Ads Right Header

50 + 50 முக்கிய வினாவிடை - தமிழக வரலாறு மற்றும் பண்பாடு!

  


 
1. அறிஞர் அண்ணா அவர்களின் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் செப்டம்பர் - 17, 1949 அன்று தோற்றுவிக்கப்பட்ட இடம்?
 
அ. தலைவாசல்சேலம்
ஆ. சமயபுரம்திருச்சி
இ. ராபின்சன் பூங்கா - ராயபுரம்சென்னை
ஈ. தீவுத் திடல்மதுரை.
 
2. தமிழகத்தின் எந்தப் பகுதியின் பெயரை டால்மியாபுரம்” என பெயர் மாற்றம் செய்ய முயற்சித்த போது அதற்கு எதிராக போராட்டம் செய்து மூன்று மாதங்கள் சிறை தண்டனை பெற்றார் அண்ணா?
 
அ. அரவன்;குடி
ஆ. இடையான்;குடி
இ. மாங்குடி
ஈ. கள்ளக்குடி.
 
3. அறிஞர் அண்ணா அவர்கள் கீழ்க்கண்ட எந்த தலைப்பில் கடித இலக்கியங்களை எழுதினார்?
 
அ. அண்ணாவிற்கு...
ஆ. தம்பிக்கு...
இ. தங்கைக்கு...
ஈ. மகளுக்கு...
 
4. கீழ்க்கண்ட எந்த நாடகங்களை தானே இயற்றி நடித்துள்ளார் அண்ணா?
 
அ. சந்திர மோகன்
ஆ. நீதிதேவன் மயக்கம்
இ. மேற்கண்ட இரண்டும்
ஈ. மேற்கண்ட ஏதுமில்லை.
 
 
5. அறிஞர் அண்ணா இயற்றிய நாவல்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தது எது?
 
அ. ராஜபாட் ரங்கதுரை
ஆ. அவளும் அவனும்
இ. மலைக் கள்ளன்
ஈ. ரங்கோன் ராதா.
 
6. அறிஞர் அண்ணா இயற்றிய சிறுகதைகளில் மிகவும் சிறப்பு வாய்ந்தவை எது ஃ எவை?
 
அ. செவ்வாழை
ஆ. நாடோடி
இ. மேற்கண்ட இரண்டும்
ஈ. மேற்கண்ட எதுமில்லை.
 
7. அறிஞர் அண்ணா அவர்களின் சிறந்த ஆய்வு நூல்கள் எது ஃ எவை?
 
அ. கம்பரசம்
ஆ. ஆரியமாயை
இ. மேற்கண்ட இரண்டும்
ஈ. மேற்கண்ட எதுமில்லை.
 
8. 1967-ஆம் ஆண்டு நடைப்பெற்ற பொதுத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் பெற்ற பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்துஎன்று மதராஸ் மாகாணத்தின் முதலமைச்சராக பதவியேற்றார் அண்ணா?
 
அ. மார்ச் - 6, 1967
ஆ. ஏப்ரல் - 16, 1967
இ. மே - 26, 1967
ஈ. ஜூன் - 16, 1967.
 
 
 
9. தமிழகத்தில் ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசி வழங்கும் திட்டதை துவக்கிய முதலமைச்சர் யார்?
 
அ. எம்.பக்தவச்சலம்
ஆ. சி.என். அண்ணாதுரை
இ. மு. கருணாநிதி
ஈ. எம்.ஜி.ராமச்சந்திரன்.
 
10. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அண்ணா அவர்கள்என்று இயற்கை எய்தினார்?
 
அ. பிப்ரவரி 03, 1969
ஆ. மார்ச் 03, 1969
இ. ஏப்ரல் 03, 1969
ஈ. டிசம்பர் 03, 1969.
 
11. கூற்று - 1: ஆரம்ப காலகட்டத்தில் அறிஞர் அண்ணா அவர்கள் பச்சையப்பன் உயர் நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றினார்.
 
கூற்று - 2: பின் நாளில் அப்பணியிலிருந்து விலகி அரசியல் மற்றும் பத்திரிக்கை துறைகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார் அண்ணா.
அ. கூற்று - 1 மட்டுமே சரி
ஆ. கூற்று - 2 மட்டுமே சரி
இ. கூற்று - 1 மற்றும் கூற்று - 2 இரண்டுமே சரி 
ஈ. கூற்று - 1 மற்றும் கூற்று - 2 இரண்டுமே தவறு.
 
12. எந்த ஆண்டு நடைப்பெற்ற மதராஸ் சட்டமன்ற பொதுத்தேர்தலில்திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றியைத் பெற்றார் அண்ணா?
 
அ. 1957
ஆ. 1958
இ. 1959
ஈ. 1960.
 
13. 1957-ஆம் ஆண்டு நடைப்பெற்ற மதராஸ் மாகாண சட்டமன்ற பொதுத்தேர்தலில்திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் எந்தத் தொகுதியில் போட்டியிட்டு முதன் முதலாக வெற்றியைத் பெற்றார் அண்ணா?
 
அ. சேலம்
ஆ. மதுரை
இ. ஈரோடு
ஈ. காஞ்சிபுரம்.
 
14. அண்ணாதுரை அவர்கள் முதன் முறையாக மதராஸ் மாகாண சட்டமன்ற அவை உறுப்பினராக பதவியேற்ற ஆண்டு?
 
அ. 1957
ஆ. 1958
இ. 1959
ஈ. 1960
 
15. அண்ணாதுரை அவர்கள் முதன் முறையாக மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு?
 
அ. 1960
ஆ. 1961
இ. 1962
ஈ. 1963.
 
16. கீழ்க்கண்டவர்களில் அண்ணாதுரை அவர்கள் பாராளுமன்றத்தின் மிகச்சிறந்த பேச்சாளர்களில் ஒருவர்” என குறிப்பிட்டவர் யார்?
 
அ. டாக்டர். ராஜேந்திர பிரசாத்
ஆ. ஜவஹர்லால் நேரு
இ. ஜாகிர் உசைன்
ஈ. ராஜாஜி.
 
 
 
17. 1967-ஆம் ஆண்டு நடைப்பெற்ற மதராஸ் சட்டமன்ற பொதுத்தேர்தலில்அறிஞர் அண்ணா அவர்கள் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் பெற்ற பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்துஅறிஞர் அண்ணா மதராஸ் மாகாணத்தின் முதலமைச்சராக பதவியேற்றார் நாள்?
 
அ. மார்ச் - 6, 1967
ஆ. மார்ச் - 16, 1967
இ. மார்ச் - 7, 1967
ஈ. மார்ச் - 17, 1967.
 
18. 1968-ஆம் ஆண்டு கீழ்க்கண்ட எந்த பல்கலைக் கழகமானதுஅண்ணாவிற்கு ‘Chubb Fellowship” என்ற கௌரவ பட்டத்தினை வழங்கி சிறப்பித்தது
 
அ. அமெரிக்காவின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகம்
ஆ. அமெரிக்காவின் யால் பல்கலைக் கழகம்
இ. இலண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம்
ஈ. நாளந்தா பல்கலைக் கழகம்.
 
19. அறிஞர் அண்ணா அவர்களுக்கு எந்த ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக் கழகமானதுகௌரவ டாக்டர் பட்டம் அளித்து சிறப்பித்தது?
 
அ. 1957
ஆ. 1962
இ. 1965
ஈ. 1968.
 
20. அறிஞர் அண்ணா தலைமையிலான தமிழக அரசு தமிழகத்தில் மும்மொழிக் கொள்கைக்கு பதிலாக ஆங்கிலம் மற்றும் தமிழ் அடங்கிய இரு மொழிக் கொள்கை” சட்டத்தை அமல்படுத்திய நாள்?
 
அ. ஜனவரி 23, 1967
ஆ. ஜனவரி 23, 1968
இ. ஜனவரி 23, 1969
ஈ. ஜனவரி 23, 1965.
 
 
 
21. அறிஞர் அண்ணா அவர்கள் தமிழக அரசின் கொள்கை முழக்கமான சத்யமேவ ஜெயதே” என்பதை சமஸ்கிருதத்திலிருந்துதமிழ் மொழியில் வாய்மையே வெல்லும்” என மாற்றிய ஆண்டு?
 
அ. 1969
ஆ. 1968
இ. 1967
ஈ. 1966.
 
22. அறிஞர் அண்ணா அவர்கள் சென்னையில் இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டை முன்னாள் குடியரசுத் தலைவர் ஜாகிர் உசைன் அவர்களின் தலைமையில் துவக்கி வைத்த நாள்?
 
அ. ஜனவரி - 1, 1966
ஆ. ஜனவரி - 2, 1967
இ. ஜனவரி - 3, 1968
ஈ. ஜனவரி - 14, 1969.
 
23. அறிஞர் அண்ணா அவர்கள் தலைமையிலான அமைச்சரவைக்கு குழு சென்னை மாகாணத்திற்கு - தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்து தீர்மானம் நிறைவேற்றிய நாள்?
 
அ. ஜனவரி - 14, 1967
ஆ. பிப்ரவரி - 14, 1967
இ. மார்ச் - 14, 1967
ஈ. ஏப்ரல் - 14, 1967.
 
24. சென்னை மாகாணத்திற்கு - தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்த தீர்மானத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தன் மூலம் என்று முதல் சென்னை மாகாணத்தின் பெயரானது தமிழ்நாடு” என நடைமுறைக்கு வந்தது?
 
அ. ஜனவரி - 14, 1969
ஆ. பிப்ரவரி - 14, 1967
இ. மார்ச் - 14, 1967
ஈ. ஏப்ரல் - 14, 1967.
 
25. கீழ்க்கண்ட எந்த மாவட்டத்தை தலைநகராக கொண்டு அண்ணா மாவட்டம் உருவாக்கப்பட்டது?
 
அ. திருச்சி
ஆ. சேலம்
இ. காஞ்சிபுரம்
ஈ. திண்டுக்கல்.
 
26. கீழ்க்கண்டவர்களுள் அண்ணாதுரை அவர்களை நீதிக் கட்சியில் இணைத்தவர் யார்?
 
அ. இராஜாஜி
ஆ. ரங்கையா
இ. ஜஸ்டிஸ் பார்டி” தியாராயர்
ஈ. சண்டே அப்சர்வர்” பாலசுப்ரமணியம்.
 
27. பெரியாரின் விடுதலை மற்றும் குடியரசு பத்திரிக்கைகளில் துணை ஆசிரியராக பணியாற்றியதற்கு ஆரம்ப காலத்தில் எவ்வளவு ரூபாய் ஊதியமாக பெற்றார் அண்ணா?
 
அ. 100 ரூபாய்
ஆ. 90 ரூபாய்
இ. 80 ரூபாய்
ஈ. 60 ரூபாய
 
28. திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பொறுப்பை பெரியாருக்காக காலியாக வைத்த அண்ணாதுரை அவர்கள் அக்கட்சியின் எந்த பொறுப்பிலிருந்து செயல்பட்டார்?
 
அ. துணைத் தலைவர்
ஆ. பொதுச் செயலாளர்
இ. துணைப் பொதுச் செயலாளர்
ஈ. பொருளாளர்.
 
29. அறிஞர் அண்ணாதுரை அவர்கள் உயிர் மூச்சாக கொண்டிருந்த கொள்கை?
 
அ. இந்தியாவிற்கு சுதந்திரம்
ஆ. தனி திராவிட நாடு
இ. மேற்கண்ட இரண்டும்
ஈ. மேற்கண்ட எதுமில்லை.
 
30. அறிஞர் அண்ணாதுரை அவர்கள் முன்னாள் சென்னை மாகாண முதல்வர் இராஜாஜி கொண்டுவந்த எந்த திட்டத்தை கடுமையாக எதிர்த்தார்?
 
அ. அனைவருக்கும் கல்வி திட்டம்
ஆ. குலக் கல்வி திட்டம்
இ. ஒரு மொழிக் கல்வி திட்டம்
ஈ. மேற்கண்ட ஏதுமில்லை.
 
31. கீழ்க்கண்டவற்றுள் முதலமைச்சர் அண்ணா அவர்களால் விவசாயிகளுக்காக முன்னெடுக்கப்பட்ட முக்கிய திட்டம்?
 
அ. ஜமீன் ஒழிப்புச் சட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பட்டா வழங்கும் திட்டம்
ஆ. விவசாயிகளுக்கு பயிற்கடன் வழங்கும் திட்டம் 
இ. விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள்வழங்கும் திட்டம்
ஈ. மேற்கண்ட ஏதுமில்லை.
 
32. கீழ்க்கண்டவற்றுள் முதலமைச்சர் அண்ணா அவர்களால் நிலம் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட முக்கிய திட்டம்?
 
அ. விவசாயிகளுக்கு பயிற்கடன் வழங்கும் திட்டம்
ஆ. விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள்வழங்கும் திட்டம்
இ. நில உச்சவரம்பு சட்டத்தை அமல்படுத்த்துதல் திட்டம்
ஈ. மேற்கண்ட ஏதுமில்லை.
 
 
 
33. கீழ்க்கண்டவற்றுள் முதலமைச்சர் அண்ணா அவர்களால் தொழிற்சாலை மற்றும் ஆலை தொடர்பாக முன்னெடுத்த முக்கிய முயற்சி?
 
அ. விவசாயிகளுக்கு பயிற்கடன் வழங்கும் திட்டம்
ஆ. விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள்வழங்கும் திட்டம்
இ. நில உச்சவரம்பு சட்டத்தை அமல்படுத்தினார்
ஈ. நலிந்த ஆலைகளை மத்திய அரசு கையகம் செய்ய வலியுறுத்தினார்.
 
34. கீழ்க்கண்டவற்றுள் முதலமைச்சர் அண்ணா அவர்களால் தொழிற்துறை தொடர்பாக முன்னெடுத்த முக்கிய முயற்சி?
 
அ. விவசாயிகளுக்கு பயிற்கடன் வழங்கும் திட்டம்
ஆ. விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள்வழங்கும் திட்டம்
இ. நில உச்சவரம்பு சட்டத்தை அமல்படுத்தினார்
ஈ. மே - 1: தொழிலாளர் தினத்தை விடுமுறை தினமாக அறிவித்தார்.
 
35. எந்த ஆண்டு சென்னை செயின்ட் ஜியார்ஜ் கோட்டையில் இயங்கும்தமிழ்நாடு செக்ரடேரியட் அலுவலகத்தின் பெயரை தமிழில் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம்” என பெயர் மாற்றம் செய்தார் அண்ணா?
 
அ. 1966
ஆ. 1967
இ. 1968
ஈ. 1969.
 
36. தமிழ்நாட்டு மக்கள் தங்கள் பெயருக்கு முன்னாள் ஸ்ரீஸ்ரீமதி போன்றவற்றை பயன்படுத்துவத்தை மாற்றி திருதிருமதி பயன்படுத்துவதை மக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகம் செய்து தமிழில் மறுமலர்ச்;சி செய்த தமிழக முதல்வர் யார்?
 
அ. காமராசர்
ஆ. கருணாநிதி
இ. அண்ணாதுரை
ஈ. இராஜாஜி
 
37. இந்தியாவிலேயே முதன் முறையாக சுயமரியாதை திருமணங்களுக்காக சட்டம் ஒன்றை தமிழக முன்னாள் முதல்வர் அண்ணா அவர்கள் இயற்றிய நாள்?
 
அ. ஜனவரி 14, 1967
ஆ. ஏப்ரல் 14, 1968
இ. மார்ச் 23, 1968
ஈ. நவம்பர் 27, 1967.
 
38. தமிழக முன்னாள் முதல்வர் அண்ணா அவர்கள் அறிமுகம் செய்த சுயமரியாதை திருமண அங்கீகாரச் சட்டத்திற்கு இந்தியக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்த நாள்?
 
அ. ஜனவரி 14, 1967
ஆ. ஏப்ரல் 14, 1968
இ. மார்ச் 23, 1968
ஈ. ஜனவரி - 17, 1968.
 
39. சுயமரியாதை திருமண அங்கீகாரச் சட்டமானது மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்ட நாள்?
 
அ. ஜனவரி 14, 1967
ஆ. ஏப்ரல் 14, 1968
இ. மார்ச் 23, 1968
ஈ. ஜனவரி 20, 1968.
 
40. இந்தியாவிலே முதன் முறையாக மாநிய விலையில் அரிசி வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்த மாநிலம்?
 
அ. ஆந்திரா
ஆ. கர்நாடகா
இ. தமிழ்நாடு
ஈ. கேரளா.
 
 
41. அண்ணாதுரை அவர்கள் 1967-ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியில் கூறிய படி தனது ஆட்சியில் அறிமுகப்படுத்திய முக்கிய பொது விநியோகத் திட்டம்?
 
அ. 1 கிலோ இலவச அரிசி வழங்கும் திட்டம்
ஆ. 20 கிலோ இலவச அரிசி வழங்கும் திட்டம்
இ. ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கும் திட்டம்
ஈ. ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசி வழங்கும் திட்டம்
 
42. கூற்று - 1: தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அண்ணா அவர்கள் இந்திய அளவில் முன்னோடித் திட்டமானபொது விநியோகத் திட்டத்தின் கீழ் ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசி வழங்கும் திட்டத்தை துவக்கினார்.
 
கூற்று - 2: சில தவிர்க்க முடியாத காரணங்களால் ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசி வழங்கும் திட்டம் தமிழக அரசால் கைவிடப்பட்டது.
அ. கூற்று - 1 மட்டுமே சரி
ஆ. கூற்று - 2 மட்டுமே சரி
இ. கூற்று - 1 மற்றும் கூற்று - 2 இரண்;டுமே சரி
ஈ. கூற்று - 1 மற்றும் கூற்று - 2 இரண்;டுமே தவறு.
 
43. பேரறிஞர் அண்ணா அவர்கள் மறைந்த நாள்?
 
அ. டிசம்பர் - 03, 1969
ஆ. ஜனவரி - 03, 1969
இ. பிப்ரவரி - 03, 1969
ஈ. மார்ச் - 03, 1969.
 
44. அறிஞர் அண்ணா அவர்களின் இறுதி ஊர்வலத்தில் சுமார் ஒன்றரை கோடி மக்கள் கலந்துகொண்டதாக கின்னஸ் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்ட ஆண்டு?
 
அ. 1967
ஆ. 1968
இ. 1983
ஈ. 1985.
 
 
45. அறிஞர் அண்ணா அவர்களின் நினைவாக தமிழக அரசு 1985-ஆம் ஆண்டு முதல் வழங்கி வரும் விருது?
 
அ. அறிஞர் விருது
ஆ. பேரறிஞர் விருது
இ. காஞ்சி விருது
ஈ. அண்ணா விருது.
 
46. பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்ட ஆண்டு?
 
அ. 2006
ஆ. 2007
இ. 2008
ஈ. 2009.
 
47. அண்ணா அவர்களின் நினைவாக சென்னையில் கீழ்க்கண்ட எந்த சாலைக்கு அண்ணா சாலை” என பெயர் மாற்றம் செய்யப்பட்டது?
 
அ. மவுன்ட் சாலை
ஆ. பனகல் சாலை
இ. புரசைவாக்கம் சாலை
ஈ. தியாகராய நகர் சாலை.
 
48. இந்திய அரசானது அறிஞர் அண்ணா அவர்களின் நூற்றாண்டை சிறப்பிக்கும் விதமாக ஐந்து ரூபாய் நினைவு நாணயத்தை வெளியிட்ட நாள்?
 
அ. செப்டம்பர் - 15, 2009
ஆ. ஜனவரி - 14, 2009
இ. ஏப்ரல் - 14, 2009
ஈ. செப்டம்பர் - 17, 2009.
 
 
 
49. கீழ்க்கண்ட எந்த இதழானது தனது சிந்தனைசெயல்கலைகலாச்சாரம் மற்றும் உத்வேகத்தால் இந்தியாவை வடிவமைத்த 100 தலை சிறந்த நபர்களின்” பட்டியலில் அறிஞர் அண்ணாதுரை அவர்களை குறிப்பிட்டுள்ளது?
 
அ. இந்தியா டுடே
ஆ. டைம்ஸ் நவ்
இ. சி.என்.என்.
ஈ. தி ரைசிங் சன்.
 
50. பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவாக சென்னையில் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் திறக்கப்பட்ட நாள்?
 
அ. செப்டம்பர் - 15, 2010
ஆ. ஜனவரி - 14, 2009
இ. ஏப்ரல் - 14, 2009
ஈ. செப்டம்பர் - 17, 2009.
 
51. சென்னை மகாஜன சபை எந்த ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது?
 
அ. 1882
ஆ. 1883
இ. 1884
ஈ. 1885.
 
52. சென்னை மகாஜன சபை யாரால் தோற்றுவிக்கப்பட்டது?
 
அ. இராமசாமி முதலியார்
ஆ. அனந்த சாருலு
இ. இரங்கையா நாயுடு
ஈ. மேற்கண்ட அனைவரும்.
 

 
53. சென்னை மகாஜன சபையின் முதல் தலைவர்
 
அ. இராமசாமி முதலியார்
ஆ. அனந்த சாருலு
இ. இரங்கையா நாயுடு
ஈ. மேற்கண்ட அனைவரும்.
 
54. மகாத்மா காந்தி சென்னை மகாஜன சபையில் எந்த ஆண்டு உரையாற்றினார்?
 
அ. 1882, ஆகஸ்ட் - 15
ஆ. 1883, ஜனவரி - 26
இ. 1884, நவம்பர் - 6
ஈ. 1896, அக்டோபர் - 24.
 
55. சென்னை மகாஜன சபையின் பொன் விழா எந்த ஆண்டு கொண்டாடப்பட்டது?
 
அ. 1882
ஆ. 1883
இ. 1984
ஈ. 1934.
 
56. சென்னை மகாஜன சபையின் பொன் விழா கொண்டாட்டத்தின் போது யார் கலந்து கொண்டார்?
 
அ. மகாத்மா காந்தி
ஆ. ஜவஹர்லால் நேரு
இ. இராஜாஜி
ஈ. சத்தியமூர்த்தி.
 
57. செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் எங்கு பிறந்தார்?
 
அ. கடலூர்
ஆ. சிதம்பரம்
இ. ஒட்டப்பிடாரம்
ஈ. காஞ்சிபுரம்.
 
58. வ.உ.சி அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட கப்பல் நிறுவனத்தின் பெயர் என்ன?
 
அ. பிரித்தானிய கப்பல் போக்குவரத்து கழகம்
ஆ. தூத்துக்குடி கப்பல் போக்குவரத்து கழகம்
இ. சுதேசி நீராவி கப்பல் போக்குவரத்து கழகம்
ஈ. மேற்கண்ட ஏதுமில்லை.
 
59. வ.உ.சி அவர்கள் தூத்துக்குடிக்கும் எந்த நகரத்திற்கும் இடையே கப்பல் போக்குவரத்தை இயக்கினார்?
 
அ. சென்னை
ஆ. கொழும்பு
இ. கொச்சின்
ஈ. கொல்லம்.
60. செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் எந்த காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டார்?
 
அ. 1906 - கல்கத்தா
ஆ. 1907 - சூரத்
இ. 1908 - பம்பாய்
ஈ. மேற்கண்ட ஏதுமில்லை.
 
61. ‘மகாகவி” பாரதியார் எந்த பத்திரிக்கையின் உதவி ஆசிரியராக பணியாற்றினார்?
 
அ. ரிவோல்ட்
ஆ. காமன்வீல்
இ. சுதேசமித்ரன்
ஈ. இளம் இந்தியா.
 
62. ‘மகாகவி” பாரதியார் எந்த பத்திரிக்கையின் ஆசிரியராக பணியாற்றினார்?
 
அ. இந்தியா
ஆ. பால பாரதம்
இ. மேற்கண்ட இரண்டும்
ஈ. மேற்கண்ட ஏதுமில்லை.
 
63. பாரதியார்இந்திய தேசிய காங்கிரசின் எந்த மாநாட்டில் கலந்துகொண்டார்?
 
அ. 1906 - கல்கத்தா
ஆ. 1907 - சூரத்
இ. 1908 - பம்பாய்
ஈ. மேற்கண்ட ஏதுமில்லை.
 
64. காமராசரின் அரசியல் குரு யார்?
 
அ. மகாத்மா காந்தி
ஆ. ஜவஹர்லால் நேரு
இ. கோபால கிருஷ்ண கோகலே
ஈ. சத்தியமூர்த்தி.
 
65. பூண்டி நீர் தேக்கத்தை கட்டுவதற்கு ஏற்பாடு செய்தவர் யார்?
 
அ. மகாத்மா காந்தி
ஆ. ஜவஹர்லால் நேரு
இ. கோபால கிருஷ்ண கோகலே
ஈ. சத்தியமூர்த்தி.
 
66. இராஜாஜிமுதன் முதலில் எந்த இந்திய தேசிய காங்கிரசின் மாநாட்டில் கலந்துகொண்டார்?
 
அ. 1906 - கல்கத்தா
ஆ. 1907 - சூரத்
இ. 1908 - பம்பாய்
ஈ. மேற்கண்ட ஏதுமில்லை.
 
67. திருச்செந்தூர் ஆசிரமத்தை நிறுவியவர் யார்?
 
அ. மகாத்மா காந்தி
ஆ. இராஜாஜி
இ. கோபால கிருஷ்ண கோகலே
ஈ. சத்தியமூர்த்தி.
 
68. இராஜாஜி எந்த ஆண்டு சென்னை மாகாண முதலமைச்சராக பதவியேற்றார்?
 
அ. 1882
ஆ. 1883
இ. 1934
ஈ. 1937
 
69. தமிழகத்தில் குலக்கல்வி முறையை” அறிமுகப்படுத்திய முதலமைச்சர் யார்?
 
அ. மகாத்மா காந்தி
ஆ. இராஜாஜி
இ. கோபால கிருஷ்ண கோகலே
ஈ. சத்தியமூர்த்தி.
 
70. இராஜாஜிஇந்திய தேசிய காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி எந்த கட்சியை துவக்கினார்?
 
அ. இந்திய கம்யூனிஸ்டு கட்சி
ஆ. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி
இ. பார்வர்ட் பிளாக் கட்சி
ஈ. சுதந்திரக் கட்சி.
 
71. இளம் இந்தியா என்ற பத்திரிக்கையின் ஆசிரியர் யார்?
 
அ. மகாத்மா காந்தி
ஆ. இராஜாஜி
இ. கோபால கிருஷ்ண கோகலே
ஈ. சத்தியமூர்த்தி.
 
72. இராஜாஜிஇந்திய மக்களால் எவ்வாறு சிறப்புடன் அழைக்கப்படுகிறார்?
 
அ. மகாத்மா காந்தியின் தளபதி
ஆ. மூதறிஞர்
இ. இந்திய அரசியல் சாணக்கியர்
ஈ. மேற்கண்ட அனைத்தும்.
 
73. 1930-ஆம் ஆண்டுஉப்பு சத்தியாகிரகத்தின் போது காமராசர் எந்த சிறையில் அடைக்கப்பட்டார்?
 
அ. எரவாடா
ஆ. அலிப்பூர்
இ. அமராவதி
ஈ. பதேப்பூர்.
 
74. 1942-ஆம் ஆண்டுவெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது காமராசர் எந்த சிறையில் அடைக்கப்பட்டார்?
அ. எரவாடா
ஆ. அலிப்பூர்
இ. அமராவதி
ஈ. பதேப்பூர்.
 
75. ‘கர்மவீரர்” காமராசர் எத்தனை ஆண்டுகள் தமிழக முதல்வராக பதவியில் இருந்தார்?
 
அ. ஐந்து ஆண்டுகள்
ஆ. ஏழு ஆண்டுகள்
இ. ஒன்பது ஆண்டுகள்
ஈ. பதினொன்று ஆண்டுகள்.
 
76. கீழ்க்கண்டவற்றுள் திராவிடக் கட்சிகளின் முன்னோடியாக கருதப்படும் இயக்கம்?
 
அ. இந்திய தேசிய காங்கிரஸ்
ஆ. சுயராஜ்ஜிய கட்சி
இ. சுயமரியாதை இயக்கம்
ஈ. நீதிக் கட்சி.
 
77. சென்னைப் பல்கலைக் கழகத்தில் முதுநிலைப் படிப்பில் பிராமணர் அல்லாதவர்கள் யாரும் பயிலாமல் இருந்த நிலையை மாற்ற வழக்குரைஞர்கள் பி.சுப்ரமணியம் மற்றும் புருஷோத்தமன் நாயுடு ஆகியோரின் கூட்டு முயற்சியால் 1909-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இயக்கம்?
 
அ. சென்னை பிராமணர் அல்லாதோர் சங்கம்
ஆ. இந்திய தேசிய காங்கிரஸ்
இ. சுயராஜ்ஜிய கட்சி
ஈ. சுயமரியாதை இயக்கம்.
 
78. ‘சென்னை ஐக்கிய கழகம்” டாக்டர். நடேச முதலியார் அவர்களால் எந்த ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது?
 
அ. 1912
ஆ. 1914
இ. 1916
ஈ. 1918.
 
 
79. டாக்டர். நடேச முதலியார் அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட சென்னை ஐக்கிய கழகம்” பின்னாளில் எவ்வாறு அழைக்கப்பட்டது?
 
அ. சென்னை திராவிட சங்கம்
ஆ. இந்திய தேசிய காங்கிரஸ்
இ. சுயராஜ்ஜிய கட்சி
ஈ. சுயமரியாதை இயக்கம்.
 
80. தென்னிந்திய விடுதலைக் கழகம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு?
 
அ. 1916
ஆ. 1917
இ. 1918
ஈ. 1919.
 
81. டாக்டர். நடேச முதலியார்டாக்டர். டி. எம். நாயர்பி.தியாகராய செட்டியார்பரசுராம பாத்ரோ ஆகியோர் இணைந்து பிராமணர் அல்லாத மக்களின் நலனுக்காக உருவாக்கிய அமைப்பு?
 
அ. தென்னிந்திய மக்கள் சங்கம்
ஆ. இந்திய தேசிய காங்கிரஸ்
இ. சுயராஜ்ஜிய கட்சி
ஈ. சுயமரியாதை இயக்கம்.
 
82. 18-ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஏற்பட்ட பிரஞ்சுப் புரட்சிக்கு” பிறகு பிரான்சில் எந்த கட்சி ஆட்சிப் பொறுப்பை ஏற்று இருந்தது?
 
அ. ஜனநாயகக் கட்சி
ஆ. ராடிக்கல் குடியரசு கட்சி
இ. குடியரசுக் கட்சி
ஈ. பழமைவாத கட்சி.
 
 
 
 
83. பிரான்ஸ் நாட்டின் ராடிக்கல் குடியரசு கட்சியின் முக்கிய உறுப்பினரான ஜியார்ஜஸ் என்பவர் நடத்திய இதழ்?
 
அ. லா ஜஸ்டிஸ் (LA JUSTICE)
ஆ. லா ராடிக்கல் (LA RADICAL)
இ. லா ரிபப்ளிக் (LA REPUBLIC)
ஈ. லா பிரானஸ் (LA FRANCE)
 
84. பிரான்சின் லா ஜஸ்டிஸ்” (LA JUSTICE) என்ற இதழின் மீது இருந்த ஈர்ப்பால் “JUSTICE” என்ற இதழை சென்னை மாகாணத்தில் தொடங்கியவர் யார்?
 
அ. பி.தியாகராய செட்டியார்
ஆ. டி.எம்.நாயர்
இ. நடேச முதலியார்
ஈ. மாதவன்.
 
85. கீழ்க்கண்டவர்களில் தென்னிந்திய விடுதலைக் கழகத்தை தோற்றுவித்தவர்கள்?
 
அ. பி.தியாகராய செட்டியார்
ஆ. டி.எம்.நாயர்
இ. மேற்கண்ட இருவரும்
ஈ. மேற்கண்ட யாருமில்லை.
 
86. தென்னிந்திய விடுதலைக் கழகம் - நீதிக் கட்சியாக மாறிய ஆண்டு?
 
அ. 1917
ஆ. 1918
இ. 1919
ஈ. 1920.
 
87. நீதிக்கட்சியால் தமிழில் வெளியிடப்பட்ட முதல் பத்திரிக்கை?
அ. குடியரசு
ஆ. புரட்சி
இ. திராவிடன்
ஈ. சுதேசமித்ரன்.
 
88. நீதிக்கட்சியால் தெலுங்கில் வெளியிடப்பட்ட பத்திரிக்கை?
 
அ. மான விஜயம்
ஆ. தெலுங்கு விஜயம்
இ. ஆந்திர பிரகாசிகா
ஈ. திராவிடம்.
 
89. நீதிக்கட்சியால் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட பத்திரிக்கை?
 
அ. ஜஸ்டிஸ்
ஆ. ரிவோல்ட்
இ. ரிபப்ளிக்
ஈ. இண்டிபண்டன்ஸ்.
 
90. பி.தியாகராய செட்டியார் கல்விஅரசு வேலைகளில் பிராமணர் அல்லாதவர்களின் வாய்ப்புகள் பறிக்கப்படுவதை எதிர்த்து வெளியிட்ட பிரகடணம்?
 
அ. NON – BRAHMINS MANIFESTO
ஆ. MAGNA CARTA
இ. COPRA
ஈ. மேற்கண்ட ஏதுமில்லை.
 
91. 1917-ஆம் ஆண்டு பிராமணர் அல்லாதோர் நலனுக்காக கொண்டுவரப்பட்ட சட்ட முன்வடிவில் பிராமணர் அல்லாத மக்கள் படும் துன்பங்களை எடுத்துக் கூற இலண்டன் வரை சென்றவர் யார்?
 
அ. பி.தியாகராய செட்டியார்
ஆ. டி.எம்.நாயர்
இ. நடேச முதலியார்
ஈ. மாதவன்.
 
 
 
 
92. 1920-ஆம் ஆண்டு நடைப்பெற்ற சென்னை மாகாண பொதுத் தேர்தலில் மொத்தம் இருந்த 98 தொகுதிகளில் 63 தொகுதிளில் வெற்றியைப் பெற்று ஆட்சிப் பொறுப்பை ஏற்ற கட்சி எது?
 
அ. இந்திய தேசிய காங்கிரஸ்
ஆ. சுயராஜ்ஜிய கட்சி
இ. திராவிட முன்னேற்றக் கழகம்
ஈ. நீதிக்கட்சி.
 
93. 1920-ஆம் ஆண்டு நடைப்பெற்ற சென்னை மாகாண பொதுத்தேர்தலில் முதன் முறையாக வெற்றி பெற்று நீதிக்கட்சி ஆட்சி அமைத்த நாள்?
 
அ. 17 செப்டம்பர், 1920
ஆ. 17 அக்டோபர், 1920
இ. 17 நவம்பர், 1920
ஈ. 17 டிசம்பர், 1920
 
94. 1920-ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தின்முதலமைச்சராக நீதிக்கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
 
அ. பி.தியாகராய செட்டியார்
ஆ. சுப்புராயலு ரெட்டியார்
இ. டி.எம்.நாயர்
ஈ. மாதவன்.
 
95. 1923-ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தின்முதலமைச்சராக நீதிக்கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
 
அ. பி.தியாகராய செட்டியார்
ஆ. சுப்புராயலு ரெட்டியார்
இ. டி.எம்.நாயர்
ஈ. பனகல் ராஜா.
 
 
 
96. எந்த ஆண்டு நடைப்பெற்ற சென்னை மாகாண பொதுத் தேர்தலில் நீதிக் கட்சி தோல்வியுற்றது?
 
அ. 1920
ஆ.1921
இ. 1923
ஈ. 1926.
 
97. 1930-ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தின்முதலமைச்சராக நீதிக்கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
 
அ. பனகல் ராஜா
ஆ. சுப்புராயலு ரெட்டியார்
இ. டி.எம்.நாயர்
ஈ. பி.முனுசாமி நாயுடு.
 
98. 1934-ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தின்முதலமைச்சராக நீதிக்கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
 
அ. பனகல் ராஜா
ஆ. சுப்புராயலு ரெட்டியார்
இ. ராமகிருஷ்ண ரங்கா ராவ்
ஈ. பி.முனுசாமி நாயுடு.
 
99. சென்னை மாகாணத்தில் நீதிக் கட்சியின் ஆட்சி என்று வரை நீடித்தது?
 
அ. 01 ஏப்ரல், 1934
ஆ. 01 ஏப்ரல், 1935
இ. 01 ஏப்ரல், 1936
ஈ. 01 ஏப்ரல், 1937.
 
100. எந்த ஆண்டு நடைப்பெற்ற சென்னை மாகாண பொதுத் தேர்தலில் நீதிக் கட்சி மீண்டும் தோல்வியுற்றது?
 
அ. 1920
ஆ. 1923
இ. 1930
ஈ.  1937.

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY