Ads Right Header

எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 9 & 2022 டிஎன்பிஎஸ்சி தேர்விற்கான மாதிரி வினாத்தாள் (விளக்கமான விடடையுடன்( Shankar IAS academy)


1 ) கீழ்க்கண்டவற்றில் பன்மைத் தொடரில் பயன்படுத்தப்படும் வார்த்தை எது ? 

A ) தான் 
B ) தன்னை 
C ) தனக்கு 
D ) தமது 

2 ) கோமகளின்- இயற்பெயர் என்ன ? 
A ) அம்பை 
B ) வெண்ணிலா 
C ) இராஜலட்சுமி 
D ) லட்சுமி 

3 ) உவமையை மட்டும் கூறி அதன் மூலம் கூற வந்த கருத்தை உணரவைப்பது எவ்வகை அணி? 
A ) வேற்றுமை அணி 
B ] ஏகதேச உருவக அணி 
C ) உவமை அணி 
D ) பிறிதுமொழிதலணி 

4 ) கூற்று ( 1 ) : - ஒரு சொல் அல்லது தொடர் இரு பொருள் தருமாறு அமைவது இரட்டுற மொழிதல் என்னும் அணியாகும் 
கூற்று ( 2 ) : - இதனை அடுக்குத் தொடர் என்றும் கூறுவர்.
A ) கூற்று 1,2 சரி 
B ) கூற்று 1 சரி 2 தவறு 
C ) கூற்று 1,2 தவறு 
D ) கூற்று 1 தவறு 2 சரி 

5 ) அரசியலமைப்பு வரைவுக் குழு தனது அறிக்கையை எப்போது ஒப்படைத்தது ? 
A ) பிப்ரவரி 20,1947 
B ) பிப்ரவரி 21,1948 
C ) நவம்பர் 26,1948 
D ) நவம்பர் 20,1949 

6 ) அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட ஆண்டு ? 
A) 1990
B ) 1991
C) 1992
D) 1993

7) அடுத்தவர் வாழ்வைக் கண்டு …………… கொள்ளக்கூடாது.
A) உவகை
B) நிறை
C) அழுக்காறு
D) இன்பம்

8) நாம் நீக்கவேண்டியவற்றுள் ஒன்று ……………..
A) பொச்சாப்பு
B) துணிவு
C ) மானம்
D) எளிமை

9) இன்பதுன்பம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………….
A) இன்பத் + துன்பம்
B) இன்பம் + துன்பம்
C) இன்ப + அன்பம்
D) இன்ப + அன்பு

10) குணங்கள் + எல்லாம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் …………….
அ) குணங்கள் எல்லாம்
ஆ) குணமெல்லாம்
இ) குணங்களில்லாம்
ஈ) குணங்களெல்லாம்

11) பொருள் கூறுக "மையல்"
A. பொறுமை
B. விருப்பம்
C. மேன்மை
D. கொள்கை

12) பொருள் கூறுக "பொறை"
A. மேன்மை
B. பொறுமை
C. கொள்கை
D. விருப்பம்

13) இறையரசனின் இயற்பெயர் …………………….
A. சே.தங்கராசு
B. சே.சேசுராசா
C. மணவாளன்
D. பூவரசன்

14) இறையரசன் ஆற்றிய பணி …………………..
A.வரலாற்று ஆய்வாளர்
B.கணித பேராசிரியர்
C.தமிழ் பேராசிரியர்
D.அரசவை புலவர்

15) ஆண்டாள் பாடிய நூல் …………………
A. திருவெம்பாவை
B. திருப்பாவை
C. திருப்பாடல்
D. கிருஷ்ணலீலா

16)  மாணிக்கவாசகர் இயற்றியது …………………….
A. திருவெம்பாவை
B. திருப்பாவை
C. திருப்பாடல்
D. சிவபுராணம்

17) உன்னுடன் நீயே ………………… கொள்.
அ) சேர்ந்து
ஆ) பகை
இ) கைகுலுக்கிக்
ஈ) நட்பு

18) கவலைகள் …………………. அல்ல.
அ) சுமைகள்
ஆ) சுவைகள்
இ) துன்பங்கள்
ஈ) கைக்குழந்தைகள்

19) விழித்து + எழும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் …………………
அ) விழியெழும்
ஆ) விழித்தெழும்
இ) விழித்தழும்
ஈ) விழித்து எழும்

20)  மு.மேத்தா …………….. இயக்க கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர்.
A. இலக்கிய
B. ஹைக்கூ
C. வானம்பாடி
D. மாணவர்

21). மு.மேத்தாவின் படைப்புகளுள் சாகித்திய அகாதெமி விருது பெற்ற நூல் …………………..
A. சோழநிலா
B. மகுடநிலா
C. ஊர்வலம்
D. ஆகாயத்துக்கு அடுத்தவீடு

22) மு.மேத்தா இயற்றிய நூல்களில் தவறானது எது?
A. தண்ணீர் தேசம்
B. ஊர்வலம்
C. சோழநிலா
D. மகுட நிலா

23) இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் …………….
அ) இராதாகிருட்டிணன்
ஆ) அம்பேத்கர்
இ) நௌரோஜி
ஈ) ஜவஹர்லால் நேரு

24) பூனா ஒப்பந்தம் ………………….. மாற்ற ஏற்படுத்தப்பட்டது.
A) சொத்துரிமையை
B) பேச்சுரிமையை
C) எழுத்துரிமையை
D) இரட்டை வாக்குரிமையை

25) சமத்துவச் சமுதாயம் அமைய அம்பேத்கர் ஏற்படுத்திய இயக்கம் …………….
A) சமாஜ் சமாத சங்கம்
B) சமாத சமாஜ பேரவை
C) தீண்டாமை ஒழிப்புப் பேரவை
D) மக்கள் நல இயக்கம்

26) புத்த சமயம் தொடர்பாக அம்பேத்கர் எழுதிய நூல் …………………..
A) புத்த வேதம்
B) புத்தர் போதனைகள்
C) புத்தரும் அவரின் தம்மமும்
D) பெளத்த மார்க்கம்

27) அம்பேத்கர் நிறுவிய அரசியல் கட்சியின் பெயர் ………………….
A) அம்பேத்கர் மக்கள் இயக்கம்
B) தொழிலாளர் இயக்கம்
C) சுதந்திரத் தொழிலாளர் கட்சி
D) மக்கள் விடுதலை முன்னணி

28) அம்பேத்கர் பிறந்த நாள் …………………….
A) 14.04.1881
B) 14.04.1891 
C) 15.04.1891
D) 15.04.1881

29) அம்பேத்கர் பண்டைக்கால இந்திய வணிகம் என்ற ஆய்விற்காக முதுகலைப்பட்டம் பெற்றார்.
A) 1918
B) 1919
C) 1925
D) 1915

30) அம்பேத்கர் முதுநிலை அறிவியல் பட்டம் பெற்ற ஆண்டு ………………
A) 1921
B) 1922
C) 1931
D) 1932

31) ரூபாய் பற்றிய பிரச்சனை என்னும் ஆராய்ச்சிக் கட்டுரைக்காக அம்பேத்கர் 1925ஆம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்றார்.

A) சரி
B) தவறு

32) அம்பேத்கரின் படிப்பிற்கு உதவிய மன்னர் ?
A) ஹைதராபாத் நிஜாம்
B)பரோடா மன்னர்
C)மைசூர் மஹாராஜா
D)ஜெய்ப்பூர் மன்னர்

33) ஒடுக்கப்பட்ட பாரதம் - இதழ் அம்பேத்கர் துவங்கிய ஆண்டு?
A) 1922
B) 1932
C) 1927
D) 1937

34 ) கோமகளின் தமிழ்நாடு அரசின் விருது பெற்ற நூல் எது ? 
A ) உயிர் அமுதாய் 
B ) நிலாக்கால நட்சத்திரங்கள் 
C ) அன்பின் சிதறல் 
D ) அன்னை பூமி 

35 ) பண்டைக்கால இந்திய வணிகம் என்ற ஆய்விற்காக அம்பேத்கர் முதுகலை பட்டம் பெற்ற ஆண்டு ? 
A ) 1915 
B ) 1917 
C ) 1923 
D ) 1920 

36 ) ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக ஒடுக்கப்பட்டோர் நல்வாழ்வு பேரவை அமைப்பை அம்பேத்கர் நிறுவிய ஆண்டு ? 
A ) 1920 
B ) 1924 
C ) 1927 
D ) 1928 

37 ) அம்பேத்கர் மரணமடைந்த ஆண்டு ? 
A ) 1957 , டிசம்பர் 6 
B ) 1958 , டிசம்பர் 6 
C ) 1956 , டிசம்பர் 6 
D ) 1955 , டிசம்பர் 5 

38 ) மாநில சுயாட்சி வழங்குவதற்காக இந்திய அரசின் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு? 
A ) 1930 
B ) 1935 
C ) 1919 
D ) 1909  

39 ) பிரிதுமொழிதல் அணியில் ........... மட்டும் இடம்பெறும்.
A ) உவமை 
B ) உவமேயம் 
C ) தொடை 
D ) சந்தம் 

40 ) இரட்டுறமொழிதல் அணி யின் வேறு பெயர் என்ன ? 
A ) பிறிதுமொழிதல் அணி 
B ) வேற்றுமை 
C ) உவமை 
D ) சிலேடை

எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 9
விடைகள் படிக்க

2022 மாதிரி வினாத்தாள்
(Shankar IAS academy)

விடைத்தாள்









Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY