GK and Tamil Notes...
1. நாட்டுப்புற பாடல்களின் வேறுபெயர் ?
விடை – வாய்மொழி இலக்கியம்
2. திரைக்கவித்திலகம் என அழைக்கப்பட்டவர் ?
விடை – மருதகாசி
3. ஈசான தேசிகர் யாரிடம் கல்வி கற்றார் ?
விடை – மயலேறும் பெருமாள்
4. திருவருட்பாவில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை யாது ?
விடை – 5818
5. ‘ஆற்றுணா வேண்டுவது இல்’ எனக்கூறும் நூல் ?
விடை – பழமொழி நானூறு
6. பிச்சமூர்த்தியின் இயற்பெயர் ?
விடை – ந.வேங்கடமஹாலிங்கம்
7. உலகம் ஐம்பூதங்களால் ஆனது எனக்கூறும் இரு சங்ககால நூல்கள் எவையெவை ?
விடை – தொல்காப்பியம் , புறநானூறு
8. நேரு , தன் மகள் இந்திராவை அன்பாக எவ்வாறு அழைப்பார் ?
விடை – இந்து
9. பொருள் தருக – மேழி
விடை – கலப்பை
10. சந்திரகிரகணம் பற்றி கூறும் பதிணென்கீழ்கணக்கு நூல் எது ?
விடை – திருக்குறள்
11. ’ வைதாரைக்கூட வையாதே ’ – எனப்பாடியவர் ?
விடை – கடுவெளிச்சித்தர்
12. செயற்கை உரம் , பூஞ்சணாங்கொல்லி போன்ற மருந்துகளைப் பயன்படுத்தாமல்உணவு உற்பத்தி செவது இயற்கை வேளாண்மை எனப்படும் . இதன் வேறு பெயர் என்ன ?
விடை – அங்கக வேளான்மை
13. கலிலீயோ , பதுவா பல்கலைக்கழகத்தில் எத்துறை விரவுரையாளராக பணியாற்றினார் ?
விடை – கணிதம்
14. ‘ பெண்களுக்கு அழகான உடையோ , நகையோ முக்கியமில்லை ; அறிவும் சுயமரியாதையும் தான் முக்கியம் ’ – என்று கூறியவர் ?
விடை – பெரியார்
15. தூரத்து ஒளி எனும் சிறுகதையின் ஆசிரியர் ?
விடை – க.கௌ.முத்தழகர்
16. வேற்றுமை எத்தனை வகைப்படும் ?
விடை – 8
17. ‘ இது எங்கள் கிழக்கு ’ எனும் நூலின் ஆசிரியர் ?
விடை – தாராபாரதி
18. ‘கூரையின் மேல் சேவல் உள்ளது’ இது எத்தனையாவது வேற்றுமை உருபு ?
விடை – ஏழாம் வேற்றுமை உருபு
19. வில்லிபாரதம் எத்தனை பருவம் மற்றும் பாடல்களைக்கொண்டது ?
விடை – 10 பருவம் , 4350 பாடல்கள்
20. ‘சிதியும் நிறமும் அரசியலுக்கு இல்லை ; ஆன்மீகத்திற்கும் இல்லை’ என்று கூறியவர் ?
விடை – பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்
21. போலி எத்தனை வகைப்படும் ?
விடை – 3
22. கவியரசு எனும் பட்டத்தை முடியரசனுக்கு வழங்கியவர் யார் ?
விடை – குன்றக்குடி அடிகளார்
23. பொருள் தருக – உதுக்காண்
விடை – சற்று தொலைவில்
24. இலக்கிய செம்மல் ; இலக்கண பெட்டகம் போன்ற சிறப்பு பெயர்களை உடையவர் ?
விடை – தேவநேயப்பாவணர்
25. சரயு ந்தி பாயும் மாநிலம் ?
விடை – உத்திரப்பிரதேசம்
26. தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகளை கவிதை வடிவில் வடித்து தந்தவர் ?
விடை – பாரதிதாசன்
27. தமிழின்பம் எனும் நூலின் ஆசிரியர் ?
விடை – ரா.பி.சேதுப்பிள்ளை
28. உலக வனவிலங்கு தினம் எப்போது கொண்டாடப்படுகிறது ?
விடை – அக்டோபர் 4
29. கழார்ப் பெருந்துறை அமைந்துள்ள இடம் ?
விடை – காவிரிப்பூம்பட்டிணம்
30. சென்னை எழும்பூர் அருங்காட்சியகம் தொடங்கப்பட்ட ஆண்டு ?
விடை – 1851
31. யானைப்போர் காண்பதற்காக மதுரையில் அமைந்திருந்த மைதானம் ?
விடை – தமுக்கம் மைதானம்
32. பிள்ளைத்தமிழிலுள்ள பாடல்களின் எண்ணிக்கை ?
விடை – 100
33. ‘அஞ்சலை அரக்க ! பார் விட்டந்தர மடைந்தா’ எனும் பாடல் இடம்பெறும் நூல் ?
விடை – கம்பராமாயணம்
34. ஏறுதழுவுதல் எந்நிலத்தில் நடைபெறும் வீரவிளையாட்டு ?
விடை – முல்லைநிலம்
35. மக்கள் கவிஞர் என்று அழைக்கப்படுபவர் ?
விடை – பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்
36. தாராசுரம் கோவிலின் கூம்பிய விமானத்தோற்றமும் அதற்கு கீழே இருபுறமும் யானைகளும் , குதிரைகளும் பூட்டிய ரதம்போல் அமைந்த மண்டபமும் வான்வெளி ரகசியத்தைக்காட்டுவதாக கூறிய வெளிநாட்டு வானியல் அறிஞர் ?
விடை – கார்ல் சேகன்
37. தஞ்சாவூரில் ஜ.யு .போப் எத்தனை ஆண்டுகள் பணிபுரிந்தார் ?
விடை – 8 ஆண்டுகள்
38. ‘சுப்புரத்தினம் ஒர் கவி ’ என்று பாரதிதாசனை அறிமுகிப்படுத்தியவர் ?
விடை – பாரதியார்
39. ‘மனிதனுடைய மனத்தில் உணர்ச்சிகளை எழுப்பி அழகையும் இன்பத்தையும் அளிக்கின்ற பண்பு அழகுக்கலைகளுக்கே உண்டு ’ என்று கூறியவர் ?
விடை – மயிலை . சீனி . வேங்கடசாமி
40. கம்பனின் மிடுக்கையும் பாரதியின் சினப்போக்கையும் தன் கவிதைகளில் பயன்படுத்தியவர் ?
விடை – க. சச்சிதானந்தன்
41. துன்பத்தையும் நகைச்சுவையோடு சொல்வதில் வல்லவர் யார்?
விடை – ராமச்சந்திரகவிராயர்
42. குறிஞ்சித்திட்டு எனும் நூலின் ஆசிரியர் ?
விடை – பாரதிதாசன்
43. அபிதான சிந்தாமணியைத் தொகுத்தவர் ?
விடை – சிங்காரவேலனார்
44. அகரமுதலிகள் தோன்ற அடிப்படையாக அமைந்த நிகண்டு ?
விடை – அகராதி நிகண்டு
45. இலக்கிய வகையில் சொற்கள் எத்தனை வகைப்படும் ? அவை யவை ?
விடை – 4 (இயற்சொல் , திரிசொல் , திசைச்சொல் , வடசொல்)
46. சிறந்த ஊர்களைக் குறிக்கும் சொல் ?
விடை – புரம்
47. ‘ தெரியல் இவன்கண்டாய் செங்கழுநீர் மொட்டை ’ எனத்துவங்கும் பாடல் இடம்பெறும் நூல் எது ?
விடை – நளதமயந்தி
48. கணினியின் முதல் செயல் திட்ட வரைவாளர் ?
விடை – லேடி லவ்லேஸ்
49. சார்பெழுத்துகள் எத்தனை வகைப்படும் ?
விடை – 10
50. இயல்பு வழக்கு எத்தனை வகைப்படும் ?
விடை – 3
51. திராவிட மொழிகளின் தாய் தமிழ் என , உலகுக்குப் பறைசாற்றியவர் ?
விடை – கால்டுவெல்
52. மோசிக்கீரனாருக்கு கவரி வீசிய அரசன் யார் ?
விடை – சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை
53. அசலாம்பிகை அம்மையார் பிறந்த ஊர் ?
விடை – இரட்டணை (திண்டிவனம்)
54. ‘அறவுரைக்கோவை’ என வழங்கபெறும் நூல் ?
விடை – முதுமொழிக்காஞ்சி
55. யாருடைய மகளை , காந்தியடிகள் வர்தாவிற்கு அழைத்துச்சென்று லீலாவதி எனப்பெயரிட்டு வளர்த்தார் ?
விடை – அஞ்சலையம்மாள்
56. சரியான தமிழ்ச்சொல் தருக – அட்டவணை
விடை – பொருட்குறிப்பு பட்டியல்
Leave Comments
Post a Comment