Ads Right Header

வினாக்கள் - ஒன்பதாம் வகுப்பு தமிழ் இயல் 1.


ஒன்பதாம் வகுப்பு தமிழ் இயல் - 1 

வினாக்கள் www.tnkural.com

1 ) தமிழின் இனிமை , இலக்கிய வளம் , பாச்சிறப்பு , சுவை , அழகு , திறம் , தகுதி ஆகியன எவ்விலக்கியத்தில் விரவியுள்ளன . 
A ) பெரியபுராணம் 
B ) திருக்குறள் 
C ) அகநானூறு 
D ) தமிழ்விடுதூது 

2 ) " காதொளிரும் குண்டலமும் கைக்கு வளையாபதியும் கருணை மார்பின் மீதொளிர் சிந்தாமணியும் மெல்லிடையில் மேகலையும் " - என்னும் | பரியின் ஆசிரியர் யார் ? 
A ) இளங்கோவடிகள் 
B ) பாரதியார் 
C ) சத்திமுத்தப் புலவர் 
D ) கவியோகி சுத்தானந்த பாரதியார் 

3 ) " தமிழ் விடு தூது " - என்னும் நூலை 
உவேசா பதிப்பித்த ஆண்டு?
A ) 1925 
B ) 1910 
C ) 1920 
D ) 1930 

4 ) பொருத்துக 
1)browser - { 1 } செதுக்கி 
2)crop - ( 2 ) உலவி 
3)cursor - ( 3 ) ஏவி 
4)server - (4) வையக விரிவு வலை வழங்கி A ) 1-2,2-3,3-1,4-4  
B ) 1-2,2-4,3-3,4-1 
C ) 1-2,2-3,3-4,4-1 
D ) 1-2,2-1,3-3,4-4  

5 ) தமிழ் விடு தூது எத்தனை கண்ணிகளைக் கொண்டது ? 
A ) 268 
B ) 278 
C ) 288 
D ) 258

6 ) தவறாக பொருந்தியுள்ளது எது ? 
A ) அரைக்காணி 1/160 
B ) அரைக்காணி முந்திரி -3 / 320 
C ) காணி -1 / 80 
D ) கால் வீசம் -1/64 

7 ) சரியாக பொருந்தியுள்ளது எது ? 
A ) ஒரு மா - 1/10 
B ) அரை மா -2/20 
C ) அரை வீசம் -2/40 
D ) முக்காணி- 3/80 

8 ) கீழ்கண்டவற்றில் தவறானது எது ? 
A ) கிரேக்க மொழியின் தொன்மையான காப்பியமான இலியாத்தில் பாய்யியோனா எனக் குறிப்பிடப்பட்டுள்ளது . 
B ) எரிஸ் கடவுளுக்கு பாடப்படுவது " பா " என கிரேக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது . C ) " பா " வகைகளில் ஒன்று வெண்பா . 
D ) வெண்பாவின் ஓசை செப்பலோசை 

9 ) 

10 ) இலியாத் காப்பியம் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தது ? 
A ) கி.பி எட்டாம் நூற்றாண்டு 
B ) கி.மு எட்டாம் நூற்றாண்டு 
C ) கி.பி ஏழாம் நூற்றாண்டு 
D ) கி.பி ஐந்தாம் நூற்றாண்டு 

11 ) பொருத்துக : 
1 ) 1/8 ( 1 ) அரைக்கால் 
2 ) 3/16 - ( 2 ) மூன்று 
3 ) 3/20 - ( 3 ) நாலுமா 
4 ) 1/5 -  ( 4 ) மூன்று வீசம் 
A ) 1-2,2-4,3-2,4-3   
B ) 1-1,2-2,3-3,4-4.   
C ) 1-1,2-4,3-3,4-2 
D ) 1-2,2-1,3-4,4-3

12 ) கீழ்க்கண்டவற்றில் 
காரணவினை எது ? 
A ) பந்து உருண்டது 
B ) பந்தை உருட்டினான் 
C ) உருட்ட வைத்தான் 
D ) பட்டம் பறந்தது 

13 ) தவறாக பொருந்தியுள்ளது எது ? 
A ) நட - ஒரு செல் தொடர் 
B ) நண்பா கேள்- விளித்தொடர் 
C ) பாடும் குயில் - குறிப்பு பெயரெச்சத்தொடர் 
D ) உண்ணச் சென்றான் - தெரிநிலை வினையெச்சத் தொடர் 

14 ) கீழ்க்கண்டவற்றுள் வினைமுற்றுத்தொடர் எது ? 
A ) மன்னன் வந்தான் 
B ) அப்பா சொன்னார் 
C ) தோசை வைக்கப்பட்டது 
D ) வந்தான் மன்னன் 

15 ) கீழ்க்கண்டவற்றில் தன்வினை அல்லாதது எது ? 
A ) நட 
B ) அடங்கு 
C ) திருந்தினான் 
D ) காட்டு 

16 ) கீழ்க்கண்டவற்றில் தன்வினைத் தொடர் எது ? 
A ) ஆட்டினான் 
B ) செய்வித்தான் 
C ) செய்தான் 
D ) ஆட்டு 

17 ) ' ஒலியன் ' என்பதை குறிக்கக் கூடிய சொல் எது ? 
A ) lexicon 
B ) morpheme 
C ) phoneme 
D ) phonme 

18 ) உலகத் தாய்மொழி நாள் ? 
A ) மார்ச் 21 
B ) பிப்ரவரி 15 
C ) பிப்ரவரி 20 
D ) பிப்ரவரி 21

19 ) " கால் முளைத்த கதைகள் " - என்னும் நூலின் ஆசிரியர் யார் ? 
A ) கண்ணதாசன் 
B ) தாராபாரதி 
C ) ராதாகிருஷ்ணன் 
D ) எஸ்.ராமகிருஷ்ணன் 

20 ) இந்திய நாடு மொழிகளின் காட்சிசாலை ஆக திகழ்கிறது என்று கூறியவர் யார் ? 
A ) அரங்கநாதன் 
B ) ஜான் ஸ்மித் 
c ) எஸ்.ராமகிருஷ்ணன் 
D ) ச . அகத்தியலிங்கம் 

21 ) திராவிடம் என்ற சொல்லை முதன் முதலில் குறிப்பிட்டவர் யார் ? 
A ) கால்டுவெல் 
B ) குமரிலபட்டர் 
C ) ஈராஸ் பாதிரியார் 
D ) வில்லியம் ஜோன்ஸ் 

22 ) புகுவான்
A ) எதிர்மறை இடைநிலை
B ) எதிர்கால இடைநிலை
C ) இறந்தகால இடைநிலை
D ) நிகழ்கால இடைநிலை

23 ) திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூலை கால்டுவெல் வெளியிட்ட ஆண்டு ? 
A ) 1850 
B ) 1856 
C ) 1876 
D ) 1854 

24 ) திராவிட மொழி குடும்பம் மொழிகள் பரவிய நில அடிப்படையில் எத்தனை வகையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது ? 
A ) 2 
B ) 3 
C ) 4 
D ) 5

25 ) கீழ்க்கண்டவற்றில் தென் திராவிட மொழி எது ? 
A ) குரூக் 
B ) மால்தோ 
C ) பிராகுய் 
D ) கோத்தா 

26 ) " தமிழ் வடமொழியின் மகளன்று அது தனிக் குடும்பத்திற்கு உரிய மொழி சமஸ்கிருதக் கலப்பின்றி அது தனித்தியங்கும் ஆற்றல் பெற்ற மொழி , தமிழுக்கும் இந்தியாவின் பிற மொழிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் -என கூறியவர் யார் ? 
A ) ஈராஸ் பாதிரியார் 
B ) கால்டுவெல் 
C ) குமரிலபட்டர் 
D ) அகத்தியலிங்கம் 

27 ) தவறாக பொருந்தியுள்ளது எது ? 
A ) கண் -தமிழ் 
B ) கண்ணு- கன்னடம் 
C ) கன்னு -குடகு 
D ) கெண் - குரூக் 

28 ) கீழ்க்கண்டவற்றில் சரியாக பொருந்தியுள்ளது எது ? 
A ) மூணு - தெலுங்கு 
B ) மூடு மலையாளம் 
C ) மூஜீ - துளு 
D ) மூரு - தோடா 

29 ) " இந்திய இலக்கண கொள்கைகளின் பின்னணியில் தமிழ் இலக்கணம் " -என்ற நூலின் ஆசிரியர் யார்?
A ) மு.வரதராசனார் 
B ) செ.வை .சண்முகம் 
C ) திரு.வி.க 
D ) எஸ் . ராமகிருஷ்ணன் 

30 பொருத்துக . 
1 ) ஒன்று- ( 1 ) தெலுங்கு 
2 ) ஒண்ணு - ( 2 ) தமிழ் 
3 ) ஒகடி- ( 3 ) மலையாளம் 
4 ) ஒத்து- ( 4 ) துளு 
5 ) ஒஞ்சி- ( 5 ) கன்னடம் 
A ) 1-2,2-5,3-4,4-1,5-3 
B ) 1-2,2-1,3-3,4-4,5-5 
C ) 1-2,2-3,3-5,4-1,5-4
D ) 1-2,2-3,3-1,4-5,5-4

31 ) " லீலாதிலகம் " எம்மொழியின் இலக்கணநூல் ? 
A ) கன்னடம் 
B ) துளு 
C ) மலையாளம் 
D ) தெலுங்கு 

32 ) " கவிராசமார்க்கம் " - என்னும் நூல் இயற்றப்பட்ட காலம் ? 
A ) கி.பி 9 - ம் நூற்றாண்டு 
B ) கி.பி 15 - ம்நூற்றாண்டு 
C ) கி.மு 6 - ம்நூற்றாண்டு 
D ) கி.பி 7 - ம்நூற்றாண்டு 

33 ) " ஒரு பூவின் மலர்ச்சியையும் ஒரு குழந்தையின் புன்னகையையும் புரிந்துகொள்ள அகராதிகள் தேவைப்படுவதில்லை பாடலும் அப்படித்தான் " என்று கூறியவர் யார் ? 
A ) முடியரசன் 
B ) ஈரோடு தமிழன்பன் 
C ) பாரதியார் 
D ) பாரதிதாசன் 

34 ) " யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் " -என்று பாடியவர் யார் ? 
A ) பாரதியார் 
B ) பாரதிதாசன் 
C ) ஈரோடு தமிழன்பன் 
D ) முடியரசன் 

35 ) " வணக்கம் வள்ளுவ " -என்னும் கவிதை நூலுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்ட ஆண்டு ? 
A ) 2002 
B ) 2004
C ) 2006  
D ) 2008

36 ) ' ஏந்தி ' என்பதன் 
இலக்கணக் குறிப்பு யாது ? 
A ) முற்றுமை  
B ) வினையெச்சம் 
C ) வேற்றுமை
D ) குறிப்புப் பெயரெச்சம் 

37 ) கீழ்க்கண்டவற்றில் தமிழை ஆட்சி மொழியாகக் கொண்ட நாடுகள் எவை ? 
1 ) மொரிஷியஸ் 
2 ) இந்தியா 
3 ) இலங்கை 
4 ) சிங்கப்பூர் 
A ) 1,2,3  
B ) 2,4 
C ) 1,3
D ) 3,4

38 ) கீழ்கண்டவற்றில் உருவகம் எது ? 
A ) தெள்ளமுது 
B ) முத்திக்கனி 
C ) குற்றமில்லா 
D ) சிந்தாமணி 

39 ) " தமிழ் விடு தூது " என்னும் நூலின் ஆசிரியர் யார் ? 
A ) நல்லத்துவனார் 
B ) பேயனார் 
C ) நக்கீரர் 
D ) ஆசிரியர் பெயர் தெரியவில்லை 

40 ) மனிதரால் உண்டாகக்கப்பட்ட வண்ணங்கள் எத்தனை என 
தமிழ்விடு தூது கூறுகிறது?
A ) 7 
B ) 5 
C ) 8 
D ) 10 

41 ) ' வளர்ப்பாய்'- என்பதை பகுபத உறுப்பிலக்கணம் படி பிரித்து எழுதுக ? 
A ) வள + ர் + ப் + ஆய் 
B ) வளர் + ப் + ப் + ஆய் 
C ) வளர் + ப் + ஆய் 
D ) வளர் + ப் + ஆ + ய் 

42 ) " காலம் பிறக்கும் முன் பிறந்தது தமிழிழே ! எந்தக் காலமும் நிலையாய் இருப்பதும் தமிழே என்று பாடியவர் யார் ? A ) பாரதிதாசன் 
B ) மூ.வ 
C ) பாரதியார் 
D ) ஈரோடு தமிழன்பன் 

43 ) " லீலாதிலகம் " ” என்னும் நூல் இயற்றப்பட்ட காலம் என்ன ? 
A ) கி.பி 10- ம் நூற்றாண்டு 
B ) கி.பி 15 - ம் நூற்றாண்டு 
C ) கி.பி 7 - ம் நூற்றாண்டு 
D ) கி.பி 12- ம் நூற்றாண்டு 

44 ) " சந்து இலக்கியம் " -என்று அழைக்கப்படுவது எது ? 
A ) பள்ளு 
B ) தூது 
C ) அந்தாதி 
D ) தனிப்பாடல் திரட்டு

45 ) 1/16 -என்ற எண்ணளவின் பெயர் ? 
A ) மாகாணி 
B ) ஒரு மா 
C ) முக்காணி 
D ) இருமா 

46 ) ஆங்கிலச் சொல்லான " நேவி " - என்பது எம்மொழிச் சொல்லிலிருந்து தோன்றியது ? 
A ) கிரேக்கம் 
B ) தமிழ் 
C ) இலத்தீன் 
D ) பிரெஞ்சு 

47 ) கூற்று ( 1 ) : - செய்பவரை முதன்மைப்படுத்தும்வினை செய்வினை கூற்று ( 2 ) : - செயப்படுபொருளை முதன்மைப்படுத்தும் வினை 
செயப்பாட்டு வினை.
A ) கூற்று 1,2 தவறு 
B ) கூற்று 1,2 சரி 
C ) கூற்று 1 சரி 2 தவறு 
D ) கூற்று 1 தவறு 2 சரி 

48 ) மொழிபெயர்ப்பும் ஒலிபெயர்ப்பும் " - என்னும் நூலின் ஆசிரியர் யார் ? 
A ) ராபர்ட் கால்டுவெல் 
B ) என்.சொக்கன் 
C ) மணவை முஸ்தபா 
D ) மு.வ 

49 ) தமிழ்விடு தூது ........ என்னும் இலக்கிய வகையைச் சேர்ந்தது ? 
A ) தொடர்நிலைச் செய்யுள் 
B ) புதுக்கவிதை 
C ) சிற்றிலக்கியம் 
D ) தனிப்பாடல் 

50 ) " பந்து உருண்டது " என்பது .........
A ) பிறவினை
B ) தன் வினை 
C ) காரண வினை 
D ) துணை வினை 












Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY