TNPSC புதிய பாடத்திட்டம் - 2022 !!!
TNPSC புதிய பாடத்திட்டம் 2022
--------------------------------
டிஎன்பிஎஸ்சி எத்தனை பாடத்திட்டம் மாற்றங்கள் வந்தாலும் கலை இலக்கியம்,பண்டையக் கால இந்திய வரலாறு, இடைக்கால இந்தியா, தற்கால இந்தியா, தமிழ்நாடு வரலாறு, பொருளாதாரம், புவியியல், அரசியலமைப்பு, உலக உறவுகள், அறிவியல், அறிவியல் தொழில்நுட்பம்,, மேற்கூறிய அனைத்து தலைப்புகளையும் தழுவிய நடப்பு நிகழ்வு, கணிதப் பகுதி, இவையெல்லாம் அடிப்படையான பாடங்கள்..
TNPSC தேர்வுக்கு படிக்கும் பொழுது மேற்கூறிய தலைப்பில் தமிழ்நாடு அளவில் மிக அதிக கவனம் செலுத்த வேண்டும் . இதே தலைப்பில் தான் UPSC தேர்விலும் கேள்வி கேட்பார்கள்
இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்த பாடங்கள் மாறாது ..1979 யுபிஎஸ்சி கேள்வித்தாளை எடுத்து பாருங்கள் இந்த தலைப்பில் மட்டுமே கேள்விகள் இருக்கும் .. இனி 40 ஆண்டுகள் கழித்து டிஎன்பிஎஸ்சி மாற்றம் கொண்டு வந்தாலும் இந்த தலைப்புகள் கண்டிப்பாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்..
உங்களுக்கு நம்பிக்கை இல்லை எனில் யுபிஎஸ்சி 1979 கேள்வித்தாளை எடுத்து பாருங்கள் , சமீபத்தில் 2021 டிஎன்பிஎஸ்சி கேள்விகளையும் எடுத்து பாருங்கள். மேற்சொன்ன பாடத்தில் இருந்து மட்டுமே கேள்விகள் வந்திருக்கும் இனியும் வரும் ..
இதன் அடிப்படையை வைத்தே யுபிஎஸ்சி தேர்வு டிஎன்பிஎஸ்சி தேர்வு ஒன்றுதான் என்பதை பலமுறை நிரூபித்துள்ளோம் ... அதை ஒரே நேர்கோட்டில் நீங்கள் படிக்க முடியும் என்பதற்கான வழிகாட்டலும் கொடுத்துள்ளோம் ..
அதை அடிப்படையாக தெரிந்து கொண்டே இரண்டு ஆண்டுகளாக தேர்வு நடக்காமல் இருந்து இருந்தும் ஆட்சியர் கல்வி இதுவரை பள்ளிப் புத்தகங்கள் அனைத்தையும் தழுவிய 42 மாதிரி தேர்வுகள் வைத்து விட்டோம்...
ஆட்சியர் கல்வி TNPSC முகநூல் பக்கத்தில் எவ்வாறு கேள்வி கேட்பார்கள் என்பதை நேரலையில் விளக்கினோம்.. தினமும் வகுப்புகள் எடுத்து அதனை பிளேலிஸ்ட் உருவாக்கியுள்ளோம்.. இன்னும் மெட்டீரியல் தேடி , , அடுத்தவர்களை நம்பி உங்களது நேரத்தை வீணாக்காதீர்கள்...
பழைய வினாத்தாள் பள்ளி புத்தகத்தையும் சரியான முறையில் படித்தாலே போதுமானது...
அரசு இலவசமாக அனைவருக்கும் பள்ளி புத்தகங்களைத் தருகிறது
இதனை நேரடியாக நீங்கள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்...
https://scert.tnschools.gov.in/textbook
டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் பழைய வினாத்தாள்கள் நேரடியாக கிடைக்கிறது.. இதிலிருந்துதான் ஒரு வரி கூட மாறாமல் அப்படியே கேள்விகள் வரும்..
https://tnpsc.gov.in/English/answerkeys.aspx
மேற்கூறிய இரண்டையும் சரியாக பயன்படுத்தினால் உங்கள் வெற்றி உறுதி செய்யப்பட்ட வெற்றி..
இப்பொழுது உங்களை மட்டும் நீங்கள் நம்புங்கள்.. அடுத்தவர்கள் நமக்கு சொல்லிக் கொடுத்து நாம் அதிகாரிகள் ஆகி விடுவோம் என்பதை முதலில் தூக்கி எறியுங்கள்..
யாரையும் நம்பாமல் முழு நம்பிக்கையுடன் உங்களை மட்டும் நம்பி பொறுமையாக ஆழமாக பள்ளி புத்தகங்களை படியுங்கள்..
தேவையில்லாத பதட்டத்தை வளர்த்துக் கொள்ளாதீர்கள்..
ஒரு போதும் மன அழுத்தம் வேண்டாம்..
என்றும் உங்களுடன் ஆட்சியர் கல்வி
Leave Comments
Post a Comment