TNPSC TAMIL
9 ஆம் வகுப்பு தமிழ்
9 ஆம் வகுப்பு தமிழ் நூல்கள் – நூல் ஆசிரியர்கள்!
9 ஆம் வகுப்பு தமிழ்
நூல்கள் – நூல் ஆசிரியர்கள்
- 1856 ல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூலை எழுதியவர் – கால்டுவெல்
- ஹைக்கூ, சென்ரியு, லிமரைக்கூ எனப் புதுப்புது வடிவங்களில் கவிதை நூல்களைத் தந்துள்ளவர் – ஈரோடு தமிழன்பன்
- இனிமையும் நீர்மையும் தமிழெனல்ஆகும் என்ற பாடல் இடம் பெற்றுள்ள நூல் – பிங்கல நிகண்டு
- ஈரோடு தமிழன்பன் எழுதிய நூல்கள்:
- தமிழன்பன் கவிதைகள்
- நெஞ்சின் நிழல் – புதினம்
- சிலிர்ப்புகள்
- தீவுகள் கரையேறுகின்றன
- தோணிகள் வருகின்றன
- அந்த நந்தனை எரித்த நெருப்பின் மிச்சம்
- காலத்திற்கு ஒரு நாள் முந்தி
- ஊமை வெயில்
- குடை ராட்டினம் – பாடல்
- சூரியப் பிறைகள்
- என்னைக்கவர்ந்த பெருமானார் – சொற்பொழிவு
- கண்ணுக்கு வெளியே சில கனாக்கள்
- என் வீட்டுக்கு எதிரே ஓர் எருக்கஞ் செடி
- பாரதிதாசனோடு பத்து ஆண்டுகள் – கட்டுரை
- வணக்கம் வள்ளுவ! – கவிதை நூல்
- தமிழோவியம்
- தமிழ்விடுதூது என்னும் நூலை முதன்முதலில் உ.வே.சா பதிப்பித்த ஆண்டு – 1930
- மொழிபெயர்ப்பும் ஒலிபெயர்ப்பும் என்னும் நூலை எழுதியவர் – மணவை முஸ்தபா
- தமிழ்நடைக் கையேடு மாணவர்களுக்கான தமிழ் என்னும் நூலை எழுதியவர் – என்.சொக்கன்
- கால் முளைத்த கதைகள் என்னும் நூலை எழுதியவர் – எஸ். இராமகிருஷ்ணன்
- பட்ட மரம் என்னும் தலைப்பில் கவிதை எழுதியவர் – கவிஞர் தமிழ் ஒளி
- கவிஞர் தமிழ் ஒளி எழுதிய நூல்கள் – நிலைபெற்ற சிலை, வீராயி, கவிஞனின் காதல், மே தினமே வருக, கண்ணப்பன் கிளிகள், குருவிப்பட்டி, தமிழர் சமுதாயம், மாதவி காவியம்
- பட்ட மரம் என்னும் கவிதை எந்த நூலில் இடம் பெற்றுள்ளது – தமிழ் ஒளியின் கவிதைகள்
- திருத்தொண்டத் தொகை என்னும் நூலை எழுதியவர் – சுந்தரர்
- திருத்தொண்டர் திருவந்தாதி என்னும் நூலை எழுதியவர் – நம்பியாண்டர் நம்பி
- திருத்தொண்டத் தொகை, திருத்தொண்டர் திருவந்தாதி ஆகிய இரண்டு நூல்களையும் அடிப்படையாக கொண்டு சேக்கிழாரால் ஒவ்வொரு புராணத்திலும் ஒவ்வோர் அடியாராக 63 பேரின் சிறப்புகளை விளக்கி பாடப்பட்ட நூல் – திருத்தொண்டர் புராணம்
- திருத்தொண்டர் புராணத்தின் பெருமை காரணமாக எவ்வாறு அழைக்கப்பட்டது – பெரியபுராணம்
- பண்டைத் தமிழர்களின் அரிய வரலாற்றுச்செய்திகள் அடங்கிய பண்பாட்டு கருவூலமாக திகழும் நூல் – புறநானூறு
- சிறுபஞ்சமூலம் நூலின் ஆசிரியர் – காரியாசன்
- தண்ணீர் என்னும் தலைப்பில் கதையை எழுதியவர் – கந்தர்வன்
- கந்தர்வன் எழுதிய சிறுகதைகள் – சாசனம், ஒவ்வொரு கல்லாய், கொம்பன்
- அழகின் சிரிப்பு நூலின் ஆசிரியர் – பாரதிதாசன்
- தண்ணீர் தண்ணீர் நூலின் ஆசிரியர் – கோமல் சுவாமிநாதன்
- தண்ணீர் தேசம் நூலின் ஆசிரியர் – வைரமுத்து
- வாய்க்கால் மீன்கள் நூலின் ஆசிரியர் – வெ. இறையன்பு
- மழைக்காலமும் குயிலோசையும் என்னும் நூலின் ஆசிரியர் – மா. கிருஷ்ணன்
- கண்ணுக்குப் புலப்படாத தண்ணீரும் புலப்படும் உண்மைகளும் என்னும் நூலை எழுதியவர் – மா.அமரேசன்
- சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சி என அழைக்கப்படும் நூல் – மணிமேகலை
- மணிமேகலை காப்பியத்தை இயற்றியவர் – கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்
- நன்னூலை இயற்றியவர் – பவணந்தி முனிவர்
- தமிழர் நாகரிகமும் பண்பாடும் என்ற நூலை எழுதியவர் –அ. தட்சிணாமூர்த்தி
- தமிழக வரலாறும் தமிழர் பண்பாடும் என்ற நூலை எழுதியவர் –மா. இராசமாணிக்கனார்
- தமிழ்ச் செவ்வியல் இலக்கியத்தில் பறவைகள் என்னும் நூலை எழுதியவர் – க. ரத்னம்
- தொல்லியல் நோக்கில் சங்க காலம் என்னும் நூலை எழுதியவர் –கா. ராஜன்
- தமிழர் சால்பு என்னும் நூலை எழுதியவர் – சு. வித்யானந்தன்
- ஓ, என் சமகாலத் தோழர்களே! – வைரமுத்து கவிதைகள் தொகுப்பு – வைரமுத்து
- தமது அறிவியல் அனுபவங்களை கையருகே நிலா என்னும் நூலாக எழுதியவர் – மயில்சாமி அண்ணாதுரை
- அக்கினிச் சிறகுகள் நூலை எழுதியவர் – அப்துல் கலாம்
- மின்மினி என்னும் நூலை எழுதியவர் – ஆயிஷா நடராஜன்
- ஏன், எதற்கு, எப்படி? என்னும் நூலை எழுதியவர் – சுஜாதா
- சூரியன், பரமானுப் புராணம் போன்ற அறிவியல் நூல்களை எழுதியவர் – ஈ.த. இராஜேஸ்வரி
- குடும்ப விளக்கு என்னும் நூலின் ஆசிரியர் – பாரதிதாசன்
- பாரதிதாசன் எழுதிய நூல்கள் – பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, இருண்ட வீடு, குடும்ப விளக்கு, தமிழியக்கம்
- சிறுபஞ்ச மூலத்தின் ஆசிரியர் – காரியாசான்
- சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம், இன்பஒளி ஆகிய நூல்களை எழுதியவர் – பேரறிஞர் அண்ணா
- அண்ணாவின் சிறுகதைத் திறன் நூலை எழுதியவர் – முனைவர் பெ. குமார்
- சீவகசிந்தாமணி – காப்பிய இலக்கியம் – திருத்தக்க தேவர்
- நா. காமராசனின் கவிதை நூல் – கருப்பு மலர்கள்
- திரைப்படமாக வெளிவந்த கோமல் சுவாமிநாதனின் நாடகநூல் – தண்ணீர் தண்ணீர்
- நோபல் பரிசு பெற்ற எர்னஸ்ட் ஹெமிங்வேவின் குறுநாவல் – கிழவனும் கடலும்
- சாகித்திய அகாதெமி பரிசுபெற்ற சிற்பியின் கவிதை நூல் – ஒரு கிராமத்து நதி
- எஸ். ராமகிருஷ்ணனின் சிறார் நாவல் – சாக்ரட்டீசின் சிவப்பு நூலகம்
- ஓய்திருக்கலாகாது – கல்வி சிறுகதைகள் – (தொகுப்பு; அரசி – ஆதிவள்ளியப்பன்)
- முதல் ஆசிரியர் என்னும் நூலை எழுதியவர் – சிங்கிஸ் ஐத்மாத்தவ்
- கல்வியில் நாடகம் என்னும் நூலை எழுதியவர் – பிரளயன்
- கரும்பலகை யுத்தம் நூலை எழுதியவர் – மலாலா
- மதுரைக்காஞ்சியின் ஆசிரியர் – மாங்குடி மருதனார்
- நாட்டுப்புறவியல் ஓர் அறிமுகம் – முனைவர் சு. சக்திவேல்
- தரங்கம்பாடி தங்கப் புதையல் – பெ.தூரன்
- இருட்டு எனக்குப் பிடிக்கும் (அன்றாட வாழ்வில் அறிவியல்) – ச. தமிழ்ச்செல்வன்
- இராவண காவியம் – புலவர் குழந்தை
- புலவர் குழந்தை யாருடைய வேண்டுகோளுக்கிணங்க 25 நாள்களில் திருக்குறளுக்கு உரை எழுதியுள்ளார்? – பெரியார்
- நாச்சியார் திருமொழி, திருப்பாவை ஆகிய பாடல்களை பாடியவர் – ஆண்டாள்
- ஆண்டாள் பாடிய திருப்பாவை, நாச்சியார் திருமொழி எந்த நூலில் உள்ளது – நாலாயிர திவ்விய பிரபந்தம்
- செய்தி என்னும் சிறுகதையை எழுதியவர் – தி.ஜானகிராமன்
- தனது ஜப்பான் பயண அனுபவங்களை உதயசூரியன் என்னும் தலைப்பில் சுதேசமித்திரன் வார இதழில் எழுதியவர் – தி.ஜானகிராமன்
- ஜப்பான் பயண அனுபவங்களை உதயசூரியன் என்னும் தலைப்பில் நூலாக வெளிவந்த ஆண்டு – 1967
- தி.ஜானகிராமன் ரோம், செக்கோஸ்லோவோக்கியா சென்ற அனுபவங்களை கருங்கடலும் கலைக்கடலும் என்னும் தலைப்பில் நூலாக வெளியிட்ட ஆண்டு – 1974
- தமது காவிரிக்கரை வழியான பயணத்தை நடந்தாய் வாழி காவேரி என்னும் தலைப்பில் நூலாக வெளியிட்டவர் – தி.ஜானகிராமன்
- அடுத்த வீடு ஐம்பது மைல் என்னும் பயணக்கட்டுரையை எழுதியவர் – தி.ஜானகிராமன்
- புதிய ஆத்திச்சூடி என்னும் நூலை எழுதியவர் – பாரதியார்
- நட்புக்காலம் என்னும் நூலை எழுதியவர் – கவிஞர் அறிவுமதி
- திருக்குறள் கதைகள் என்னும் நூலை எழுதியவர் – கிருபானந்தவாரியார்
- கையா, உலகே ஒரு உயிர் என்னும் நூலை எழுதியவர் – ஜேம்ஸ் லவ்வாக்; தமிழில் சா. சுரேஷ்
- சாகித்திய அகாதெமி விருது பெற்ற தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர்கள்:
- அன்பளிப்பு (சிறுகதைகள்) – கு. அழகிரிசாமி – 1970
- சக்தி வைத்தியம் (சிறுகதைத் தொகுப்பு) – தி.ஜானகிராமன் – 1979
- முதலில் இரவு வரும் (சிறுகதைத் தொகுப்பு) – ஆதவன் – 1987
- அப்பாவின் சிநேகதர் (சிறுகதைத் தொகுப்பு) – அசோகமித்ரன் – 1996
- மின்சாரப்பூ (சிறுகதைகள்) – மேலாண்மை பொன்னுசாமி – 2008
- சூடிய பூ சூடற்க (சிறுகதைகள்) – நாஞ்சில் நாடன் – 2010
- ஒரு சிறு இசை (சிறுகதைகள்) – வண்ணதாசன் – 2016
- இந்திய தேசிய இராணுவத்தில் தமிழர் பங்கு நூலை எழுதியவர் – மா.சு. அண்ணாமலை
- தமிழர் உணவு என்னும் நூலை எழுதியவர் – பக்தவச்சல பாரதி
- ஆகாயத்துக்கு அடுத்த வீடு – மு. மேத்தா
- தமிழ்ப் பழமொழிகள் – கி.வா. ஜகன் நாதன்
- இருட்டு எனக்குப் பிடிக்கும்(அன்றாட வாழ்வில் அறிவியல் – ச. தமிழ்செல்வன்
- ஒளியின் தலைப்பில் கவிதை எழுதியவர் – ந. பிச்சமூர்த்தி
- புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும், என்னும் நூலை எழுதியவர் – அ. வல்லிக்கண்ணன்
- பாரதியாரின் வசன கவிதையை தொடர்ந்து புதுக்கவிதை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டவர் – ந. பிச்சமூர்த்தி
- ந. பிச்சமூர்த்தியின் முதல் சிறுகதை – சயன்சுக்கு பலி
- லாவோட்சு கவிதையை தமிழில் மொழி பெயர்த்தவர் – சி. மணி
- மகனுக்கு எழுதிய கடிதம் என்ற கதையை எழுதியவர் – நா. முத்துக்குமார்
- பெரியாரின் சிந்தனைகள் – வே. ஆனைமுத்து
- அஞ்சல் தலைகளின் கதை – எஸ்.பி சட்டர்ஜி (மொழிபெயர்ப்பு – வீ.மு. சாம்பசிவன்)
- தங்கைக்கு – மு. வரதராசன்
- தம்பிக்கு – அறிஞர் அண்ணா
- பரந்த ஆளுமையும் மனித நலக் கோட்பாடும் என்ற கூற்றை கூறியவர் – இலத்தீன் புலவர் தெறென்ஸ்
- திருக்குறளின் பண்புடைமை என்னும் அதிகாரத்திற்கு உரை கண்டவர் – பரிப்பெருமாள்
- கல்யாண்ஜி எழுதிய கவிதை நூல்கள் – புலரி, முன்பின், ஆதி, அந்நியமற்ற நதி, மணல் உள்ள ஆறு
- அகமும் புறமும் என்ற கட்டுரை தொகுப்பை எழுதியவர் – கல்யாண்ஜி
- சில இறகுகள் சில பறவைகள் என்ற பெயரில் கடிதத்தை எழுதியவர் – கல்யாண்ஜி
- கல்யாண்ஜி எழுதிய சிறுகதை தொகுப்புகள் – கலைக்க முடியாத ஒப்பனைகள், தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள், உயரப் பறத்தல், ஒளியிலே தெரிவது
- ஒரு சிறு இசை என்ற சிறுகதை தொகுப்பிற்காக கல்யாண்ஜிக்கு சாகித்திய அகாதாமி விருது வழங்கப்பட்ட ஆண்டு – 2016
- இந்த காட்டில் எந்த மூங்கில் புல்லாங்குழல்? – அமுதோன்
- பிம்பங்களற்ற தனிமையில் ஒன்றிலொன்று முகம் பார்த்தன சலூன் கண்ணாடிகள் – நா. முத்துக்குமார்
- குறுந்தொகையை தொகுத்தவர் – பூரிக்கோ
- தாய்மைக்கு வறட்சி இல்லை என்னும் தலைப்பில் எழுதியவர் –சு. சமுத்திரம்
- வளத்தம்மா என்ற கதையை எழுதியவர் – சு. சமுத்திரம்
- என் கதைகளின் கதைகள் என்ற நூலை எழுதியவர் – சு .சமுத்திரம்
- சு. சமுத்திரம் எழுதிய புகழ்பெற்ற சிறுகதை தொகுப்புகள் – வாடாமல்லி, பாலைப்புறா, மண்சுமை, தலைப்பாகை, காகித உறவு
- சு. சமுத்திரம் எழுதிய வேரில் பழுத்த பலா என்னும் புதினம் எந்த விருதை பெற்றது – சாகித்திய அகாதமி விருது
- சு. சமுத்திரம் எழுதிய குற்றம் பார்க்கில் என்னும் சிறுகதைத் தொகுதி எந்த பரிசை பெற்றது – தமிழக அரசின் பரிசை
- வண்ணதாசனுக்கு சாகித்திய அகாதெமி பரிசு பெற்றுத் தந்த நூல் – ஒரு சிறு இசை – 2016
- பாஞ்சாலி சபதம் நூலை எழுதியவர் – பாரதியார்
- இலக்கிய நோக்கில் கம்பர் நூல் எவ்வாறு காவியம் எனச் சிறக்கிறது? என்பதை விரிவாக ஆராய்ந்தவர் – பேராசிரியர் அ. பாண்டுரங்கன்
- சிற்பியின் மகள் என்ற நூலை எழுதியவர் – பூவண்ணன்
- அப்பா சிறுவனாக இருந்தபோது என்னும் நூலை எழுதியவர் – அலெக்சாந்தர் ரஸ்கின் (தமிழில் நா. முகமது செரீபு)
Previous article
Next article
Leave Comments
Post a Comment