Ads Right Header

முதன்முதலாக தமிழ் எண்கள் மற்றும் பெரிதும் பலர் அறியாத தமிழ் குறியீடுகளை கொண்ட தமிழ் கணிப்பான் ஆண்ட்ராய்டு செயலி!!

 


அனைவருக்கும் வணக்கம்


தமிழை முடிந்தவரை இணைய உலகிலும், நவீன உலகிலும் கொண்டு வரவேண்டும் என்ற நீண்ட கனவின் முதல் படியாக, முதன்முதலாக தமிழ் எண்கள் மற்றும் பெரிதும் பலர் அறியாத தமிழ் குறியீடுகளை கொண்ட தமிழ் கணிப்பான் ஆண்ட்ராய்டு செயலியை (Tamil Calculator App) இன்றைய நன்னாளில் பெரும் மகிழ்ச்சியோடும் பேரன்போடும் உங்கள் அனைவருக்கும் அறிமுகம் செய்கிறேன்!


இந்த செயலியே முதன்முதலாக தமிழ் எண்கள் மற்றும் குறியீடுகள் கொண்ட கணிப்பான் செயலியாகும்!


எப்படி செயலியை பதிவிறக்கம் செய்வது: 


கீழுள்ள இணைப்பு மூலம் GOOGLE PLAY STORE இல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


இணைப்பு : https://play.google.com/store/apps/details?id=appinventor.ai_vaankonofficial.Tamil_Calculator


இச்செயலியை பற்றிய சிறு குறிப்பு: 

முகப்பில் தமிழ் எண்கள் இருக்கும், கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் செய்துகொள்ள அதற்கான குறியீடுகளும் இருக்கும்.

மேலே பாரம்பரிய முறை என்ற பொத்தான் இருக்கும், அதை பயன்படுத்தி, 0 முதல் 9999 வரை உள்ள எங்களை ௰௱௲ ஆகியவை பயன்படுத்தி காணலாம்! ( Negative Integers மற்றும் பதின்ம எண்களை தற்போதைக்கு பாரம்பரிய முறைக்கு மாற்றும் வசதி இல்லை)

இடதுபுறமாக இழுத்தால், வலது புறத்தில் இருந்து தமிழ் பின்னம் (Fractions) குறியீடுகள் வரும் அவற்றையும் பயன்படுத்திக்கொள்ளலாம்!


கணிப்பானில் உள்ள குறியீடுகளின் பொருளை தெரிந்து கொள்ள : https://vaankon.com/tamil-numerals-and-symbols/


வௌியுலகில், சிந்தனையில் புதிது புதிதாக

விளைந்துள்ள எவற்றினுக்கும் பெயர்களெலாங் கண்டு

தௌிவுறுத்தும் படங்களொடு சுவடியெலாம் செய்து

செந்தமிழைச் செழுந்தமிழாய்ச் செய்வதுவும் வேண்டும்


என்ற பாரதிதாசரின் வரிகளுக்கு ஏற்ப இச்செயலியை போலவே தமிழ் மொழியில் இதுவரை இல்லாத பல செயலிகள் தொடர்ந்து தமிழ் மொழியில் உருவாகி வெளிவரும் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்.


உங்கள் அனைவரின் ஆதரவும் தொடர்ந்து இருக்க வேண்டுகிறேன்.


நன்றி🙏

இப்படிக்கு

வேல்கடம்பன் (எ) டார்வின் கண்ணா

+91 9489236687

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY