Ads Right Header

TNPSC ஆங்கில வழி தேர்வர்களுக்கு செய்தி - ஆட்சியர் கல்வி!




யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வில் தமிழ் விருப்பப்பாடம் படிக்கவேண்டிய பகுதிதான் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் பாடத்திட்டமாக இடம்பெற்றுள்ளது..


அதாவது யூனிட் நம்பர் 8 என்பது ஏற்கனவே குரூப்-4 தேர்வில் உள்ள பாடத்திட்டத்தை தான் சுருக்கி கொடுத்துள்ளார்கள் என்பதை தெளிவு படுத்தினோம். ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை தமிழ் புத்தகங்களைப் படிக்காமல் இன்னும் மெட்டீரியல் தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள். அலையட்டும்..


UPSC முதன்மைத் தேர்வில் மொத்தம் 9 தாள்கள் எழுத வேண்டும்.. அதில் ஆங்கிலம் , தாய்மொழி 300 மதிப்பெண்களுக்கு கேட்பார்கள்.. அதில் 25 சதவீதம் பெற்றால் மட்டுமே மீதி இருக்கக்கூடிய ஏழு தாள்களை திருத்துவார்கள்..


இத்தகைய UPSC முதன்மைத் தேர்வின் தமிழ் தகுதித்தேர்வு தான் தற்போது இருக்கும் குரூப் 2 மெயின் சிலபஸ் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்...


ஆங்கில வழியில் படிப்பவர்கள் கண்டிப்பாக குரூப்-1 குரூப்-2 தேர்வு எழுதுவதாக இருந்தால் கண்டிப்பாக யூனிட் நம்பர் 8, மற்றும் குரூப் 1 மற்றும் குரூப் 2 முதன்மை தேர்வுக்கு கண்டிப்பாக தமிழ் பாடம் படிக்க வேண்டும்..


ஆங்கில வழியில் படித்தாலும் தற்போது வந்திருக்கும் GO வராவிட்டாலும் கண்டிப்பாக நீங்கள் தமிழ் பாடத்தில் நன்றாக படித்தால் மட்டுமே பதவி கிடைக்கும் என்பது உண்மைதானே..


அப்படியிருக்க ஏன் ஆங்கிலத்தை நீக்கி விட்டார்கள் என்று வருத்தப்பட வேண்டும்..


மேலும் தமிழ் ஒரு கடினம் என்பதை முதலில் ஆங்கில வழியில் படித்தவர்கள் உடைத்து எறியுங்கள்.. தேர்வுக்கான கால அளவு இருக்கிறது அதனால் தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்..


நீங்கள் அடுத்து தமிழுக்காக செலவிடும் நேரம் அடுத்து உங்களை அரசுப்பணியில் உயர்ந்த பதவிகளுக்கு தொடர்ந்து அழைத்துச் செல்லப் போகிறது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்..


நீங்கள் படிக்கும் தமிழ் பாடம் group 4 முதல்  யுபிஎஸ்சி தேர்வு வரை பயன் தரும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்..


அதனால் ஒருபோதும் சோர்வுற்று உங்களது பயணத்தை நிறுத்தி விடாதீர்கள்...


மேலும் தமிழ் வழியில் நன்றாக படித்தவர்கள் நன்றாக கற்றுணர்ந்த தேர்வர்கள் குரூப் 4 க்கு தான் படிப்பேன் என்று ஒற்றைக்காலில் நிற்காமல் சிறிது யுபிஎஸ்சி தேர்வுக்கு முயற்சி செய்யுங்கள் உங்களால் முடியும்..


வெற்றி நமதே வாழ்த்துக்கள்..


என்றும் உங்களுடன் ஆட்சியர் கல்வி

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY