Ads Right Header

6 முதல் 10 - வகுப்பு வரையிலான பழைய தமிழ் பாடப்புத்தகங்கள் ஒரே pdf வடிவில்...




வாழ்த்து 

திருவருட்பா 
கண்ணில் கலந்தான் 
கருத்தில் கலந்தான்
என் எண்ணில் கலந்தே இருக்கின்றான் - பண்ணில் கலந்தான்
என் பாட்டில் கலந்தான் 
உயிரில் கலந்தான் கருணை கலந்து . - இராமலிங்க அடிகளார் 

பாடல்பொருள் 
கருணை நிறைந்த இறைவன் என் கண்ணில் இருக்கிறான் ; என் சிந்தனையில் கலந்து இருக்கிறான் ; என் எண்ணத்தில் கலந்து இருக்கிறான் ; என் பாட்டில் கலந்து இருக்கிறான் ; பாட்டின் இசையில் கலந்து இருக்கிறான் ; அவன் , என் உயிரில் கலந்து இருக்கிறான் . 

ஆசிரியர் குறிப்பு 
இராமலிங்க அடிகளார் , திருவருட்பிரகாச வள்ளலார் என்னும் சிறப்புப் பெயர் பெற்றவர் . இவர் கடலூர் மாவட்டம் மருதூரில் பிறந்தவர் . 

பெற்றோர்இராமையா - சின்னம்மையார் . ஜீவகாருண்யஒழுக்கம் , மனுமுறை கண்டவாசகம் ஆகிய நூல்கள் இவர் எழுதியவை . இவர் பாடல்கள் அனைத்தும் ' திருவருட்பா ' என்னும் தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன . 

சமரச சன்மார்க்க நெறியை வழங்கியவர் இவரே . அனைத்து மதங்களின் நல்லிணக்கத்திற்காகச் சன்மார்க்க சங்கத்தையும் , பசித்துயர் போக்கி மக்களுக்கு உணவளிக்க அறச்சாலையையும் அமைத்தவர் . அறிவுநெறி விளங்க ஞானசபையையும் நிறுவியவர் . 

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய கருணை மனம் இவருடையது . வடலூர் சத்திய தருமச்சாலையில் , பசியால் வாடும் மக்களுக்குச் சோறிட , இவர் அன்று மூட்டிய அடுப்பு இன்றும் அணையாமல் , தொடர்ந்து பசிப்பிணி தீர்த்து வருகிறது . 

இவர் வாழ்ந்த காலம் 05. 10. 1823 முதல் 30.01 . 1874 வரை . இவரது திருவருட்பாவிலிருந்து ஒரு பாடல் , வாழ்த்துச் செய்யுளாகத் தரப்பட்டுள்ளது .

6 முதல் 10 வகுப்பு வரையிலான 
பழைய பாடப்புத்தகம் தரவிறக்கம்
செய்திட



Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY