CURRENT AFFAIRS
2021 December CA important notes with pdf!!
முக்கிய தினங்கள்
வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினம்
மகாத்மா காந்தி தென் ஆப்பிரிக்காவில் இருந்து 1915 - ஆம் ஆண்டு ஜனவரி 9 - ஆம் தேதி தாயகம் திரும்பினார் . அந்தச் சம்பவத்தின் நினைவாக , இந்தியாவின் வளர்ச்சிக்கு வெளிநாடுவாழ் இந்திய சமூகத்தினர் ஆற்றி வரும் பங்களிப்பைக் குறிப்பிடும் வகையில் ஆண்டுதோறும் ஜனவரி 9 - ஆம் தேதி வெளிநாடுவாழ் இந்தியர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது .
பாதுகாப்பு
தேசிய பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதம் ஆழ்கடல் சோதனை ஓட்டத்தில் ஐஎன்எஸ் விக்ராந்த் * உள்நாட்டிலேயே கட்டப்பட்ட முதல் விமானம் தாங்கிப் போர்க் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் மீண்டும் ஆழ்கடல் சோதனைக்கு உள்படுத்தப்பட்டது .
' ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கிக் கப்பலானது ரூ .23,000 கோடி செலவில் கொச்சி கப்பல்கட்டும் தளத்தில் கட்டப்பட்டது . இதன் மூலமாக விமானம் தாங்கிக் கப்பலை சொந்தமாகக் கட்டும் திறன் கொண்ட வெகுசில நாடுகளுடன் இந்தியாவும் இணைந்தது .
மிக் -29 கே போர் விமானங்கள் , கமோவ் -31 ஹெலிகாப்டர்கள் , எம்ஹெச் -60 ஆர் ஹெலிகாப்டர்கள் ஆகியவற்றை ஐஎன்ஸ் விக்ராந்த் கப்பலில் இருந்து இயக்க முடியும் . அதிகபட்சமாக சுமார் 28 நாட்வேகத்தில் கப்பலை இயக்க முடியும்.
ஐ.என்.எஸ் விக்ராந்த் இந்தியாவின் முதலாவது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விமானந் தாங்கிக் கப்பலான ஐ.என்.எஸ் விக்ராந்த் தனது முதலாவது கடல்பயணச் சோதனையை மேற்கொண்டது .
இந்தியாவினுள்ளேயே இராணுவ உபகரணங்களை உற்பத்தி செய்வதனை இது ஊக்குவிக்கிறது .
கடற்படையானது இக்கப்பலைப் படையில் இணைத்து அதன் பின்பு விமானச் சோதனைகளை மேற்கொள்ள உள்ளது .
விமானச் சோதனையின் போது ரஷ்ய நாட்டுத் தயாரிப்பான MiG 29K போர் விமானங்களின் ஏற்ற இறக்கச் சோதனைகள் மேற்கொள்ளப் படும் .
ஐ.என்.எஸ் விக்ராந்த் கப்பலானது 44000 டன் எடை கொண்ட விமானந் தாங்கிக் கப்பலாகும் .
இது கேரளாவின் கொச்சியில் அமைந்துள்ள அரசுக்குச் சொந்தமான கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் விளையாட்டு கட்டமைக்கப்பட்டது .
போபண்ணா / ராம்குமார் ஜோடி சாம்பியன்
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற அடிலெய்ட் டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா / ராம்குமார் ராமநாதன் இணை சாம்பியன் ஆகி அசத்தியுள்ளது .
வாகை சூடினார் மான்ஃபில்ஸ்
இப்போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் , பிரான்ஸின் கேல் மான்ஃபில்ஸ் சாம்பியன் ஆனார் .
பர்ட்டிக்கு இரு கோப்பை
அடிலெய்ட் இன்டர்னேஷனல் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பர்ட்டி கோப்பை வென்றார் .
ஏடிபி கோப்பை வென்றது கனடா
ஏடிபி கோப்பை ஆடவர் அணிகள் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றில் கனடா 2–0 என்ற கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி சாம்பியன் ஆனது . கனடா இப்போட்டியில் கோப்பை வென்றது இது முதல் முறையாகும் . இறுதிச்சுற்றின் இரு ஆட்டங்களுமே ஒற்றையர் பிரிவில் நடைபெற்றது . இதில் கனடாவின் ஃபெலிக்ஸ் ஆகர் அலியாசிமே 7-6 ( 7/3 ) , 6-3 என்ற செட்களில் ஸ்பெயினின் ராபர்டோ பௌதிஸ்டா அகட்டை வென்றார் . மற்றொரு ஆட்டத்தில் கனடாவின் டெனிஸ் ஷபோவெலாவ் 6-4 , 6-3 என்ற நேர் செட்களில் பாப்லோ கரீனோ பஸ்டாவை வீழ்த்தினார் .
பொருளாதாரம்
இந்தியப் பொருளாதாரத்தின் தற்போதைய போக்குகள் ஜன் தன் வங்கிக் கணக்கில் ரூ .150 லட்சம் கோடி மத்திய நிதியமைச்சகம் தகவல் அனைவரும் வங்கிக் கணக்கை தொடங்கும் வகையில் , மத்திய அரசால் கடந்த ஏழரை ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட ஜன் தன் யோஜனா வங்கிக் கணக்கில் இதுவரை ரூ .150 லட்சம் கோடிக்கும் அதிகமாக செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது .
பிரதம மந்திரி ஜன் தன் யோஜனா திட்டம் ( பிஎம்ஜேடிஒய் ) தொடங்கப்பட்டு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் 7 ஆண்டுகள் நிறைவடைந்தன . இத்திட்டம் பிரதமர் மோடியால் கடந்த 2014 - ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 - ஆம் தேதி சுதந்திர தின விழா உரையின்போது அறிவிக்கப்பட்டது .
கடந்த ஆண்டு டிசம்பர் 31 - ஆம் தேதி வரையிலான நிலவரப்படி , இதுவரை 44.23 கோடி ஜன் தன் யோஜனா வங்கிக்கணக்குகளில் அக்கணக்குகளை வைத்திருப்பவர்களால் ரூ .1,50939,36 கோடி செலுத்தப்பட்டுள்ளது . இத்திட்டத்தின்கீழ் 34.9 கோடி வங்கிக் கணக்குகள் பொதுத் துறை வங்கிகளிலும் , 8.05 கோடிகணக்குகள் பிராந்திய ஊரக வங்கிகளிலும் , மீதமுள்ள 128 கோடி கணக்குகள் தனியார் துறை வங்கிகளிலும் தொடங்கப்பட்டுள்ளன .
மேலும் 31.28 கோடி ஜன் தன் யோஜனா திட்டப் பயனாளிகளுக்கு நபேடெபிட் அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன .
ஜன் தன் யோஜனா திட்டம்
ஜன் தன் யோஜனா ' திட்டத்தில் வங்கிக் கணக்கு தொடங்குவோர் குறைந்தபட்ச இருப்பைப் பராமரிக்கத் தேவையில்லை , மேலும் வங்கிக் கணக்கு தொடங்குவோருக்கு ஒரு லட்சம் ரூபாய்வரை விபத்துக் காப்பீடு வழங்கப்படுகிறது . இந்தக் கணக்கைத் தொடங்கி , 6 மாத காலம் உரியப் பரிவர்த்தனைகளை செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 5,000 ரூபாய் ஓவர் ட்ராப்ட் வசதி அளிக்கப்படுகிறது . இந்தத் திட்டத்தின் கீழ் வங்கிக்கணக்கு வைத்திருப்பவர்கள் . ஓய்வூதியம் மற்றும் மற்ற காப்பீடு சேவைகளை மிகச் சுலபமாக அணுகலாம் .
ஜன் தன் திட்டம் அல்லது
பிரதமர் மக்கள் நிதி திட்டம் ( Pradhan Mantri Jan Dhan Yojana ) வீட்டுக்கு ஒரு வங்கிக் கணக்கு இருக்கும் வகையில் புதிய திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி 28 ஆகஸ்டு 2014 புதுதில்லியில் தொடங்கி வைத்தார் . குறைந்தபட்சம் ஜூன் 30 , 2024 வரை ஜிஎஸ்டி இழப்பீடு தொடர வேண்டும் என்று மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது .
இந்திய ரிசர்வ் வங்கியின் கடன் தரவின் படி , ஸ்டேட் டெவலப்மென்ட் லோன்ஸ் எனப்படும் பத்திரங்களை ஏலம் விடுவதன் மூலம் 2021-22 நிதியாண்டின் Q4 இல் ( ஜனவரி மார்ச் ) 325,800 கோடி கடன் வாங்கப்போவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது .
மொத்த செலவினம் மொத்த வருவாயை விட அதிகமாகும் போது ஏற்படும் நிதிப் பற்றாக்குறைக்கு நிதியளிப்பதற்காக மாநிலங்களுக்கு கடன் பெறுவதற்கான முக்கிய ஆதாரமாக மாநில வளர்ச்சிக் கடன்கள் உள்ளன .
15 வது நிதிக் குழுவின் பரிந்துரைகளை ஏற்று , 2021-22 ஆம் ஆண்டிற்கான ஜிஎஸ்டிபியில் 4 % வரை கடன் வாங்குவதற்கு மத்திய அரசு மாநிலங்களுக்கு அனுமதி அளித்துள்ளது.
2021 CA PDF Download Here
Previous article
Next article
Leave Comments
Post a Comment