துகளைக் கொண்ட நூல்?
a) பரிபாடல் 
b) நற்றிணை
c) குறுந்தொகை
d) திருக்குறள்👍

36.'நாவாய்+உம்' என்பதனை 
சேர்ந்தெழுதக் கிடைக்கும் சொல்?
a) நாவாஊம்
b) நாவாஉம்
c) நாவாய்உம்
d) நாவாயும்👍

37.அரங்கசாமி என்ற எத்திராசலு என்பது
a) வண்ணதாசன்
b) கண்ணதாசன்
c) வாணிதாசன்👍
d) செல்லிதாசன்

38.கீழ்கண்டவற்றுள் தவறானது எது? 
a) வாணிதாசன் இயற்பெயர் அரங்கசாமி
 என்ற எத்திராசலு
b) வாணிதாசன் பாரதியாரின் மாணவர்👍
c) இவர் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம்  
பிரெஞ்சு ஆகிய மொழிகளில் வல்லவர்.
d) இவருக்கு பிரெஞ்சு அரசு செவாலியர் 
விருது வழங்கியுள்ளது.

39.'ஓடை+ஆட' என்பதனை சேர்ந்தெழுதக் 
கிடைக்கும் சொல்?
a) ஓடையோட
b) ஓடைவாட
c) ஓடையாட👍
d) ஓடைஆட

40.'நன்செய்' என்னும் சொல்லைப் 
பிரித்து எழுதக் கிடைப்பது?
a) நன் + செய்
b) நல் + செய்
c) நன்று + செய்
d) நன்மை + செய்👍

41.'வல்லுருவம்' என்னும் சொல்லைப் 
பிரித்து எழுதக் கிடைப்பது?
a) வல் + உருவம்
b) வன்மை + உருவம்👍
c) வல்ல + உருவம்
d) வ + உருவம்

42.'கற்றாரோடு' என்னும் சொல்லைப் 
பிரித்து எழுதக் கிடைப்பது?
a) கற்றா + ரோடு
b) கற் + றாரோடு
c) கற்றார் + ஓடு👍
d) கற்றார் + ஒடு

43.தமிழச்சி என்னும் நூலை எழுதியவர்?
a) செந்தமிழ் தேனீ
b) பாவலரேறு
c) உவமைக கவிஞர்
d) பாவலர் மணி👍

44.'நீளுழைப்பு' என்னும் சொல்லைப் 
பிரித்து எழுதக் கிடைப்பது?
a) நீண்ட + உழைப்பு
b) நீளு + உழைப்பு
c) நீண் + உழைப்பு 
d) நீள் + உழைப்பு👍

45.பாவலர்மணி என்று அழைக்கப்படுவர்?
a) பாரதியார்
b) கண்ணதாசன்
c) சுரதா
d) வாணிதாசன்👍

46.'பால்+ஊறும்' என்பதனை 
சேர்ந்தெழுதக் கிடைக்கும் சொல்?
a) பால்லூறும்
b) பால் ஊறும்
c) பாஊறும்
d) பாலூறும்👍

47.நெல் குத்தும்போது பாடப்படும் பாட்டு?
a) வள்ளை👍
b) கும்மி
c) தெம்மாங்கு
d) ஒயில்

48.'பாழ்+ஆக்கி' என்பதனைச் 
சேர்ந்தெழுதக் கிடைக்கும் சொல்?
a) பாழ்ஆக்கி
b) பாழாக்கி
c) பாழ்ஊக்கி
d) பாழாக்கி👍

49.பஞ்ச காலங்களில் பாடப்பட்ட 
பாடல்களை பஞ்சகும்மிகள் எனும் 
நூலாக தொகுத்தவர்?
a) செ.இராசு👍
b) அரங்கநாதன்
c) வெங்கம்பூர் சாமிநாதன்
d) ராசைய்யா 

50.வாணிதாசனுக்குச் செவாலியர் 
வழங்கிய அரசு?
a) சீனா
b) இந்தியா
c) பிரெஞ்சு👍
d) தமிழ்நாடு

51.முதற்பாவலர் என்று 
அழைக்கப்படுபவர்?
a) கம்பர்
b) நக்கீரர்
c) வள்ளுவர்👍
d) கபிலர்

52.'அவரவர்' என்னும் சொல்லைப் 
பிரித்து எழுதக் கிடைப்பது?
a) அவர + வர்
b) அவர் + அவர்👍
c) அ + அவர்
d) அவர + அவர்

53.'இடம்+கண்ட' என்பதனைச் 
சேர்ந்தெழுதக் கிடைக்கும் சொல்?
a) இடம்கண்ட
b) இடகண்ட 
c) இடத்தைக்கண்ட
d) இடங்கண்ட👍

54.'வேகம்+உடன்' என்பதனைச் 
சேர்ந்தெழுதக் கிடைக்கும் சொல்?
a) வேகமுடன்👍
b) வேகம்உடன்
c) வேகம்வூடன்
d) வேகமும்

55.திருக்குறளின் பெருமையை 
விளக்கும் நூல்?
a) ஆத்திசூடி 
b) புறநானூறு
c) கலித்தொகை
d) திருவள்ளுவமாலை👍

56. 'விழுந்ததங்கே' என்னும் சொல்லைப் 
பிரித்து எழுதக் கிடைப்பது?
a) விழுந்தது + ஆங்கே
b) விழுந்த + அங்கே
c) விழுந்த + ஆங்கே
d) விழுந்தது + அங்கே👍

57.'காட்சிகள்+எல்லாம்' என்பதனைச் 
சேர்ந்தெழுதக் கிடைக்கும் சொல்?
a) காட்சிகள் எல்லாம்
b) காட்சிகளெல்லாம்👍
c) காட்சியெலாம்
d) காட்சியெல்லாம்

58.அமெரிக்காவில் பூஜேசவுண்ட் 
என்னும் இடத்தை சுற்றி வாழ்ந்த 
பழங்குடியினர் யார்?
a) நோவாஜா
b) சுகுவாஷ்👍
c) சிப்பேவா
d) ஐரோகுயிஸ்
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY