Ads Right Header

Breaking News : டிஎன்பிஎஸ்சி பாடத்திட்டங்கள் அனைத்தும் நீக்கம் !!


தமிழக அரசின்புதிய அரசாணைப்படி, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும்  தேர்வுக்கான வினாத்தாள் மற்றும் பாடத்திட்டம் எவ்வாறு அமையும் என்ற கேள்வி அரசுத் தேர்வு ஆர்வலர்கள் மத்தியில் எழுந்து வந்தது.

மேலும் போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதன் அடிப்படையிலான தேர்வுத் திட்டம், பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள் தேர்வாணைய இணையதளத்தில் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

திடீரென குரூப்2 தொடர்பான பாடத்திட்டம் நீக்கப்பட்டது. இது தேர்வர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இன்று குரூப்4 உள்ளிட்ட அனைத்து பாடத்திட்டங்களும் நீக்கப்பட்டது. இது தேர்வர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

தற்போதைய செய்தி :

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பாடத்திட்டம் குறித்து குழப்பம் வேண்டாம்; புதிய பாடத்திட்டம் விரைவில் வெளியிடப்படும்


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தகவல் .



Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY