TNUSRB தேர்வில் வெற்றி பெற தேவையான குறிப்புகள்!!!
நெருக்கடி நிலைப் பிரகடனத்தின் விளைவுகள்
* ஷரத்து 352 - ன்படி செய்யப்பட்ட நெருக்கடி நிலை பிரகடனத்தின்போது
1.மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட அதிகாரங்கள் சம்மந்தமாகவும் பாராளுமன்றம் சட்டமியற்றலாம் .
2.மத்திய அரசு மற்றும் மாநில அரசின் ஆட்சிக்குழு எவ்வாறு செயல்பட வேண்டும் என்று விதிமுறைகளை விதிக்கலாம் .
3.மத்திய மாநில அரசுகளுக்கிடையே வருமானப் பங்கீடு குறித்து மாறுதல் செய்ய குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உள்ளது .
4.பொதுமக்கள் தங்களின் அடிப்படை உரிமைகளைக் காக்கும் பொருட்டு வழக்குத் தொடர இயலாது . இதுகுறித்து வழக்குகள் நீதிமன்றத்தில் இருந்தாலும் , அவ்வழக்குகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் ...
5.குடியரசுத் தலைவர் , மாநிலங்களுக்கு எதுபற்றி வேண்டுமானாலும் தமது கட்டளைகளைப் பிறப்பிக்கலாம் .
6.மேலும் இந்நெருக்கடி நிலைப்பிரகடனப்படுள்ளபோது , மக்களவையின் ( லோக்சபை ) பதவிக்காலத்தை நாட்டிப்பதற்கும் , பாராளுமன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது . எனினும் இக்கால நீட்டிப்பு , நெருக்கடி நிலை முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட 6 மாதங்கள் வரை மட்டுமே செல்லுபடியாகும் . அவ்வாறே மாநில சட்டப் பேரவைகளின் பதவிக்காலமும் நீட்டிக்கப்படலாம் .
இது தவிர மக்களின் அடிப்படை உரிமைகளில் Art 20 மற்றும் 21 ஆகியவற்றைத் தவிர பிற உரிமைகளின் செயல்பாடுகளை நெருக்கடி நிலையின்போது குடியரசுத் தலைவர் நிறுத்தி வைக்க அதிகாரம் பெற்றுள்ளார் .
TNUSRB Syllabus
Where to study
Indian History
Physics
Chemistry
Polity
History and Geo
டெலகிராமில் எங்களோடு படிக்க
தேர்வெழுத இணைவீர்
( Note: We do not create any study materials, we just sharing this material from the internet to students. All the credits go to the respective creators. please help to students who preparing for TNPSC, RRB, POLICE exams... )
Leave Comments
Post a Comment