Ads Right Header

TNTET 2022 - Syllabus & Full Details !!



இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் பணியில் சேர விரும்பும் ஆசிரியர்கள், அதற்கான தகுதித் தேர்வில் 60% (55%)மதிப்பெண்கள் எடுத்தால்தான் பணி நியமனம் வழங்கப்பட வேண்டும் என்று தேசிய ஆசிரியர் கல்விக் கழகம் (என்.சி.டி.இ.) தெரிவித்துள்ளது.


கடந்த 2009ஆம் ஆண்டு கட்டாய கல்விச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இதை செயல்படுத்தும் வகையில் தேவையான ஆசிரியர்களை நியமிக்க திட்டமிட்டது. அந்த வகையில், திறமை மிக்க, நுண்ணறிவு கொண்ட சவால்களை எதிர்கொள்ளும் திறன் பெற்ற ஆசிரியர்களை தேர்வு செய்து நியமிக்க வேண்டும்.


எனவே, கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009, பிரிவு 23ல் துணைப் பிரிவு 1ல் தெரிவிக்கப்பட்டுள்ளபடி, 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகளில் நியமிக்கப்படும் ஆசிரியர்களின் குறைந்தபட்ச தகுதியை வரையறுத்து செயல்படுத்த உள்ளது.


இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் என்.சி.டி.இ. வெளியிட்டுள்ளது. அனைத்து மாநிலங்களுக்கும் இவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதில் கூறப்பட்டுள்ளதாவது,


தொடக்கக் கல்வியை வழங்கும் பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்படுவோர், கண்டிப்பாக ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி அடைய வேண்டும். 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான தொடக்கப் பள்ளிக்கு (இடைநிலை ஆசிரியர்) ஆசிரியராக செல்வோர், ஒரு தகுதித் தேர்வு எழுத வேண்டும். அதேபோல், 6 முதல் 8 வகுப்புகள் வரையிலான நடுநிலைப் பள்ளிகளில் (பட்டதாரி ஆசிரியர்) ஆசிரியர்களாக செல்வோர் ஒரு தகுதித் தேர்வு எழுத வேண்டும். இதுதவிர 1 முதல் 8 வகுப்புகள் கொண்ட பள்ளிகளில் ஆசிரியராக செல்வோர், இரண்டு தகுதித் தேர்வுகளையும் எழுத வேண்டும்.


இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு மொத்தம் 150 மதிப்பெண்கள் உடையதாக இருக்கும். அதில் குழந்தைகள் முன்னேற்றம் மற்றும் உளவியல், மொழி 1, மொழி 2, கணக்கு, சுற்றுச்சூழல் கல்வி ஆகியவற்றில் இருந்து கேள்விகள் இடம் பெறும். ஒவ்வொரு பிரிவுக்கும் தலா 30 மதிப்பெண்கள் வழங்கப்படும். பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வில் குழந்தை முன்னேற்றம் மற்றும் உளவியல் (கட்டாயம்), மொழி 1(கட்டாயம்), மொழி 2 (கட்டாயம்) இடம் பெறுகின்றன. இவற்றுக்கு தலா 30 மதிப்பெண்கள். மேலும் கணக்கு, அறிவியல் பாட ஆசிரியர்களுக்கு 60 மதிப்பெண்கள் கொண்ட கேள்விகள், சமூக அறிவியல் பாட ஆசிரியர்களுக்கு 60 மதிப்பெண் கொண்ட கேள்விகள் இடம் பெறும். மாநில பாடத்திட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்ட பாடப்புத்தகங்களில் இருந்து கேள்விகள் இடம் பெறும்.


இந்த தேர்வுகளில் குறைந்தபட்சம் 82 மதிப்பெண் பெறுவோரே தேர்ச்சிப் பெற்றவராக கருதப்படுவார்கள். இந்த தகுதித் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட வேண்டும். இதில் 60% (55%)பெற்று தேர்ச்சிப் பெற்றவர்கள் பணி நியமனம் பெற தகுதியுடையவராகிறார். தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் அல்லது போதிய மதிப்பெண்கள் பெறாதவர்கள், எத்தனை முறை வேண்டுமானாலும் இந்த தகுதித் தேர்வை எழுதலாம்.


தகுதி அடைந்தவர்கள் மீண்டும் தங்களை மேம்படுத்திக் கொள்ளவோ அல்லது கூடுதல் மதிப்பெண் பெற விரும்பினாலோ, மீண்டும் தேர்வு எழுதலாம். தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான சான்றுகளை தேர்வு நடத்தும் அரசு வழங்க வேண்டும். இவ்வாறு என்சிடிஇ தனது வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவித்துள்ளது.

Paper 1 Syllabus

Child Development and Pedagogy

Touch here 

Language 1 Tamil

Touch here

Language 2 English

Touch here

Mathematics

Touch here

Environmental Studies

Touch here


Paper 2 Syllabus

Child Development and Pedagogy

Touch here

Tamil

Touch here

English

Touch here

Mathematics & Science

Touch here

Social science

Touch here







Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY