Ads Right Header

குடியரசு தின விழா: அணிவகுக்கப்பட்ட அலங்கார ஊர்திகளின் விவரம்!


குடியரசு தின விழா: அணிவகுக்கப்பட்ட அலங்கார ஊர்திகளின் விவரம்


73-வது குடியரசு தின விழாவையொட்டி தமிழ்நாட்டின் அலங்கார ஊர்திகள் சென்னை கடற்கரை சாலையில் அணி வகுத்தன.


சென்னை மெரினாவில் இன்று கோலாகலமாக நடைப்பெற்ற 73-வது குடியரசு தின விழாவில், விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்களிப்பை நாட்டிற்கு வெளிப்படுத்தும் விதமாக 4 அலங்கார ஊர்திகள் அணிவகுக்கப்பட்டன. அந்த அணிவகுப்பில் பங்குபெற்ற ஊர்திகளின் விவரங்கள்…


1-வது அலங்கார ஊர்தியாக செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் வடிவமைக்கப்பட்டுள்ள ஊர்தி இடம் பெறுகிறது. அதில், தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி குழுவினரின் நாதஸ்வரம், தவில், வீணையுடன் கூடிய மங்கள இசை இடம் பெற்றது.


2-வது அலங்கார ஊர்தியில் வீரமங்கை வேலு நாச்சியார், மருது சகோதரர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் அழகு முத்துக்கோன், பூலித்தேவன், ஒண்டிவீரன், வீரன் சுந்தரலிங்கம், குயிலி ஆகியோரது சிலைகளுடன் வேலூர் கோட்டை, காளையார்கோவில் கோபுரம் ஆகியவை இடம் பெறுகின்றன.


3-வது அலங்கார ஊர்தியில், சுதந்திரத்துக்காக பாடுபட்ட வ.உ.சி. செக்கு இழுக்கும் நிகழ்வு, பாரதியார், சுப்பிரமணிய சிவா, ராகவாச்சாரி மற்றும் அவருடன் விடுதலைப் போரில் ஈடுபட்டவர்களை காட்சிப்படுத்தும் தத்ரூப சிலைகளுடன் சுதேசி கப்பலும் இடம் பெற்றது.


4-வது அலங்கார ஊர்தியில் பெரியார், ராஜாஜி, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், இரட்டைமலை சீனிவாசன், வ.வே.சு.அய்யர், வாஞ்சிநாதன், தீரன் சின்னமலை, திருப்பூர் குமரன், காமராஜர், காயிதே மில்லத், ஜோசப் சி குமரப்பா ஆகிய தலைவர்களை சித்தரிக்கும் சிலைகள் இடம் பெற்றன.


இவ்வாறு, தமிழரின் பெருமையை பறைசாற்றும் வகையில் அலங்கார ஊர்திகள் அலங்கரிக்கப்பட்டு அணிவகுக்கப்பட்டன.

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY