ஒரேசொத்தைl_இருவருக்கு_விற்றால்_அந்த_சொத்தை_எப்படிமீட்பது
ஒரேசொத்தைl_இருவருக்கு_விற்றால்_அந்த_சொத்தை_எப்படிமீட்பது?
👉 http://taiiyakkam.com/join-us/
*************************************************************************************************
படித்து பயன் அடையுங்கள்! பகிர்ந்து மற்றவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த #உதவுங்கள்! #Please_Share
==============================================================================
தான் சம்பாதித்த பணத்தில் சிறுகச் சிறுக சேமித்து ஒரு சொத்தை வாங்குகிறோம். அப்படி வாங்கும் சொத்தை விற்பவர் இன்னொருவ ருக்கும் போலியான ஆவணம் தயார் செய்து விற்றிருந்தால் அது மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தி விடும்.
அப்படித ஒரே சொத்தை (#One_Property) இருவருக்கு விற்பது (Two Buyers) சட்டப்படி குற்றம் (#CriminalOffence)ஆகும். அவ்வாறு ஒருவர் விற்பனை செய்திருந்தால் இரண்டாவதாக செய்த விற்பனை செல்லாது. இ ருந்தாலும், அந்த சொத்தை முதலாவதாக வாங்கியவர் சட்டப்படி சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
#கிரிமினல்_வழக்கு
-------------------------------------
நேரடியாக, போலிஸ் புகார் கொடுத்து, முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ய வைக்கலாம். அப்போது, மோசடி செய்தவர், முன் ஜாமீன் அல்லது ஜாமீன் போடும்போது, போலிஸ் உதவியுடன், அவர் எந்த நீதிமன்றத்தில் மனு போட்டுல்லாரோ, அங்கு, ஒரு வழக்கறிஞர் வைத்து, intervene மனு செய்யலாம். அப்படி செய்யும்போது, மோசடி பத்திரத்தை ரத்து செய்ய வலியுறுத்தலாம். அப்போது, பிணை கிடைக்க, மோசடி பத்திரத்தை ரத்து செய்ய நீதிமன்றம் ஆணையிடும்போது, அங்கேயே அலைச்சல் இல்லாமல், பிரச்சினை முடிய வாய்ப்பு உள்ளது.
பத்திரத்துறையில், மாவட்ட பதிவாளர் மூலம் ரத்து செய்ய மனு கொடுப்பது.
அந்த இரண்டாவது பத்திரத்தை முறைப்படி ரத்து செய்ய என்ன செய்ய வேண்டும்?
============================================
இரண்டாவதாக பதிவுசெய்யப்பட்டுள்ள பத்திரத்தின் பதிவுகளை ரத்துசெய்யக்கோரி, பதிவுச்சட்டம் 1908பிரிவு 82ன்கீழ் பதிவுத்துறை த் தலைவர் அவர்களுக்கு முதலில் உரிய ஆவண நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
பதிவுத்துறைத் தலைவர் அவர்களின் உத்தரவின்படி தங்களின் விண்ணப்பமானது தங்களது மாவட்டப் பதிவாளர் (நிர்வாகம்) அவர்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க அனுப்பப்படும்.
மாவட்டப் பதிவாளர் அவர்கள், சமபந்தப்பட்ட இரண்டு தரப்பினரையும் அழைத்து விசாரணை மேற்கொண்டு ஆவணங்களை ஆய்வுசெய்வார்
உங்களது புகாரில் உண்மை இருப்பது மாவட்டப் பதிவாளர் (நிர்வாகம்) அவர்களுக்கு தெரியவந்தால், இரண்டாவதாக பதிவு செய்யப்பட்ட பத்தி ரஙளை ரத்துசெய்ய சார்பதிவாளர் அவர்களுக்கு உத்தரவிடுவார்.
பதிவுச்சட்டம், 1908-பிரிவு 83ன்கீழ் சட்டத்திற்கு புறம்பாக இரண்டு நபர்களுக்கு ஒரே சொத்தை விற்பனை செய்த நபர் மீது, காவல்நி லையத்தில் புகார் அளித்து சட்டப்ப டியான நடவடிக்கை எடுக்கவும் சார்பதிவாளர் அவர்களுக்கு அதிகாரம் உள்ளது.
#சிவில்_வழக்கு :
--------------------------
இது போக, இரண்டாவது பத்திரம் பதிந்து மூன்று வருடத்திற்குள் இருந்தால், சிவில் வழக்கு போடலாம். நீதிமன்ற கட்டணம் நூறு ரூபாய்க்குள்தான் வரும். சம்பந்தம் இல்லாமல், நம் சொத்தை, வேறு நபர்கள் விற்கும்போது, மார்க்கெட் மதிப்புக்கு, நீதிமன்ற கட்டணம் செலுத்த தேவை இல்லை. மோசடி கிரைய பத்திரம் செல்லாது என்று விளம்புகை பரிகாரம் கேட்கலாம்.
*சமூக வலைத்தளம் நண்பர்கள் மற்றும் தமிழக அறப்போர் இயக்கம் உறுப்பினர்கள் நமது அமைப்பின் சமூகவலைத்தளங்களில் இணைந்து பின் தொடவும்.*🙏
*(சமூதாய விழிப்புணர்வு மற்றும் சட்ட பதிவுகள்)*
👉1. https://m.youtube.com/channel/UCATBZDC_M0rRldtKinjHh6A
👉2. https://www.facebook.com/groups/694737634330601/?ref=share
👉3. https://www.facebook.com/groups/199239835441620/?ref=share
👉4. https://www.facebook.com/gympandian
👉5. https://www.facebook.com/TaiPandian/
👉6. https://www.facebook.com/வழக்கறிஞர்-பிபாண்டியன்-130100150991572/
👉7. https://t.me/joinchat/wOzGOreide1lYzY1
👉8. https://www.facebook.com/pandian.layers
👉9. https://chat.whatsapp.com/KxUADxNcDkbE4kKaiLgFCg
👉11. https://www.instagram.com/tai_Pandian
👉12. https://twitter.com/Pandian01766989?t=75Tjldr5x2ETAQbHMiYZfg&s=09
👉13. https://chat.whatsapp.com/JCvs1i1ZvRGKorCMSrTZM2
தமிழக அறப்போர் இயக்கத்தில் இணைந்து செயல்பட விருப்பம் உள்ளவர்கள் 📞 7305187737 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
*சமுதாய அக்கறை உள்ள உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் அட்டை வழங்கப்படும்.*
*(உறுப்பினர் அட்டைகளுக்கு எந்த கட்டணமும் இல்லை அலுவலகத்தில் தொடர்பு கொண்டு நேரடியாக பெற்றுக்கொள்ளவும்.)*
*உங்கள் அன்புடன்....*
*வழக்கறிஞர் Tai பாண்டியன்,B.A.,B.L., PGDFM.,PGDPT.,*
*வழக்கறிஞர் - MHC*
*நிறுவனர் - தமிழக அறப்போர் இயக்கம்.*
*நிர்வாக அறங்காவலர் - தேசிய ஒருமைப்பாட்டு அறக்கட்டளை*
Leave Comments
Post a Comment