25 + 25 - அடைமொழியால் குறிப்பிடப்படும் சான்றோர்கள்!!
1. உரைவித்தகர் என அழைக்கப்படுபவர்?
அ)ராஜப்பா
ஆ)வெங்கடாச்சலம் பிள்ளை
இ)வீரராசு முதலியார்
ஈ)பெரியவாச்சான் பிள்ளை ✔
2.
2. புதுக்கவிதையின் புரவலர்?
அ) ஈரோடு தமிழன்பன்
ஆ) ந. பிச்சை மூர்த்தி
இ) தருமுசிவராமு
ஈ) சி.சு.செல்லப்பா ✔
3.
3. தமிழ்நாட்டின் மாப்பசான்?
அ) அரசஞ்சண்முகனார்
ஆ) அனுத்தமா
இ) செய்குத் தம்பியார்
ஈ) ஜெயகாந்தன் ✔
4.
4.சிற்றம்பலக் கவிராயர் என அழைக்கப்படுபவர் யார்?
அ) சிதம்பர ரகுநாதன் ✔
ஆ) அரங்க சீனிவாசன்
இ) பாபநாசம் சிவன்
ஈ) வீர கவிராயர்
5.
5. பண்டிதமணி என்று அழைக்கப்படுபவர்?
அ) திரு.வி. கல்யாண சுந்தரனார்
ஆ) மு. கதிரேச செட்டியார் ✔
இ) ரா.பி.சேதுப்பிள்ளை
ஈ) வள்ளலார்
6.
6. தென்னிந்தியாவின் சீர்திருத்த தந்தை எனப்படுபவர்?
அ) திருவெண்காடர்
ஆ) தாதாசாகிப் பால்கே
இ) அயோத்திதாசர் ✔
ஈ) அண்ணாமலை செட்டியார்
7.
7. தமிழ்த்தாத்தா எனப்படுபவர்?
அ) திரு.வி.க
ஆ) உ.வே.சா ✔
இ) கவிமணி
ஈ) பாரதியார்
8.
8.பரம்பிற் கோமான் என்று அழைக்கப்படுபவர்?
அ) அதியமான்
ஆ) காரி
இ) பாரி ✔
ஈ) குமணன்
9.
9. கவி சக்கரவர்த்தி எனப்படுபவர்?
அ) கம்பர் ✔
ஆ) சேக்கிழார்
இ) கபிலர்
ஈ) திருவள்ளுவர்
10.
10. நாமக்கல் கவிஞர் எனப்படுபவர்?
அ) வெ.இராமலிங்கம் பிள்ளை ✔
ஆ) பாரதிதாசன்
இ) வள்ளலார்
ஈ) தேசிய விநாயகம் பிள்ளை
11.
11. சொல்லின் செல்வர் எனப்படுபவர்?
அ) அறிஞர் அண்ணா
ஆ) மு. வரதராசனார்
இ) ரா.பி.சேதுப்பிள்ளை ✔
ஈ) தேவநேயப் பாவாணர்
12.
12. சூடிக்கொடுத்த சுடர்க்கொடி எனப்படுபவர்?
அ) ஆண்டாள் ✔
ஆ) திலகவதியார்
இ) மங்கையர்க்கரசி
ஈ) அவ்வையார்
13.
13. தெய்வப்புலவர் எனப்படுபவர்?
அ) அகத்தியர்
ஆ) தொல்காப்பியர்
இ) பரிமேலழகர்
ஈ) திருவள்ளுவர் ✔
14.
14. கல்வியில் பெரியன் எனப்படுபவர்?
அ) கம்பர் ✔
ஆ) திருவள்ளுவர்
இ) இளங்கோவடிகள்
ஈ) சேக்கிழார்
15.
15. உத்தம சோழ பல்லவராயன் எனப்படுபவர் யார்?
அ) சுந்தரர்
ஆ) மாணிக்கவாசகர்
இ) அப்பர்
ஈ) சேக்கிழார் ✔
16.
16. செந்நாப்போதார் எனப்படுபவர்?
அ) திருவள்ளுவர் ✔
ஆ) கம்பர்
இ) சீத்தலை சாத்தனார்
ஈ) இளங்கோவடிகள்
17.
17. வேதம் தமிழ் செய்த மாறன் எனப் போற்றப்படும் நபர் யார்?
அ) தாயுமானவர்
ஆ) திருமங்கை ஆழ்வார்
இ) நம்மாழ்வார் ✔
ஈ) குமரகுருபரர்
18.
18. பாவலரேறு என்று அழைக்கப்படுபவர்?
அ) சீத்தலை சாத்தனார்
ஆ) பெருஞ்சித்திரனார் ✔
இ) தேவநேய பாவணர்
ஈ) சோமசுந்தர பாரதியார்
19.
19. சிந்துக்கு தந்தை எனப்படுபவர்?
அ) பாரதியார் ✔
ஆ) கவிமணி
இ) பாரதிதாசன்
ஈ) வாணிதாசன்
20.
20. அப்பர் எனப்படுபவர்?
அ) மாணிக்கவாசகர்
ஆ) திருநாவுக்கரசர் ✔
இ) திருஞானசம்பந்தர்
ஈ) சுந்தரர்
21.
21. வள்ளலார் எனப்படுபவர்?
அ) காந்தியடிகள்
ஆ) இராமலிங்க அடிகள் ✔
இ) இளங்கோவடிகள்
ஈ) மு.மேத்தா
22.
22. பன்மொழிப்புலவர் என்பவர் யார்?
அ) ராஜாஜி
ஆ) அழ. வள்ளியப்பா
இ) அறிஞர் அண்ணா
ஈ) அப்பாதுரை ✔
23.
23. பாவேந்தர் எனப்படுபவர்?
அ) பாரதியார்
ஆ) காளிதாசன்
இ) பாரதிதாசன் ✔
ஈ) வாணிதாசன்
24.
24. அவ்வைக்கு நெல்லிக்கனி கொடுத்தவன்?
அ) அதியமான் ✔
ஆ) வல்வில் ஓரி
இ) ராஜராஜன்
ஈ) பாரி
25.
25. முதற்பாவலர் எனப்படுபவர்?
அ) ஒட்டக்கூத்தர்
ஆ) திருவள்ளுவர் ✔
இ) நல்லாதனார்
ஈ) மூன்றுறை அரையனார்
26.
26. சிலம்பு செல்வர் எனப்படுபவர் யார்?
அ) ராஜாஜி
ஆ) கல்கி
இ) தாயுமானவர்
ஈ) ம.பொ.சிவஞானம் ✔
27.
27. கவிமணி எனப்படுபவர்?
அ) பாரதியார்
ஆ) தேசிக விநாயகம் பிள்ளை ✔
இ) பாரதிதாசன்
ஈ) நாமக்கல் கவிஞர்
28.
28. புரட்சிக்கவிஞர் எனப்படுபவர்?
அ) பாரதியார்
ஆ) காளிதாசன்
இ) இளங்கோவடிகள்
ஈ) பாரதிதாசன் ✔
29.
29. கிறிஸ்துவ கம்பர் எனப்படுபவர்?
அ) எச்.ஏ.கிருஷ்ணபிள்ளை ✔
ஆ) கண்ணதாசன்
இ) வாணிதாசன்
ஈ) வீரமாமுனிவர்
30.
30. நம்பியாரூரன் எனப்படுபவர்?
அ) ஞானசம்பந்தர்
ஆ) திருநாவுக்கரசர்
இ) மாணிக்கவாசகர்
ஈ) சுந்தரர் ✔
31.
31. மகாகவி எனப்படுபவர்?
அ) கண்ணதாசன்
ஆ) வாணிதாசன்
இ) பாரதியார் ✔
ஈ) பாரதிதாசன்
32.
32. செக்கிழுத்த செம்மல் எனப்படுபவர்?
அ) கண்ணதாசன்
ஆ) பாரதியார்
இ) அறிஞர் அண்ணா
ஈ) வ.உ.சி சிதம்பரம் பிள்ளை ✔
33.
33. நரை முடித்துச் சொல்லால் முறை செய்த அரசர் யார்?
அ) குலோத்துங்கச் சோழன்
ஆ) மனுநீதிச் சோழன்
இ) ராஜராஜ சோழன்
ஈ) கரிகாலச்சோழன் ✔
34.
34. மாதானுபங்கி எனப்படுபவர்?
அ) சீத்தலை சாத்தனார்
ஆ) கம்பர்
இ) இளங்கோவடிகள்
ஈ) திருவள்ளுவர் ✔
35.
35. மௌனகுரு யார் மரபில் வந்தவர் ?
அ) திருமூலர் ✔
ஆ) திருநாவுக்கரசர்
இ) சுந்தரர்
ஈ) தாயுமானவர்
36. வான்புகழ் கொண்ட பெருந்தகையார் எனப்படுபவர்?
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) சேக்கிழார்
ஈ) திருவள்ளுவர் ✔
37.
37. இயற்கை தத்துவ அறிஞர் எனப்படுவர்?
அ) பாரதிதாசன்
ஆ) பாரதியார்
இ) தாகூர் ✔
ஈ) ஸ்ரீ அரவிந்தர்
38.
38. 'புலனழுக்கற்ற அந்தணாளன்' என்று புகழப்பட்டவர் யார்?
அ) அவ்வையார்
ஆ) கம்பர்
இ) பரணர்
ஈ) கபிலர் ✔
39.
39. குறுமுனி என்னும் சிறப்புப் பெயர் பெற்றவர் யார்?
அ) புத்தர்
ஆ) தொல்காப்பியர்
இ) திருமூலர்
ஈ) அகத்தியர் ✔
40.
40. முத்தமிழ் காவலர் எனப்படுபவர்?
அ) கண்ணதாசன்
ஆ) அவ்வையார்
இ) வேதநாயகம் பிள்ளை
ஈ) கி.ஆ.பெ.விசுவநாதம் ✔
41.
41. வரலாற்றுக் குறிப்புகளை பாடலினுள் பொதித்து வைத்து பாடுவதில் வல்லவர் யார்?
அ) கம்பர்
ஆ) கபிலர்
இ) பரணர் ✔
ஈ) அவ்வையார்
42.
42. உவமைக்கவிஞர் எனப்படுபவர்?
அ) திரு.வி.க
ஆ) பாரதிதாசன்
இ) பாரதியார்
ஈ) சுரதா ✔
43.
43. கான மஞ்சைக்கு கலிங்கம் நல்கிய புகழுக்குரியவன் யார்?
அ) அதியமான்
ஆ) பேகன் ✔
இ) பாரி
ஈ) வல்வில் ஓரி
44.
44. பசித்திரு தனித்திரு விழித்திரு என்னும் தாரக மந்திரத்தை முதன் முதலில் மக்களுக்கு போதித்தவர் யார்?
அ) ராமலிங்க அடிகள் ✔
ஆ) பாரதியார்
இ) கண்ணதாசன்
ஈ) கம்பர்
45.
45. தொண்டர்சீர் பரவுவார் எனப்படுபவர்?
அ) கம்பர்
ஆ) சேக்கிழார் ✔
இ) திருநாவுக்கரசர்
ஈ) திருவள்ளுவர்
46.
46. 'மொழிஞாயிறு' எனப்படுபவர்?
அ) பாரதிதாசன்
ஆ) திரு.வி.கல்யாண சுந்தரனார்
இ) தேவநேயப் பாவாணர் ✔
ஈ) மறைமலை அடிகள்
47.
47. 'தம்பிரான் தோழர்' எனப்படுபவர்?
அ) சுந்தரர் ✔
ஆ) ராமானுஜர்
இ) அப்பர்
ஈ) மாணிக்கவாசகர்
48.
48. குழந்தைக் கவிஞர் எனப்படுவர்?
அ) வைரமுத்து
ஆ) கண்ணதாசன்
இ) தமிழண்ணல்
ஈ) அழ.வள்ளியப்பா ✔
49.
49. 'சொல்லின் செல்வன்' என்று அழைக்கப்படுபவர்?
அ) அங்கதன்
ஆ) சுக்ரீவன்
இ) வாலி
ஈ) அனுமன் ✔
50.
50. தமிழ்தென்றல் எனப்படுபவர்?
அ) நாமக்கல் கவிஞர்
ஆ) கவிமணி
இ) திரு.வி.க ✔
ஈ) உ.வே.சாமிநாதன்
Leave Comments
Post a Comment