Ads Right Header

போட்டித் தேர்வுகளுக்கான திருக்குறள் வினாவிடை!



1) "அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள்" எனத் திருக்குறளை போற்றியவர் யார்?

அ) அவ்வையார் 🌹

ஆ)கபிலர்

 இ)கல்லாடனார் 

ஈ) பரணர்


2) திருக்குறளின் இல்லறவியலில் உள்ள அதிகாரங்கள்?

அ) 20🌹

ஆ)17

இ)38

ஈ)10


3)  திருக்குறளின் சிறப்பைப் போற்றும்  திருவள்ளுவமாலையில் உள்ள மொத்த பாடல்கள்?

அ) 52

ஆ) 53

இ) 54 

ஈ) 55🌹


4) தமிழ் சான்றோர்கள் முடிவுசெய்த திருவள்ளுவரின் காலம்?

அ) கி.மு. 1

ஆ) கி.மு. 2 

இ)கி.மு. 31 🌹

ஈ)கி.பி. 31


5) அச்சு வடிவம் பெற்ற முதல் பழந்தமிழ் திருக்குறள் நூலை அச்சிட்டவர்?

அ) காளிங்கர் 

ஆ)எல்லிஸ்துரை🌹

இ) வீரமாமுனிவர்

 ஈ) கால்டுவெல் 


6) திருக்குறளின் அடிகளை அப்படியே எடுத்தாளும் முற்கால நூல்கள்?

அ)  சிலப்பதிகாரம், மணிமேகலை 🌹

ஆ)சீவகசிந்தாமணி, வளையாபதி

இ) அகநானூறு, புறநானூறு 

ஈ)நன்னூல், தொல்காப்பியம் 


7)திருக்குறளை ஜெர்மனியில் மொழி பெயர்த்தவர்?

அ) மாக்ஸ்முல்லர் 

ஆ)மிசிகாமி அம்மையார்

இ) டாக்டர் கிரவுள்🌹

ஈ) எ.எல்.  பெர்விக்


8) திருவள்ளுவப் பயன் என்பது யார் கூற்று?

அ) கபிலர் 

ஆ)அடியார்க்கு நல்லார்

இ)  ஒளவையார் 

ஈ) நச்சினார்க்கினியார்🌹


9)" வள்ளுவன் தன்னை இவ்வுலகினுக்கேத் தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு"  எனக் கூறியவர் யார்?

அ) பாரதியார்🌹

ஆ பாரதிதாசன் இ)ஒளவையார்

ஈ) இடைக்காடர்


10) திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர்

அ) தருமர்

ஆ) மணக்குடவர்🌹

 இ) பரிமேலழகர்

ஈ) காமந்தர்


11) திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை

அ) குன்றிமணி 🌹

ஆ) பனை விதை

இ) நெல் 

ஈ) மூங்கில் 

12) திருக்குறளை முதன் முதலில் பதிப்பித்து வெளியிட்டவர் 

அ) எல்லீஸ்துரை 

ஆ) ஞான சகாயம் 

இ)ஞானப்பிரகாசம் 🌹

ஈ) கிருட்டிணனார்


13) உலகினில் நாகரிகம் முற்றிலும் அழிந்துவிட்டாலும் திருக்குறளும் கம்பன் காவியமும் இருந்தால் போதும் மீண்டும் அதனை புதுப்பித்து விடலாம் என்றவர்?


அ)ஜி.யு. போப் 

ஆ) திரு.வி.க 

இ) மு.வ

ஈ) கால்டுவெல் 🌹


14) திருக்குறள் ஒரு வகுப்பார்க்கோ ஒரு மதத்தாருக்கோ ஒரு நிறத்தாற்க்கோ  ஒரு மொழி யார்க்கோ ஒரு நாட்டார்க்கோ உரியதன்று அது மண்பதைக்கு உலகுக்குப் பொது என்றவர்


அ)  திரு.வி.க🌹

ஆ)மு.வ 

இ) கால்டுவெல் 

ஈ) ஜி.யு. போப்


15) எல்லாப் பொருளும் இதன்பால் உளஇதன்பால் இல்லாத எப்பொருளும் இல்லையால் - சொல்லார் பரந்தபா வால்என் பயன்வள் ளுவனார் 

சுரந்தபா வையரத் துணை என்றவர்


அ)  மறைமலை அடிகளார் ஆ)மதுரைத் தமிழ் நாகனார்🌹 இ) கவிமணி 

ஈ) பாரதிதாசன்


16) நீதித் திருக்குறளை நெஞ்சாரத் தம் வாழ்வில் ஓதித்தொழுது எழுக ஓர்ந்து என்றவர்?


அ) கவிமணி 🌹

ஆ)பரணர் 

இ)ஔவையார் 

ஈ) பேராசிரியர் சுந்தரம்பிள்ளை


17) வள்ளுவரும் தம் குறள் பாவடியால் வையத்தார் உள்ளுவதெல்லாம் அளந்தார் ஓர்ந்து - யார் கூற்று?


அ) தேனிக்குடிகீரனார்

ஆ) கவிமணி 

இ)பரணர் 🌹

ஈ)கபிலர்


18) திருவள்ளுவர் தோன்றியிராவிட்டால் தமிழன் என்னும் ஓர் இனம் இருப்பதாக உலகத்தாருக்குத் தெரிந்திருக்காது.   திருக்குறள் என்னும் ஒரு நூல் தோன்றியிராவிட்டால் ஒரு மொழி இருப்பதாக உலகத்தாருக்கு தெரிந்திருக்காது என்றவர்?


அ) காந்தியடிகள் 

ஆ) கால்டுவெல் 

இ)திரு.வி.க

ஈ) கி.ஆ.பெ. விசுவநாதம்🌹


19) திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு


அ) 1816

ஆ) 1815

இ) 1814

ஈ) 1812🌹


20) புத்தகம் நுறுபுரட்டிக் களைப்புற்றுச் சித்தம் கலங்கித் திகைப்பேன்- தெய்வப்புலவர் திருவள்ளுவர் சொன்ன பொய்யில் மொழி இருக்கும் போது என்றவர்


அ) கவிமணி 🌹

ஆ) பாரதிதாசன்

இ) திரு.வி.க

ஈ) நாமக்கல் கவிஞர்


21) திருக்குறளை தெலுங்கில் மொழி பெயர்த்தவர்


அ) அப்பாதீட்சிசர்

ஆ)டி.கே. பிரகாசம்

இ)  கோபால் ரெட்டி 

ஈ) வைத்தியநாதபிள்ளை🌹


22)சோவியத்து அறிஞர் தால்சுதாய் வழிகாட்டுதலால் திருக்குறள் மூலத்தை நேரடியாகப் படிக்க விரும்பியே தமிழ் பயிலத் தொடங்கினேன் என்றவர்.

அ) திரு.வி.க 

ஆ)காந்தியடிகள்🌹 

இ)இங்கிலாந்து நாட்டு மகாராணி விக்டோரியா 

ஈ)கி.ஆ.பெ. விஸ்வநாதம்


23)  திருக்குறளில் அமைச்சு இயலில் உள்ள அதிகாரங்கள்


அ) 30

ஆ)32🌹

இ)13

ஈ)25


24)  திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம்

அ) நெருஞ்சிப்பழம் 🌹

ஆ)அத்திப்பழம் 

இ)கோவைப்பழம்

ஈ) எதுவும் இல்லை 


25) ஏழு என்ற சொல் திருக்குறளில் எத்தனை இடங்களில் வருகிறது


அ) 9

ஆ) 10

இ) 8 🌹

ஈ)6

26) திருக்குறள் கி.பி. ஆறாம் நூற்றாண்டைச் சார்ந்து தோன்றியிருக்க வேண்டும் என்பது யார் கூற்று?

அ) பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை💐 

ஆ)டாக்டர்.மா. இராசமாணிக்கனார் 

இ)மறைமலையடிகள் 

ஈ)தொ. பரமசிவம்


27) நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும் வானின் றமையா தொழுக்கு என்ற குரளைப்  போல் நீரின் மகத்துவத்தை கூறும் மற்றொரு நூல்?

அ) புறநானூறு 

ஆ)மூதுரை💐

இ) நற்றிணை 

ஈ)நல்வழி 


28)உள்ளதோ றுள்ளுதோ றுள்ளம் உருக்குமே வள்ளுவர் வாய்மொழி மாண்பு என்றவர்?

அ)  மாங்குடி மருதனார் 💐

ஆ) நச்செள்ளையார் 

இ)கவிமணி 

ஈ)அவ்வையார்


29)  திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள்?

அ) அனிச்சம், முல்லை 

ஆ) குவளை, அனிச்சம்💐

இ) முல்லை, நெய்தல்

ஈ) அனிச்சம், நெய்தல்

30) திருக்குறளை சிங்கள மொழியில் மொழிப் பெயர்த்தவர்?

அ) எ.எல். பெர்விக் 

ஆ) மிசிகாமிஅம்மையார்💐 

இ)ஆறுமுகநாவலர் 

ஈ)அயோத்திதாச பண்டிதர்

31) மக்களுக்கு மகிழ்ச்சி தருவது? 

அ) ஊக்கம் 

ஆ) அறிவுடைய மக்கள் 💐

இ) இன்சொல் 

ஈ) சிறிய செயல்

32) ஒருவருக்குச் சிறந்த அணி? 

அ)செல்வம் 

ஆ)கல்வி 

இ)இன்சொல் 💐

ஈ)செய்நன்றி 


33) விருந்தினர் முகம் எப்போது வாடும்? 

அ) நம் முகம் மாறினால்💐 

ஆ)நம் வீடு மாறினால் 

இ) நாம் நன்கு வரவேற்றால்

ஈ)நம் முகவரி மாறினால்


34) நிலையான செல்வம்_____

அ)  மடியின்மை 

ஆ) உழைப்பு 

இ) ஊக்கம் 💐

ஈ) காலம்

35) ஆராயும் அறிவு உடையவர்கள்______ சொற்களைப் பேசமாட்டார்.

அ) தேவையற்ற 

ஆ) விலையற்ற 

இ) பயன்தராத💐

ஈ) வீண் 


36) "ஊக்கமது கைவிடேல்" என்பது ஒளவையாரின் ஆத்திச்சூடி.  இவ்வரியோடு தொடர்புடைய திருக்குறளைத் தேர்ந்தெடுக்க? 

அ) விருந்து புறத்ததாத் தாணுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் அன்று

ஆ) உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை நில்லாது நீங்கி விடும்💐

 இ) சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்லற்க சொல்லில் பயன்இலாச் சொல்

ஈ) வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்க்கு உள்ளத்து அனையது உயர்வு


37) பின்வரும் கதைக்குப் பொருத்தமான திருக்குறளைத் தேர்ந்தெடுக்க?

 வீட்டிற்குள் வந்த வேலனை தந்தை அழைத்தார் "உங்கள் பள்ளியில் பேச்சுப் போட்டி நடப்பதாக கூறினாயே, பெயர் கொடுத்து விட்டாயா?" என்று கேட்டார்.  "இல்லையப்பா, அமுதன் என்னை விட நன்றாகப் பேசுவான் அவனுக்குத்தான் பரிசு கிடைக்கும். எனவே நான் பெயர் கொடுக்கவில்லை" என்றான் வேலன். "போட்டியில் வெற்றியும் தோல்வியும் இயல்புதான். அதற்காகப் போட்டியிடாமல் விலகக்கூடாது. நாம் எந்த அளவு ஊக்கத்துடன் செயல்படுகிறோமோ அந்த அளவிற்கு வெற்றி கிடைக்கும். எனவே நீ போட்டியில் கலந்து கொள்" என்றார் அப்பா.  உற்சாகம் அடைந்தான் வேலன். "நாளை பெயர் கொடுத்துவிடுகிறேன் அப்பா" என்றான்.

அ)  மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து

 ஆ)வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத்து அனையது உயர்வு 💐

இ)அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார் பெரும்பயன் இல்லாத சொல் 

ஈ)சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்லற்க சொல்லில் பயன்இலாச் சொல்


38) ஏழைகளுக்கு உதவி செய்வதே ______ஆகும்.


அ) பெருந்தன்மை 

ஆ) ஈகை 💐

இ) புகழ்

ஈ) பெருமை 


39) பிற உயிரிகளின் ________கண்டு வருந்துவதே அறிவின் பயனாகும்.


அ) வறுமை 

ஆ)நோய் 

இ)துன்பத்தை 💐

ஈ) பகையை 


40) உள்ளத்தில் ________இல்லாமல் இருப்பதே சிறந்த அறமாகும்.


அ) சினம் 

ஆ)பகை 

இ) கொடுமை 

ஈ)குற்றம் 💐


41) வாய்மை எனப்படுவது______ 

அ) உண்மையை பேசுதல் 

ஆ)தீங்குதராத சொற்களைப் பேசுதல்💐 

இ)தைரியமாக பேசுதல் 

ஈ)இனிமையாக பேசுதல்


42)_______ செல்வம் சான்றோர்களால் ஆராயப்படும். 

அ)மன்னன் 

ஆ)பொறாமை இல்லாதவன்

இ)பொறாமை உள்ளவன்💐 ஈ)செல்வந்தன்


43) _____தீமை உண்டாகும் 


அ)செய்யத்தகுந்த செயல்களைச் செய்வதால் 

ஆ)செய்யத்தகாத செயல்களைச் செய்யாமல் இருப்பதால் 

இ)செய்யத்தகுந்த செயல்களைச் செய்யாமல் இருப்பதால் 💐

ஈ)எதுவும் செய்யாமல் இருப்பதால் 


44) தன்குடியைச் சிறந்த  குடியாகச் செய்ய விரும்புபவரிடம் ________இருக்கக் கூடாது.


அ) சோம்பல் 💐

ஆ)சினம் 

இ)ஏழ்மை 

ஈ)அழுக்காறு 


45)பொருத்துக.


அ) கற்கும் முறை  1.செயல் ஆ)உயிருக்குக் கண்கள் 2.கல்வி

இ) விழுச்செல்வம் 3.பிழையில்லாமல் கற்றல் ஈ)எண்ணித் துணிக எண்ணும் எழுத்தும் 

            

அ     ஆ     இ      இ

3        4       1        2

3        4       2        1

1        3       2        4

1        2       3        4


விடை: ஆ


46) _______ஒரு நாட்டின் அரணன்று 


அ) காடு 

ஆ)வயல் 💐

இ) மலை 

ஈ) தெளிந்த நீர் 


47) மக்கள் அனைவரும்______ ஒத்த இயல்புடையவர்கள்


அ) பிறப்பால் 💐

ஆ)நிறத்தால் 

இ) குணத்தால் 

ஈ) பணத்தால்


48) பின்வரும் குறட்பாக்களில் உவமை அணி பயின்று வரும் குறளைத் தேர்ந்தெடுத்து எழுதுக? 


அ)பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான் 

ஆ)வினையான் வினையாக்கிக் கோடல் தனைகவுள் யானையால் யானையாத் தற்று💐

இ) கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற மிக்காருள் மிக்க கொளல்

ஈ) உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை நில்லாது நீங்கி விடும்


49) புகழாலும் பழியாலும் அறியப்படுவது______ 


அ) அடக்கமுடைமை 

ஆ)நாணுடைமை 

இ)நடுவுநிலைமை💐 

ஈ)பொருளுடைமை


50) பயனில்லாத களர் நிலத்திற்கு ஒப்பானவர்______


அ) வலிமையற்றவர் 

ஆ)கல்லாதவர் 💐

இ) ஒழுக்கமற்றவர் 

ஈ) அன்பில்லாதவர்


Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY