வேர்ச் சொல்லைத் தேர்வு செய்தல்!
வேர்ச் சொல்லைத் தேர்வு செய்தல்
பிரிக்க முடியாத அடிப்படைச் சொல்லே வேர்ச்சொல், அதனைப் பகுதி என்றும் கூறலாம்.
(எ.கா) நட – என்ற சொல்லை மேலும் பிரித்தால் ந, ட என்ற எழுத்துகளே ஆகும்.
நடப்பான் – என்ற சொல்லை உறுப்பிலக்கண அடிப்படையில் பிரிக்க முடியும்.
நட +ப் + ப் + ஆன்
நட – பகுதி (பகாப்தம்) அதுவே வேர்ச்சொல். அந்த வேர்ச்சொல்லைக் கொண்டு உறுப்புகளை இணைத்துப் பகுபதம் ஆக்கலாம்.
(எ.டு) வீழ்ந்தார் – என்பதன் வேர்ச்சொல் யாது?
(அ) வீழ்ந்து (ஆ) வீழ்க (இ) வீழ் (ஈ) வீழின்
வேர்ச்சொல் என்பது பொதுவாகக் கட்டளையாகவோ, ஏவலாகவோ இருக்கும். அதில், ‘வீழ்’ என்பது தான் கட்டளையாக உள்ளது.
வேர்ச்சொல்: பகுதி விகுதிகளில் பகுதியாக அமைவதே வேர்ச்சொல்லாகும்.
- நடந்தான் – நட
- படித்தான் – படி
- வைத்தான் – வை
- போயினான் – போ
- தின்றான் – தின்
- பார்த்தான் – பார்
- கேட்டான் – கேள்
- வந்தான் – வா
- மடிந்தான் – மடி
- விட்டான் – விடு
- உண்டான் – உண்
- அஃகினான் – அஃகு
- தேய்த்தான் – தேய்
- சென்றான் – செல்
- வாழ்ந்தான் – வாழ்
வேர்ச்சொல் என்பது கட்டளைப் பொருளில் அமைய வேண்டும். உங்களுக்கு முன்னிருப்பவரைப் பார்த்துச் சொல்வது போல் இருக்க வேண்டும். (எ.கா) ஓடு, விளையாடு, படி, மகிழ், தூங்கு, சிரி, எழு, செய்.
எச்சங்களாகவும் முற்றாகவும் உள்ள சொற்களை வினைப் பகுதியா மாற்றுதல்.
பெயரெச்சம், வினையெச்சம், வினைமுற்று எவ்வாறு மாற்றமடைகின்றன. என்பதைக் காண்போம்.
- வென்றான் – வெல்
- நோற்றான் – நோல்
- விற்றான் – வில்
- வேறல் – வெல்
- சேறல் – செல்
- கண்டான் – காண்
- தொடங்குகிறது – தொடங்கு
- சந்தித்தார் – சந்தி
- நொந்தான் – நொ
- செத்தான் – சா
- இறந்தார் – இற
- அரைந்தான் – அரை
- எள்ளற்க – எள்
- நீக்கிய – நீக்கு
- உற்ற – உறு
- கூவியபடி – கூவி
- கொட்ட – கொட்டு
- வருவார் – வா
- சந்தித்தான் – சந்தி
- கற்றவர் – கல்
- கொண்டான் – கொள்
- நகுதல் – நகு
- நவின்றான் – நவில்
- மொழிந்தாள் – மொழி
- வெட்டினார் – வெட்டு
- இட – இடு
Leave Comments
Post a Comment