Ads Right Header

TNPSC தமிழ் மொழித் தகுதித் தாள் (Qualifying Paper) - தேர்வர்கள் அறிந்து கொள்ள வேண்டியவை !!!



தமிழ் மொழித் தகுதித் தாள் (Qualifying Paper) - தேர்வர்கள் அறிந்து கொள்ள வேண்டியவை .


கட்டாயத் தமிழ் மொழித் தேர்வு அனைத்து போட்டித் தேர்வுகளிலும் பின்வரும் வழிவகைகளில் நடத்தப்படும்.


(1) தமிழ் மொழித் தகுதித் தாள் (Qualifying Paper), தேர்வர்கள் அனைவருக்கும் கட்டாயமாக்கப்படுகிறது.

(2) தமிழ் மொழித் தகுதித் தேர்வுக்கான பாடத்திட்டம் பத்தாம் வகுப்புத் தரத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது.

(3) மேற்கண்டவாறு நடத்தப்படும் கட்டாய தமிழ்மொழித் தாளில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண் தேர்ச்சி (Minimum Qualifying: Marks) கட்டாயமாக்கப்படுகிறது.

(4) தகுதித் தாளில் தேர்ச்சி பெறாதவர்களின் இதர போட்டித் தேர்வுத்தாள் / தாட்கள் மதிப்பீடு

செய்யப்படமாட்டாது.


TNPSC குரூப்-I, II மற்றும் IIA ஆகிய இரண்டு நிலைகளைக் கொண்ட தேர்வுகளின் நடைமுறைகள் 

(1) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படுகின்ற முதனிலை (Preliminary Examination) மற்றும் முதன்மை எழுத்துத் தேர்வு (Main Written Examination) என இரண்டு நிலைகளைக் (Two stages of Examination) கொண்டதாக உள்ள குரூப் 1, II மற்றும் IIA ஆகிய அனைத்துப் போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி தகுதித் தேர்வானது. முதன்மைத் தேர்வுடன் (Main Written Examination) விரிந்துரைக்கும் வகையிலான (Descriptive Type) தேர்வாக அமைக்கப்படும்.

(2) மேற்படி முதன்மை எழுத்துத் தேர்வானது, மொழிபெயர்த்தல், சுருக்கி வரைதல், பொருள் உணர்திறன், சுருக்கக் குறிப்பிலிருந்து விரிவாக்கம் செய்தல், கடிதம் வரைதல் (அலுவல் சார்ந்தது) மற்றும் கட்டுரை வரைதல் உள்ளிட்ட தலைப்புகள் கொண்டதாக நடத்தப்படும்.

(3) இத்தேர்வு 100 மதிப்பெண்கள் கொண்டதாக அமைக்கப்படும். 

(4) இத்தகுதித்தாளில் (Qualifying Paper) குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண் தேர்ச்சி (Minimum Qualifying marks) பெற்றால் மட்டுமே முதன்மை எழுத்துத் தேர்வின் (Main Written Examination) இதர போட்டித் தேர்வுத்தாள் / தாட்கள் மதிப்பீடு செய்யப்படும்.


TNPSC குரூப் III மற்றும் குரூப் IV, VAO தேர்வுகளின் நடைமுறை விவரம்.

(1) தற்போது நடைமுறையிலுள்ள பொதுத்தமிழ் பொது ஆங்கிலம் உள்ள தேர்வுகளில், பொது ஆங்கிலத்தாள் நீக்கப்பட்டு பொது தமிழ்மொழித் தாள் மட்டுமே மதிப்பீட்டுத் தேர்வாக அமைக்கப்படும்.

(2) அதாவது TNPSC குரூப் III மற்றும் குரூப் IV, VAO போன்ற ஒரே நிலை கொண்ட Single stage Examination தேர்வுகளுக்கு தமிழ்மொழித் தாளானது, தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வாக (Tamil Eligihility - Com Scoring Test) நடத்தப்படும்.

இத்தமிழ்மொழித் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வானது. 150 மதிப்பெண்களுக்கு பகுதி-அ என கொள்குறி வகையில் (ObjectiveType) அமைக்கப்படும்.


பொது அறிவு திறனறிவு (Aptitude மனக்கணக்கு நுண்ணறிவு (Mental Abiliey) ஆகிய பாடத்திட்டங்கள் 150 மதிப்பெண்களுக்கு பகுதி - ஆ என கொள்குறி வகையில் (Ohjctive Type) நடத்தப்படும்.


(3)பகுதி (அ) தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வில் (Tamil Eligihility - Com Scoring Test) குறைந்தப்பட்சம் 40 சதவீத மதிப்பெண் தேர்ச்சி (Minimum Qualifying Mark) பெற்றால் மட்டுமே, பகுதி (ஆ) வில் எழுதிய

(பொது அறிவு திறனறிவு (Aptitude மனக்கணக்கு நுண்ணறிவு (Mental Abiliey) ஆகிய பாடத்திட்டங்கள்)

தேர்வுத்தாளும், இதர தாட்களும் மதிப்பீடு செய்யப்படும். (4).இவ்விரண்டு பகுதிகளின் பகுதி அ மற்றும் ஆ அனைத்துத் தாட்களின் மொத்த மதிப்பெண்களும் தரவரிசைப் பட்டியலுக்கு எடுத்துக் கொள்ளப்படும்.


ஒரே நிலை கொண்ட (Single stage Examination) இதர போட்டித் தேர்வுகளின் நடைமுறைகள் விவரம்.

(1) தற்போது நடைமுறையிலுள்ள பொதுத்தமிழ் பொது ஆங்கிலம் உள்ள தேர்வுகளில் பொது ஆங்கிலத்தாள் நீக்கப்பட்டு பொது தமிழ்மொழித் தாள் மட்டுமே மதிப்பீட்டுத் தேர்வாக அமைக்கப்படும்.

(2) மேற்படி தமிழ்மொழி தேர்வானது பகுதி அ என கொள்குறி வகையில் (Objettive Type 150 மதிப்பெண்களுக்கு தகுதித்தேர்வாக மட்டுமே நடத்தப்படும். தரவரிசைக்கு இம்மதிப்பெண் எடுத்துக்கொள்ளப்படாது.

(3) இத்தேரினில் குறைந்தபட்சம் 40 சதவித மதிப்பெண் தேர்ச்சி (Minimum Qualifying Mark) பெற்றால் மட்டுமே. பகுதி ஆ மற்றும் இதர போட்டித் தேர்வுத்தாள்/தாட்கள் மதிப்பீடு செய்யப்படும்.


இந்த அரசாணை வெளியிடப்படும் நாள் முதல் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கை செய்யப்படும் அனைத்துப் போட்டித் தேர்வுகளுக்கும் மேற்படி தமிழ் மொழித் தாள் கட்டாயமாக்கப்படும்.


ஆசிரியர் தேர்வு வாரியம் மருத்துவப் பணியாளர் நேர்வு வாரியம் தமிழ்நாடு சீரூடைப் பணியாளர் தேர்வு வாரியம், தமிழ்நாடு வனத்துறை சீருடைப் பணியாளர். தேர்வுக் குழுமம் உள்ளிட்ட மாநிலத்தில் உள்ள இதர தெரிவு முகமைகளைப் பொருத்தவரையில் கட்டாயத் தமிழ் மொழித் தகுதித் தேர்வினை நடத்துவது தொடர்பான மேற்படி வழிகாட்டு நெறிமுறைகள் சம்மந்தப்பட்ட நிர்வாகத் துறைகளால் வெளியிடப்படும்.


அவ்வாறே தமிழ்நாடு அராப் பொதுத்துறை நிறுவனங்களைப் பொருத்தவரையில் தேவையான மேற்படி வழிகாட்டு நெறிமுறைகள் நிதி பொதுத்துறை நிறுவனங்களின் மாநிலக் கழக துறையால் வெளியிடப்படும்.


தகவல் ஆதாரம் : 

அரசாணை (நிலை) எண்.133, மனிதவள மேலாண்மை (எம்)துறை

 நாள்.01.12.2021

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY